ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

நடிகை பூமிகா பிறந்த நாள் ஆகஸ்ட் 21.1 978.



நடிகை பூமிகா பிறந்த நாள் ஆகஸ்ட் 21.1 978.

பூமிகா ( பஞ்சாபி : ਭੂਮਿਕਾ ਚਾਵਲਾ) ஒரு இந்திய திரைப்பட நடிகை. 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி.இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம் , சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.



பிறப்பு ரச்னா சாவ்லா
21 ஆகத்து 1978
(அகவை 39)
புது தில்லி , இந்தியா
மற்ற பெயர்கள்
குடியா
பூமிகா
பணி திரைப்பட நடிகை
செயல்பட்ட ஆண்டுகள்
2000–நடப்பு
வாழ்க்கைத் துணை
பரத் தாகூர் (2007–நடப்பு).



பல ஆண்டுகளுக்குப் பின் தாயான நடிகை பூமிகா... ஆண் குழந்தை பெற்றார்!
Published:Saturday, March 1, 2014,
பிரபல தமிழ் - தெலுங்கு - இந்தி நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை பூமிகா தமிழில் 'பத்ரி', 'ரோஜா கூட்டம்', 'சில்லுன்னு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.
பூமிகா வுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007-ல் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பூமிகாவும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பூமிகா கூறும்போது, ''எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்த பெருக்கால் விழிகளில் கண்ணீர் வந்தது'' என்றார்.
பூமிகா
குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது. இதில் சக நடிக, நடிகையர் மற்றும் நண்பர்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழில் அவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வெளிவராமல் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

: நடிகை பூமிகா
சினிமா தயாரிப்பால் மொத்த பணமும் போச்சு: ஒரு நடிகையின் பரிதாபக்கதை!
தெலுங்கில் ஓரிரு படங்களைத் தயாரித்த பூமிகா, தான் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் செலவழித்து படம் தயாரித்ததில் அவருக்கு கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக