திங்கள், 21 ஆகஸ்ட், 2017

நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாள் ஆகஸ்ட் 22.



நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாள் ஆகஸ்ட் 22.

சிரஞ்சீவி ( தெலுங்கு : చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத்  என்ற இயற்பெயரைக் கொண்ட தென்னிந்திய ( தெலுங்கு ) திரைப்பட நடிகராவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பில்ம் பேர் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் இவராவார். இவர் 2008 ஆகஸ்ட் 10 ஆம் நாள் அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். 2008 ஆகஸ்ட் 17 இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார்.  2009ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றி பெற்றார் .
. ஆகத்து 20,2011 அன்று இராஜிவ் காந்தி பிறந்தநாளில் புது டில்லியில் இராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக