திங்கள், 14 ஆகஸ்ட், 2017

நடிகர் அர்ஜூன் பிறந்த நாள் ஆகஸ்டு 15 , 1964.



நடிகர் அர்ஜூன் பிறந்த நாள்  ஆகஸ்டு 15 , 1964.

அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15 , 1964 ) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ் , தெலுங்கு ,
கன்னடம் , இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.

இவர் நடித்துள்ள படங்கள் சில...

முதல்வன்
ரிதம்
குருதிப்புனல்
ஜென்டில்மேன்
ஜெய்ஹிந்த்
நன்றி
சேவகன்
வாத்தியார்
மருதமலை
ஏழுமலை
மனைவி ஒரு மாணிக்கம்
யார்
சுயம்வரம்
வேதம்
கொண்டாட்டம்
கோகுலம்
மங்காத்தா
கர்ணா
தாயின் மணிக்கொடி
ஒற்றன்
கடல்
மூன்று பேர் மூன்று காதல்
பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)
விருதுகள்
கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக).


ஆஞ்சநேயர் பக்தர்
தமிழ் சினிமாவின் ஆக்ஷ்ன் கிங் என்று வர்ணிக்கப்படும் நடிகர் அர்ஜூன், தீவிர ஆஞ்சநேயர் பக்தர். அதன் வெளிப்பாடு, சென்னை அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டு வருகிறார். ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வரும் இக்கோவில் பணியில், ஆஞ்சநேயர் சிலையை நிறுவ கர்நாடக மாநிலத்தில் இருந்து ஸ்பெஷலாக சிலை செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டது.
அதன்படி, இந்த சிலையை பீடத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா (07.04.12) காலை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பங்கேற்றார். 28 அடி உயரமும், 140 டன் எடை கொண்ட இந்த சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டது விஷேசமாகும்.


மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரை அழைத்து கெளரவப்படுத்திய நடிகர் அர்ஜூன்..!

ஆகஸ்ட்-15 அன்று பிறந்ததாலோ என்னவோ.. தமிழ்ச் சினிமாவில் முந்தைய தலைமுறை நடிகர்கள் முதல் இன்றைய நடிகர்கள் அனைவரையும்விடவும் இந்திய தேசியத்துக்கு ஆதரவாகவும், தேசப் பற்றுள்ளவராகவும் தன்னைக் காட்டிக் கொள்பவர் நடிகர் அர்ஜூன்.
ஒரு காலத்தில் அவருடைய பல படங்கள் தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியே வந்து கொண்டிருந்தன.. அதில் முக்கியமானது ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படம். இப்போது அத்திரைப்படத்தின் பெயரை மட்டும் காப்பியெடுத்துக் கொண்டு, கதையை முற்றிலும் புதுமையாக அமைத்து ‘ஜெய்ஹிந்த் இரண்டாம் பாகத்தை’ உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று காலை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் கதையை போலவே விழாவையும் புதுமையாகத்தான் நடத்தினார் ஆக்சன் கிங்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினரை இன்றைய விழாவிற்கு அழைத்து அவர்களை கெளரவித்தார் நடிகர் அர்ஜூன். முகுந்த் வரதராஜனின் அம்மா, அப்பா, மனைவி, மகள் நால்வரும் விழாவுக்கு வந்திருந்தனர்.
முதல் நிகழ்ச்சியாக முகுந்த் வரதராஜனின் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அவரைப் பற்றிய சிறிய குறும்படமும் திரையிடப்பட்டது. பின்னர் முகுந்த் குடும்பத்தினரை மேடையேறினார்கள். அவர்களுக்கு இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேஜர் முகுந்த் பற்றி அர்ஜூன் பேசும்போது, “இந்த இசை வெளியீட்டு விழாவை ‘ஜெய்ஹிந்த்’ என்ற தலைப்பிற்கு ஏற்றாற்போல் நடத்தணும்னு ஆசைப்பட்டேன். அப்போது நமக்கெல்லாம் ரியல் ஹீரோவான மேஜர் முகுந்த் அவர்களின் ஞாபகம்தான் எனக்கு வந்தது.
நானும் மொதல்ல மிலிட்டரில சேரணும்னுதான் நினைச்சேன். அந்த அப்ளிகேஷன் பார்ம்ல ‘உங்க மகனின் உயிருக்கு ஆபத்து என்றாலும் ஆட்சேபணையில்லை’ன்னு எழுதியிருக்கும். அதுல பேரண்ட்ஸோட கையெழுத்து வேணும். எங்கப்பா கொஞ்சம் யோசிச்சு கையெழுத்து போட்டுட்டாரு.. ஆனா எங்கம்மா போட மாட்டேன்னுட்டாங்க.. உன்னை அங்க அனுப்பிட்டு நாங்க என்ன செய்யறதுன்னுட்டாங்க.. அதுனால என்னால ராணுவத்துல சேர முடியல.. ஆனா மேஜர் முகுந்த் நான் என்ன செய்யணும்னு நினைச்சனோ அதை செஞ்சு பெரிய புகழடைஞ்சிருக்காரு…
தேசத்திற்காக உயிர் துறந்த அந்த மேஜரின் குடும்பத்தை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்பினேன். அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியபோது, முதலில் தயங்கிய அவர்கள், பிறகு என்னுடைய வற்புறுத்தலால் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் இங்கே வந்துள்ளதால் இந்த விழா சிறப்பு பெற்றுள்ளது.!” என்றார்.
எப்போதும் அளவாக ஐந்து வரிகளுக்குள் தன் பேச்சை முடித்துக் கொள்ளும் இயக்குநர் பாலா இன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே பேசினார்.
“இந்த விழாவுக்கு வரச் சொல்லி நேற்று அர்ஜுன் ஸார் கூப்பிட்டிருந்தார். நான் நேத்து சாயந்தரம் 5 மணிக்குவரைக்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பிச்சிரலாம்ன்ற ஐடியாலதான் இருந்தேன். ஆனா அர்ஜூன் ஸார் திரும்பவும் கூப்பிட்டு இந்த விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினரும் கலந்து கொள்ள இருப்பதாகச் சொன்னார்.. அதைக் கேட்டதும் உடனே நான் வர்றதா சொல்லிட்டேன்.

அர்ஜுன் ஸார் ரொம்ப நல்ல மனிதர் என்பதற்கு இந்த மேடைதான் உதாரணம். தன்னை முதல்ல சினிமால அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் மகனை இங்க வரவழைச்சிருக்கார்.. தாணு ஸார் எப்போதும் யாருக்காச்சும் பட்டம் கொடுத்துக்கிட்டேயிருப்பாரு. எப்படியும் சிலர் மேல வந்திருவாங்கன்னு அவருக்குத் தெரியும்.. அதெல்லாம் தெரிஞ்சுதான் கொடுப்பாரு.. அதுனாலதான் தனக்கு ‘ஆக்சன் கிங்’குன்னு பட்டம் கொடுத்த அவரோட மூத்த அண்ணனா நினைக்கும் தயாரிப்பாளர் தாணுவை வரவழைச்சிருக்கார். அவரோட தேசப் பற்றுக்கு உதாரணமா இப்போ மேஜர் முகுந்த் குடும்பத்தையும் வரவழைச்சிருக்கார்.
தான் ராணுவத்தில் சேர முயற்சி செஞ்சதாவும் அவரது அம்மாவும் அப்பாவும் தடுத்துட்டதாக அர்ஜுன் சொன்னார். அவர் ராணுவத்தில் சேர்ந்திருந்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய அளவுக்கு பெரிய ராணுவ வீரரா இருந்திருப்பார்.
பொதுவா நான் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் யாரோடும் போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டதேயில்ல. இப்ப நான் ஒருத்தங்களோட நின்னு போட்டோ எடுக்கணும்னு ஆசைப்படுறேன். மேஜர் முகுந்த் குடும்பத்துடன் இந்த மேடையில் ஒரு போட்டோ எடுத்துக்க பிரியப்படுறேன்…” என்றார் பாலா.
அவர் பேசி முடித்ததும் அவர் விருப்பப்படியே முகுந்த் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன் நன்றி தெரிவித்து பேசினார். “முகுந்த் ஆரம்பத்துல இருந்தே அவனோட இஷ்டத்துலதான் வளர்ந்தான். நிறைய படிச்சான்.. கால் சென்டர்ல வேலை பார்த்தான். திடீர்ன்னு அந்த வேலையை விட்டுட்டு நான் மிலிட்டரில சேரப் போறேன்னு சொன்னான்.. நாங்க மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கிட்டோம். அவன் ஆக்சன் படங்களை விரும்பிப் பார்ப்பான்.. ‘ஜென்டில்மேன்’ படம் பார்த்து அவன் அர்ஜூன் ஸாரின் தீவிர ரசிகனாயிட்டான்.. இந்த படத்தைப் பார்க்க அவன் இல்லைதான்.. இருந்தாலும் இந்த விழால நாங்க கலந்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்..” என்றார்.
முகுந்தின் இறுதிச் சடங்கின்போது எதுவுமே அறியாத குழந்தையாய் அங்குமிங்கும் ஓடி டிவி கேமிராமேன்களைகூட கண் கலங்க வைத்த முகுந்தின் மகள், இந்த மேடையிலும் துறுதுறுவென்று அங்குமிங்குமாக ஓடி ஓடி அலைய.. மனம் நிறையவே கனத்தது..!
எத்தனை கனவுகளை கண்டிப்பார் அந்தத் தந்தை.. அத்தனையும் ஒரு தோட்டாவில் பறி போனதே..? கொடுமை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக