புதன், 21 செப்டம்பர், 2016

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள் செப்டம்பர் 22.

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள் செப்டம்பர் 22.

பி. பி. ஸ்ரீநிவாஸ் ( Prativadi
Bhayankara Sreenivas , செப்டம்பர் 22, 1930 -
ஏப்ரல் 14, 2013 )
தென்னிந்தியாவின் பழம்பெரும்
திரைப்படப் பின்னணிப் பாடகர்.
இவர் தமிழ் , தெலுங்கு,
மலையாளம் , கன்னடம் , இந்தி உட்படப்
12 இந்திய மொழிகளில்
ஆயிரக்கணக்கான பாடல்களைப்
பாடியுள்ளார். இவர்
இந்தியாவில் , ஆந்திரப்
பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா
மாவட்டத்தில் பிறந்தார்.
ஸ்ரீநிவாசின் முதல் பாடல்
ஜெமினி தயாரித்து 1951 இல்
வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற
இந்திப் படத்தில் இடம்பெற்றது.
கனஹிபரது என்ற பாடலை முதன்
முதலில் பாடினார். இவரது
முதல் தமிழ்ப் பாடல் சிந்தனை என்
செல்வமே" என்ற பாடல், 1953 இல்
வெளிவந்த ஜாதகம் படத்தில்
இடம்பெற்றது.
ஆங்கிலம் , உருது உட்பட எட்டு
மொழிகளில் புலமை பெற்றவர்.
இவற்றில் பல பாடல்களையும்
எழுதியுள்ளார். மதுவண்டு என்ற
புனைப்பெயரில் தமிழ்க்
கவிதைகளை எழுதினார்.
வறுமையின் நிறம் சிவப்பு ,
நண்டு ஆகிய திரைப்படங்களில்
வரும் இந்திப்பாடல்களை இவரே
இயற்றினார்.
தமிழ்த் திரையிசை உலகில் டி.
எம். சௌந்தரராஜன்
புகழுச்சியில் இருந்த காலத்தில்
ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த
இடத்தில் விளங்கினார்.
உச்சஸ்தாயியில் பாடிவந்தோர்
காலகட்டத்தில், மென்மையான
குரல் கொண்டு இனிமையைக்
கூட்டி, பாடுவதில் ஒரு புதிய
பாணியை கொண்டுவந்தவர்.
'காலங்களில் அவள் வசந்தம்' எனும்
பாடலைப் பாடி பெரும்புகழை
ஈட்டினார். தமிழ்ப் படங்களில்
ஜெமினி கணேசனுக்கும் ,
கன்னடத்தில் ராஜ்குமாருக்கும்
இவர் அநேகமாக அவர்களின்
அனைத்துப் படங்களிலும்
பின்னணி பாடியுள்ளார்.

ஆந்திர மாநிலம், கிழக்கு
கோதாவரியை அடுத்த
பத்தளபொடி எனும் கிராமத்தில்
1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி
பனிந்திர சுவாமி-சேஷா
கிரியம்மா தம்பதிகளின் மகனாக
பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். பி.காம்.,
பட்டதாரியான இவர் 1952ம் ஆண்டு
இந்தி சினிமாவில் மிஸ்டர்
சம்பத் ‌என்ற படத்தின் மூலம்
பின்னணி பாடகராக
அறிமுகமானார். தமிழில் ஜாதகம்
என்ற படத்தில் இடம்பெற்ற சிந்தனை
என் செல்வமே என்ற பாடல்
இவருக்கு அறிமுகம். அதன்பிறகு
பாசமலர் படத்தில் வந்த யார் யார்
யார் இவர் யாரோ..., பாவ
மன்னிப்பில் இடம்பெற்ற
காலங்களில் அவள் வசந்தம்
படப்பாடல் அவரை
பிரபலமாக்கியது. தமிழ்
மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி,
மலையாளம், கன்னடம், உருது
உள்ளிட்ட 12 மொழிகளில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை பாடியுள்ளார்.
பாடகராக மட்டுமல்லாமல் நிறைய
கஸல்களையும் எழுதியுள்ளார்.
இந்தியில் சில படங்களுக்கு
இவரே பாடல் வரிகள் எழுதி
பாடவும் செய்துள்ளார். மேலும்
மதுவண்டு என்ற புனைப்பெயரில்
ஏராளமான கவிதைகளையும்
எழுதியுள்ளார்.
தமிழில் காதல் மன்னன் என்று
புகழப்படும் ஜெமினி
கணேசனுக்கும், கன்னட நடிகர்
ராஜ்குமாருக்கும் தான் அநேக
பாடல்களை பாடியுள்ளார்.
இவர்கள் தவிர்த்து சிவாஜி,
எம்.ஜி.ஆர்., போன்ற தமிழ்
திரையுலகின் ஜாம்பவான்களின்
படங்களுக்கும் பாடியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர்கள்
சுசீலா, ஜானகி, பானுமதி,
எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர்
போன்றவர்களுடன் ஏராளமான
பாடல்களை பாடியுள்ளார்.
சினிமாவில் இவரது
கலைச்சேவையை பாராட்டி
தமிழக அரசு கலைமாமணி
விருது கொடுத்து
பாராட்டியது.
தனது மயக்கும் இனிமையான
குரலால் கோடான கோடி
ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீனிவாஸ்,
சென்னை, சி.ஐ.டி. நகரில்
குடும்பத்துடன் வசித்து வந்தார்.

தமிழ் சினிமாவில்
பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய
காலத்தால் அழியாத பாடல்கள்
வருமாறு...
01. காலங்களில் அவள் வசந்தம் -
பாவமன்னிப்பு
02. பொதிகை மலை உச்சியிலே -
திருவிளையாடல்
03. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
- மக்களை பெற்ற மகராசி
04. மனிதன் என்பவன்
தெய்வமாகலாம் - சுமைதாங்கி
05. மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார்
மகளே பார்
06. தென்னங்கீற்று ஊஞ்சலிலே -
பாதை தெரியுது பார்
07. சின்ன சின்ன கண்ணனுக்கு -
வாழ்க்கை படகு
08. காத்திருந்த கண்களே -
மோட்டார் சுந்தரம் பிள்ளை
09. காற்றுவெளியிடை
கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்
10. கண்படுமே கண்படுமே -
காத்திருந்த கண்கள்
11. ஒரே ‌கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சில் - பனித்திரை
12. நிலவே என்னிடம்
நெருங்காதே - ராமு
13. இன்பம் பொங்கும் வெண்ணிலா
- வீரபாண்டிய கட்டபொம்மன்
14. கண்ணாலே பேசி பேசி
கொல்லாதே - அடுத்த வீட்டு பெண்
15. அழகிய மிதிலை நகரிலே -
அன்னை
16. ஆண்டுறொன்று போனால்
வயதொன்று போகும் -
போலீஸ்காரன் மகள்
17. எந்த ஊர் என்றவனே -
காட்டுரோஜா
18. என்னருகே நீ இருந்தால் -
திருடாதே
19. காதல் நிலவே கண்மணி ராதா -
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
20. விஸ்வநாதன் வேலை
வேண்டும் - காதலிக்க
நேரமில்லை
21. அனுபவம் புதுமை - காதலிக்க
நேரமில்லை
22. உங்கள் பொன்னான கைகள்
புண்ணாகலாமா - காதலிக்க
நேரமில்லை
23. கன்னி வேண்டுமா கவிதை
வேண்டுமா பச்சை விளக்கு
24. கண்ணிரண்டு மெல்ல மெல்ல -
ஆண்டவன் கட்டளை
25. இரவு முடிந்துவிடும் - அன்பு
கரங்கள்
26. மெய்யேந்தும் விழியாட -
பூஜைக்கு வந்த மலர்
27. மயக்கமா கலக்கமா - சுமை
தாங்கி
28. நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் - இதயகமலம்
29. நேற்று வரை நீ யாரோ -
வாழ்க்கை படகு
30. ஏனோ மனிதன்
பிறந்துவிட்டான் - பனித்திரை
31. பார்த்தேன் சிரித்தேன் - வீர
அபிமன்யூ
32. உன்னழகை கண்டு கொண்டால் -
பூவும் பொட்டும்
33. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம்
மறப்பதில்லை
34. பால் வண்ணம் பருவம் கண்டேன் -
பாசம்
35. நினைப்பதெல்லாம்
நடந்துவிட்டால் - நெஞ்சில் ஓர்
ஆலயம்
36. நிலவுக்கு என் மேல் என்னடி
கோபம் - போலீஸ்காரன் மகள்
37. வாழ்ந்து பார்க்க வேண்டும் -
சாந்தி
38. உடல் உயிருக்கு காவல் -
மணப்பந்தல்
39. ரோஜா மலரே ராஜகுமாரி -
வீரத்திருமகன்
40. பொன் ஒன்று கண்டேன் -
படித்தால் மட்டும் போதுமா
41. பாட்டெழுதெட்டும் பருவம் -
அண்ணாவின் ஆசை
42. ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் -
ஊட்டி வரை உறவு
43. தென்றலே நீ பேசு - கடவுள்
அமைத்த மேடை
44. வளர்ந்த கலை மறந்துவிட்டால் -
காத்திருந்த கண்கள்
45. யாரோடும் பேசக் கூடாது -
ஊட்டி வரை உறவு
46. ஒடிவது போல் இடை இருக்கும்
- இதயத்தில் நீ
47. கண்பாடும் பொன் வண்ணமே -
சகோதரி
48. இரவின் மடியில் - சரஸா பி.ஏ.
49. எங்கும் துன்பமில்லை -
புனர்ஜென்மம்
50. அழகான மலரே - தென்றல் வீசும்
51. இன்ப எல்லை காணும் நேரம் -
இவன் அவனே தான்
52. மாலை மயங்கினால் இரவா -
இனிக்கும் இளமை
53. அன்பு மனம் - ஆளுக்கொரு
வீடு
54. பாடாத பாட்டெல்லாம் பாட - வீர
திருமகன்
55. அவள் பறந்து போனாளே - பார்
மகளே பார்
56. அத்திக்காய் - பலே பாண்டியா
57. ஆரோடும் மண்ணில் எங்கும் -
பழநி
58. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம்
தா தா - காதலிக்க நேரமில்லை
59. தாமரை கன்னங்கள் தேன்மலர் -
எதிர்நீச்சல்
60. தோல்வி நிலை என
நினைத்தால் - ஊமை விழிகள்
61. ஒருத்தி ஒருவனை
நினைத்துவிட்டால் - சாரதா
62. மாம்பழத்து வண்டு -
சுமைதாங்கி
63.துள்ளித்திரிந்த பெண்-
காத்திருந்த கண்கள்
64.பொன் என்பேன் சிறுபூ-
போலீஸ்காரன் மகள்
65.பூவறியும் பூங்கொடியே-
இதயத்தில் நீ
போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.
கடைசியாக தமிழில், கார்த்தி
நடித்த ஆயிரத்தில் ஒருவன்
படத்தில் பெண்மானே பேர்
உலகின் பெருமானே... என்ற
பாடலை பாடியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக