நடிகை மீனா பிறந்த நாள் செப்டம்பர் 16.
மீனா (பிறப்பு: 16 செப்டம்பர், 1976; சென்னை) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள் சில ...
என் ராசாவின் மனசிலே
எஜமான்
அவ்வை சண்முகி
வீரா
முத்து
சிட்டிசன்
ரிதம்
வில்லன்
பொற்காலம்
அன்புள்ள ரஜினிகாந்த்
சேதுபதி ஐபிஎஸ்
பாரதி கண்ணாம்மா
தாய் மாமன்
கூலி
செங்கோட்டை
ஆனந்த பூங்காற்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக