திங்கள், 21 ஆகஸ்ட், 2017

நடிகர் ஏ. கே. வீராசாமி நினைவு தினம் ஆகஸ்ட் 22.



நடிகர் ஏ. கே. வீராசாமி நினைவு தினம்  ஆகஸ்ட்   22.

ஏ. கே. வீராசாமி (இறப்பு: ஆகத்து 22 ,2010 ) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர். தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இவர்,
உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.
பணம் படைத்தவன், முதல் மரியாதை ,
திருமலை தென்குமரி , வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மறைவு
ஏ. கே. வீராசாமி சென்னை
ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனது 84வது அகவையில் காலமானார். இவரது மனைவி ராஜலட்சுமி 2009 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக