வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நடிகர் விஜயகாந்த் பிறந்த நாள் ஆகஸ்ட் 25.




நடிகர் விஜயகாந்த் பிறந்த நாள் ஆகஸ்ட் 25.

விஜயகாந்த் எனப்படும் அ. விஜயராஜ் ஒரு திரைப்பட நடிகர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவர்.2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

இளமைக்காலம்

விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.


திரைப்பட உலகில்

இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார் . திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார்.] 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம்தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.


மண வாழ்க்கை
விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
அரசியல் உலகில்
அதன் தொடர்ச்சியாக 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.
அரசியல் கட்சி
2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.


சட்டமன்ற உறுப்பினர்
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது.2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.


நடித்த திரைப்படங்கள்

1979 - அகல் விளக்கு
1979 - இனிக்கும் இளமை
1980 - நீரோட்டம்
1980 - சாமந்திப்பூ
1980 - தூரத்து இடி முழக்கம்
1981 - சட்டம் ஒரு இருட்டறை
1981 - சிவப்பு மல்லி
1981 - நெஞ்சில் துணிவிருந்தால்
1981 - சாதிக்கொரு நீதி
1981 - நீதி பிழைத்தது
1982 - பார்வையின் மறுப்பக்கம்
1982 - சிவந்த கண்கள்
1982 - சட்டம் சிரிக்கிறது
1982 - பட்டணத்து ராஜாக்கள்
1982 - ஓம் சக்தி
1982 - ஆட்டோ ராஜா
1983 - சாட்சி
1983 - டௌரி கல்யாணம்
1983 - நான் சூட்டிய மலர்
1984 - மதுரை சூரன்
1984 - மெட்ராஸ் வாத்தியார்
1984 - வெற்றி
1984 - வேங்கையின் மைந்தன்
1984 - நாளை உனது நாள்
1984 - நூறாவது நாள்
1984 - குடும்பம்
1984 - மாமன் மச்சான்
1984 - குழந்தை ஏசு
1984 - சத்தியம் நீயே
1984 - தீர்ப்பு என் கையில்
1984 - இது எங்க பூமி
1984 - வெள்ளை புறா ஒன்று
1984 - வைதேகி காத்திருந்தாள்
1984 - நல்ல நாள்
1984 - ஜனவரி 1
1984 - சபாஷ்
1984 - வீட்டுக்கு ஒரு கண்ணகி
1985 - அமுதகானம்
1985 - அலையோசை
1985 - சந்தோச கனவுகள்
1985 - புதுயுகம்
1985 - நவகிரக நாயகி
1985 - புதிய சகாப்தம்
1985 - புதிய தீர்ப்பு
1985 - எங்கள் குரல்
1985 - ஈட்டி
1985 - நீதியின் மறுபக்கம்
1985 - அன்னை பூமி
1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
1985 - சந்தோச கனவு
1985 - தண்டனை
1985 - நானே ராஜா நானே மந்திரி
1985 - ராமன்
1986 - அம்மன் கோயில் கிழக்காலே
1986 - அன்னை என் தெய்வம்
1986 - ஊமை விழிகள்
1986 - எனக்கு நானே நீதிபதி
1986 - ஒரு இனிய உதயம்
1986 - சிகப்பு மலர்கள்
1986 - கரிமேடு கரிவாயன்
1986 - நம்பினார் கெடுவதில்லை
1986 - தர்ம தேவதை
1986 - மனக்கணக்கு
1986 - தழுவாத கைகள்
1986 - வசந்த ராகம்
1987 - வீரபாண்டியன்
1987 - கூலிக்காரன்
1987 - சட்டம் ஒரு விளையாட்டு
1987 - சிறை பறவை
1987 - சொல்வதெல்லாம் உண்மை
1987 - நினைவே ஒரு சங்கீதம்
1987 - பூ மழை பொழியுது
1987 - ஊழவன் மகன்
1987 - ரத்தினங்கள்
1987 - வீரன் வேலுத்தம்பி
1987 - வேலுண்டு வினையில்லை
1988 - உழைத்து வாழ வேண்டும்
1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
1988 - காலையும் நீயே மாலையும் நீயே
1988 - செந்தூரப்பூவே
1988 - தம்பி தங்கக் கம்பி
1988 - தெற்கத்திக்கள்ளன்
1988 - தென்பாண்டிச்சீமையிலே
1988 - நல்லவன்
1988 - நீதியின் மறுப்பக்கம்
1988 - பூந்தோட்ட காவல்காரன்
1988 - மக்கள் ஆணையிட்டால்
1989 - என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
1989 - தர்மம் வெல்லும்
1989 - பொறுத்தது போதும்
1989 - பொன்மன செல்வன்
1989 - மீனாட்சி திருவிளையாடல்
1989 - ராஜநடை
1990 - எங்கிட்ட மோதாதே
1990 - சத்ரியன்
1990 - சந்தனக் காற்று
1990 - சிறையில் பூத்த சின்ன மலர்
1990 - பாட்டுக்கு ஒரு தலைவன்
1990 - புதுப்பாடகன்
1990 - புலன் விசாரணை
1991 - கேப்டன் பிரபாகரன்
1991 - மாநகர காவல்
1991 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
1992 - காவியத் தலைவன்
1992 - சின்ன கவுண்டர்
1992 - தாய்மொழி
1992 - பரதன்
1993 - எங்க முதலாளி
1993 - ஏழை ஜாதி
1993 - கோயில் காளை
1993 - செந்தூரப் பாண்டி
1993 - ராஜதுரை
1993 - சக்கரைத் தேவன்
1994 - ஆனஸ்ட் ராஜ்
1994 - என் ஆசை மச்சான்
1994 - சேதுபதி ஐ.பி.எஸ்
1994 - பதவிப் பிரமாணம்
1994 - பெரிய மருது
1995 - கருப்பு நிலா
1995 - காந்தி பிறந்த மண்
1995 - திருமூர்த்தி
1996 - அலெக்சாண்டர்
1996 - தமிழ்ச் செல்வன்
1996 - தாயகம்
1997 - தர்மச்சக்கரம்
1998 - உளவுத்துறை
1998 - வீரம் விளைஞ்ச மண்ணு
1998 - தர்மா
1999 - பெரியண்ணா
1999 - கள்ளழகர்
1999 - கண்ணுபடப் போகுதையா
2000 - வானத்தைப் போல
2000 - சிம்மாசனம்
2000 - வல்லரசு
2001 - வாஞ்சிநாதன்
2001 - நரசிம்மா
2001 - தவசி
2002 - ராஜ்ஜியம்
2002 - தேவன்
2002 - ரமணா
2003 - சொக்கத்தங்கம்
2003 - தென்னவன்
2004 - எங்கள் அண்ணா
2006 - சுதேசி
2006 - பேரரசு
2006 - தர்மபுரி
2007 - சபரி
2008 - அரசாங்கம்
2010 - விருதகிரி
2016 - தமிழன் என்று சொல்.


நடிகர் விஜயகாந்த் .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.
1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.
புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.


க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.
நடிகர் சங்கத் தலைவர்:
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.
அரசியல் அவதாரம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.
சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.


விஜயகாந்த் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
  *விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !
*வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும்,இயேசு- மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!
*ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன்,இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை !
*எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் !
*தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !
*பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது !
*விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் !
*இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !
நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !


*‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !
*விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் !
*வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் !
*செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்!
*இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !
*கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள் !
திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !
*முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு !
*சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !
                                                       
*ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !
*விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்!
*ஆகஸ்ட் 25 அன்று விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் பரிசாக ஆடி க்யூ 7 என்ற 45 லட்சம் மதிப்பு உள்ள காரை ஆண்டாள் அழகர் கல்லூரியின் சார்பாக வழங்கி இருக்கிறார் மைத்துனர் சுதிஷ் !
*ஹிந்தியில் தர்மேந்திரா, அமிதாப், தெலுங்கில் என்.டி.ஆர்.சிரஞ்சீவி,மகேஷ்பாபு, கன்னடத்தில் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், சங்கர் நாக், மலையாளத்தில் சத்யன் படங்கள் என்றால் விஜயகாந்த்துக்கு மிகவும் பிடிக்கும்.சத்யனின் ‘கரை காணா கடல்’ அவருக்கு மிகவும் பிடித்த படம் !
*எங்க வீட்டுப் பிள்ளை படத்தை 70 தடவைகள் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து இருக்கிறார் விஜயகாந்த். இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளை வர்ணிப்பதில் சந்தோஷப்படுவாராம் !
*இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி !
*பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக