திங்கள், 26 செப்டம்பர், 2016

நடிகை ஜி. வரலட்சுமி பிறந்த நாள் 27.

நடிகை ஜி. வரலட்சுமி  பிறந்த நாள் 27.

ஜி. வரலட்சுமி ( G. Varalakshmi ,
தெலுங்கு : జి.వరలక్ష్మి) என
அழைக்கப்படும் கரிக்கப்பட்டி
வரலட்சுமி ( Garikapati Varalakshmi ,
செப்டம்பர் 27, 1926 - நவம்பர் 26, 2006)
தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளின், மேடை
நடிகையாகவும், திரைப்பட
கதாநாயகி மற்றும்
இயக்குனராகவும்
அறியப்படுகிறார். குணச்சித்திர
பாத்திரங்களும் நடித்த
ஜி.வரலட்சுமி, பின்னணியும்
பாடியுள்ளார்.
வாழ்க்கைக்
குறிப்பு
ஜி. வரலட்சுமி, ஆந்திர பிரதேசம்
ஓங்கோல் எனும் பகுதியில்
நாயுடு குடும்பத்தில் 1926
செப்டம்பர் 27 ஆம் திகதி
சுப்பராமய்ய நாயுடுவின்
இரண்டாவது புதல்வியாகப்
பிறந்தார் வரலட்சுமி.  இவருக்கு
முன்னும் பின்னும் இரு
சகோதரிகள். இவரது இளமைப்
பருவம் குண்டூரில் கழிந்தது.
உள்ளூர் கான்வெண்டில் படித்தார்,
ஆனாலும் படிப்பில் ஆர்வம்
செலுத்தவில்லை. பள்ளியில்
படிக்கும் போதே தந்தை இறந்து
விட்டார்.
நாடகங்களில்
நடிப்பு
சிறுவயதிலேயே நாடகங்களில்
நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.
தூரத்து உறவினர் துங்கல சலபதி
ராவ் என்பவர் விஜயவாடாவில்
நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி
வந்தார். நாடகங்களில் ஆர்வம்
கொண்ட தனது ஒன்றுவிட்ட
சகோதரருடன் சேர்ந்து
விஜயவாடா வந்தார். தனது
பதினோராவது அகவையில்
நாடகங்களில் நடிக்கத்
தொடங்கினார். பாதுகா,
சக்குபாய், பிரகலாதா,
கிருஷ்ணலீலா போன்ற
நாடகங்களில் முக்கிய
பாத்திரங்களில் நடித்தார். நாடகக்
கம்பனியுடன் ஆந்திரா முழுவது
பயணம் செய்து பெரும் புகழ்
பெற்றார். 1938ல் ஆந்திராவின்
ராசமுந்திரி எனும் ஊரில், தனது
12வது வயதில் சக்குபாய்
நாடகத்தில் ராதா பாத்திரத்தில்
நடித்துக் கொண்டிருந்தார்.
பிரபல திரைப்பட
தயாரிப்பாளரும்,
இயக்குனருமான கே. எஸ்.
பிரகாஷ்ராவ் அப்போது
ராஜமுந்திரிக்கு வந்திருந்தார்.
வரலட்சுமியின் நடிப்பைப்
பார்த்துப் பாராட்டியதோடு
திரையுலகிற்கு வர அழைப்பும்
விடுத்தார்.
திரைப்படங்களில்
பாசவலை (1956)
திரைப்படத்தில் ஜி.
வரலட்சுமி
கே. எஸ். பிரகாஷ்ராவ் பாரிஸ்டர்
பார்வதீசம் என்ற தனது தெலுங்கு
நகைச்சுவைத் திரைப்படத்தில்
வரலட்சுமியை நடிக்க ஒப்பந்தம்
செய்து கொண்டார். இப்படத்தில்
நடிக்க சென்னை வந்தார். அதன்
பின்னர் எம். கே. ரெட்டி தனது
படங்களில் நடிக்க மூன்று
ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து
கொண்டார். 1939களில் தட்சயக்ஞம்,
நியூ தியேட்டர் நிறுவனம்
தயாரித்த பிரகலாத ஆகிய தமிழ்த்
திரைப்படங்களில் நடித்தார்.
மிகவும் மெலிந்து காணப்பட்ட
ஜி.வரலட்சுமி, பி. பானுமதி ,
காஞ்சனமாலா, புஷ்பவல்லி
போன்ற கதாநாயகிகள் புகழின்
உச்சியிலிருந்த அந்த
காலகட்டத்தில், தனது
தனித்துவத்தை நிருபிக்க
கடுமையாக
போராடவேண்டயிருந்தது.
தென்னிந்தியாவில் அவருக்குப்
போதிய சந்தர்ப்பங்கள்
கிடைக்காததால், பம்பாய்
சென்றார். வனராணி, ஜிந்தகி,
யாம்வுத் ஆகிய படங்களில்
பின்னணிக் குரல் கொடுத்தார்.
ஒரு சில படங்களில் சிறு
பாத்திரங்களில் தோன்றினார்.
1942 ஆம் ஆண்டில் கே. எஸ்.
பிரகாஷ்ராவைத் திருமணம்
புரிந்து கொண்டார். திரைப்பட
வாய்ப்புகள் கிடைக்காத
நிலையில் இர்ணடு ஆண்டுகள்
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு
இரண்டு குழந்தைகளையும்
பெற்றெடுத்தார்.
இந்நிலையில், சி. புல்லையா
தயாரித்த வையஜந்தி
பிலிம்சாரின் விந்தியாராணி
என்ற திரைப்படத்தில் நடிக்கும்
வாய்ப்புக் கிடைத்து 1946 இல்
மீண்டும் சென்னை வந்தார்.
சுவதந்திரா பிலிம்சாரின்
துரோகி , மற்றும் வாலி
சுக்கிரீவன் , மண்டோதரி , ஜி.
பலராமய்யாவின் லட்சமம்மா ,
முதலிரவு, சுவப்னசுந்தரி
போன்ற படங்களிலும் நடித்துப்
பாராட்டுப் பெற்றார்.
தமிழ்த் திரைப்பட
வரிசை

அண்ணி (1951)
பரோபகாரம் (1953)
பெற்ற தாய் (1953)
நல்லதங்காள் (1955)
போர்ட்டர் கந்தன் (1955)
பாசவலை (1956)
வாழ்விலே ஒரு நாள் (1956)
மறுமலர்ச்சி (1956)
பத்தினி தெய்வம் (1957)
அமுதவல்லி (1959)
அழகர்மலை கள்வன் (1959)
மாமியார் மெச்சிய மருமகள்
(1959)
பெற்ற மனம் (1960)
பொன்னான வாழ்வு (1967)
ஹரிச்சந்திரா (1968)

***********************************
தமிழிலும், தெலுங்கிலும்
ஏராளமான படங்களில் நடித்தவர்;
பல படங்களை சொந்தத்தில்
தயாரித்தவர்;
டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவை
காதலித்து மணந்தவர்.
அத்தகைய ஜி.வரலட்சுமி, கணவரை
விவாகரத்து செய்துவிட்டு,
மல்யுத்த வீரர் அஜீத்சிங்கை
மணந்தது, பட உலகில் பரபரப்பை
உண்டாக்கியது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல்
பகுதியில் 1926-ம் ஆண்டு பிறந்தார்
ஜி. வரலட்சுமி. சிறுவயதிலேயே
நாடகத்தில் நடிக்க ஆர்வம்
கொண்டிருந்தார். தனது 11 வயதில்
இருந்து நாடகங்களில்
நடிக்கத்தொடங்கினார்.
ராஜமுந்திரியில் நடைபெற்ற
அவரது நாடகம் ஒன்றை, பிரபல
தயாரிப்பாளர், டைரக்டர்
கே.எஸ்.பிரகாஷ்ராவ் பார்த்தார்.
ஜி.வரலட்சுமியின் இயற்கையான,
துடிப்பான நடிப்பு அவரைக்
கவர்ந்தது.
வரலட்சுமியை அழைத்துப்
பாராட்டிய அவர், 'உன் நடிப்பு
பிரமாதமாக இருக்கிறது.
சினிமாவில் நடித்தால் பேரும்
புகழும், பணமும் நிறைய
கிடைக்கும். நீ சரி என்று
சொன்னால், உன்னை திரைப்படத்தில்
அறிமுகப்படுத்துகிறேன்' என்றார்.
அதற்கு வரலட்சுமி சம்மதித்தார்.
அப்போது அவருக்கு வயது 13.
பிரகாஷ்ராவின் முயற்சியால்,
'பாரிஸ்டர் பார்வதிஸம்' என்ற
தெலுங்குபடத்தில் வரலட்சுமி
அறிமுகம் ஆனார். இது
நகைச்சுவைப்படம். இதில்
வரலட்சுமியின் நடிப்பு
பாராட்டும்படி அமைந்தது.
இதன்பிறகு 'தட்சயக்யம்', 'பிரகலாதா'
ஆகிய படங்களில் நடித்தார்.
அப்போது வரலட்சுமி ஒல்லியாக
இருந்தார். பானுமதி,
காஞ்சனமாலா, புஷ்பவல்லி
முதலியோர் புகழின் சிகரத்தில்
இருந்தனர். எனவே, வரலட்சுமி
முன்னணி வரிசையில் இடம்
பெறமுடியவில்லை.
எனவே, அவர் மும்பை சென்று, சில
'ஸ்டண்ட்' படங்களில் நடித்தார்.
புகழ்பெற்ற இந்திப்பட
இசையமைப்பாளர் நவ்ஷாத்
இசைக்குழுவில் ‘கோரஸ்’ பாடும்
பாடகியாகவும் இருந்தார். ஆனால்
அவரால் எந்த துறையிலும்
பெரிதாக ஜொலிக்க
முடியவில்லை. எனவே சிறிது
காலம் மும்பையில் இருந்து விட்டு,
மீண்டும் சென்னை திரும்பினார்.
இப்போது வரலட்சுமியின்
அழகிலும், நடிப்புத் திறமையிலும்
நல்ல மெருகேறி இருந்தது.
தன்னை படவுலகுக்கு
அறிமுகப்படுத்திய டைரக்டர்
கே.எஸ்.பிரகாஷ்ராவை சந்தித்தார்.
'இப்போது மிகவும் அழகாக
இருக்கிறாய். நடிப்பின் நுட்பங்களை
நன்றாக அறிந்து கொண்டாய்.
விரைவில் நீ முன்னணி
நட்சத்திரமாக உயர்வாய். இது உறுதி'
என்றார், பிரகாஷ்ராவ்.
காதல் திருமணம்
இருவரும் ஒருவரை ஒருவர்
விரும்பினர். 1942-ம் ஆண்டில்
இவர்களது காதல் திருமணம்
நடந்தது. இத்தம்பதிகளுக்கு இரண்டு
குழந்தைகள் பிறந்தன.
பிரகாஷ்ராவும், ஜி.வரலட்சுமியும்
இணைந்து, 'பிரகாஷ்
புரொடக்ஷன்ஸ்' என்ற
படக்கம்பெனியை நிறுவி,
சொந்தமாகப் படங்களை எடுக்க
ஆரம்பித்தனர்.
அண்ணி
இவர்கள் தமிழில் எடுத்த படம்
'அண்ணி'. இது நூறு நாள் படமாக
அமைந்தது. குறிப்பாக பெண்களை
இப்படம் மிகவும் கவர்ந்தது. ஒரு
சிறுவனுக்கும், அவனுடைய
அண்ணிக்கும் இருந்த
பாசப்பிணைப்பை, உள்ளத் தைத்
தொடும் விதத்தில் சித்தரித்த படம்
இது.
1. கணவர் பிரகாஷ் ராவுடன் ஜி.
வரலட்சுமி
2. கணவர் அஜீத் சிங்குடன் ஜி.
வரலட்சுமி
சிறுவன் கோபியாக மாஸ்டர்
சேதுவும், அண்ணி
யசோதாவாக
ஜி.வரலட்சுமியும் பிரமாதமாக
நடித்தனர். சேது, வீட்டை விட்டு
வெளியேறும்போது இடம் பெற்ற,
'போடா கண்ணே போ' என்ற பாடலை
எம்.எஸ்.ராமராவ் சிறப்பாகப்
பாடியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு
மொழிகளில் 1951-ல் வெளியான
இப்படத்தை, கே.எஸ்.பிரகாஷ்ராவ்
இயக்கி இருந்தார்.
1952-ம் ஆண்டில் பிரகாஷ்
ஸ்டூடியோ என்ற பெயரில் சொந்த
ஸ்டூடியோவை நிறுவினார்,
வரலட்சுமி. சொந்தப்படங்கள் தவிர,
பிற படங்களிலும் நடித்து, 'சிறந்த
குணச்சித்திர நடிகை' என்று பெயர்
பெற்றார்.
1953-ம் ஆண்டில் பிரகாஷ்ராவ்
டைரக்ஷனில் 'பெற்ற தாய்' என்ற
படத்தை சொந்தமாகத் தயாரித்தார்,
வரலட்சுமி. சாந்தா என்ற கேரக்டரில்
ஒரு இந்தியத் தாயின் லட்சியங்
களை தன் நடிப்பில் சிறப்பாகப் பிரதி
பலித்தார்.
இப்படம், 'கன்னதல்லி' என்ற பெயரில்
தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு,
வெற்றி பெற்றது.
சுசீலா அறிமுகம்
இந்தப்படத்தில்தான், பின்னணி
பாடகியாக தமிழ்ப்பட உலகுக்கு
பி.சுசீலா அறிமுகம் ஆனார்.
'ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு'
என்று,
ஏ.எம்.ராஜாவுடன் சேர்ந்து பாடிய
'டூயட்' பாடல்தான், சுசீலாவின்
முதல் பாட்டு.
ஜி.வரலட்சுமி ஸ்வப்னசுந்தரி,
மாயா ரம்பா, பரோபகாரம்,
நிரபராதி, நான் பெற்ற செல்வம்,
கல்யாணம் பண்ணிப்பார், வாழ்விலே
ஒருநாள், பாக்தாத் திருடன்,
திருடர்கள் ஜாக்கிரதை போன்ற பல
படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
தவிர ஏராளமான தெலுங்கு
படங்களில் நடித்தார், வரலட்சுமி.
அவர் நடித்த தெலுங்குப்படங்களும்
தமிழில் 'டப்' செய்யப்பட்டன.
மல்யுத்தம்
1960-ம் ஆண்டில் இந்தியா
முழுவதும் முக்கிய ஊர்களில்
மல்யுத்தப் போட்டிகள் நடந்தன.
தாராசிங், கிங்காங், அஜீத்சிங்,
கருஞ்சிலந்தி முதலான மல்யுத்த
வீரர்கள் இதில் பங்கு கொண்டனர்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை,
திருச்சி, கோவை முதலிய
நகரங்களில் போட்டிகள் நடந்தன.
தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்,
மல்யுத்தப் போட்டியைக் கண்டு
மகிழ்ந்தனர்.
ஜி.வரலட்சுமி, மல்யுத்த ரசிகை.
தினமும் மல்யுத்தம் பார்க்கத்
தவறமாட்டார். அதிலும், அஜீத்சிங்
பங்கு கொள்ளும் மல்யுத்தம் எந்த
ஊரில் நடந்தாலும், அங்கு பறந்து
சென்று விடுவார்.
அஜீத்சிங் வெற்றி பெறும்
போதெல்லாம், கைதட்டி ஆரவாரம்
செய்வார். எதிர்த்து
போட்டியிடுபவர், அஜீத்சிங்கைத்
தாக்கினால், 'ஜுகர்நக்கோ',
'ஜுகர்நக்கோ' ('அடிக்காதே',
'அடிக்காதே') என்று ஆத்திரத்துடன்
கத்துவார்.
தான் கலந்து கொள்ளும்
போட்டிகளுக்கெல்லாம்
ஜி.வரலட்சுமி தவறாமல் வருவதை
அஜீத்சிங் கவனித்தார். அவர் யார்
என்று விசாரித்தார். பிறகு
ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி,
நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.
கணவர் பிரகாஷ்ராவை விட்டு
மெல்ல மெல்ல விலகிய வரலட்சுமி,
பிறகு விவாகரத்து
செய்துவிட்டார்.
சென்னையில் நடந்த மல்யுத்த
போட்டி ஒன்றில் அஜீத்சிங் வெற்றி
பெற்றபோது, வரலட்சுமியும்
மேடையில் ஏறி அவருக்குப்
பக்கத்தில் நின்றார். 'நாங்கள்
திருமணம் செய்து கொண்டு
கணவன் - மனைவி ஆகிவிட்டோம்'
என்று இருவரும் அறிவித்தனர்.
அவர்களின் ரசிகர்கள், இருவருக்கும்
மாலை அணிவித்து வாழ்த்தினர்.
பஞ்சாபி
அஜீத்சிங் ஒரு பஞ்சாபி.
வரலட்சுமியும் பஞ்சாபி உடை
அணிந்து, அவருடன் விழாக்களில்
கலந்து கொண்டார்.
1962-ல் இவர்கள் இருவரும்
சிங்கப்பூருக்கு சென்றனர். அங்கு
ஒரு பத்திரிகைக்கு அளித்த
பேட்டியில், 'அஜீத் பிலிம் கம்பெனி
என்ற நிறுவனத்தைத் தொடங்கி,
'டாக்சி டிரைவர் ராமு' என்ற படத்தை
தமிழ், இந்தி ஆகிய மொழிகளில்
எடுக்க இருக்கிறோம். அஜீத்சிங்தான்
ஹீரோ. நான் சிவாஜிகணேசனுடன்
ஹரிச்சந்திரா என்ற படத்தில் நடிக்க
இருக்கிறேன்' என்று வரலட்சுமி
அறிவித்தார்.
வரலட்சுமி, அஜீத்சிங்கும் சேர்ந்து
எடுத்த 'டாக்சி டிரைவர்' திரையில்
தலைகாட்டவில்லை.
சிவாஜியும், வரலட்சுமியும்
இணைந்து நடித்த 'ஹரிச்சந்திரா'
1966-ல் தணிக்கை செய்யப்பட்டாலும்,
நீண்ட இடைவெளிக்குப்பின் 1968-ல்
வெளிவந்து படுதோல்வி
அடைந்தது.
அதன் பிறகு ஜி.வரலட்சுமி
பற்றியோ, அஜீத்சிங் பற்றியோ
தகவலோ, செய்தியோ எதுவும்
இல்லை. அவர்கள் எவ்வளவு காலம்
சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பது
அந்தக்கடவுளுக்குத்தான்
தெரியும்.
ஜி.வரலட்சுமி தன் இறுதிக்
காலத்தை தனிமையில் கழித்தார்
என்பது மட்டும் உண்மை.
சென்னையில் தங்கி இருந்த ஜி.
வரலட்சுமி தனது 80 வயதில் 2006-ம்
ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம்
அடைந்தார். இவரது சகோதரி மகள்
தான் நடிகை ரத்னா. இவர்
எம்.ஜி.ஆருடன் எங்கவீட்டுப்பிள்ளை
படத்தில் ஜோடியாக நடித்தவர்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி
எம்.ஜி.ஆருடன் ஜி.வரலட்சுமி
இணைந்து நடித்த 'குலேபகாவலி',
மிகப்பெரிய வெற்றிப்படம்.
எம்.ஜி.ஆருக்கும், வரலட்சுமிக்கும்
ஏ.எம்.ராஜா - ஜிக்கி பாடிய
'மயக்கும் மாலை பொழுதே நீ போ
போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா,
வா!' என்ற டூயட் பாடல், காலத்தை
வென்று இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கும் பாடல்.
இதை எழுதியவர் விந்தன்.
சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக
'நான் பெற்ற செல்வம்' படத்தில்
ஜி.வரலட்சுமி நடித்தார். பிறகு
எம்.ஏ.வேணு தயாரித்த 'சம்பூர்ண
ராமாயணம்' படத்தில்,
சிவாஜிகணேசன் பரதனாகவும்,
ஜி.வரலட்சுமி பரதனின் தாய்
கைகேயியாகவும் உணர்ச்சி
மயமாக நடித்தனர்.
மற்றும் ஸ்வப்னசுந்தரி, பரோபகாரம்,
நல்லதங்காள், வாழ்விலே ஒருநாள்,
ஆரவல்லி, பாசவலை, கற்புக்கரசி,
திருடர்கள் ஜாக்கிரதை,
மாயாரம்பா, பாக்தாத் திருடன்
உள்பட பல படங்களில் நடித்தார்,
ஜி.வரலட்சுமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக