திங்கள், 12 செப்டம்பர், 2016

நடிகர் கார்த்திக் பிறந்த நாள் செப்டம்பர் 13.


நடிகர் கார்த்திக் பிறந்த நாள் செப்டம்பர் 13.
கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.

அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் இவரது மூத்த மகனாவார்.


விருதுகள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
1988 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - அக்னி நட்சத்திரம்
1989 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வருசம் பதினாறு
1990 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - கிழக்கு வாசல்
1993 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பொன்னுமணி
தமிழக அரசின் விருதுகள்
1981 – சிறந்த அறிமுகம் (ஆண்) - அலைகள் ஓய்வதில்லை
1988 – சிறந்த நடிகருக்கான விருது - அக்னி நட்சத்திரம்
1990 – சிறந்த நடிகருக்கான விருது - கிழக்கு வாசல்
1998 – சிறந்த நடிகருக்கான விருது - பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
கலைமாமணி விருது
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
1998 – சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
நந்தி விருது
1987 – நந்தி விருது (சிறப்பு நடுவர் விருது) - அபிநந்தனா
திரைப்பட விபரம்


நடித்த திரைப்படங்கள்
1980களில்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1981 அலைகள் ஓய்வதில்லை விச்சு தமிழ் சிறந்த அறிமுகம்(ஆண்) - தமிழக அரசு விருது
சீதாக்கொக்க சில்லுகா ரகு தெலுங்கு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மொழிமாற்றம்
1982 நினைவெல்லாம் நித்யா தமிழ்
வாலிபமே வா வா தமிழ்
இளஞ்சோடிகள் தமிழ்
கண்ணே ராதா தமிழ்
கேள்வியும் நானே பதிலும் நானே நிர்மல், பாபு தமிழ்
நேரம் வந்துடுச்சு தமிழ்
பக்கத்து வீட்டு ரோஜா தமிழ்
தாய் மூகாம்பிகை தமிழ்
ஆகாய கங்கை தமிழ்
அதிசய பிறவிகள் தமிழ்
1983 ஆயிரம் நிலவே வா தமிழ்
பகவதிபுரம் ரயில்வேகேட் தமிழ்
தூரம் அதிகமில்லை தமிழ்
மாறுபட்ட கோணங்கள் தமிழ்
ஒரு கை பார்ப்போம் தமிழ்
அபூர்வ சகோதரிகள் தமிழ்
1984 நல்லவனுக்கு நல்லவன் வினோத் தமிழ்
வீர பத்ருடு தெலுங்கு
நன்றி தமிழ்
ராஜதந்திரம் தமிழ்
நினைவுகள் தமிழ்
புயல் கடந்த பூமி தமிழ்
பேய் வீடு தமிழ்
1985 அன்வேஷனா அமர் தெலுங்கு
புதிய சகாப்தம் தீபக் தமிழ் சிறப்புத் தோற்றம்
அவள் சுமங்கலிதான் தமிழ்
நல்ல தம்பி ராஜு தமிழ்
விசுவனாதன் வேலை வேண்டும் தமிழ்
மூக்கணாங்கயிறு தமிழ்
அர்த்தமுள்ள ஆசைகள் தமிழ்
கெட்டிமேளம் தமிழ்
1986 புண்யஸ்த்ரீ தெலுங்கு
நட்பு தமிழ்
மௌன ராகம் மனோஹர் தமிழ்
ஊமை விழிகள் ரமேஷ் தமிழ் சிறப்புத் தோற்றம்
தர்ம பத்தினி தமிழ்
தொடரும் உறவு தமிழ்
1987 வண்ணக் கனவுகள் தமிழ்
எங்க வீட்டு ராமாயணன் தமிழ்
நல்ல பாம்பு தமிழ்
ஒரே ரத்தம் தமிழ்
தாயே நீயே துணை தமிழ்
தூரத்துப் பச்சை தமிழ்
வெளிச்சம் தமிழ்
பாடு நிலாவே தமிழ்
காவலன் அவன் கோவலன் தமிழ்
பரிசம் போட்டாச்சு தமிழ்
ராஜ மரியாதை தமிழ்
1988 அக்னி நட்சத்திரம் அஷோக் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
அபிநந்தனா ராஜா தெலுங்கு நந்தி சிறப்பு ஜூரி விருது
அடிமை விலங்கு தமிழ்
என் ஜீவன் பாடுது சுரேந்திரன் தமிழ்
கண் சிமிட்டும் நேரம் ராஜா, கண்ணன் தமிழ்
காளிச்சரண் தமிழ்
உரிமை கீதம் சந்துரு தமிழ்
சொல்ல துடிக்குது மனசு பி. ஜி. தில்லைநாதன் தமிழ்
1989 திருப்பு முனை தமிழ்
வருஷம் பதினாறு கண்ணன் தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
கோபால்ராவ் கோரி அம்மை தெலுங்கு
ரெட்டைகுழல் துப்பாக்கி தமிழ்
சோலைக்குயில் தமிழ்
பாண்டி நாட்டுத் தங்கம் தமிழ்
சாத்தானின் திறப்பு விழா தமிழ்

1990களில்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 இதயத் தாமரை தமிழ்
மிஸ்டர் கார்த்திக் தமிழ்
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாலு தமிழ்
கல்யாண ராசி தமிழ்
பெரிய வீட்டு பணக்காரன் தமிழ்
கிழக்கு வாசல் பொன்னுரங்கம் தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
எங்கள் சாமி ஐயப்பன் தமிழ் சிறப்புத் தோற்றம்
எதிர் காற்று தமிழ்
1991 வணக்கம் வாத்தியாரே தமிழ்
கோபுர வாசலிலே மனோஹர் தமிழ்
விக்னேஷ்வர் விக்கினேஷ்வர் தமிழ்
இரும்பு பூக்கள் தமிழ்
1992 அமரன் அமரன் தமிழ்
உன்னை நினைச்சேன் பாட்டுப் படித்தேன் தமிழ்
நாடோடித் தென்றல் தங்கராசு தமிழ்
நாடோடி பாட்டுக்காரன் தமிழ்
இது நம்ம பூமி தமிழ்
சுயமரியாதை விஜய் தமிழ்
தெய்வ வாக்கு தம்பி துரை தமிழ்
1993 சின்னக் கண்ணம்மா அரவிந்து தமிழ்
பொன்னுமணி பொன்னுமணி தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
சின்ன ஜமீன் ராசையா தமிழ்
காத்திருக்க நேரமில்லை ராஜு, சோமசேகர் தமிழ்
1994 இளைஞர் அணி தமிழ்
சீமான் தமிழ்
1995 முத்துக்கலை தமிழ்
லக்கி மேன் கோபி தமிழ்
நந்தவனத் தெரு சீனு தமிழ்
மருமகன் தங்கராசு தமிழ்
சக்கரவர்த்தி தமிழ்
தொட்டா சிணுங்கி மனோ தமிழ்
1996 கிழக்கு முகம் தமிழ்
உள்ளத்தை அள்ளித்தா ராஜா தமிழ்
கட்ட பஞ்சாயத்து தமிழ்
பூவரசன் பூவரசன் தமிழ்
மேட்டுக்குடி ராஜா தமிழ்
கோகுலத்தில் சீதை ரிஷி தமிழ்
1997 சிஷ்யா தமிழ்
பிஸ்தா மணிகண்டன் தமிழ்
1998 உதவிக்கு வரலாமா முத்துராசு தமிழ்
ஹரிச்சந்திரா அரிச்சந்திரா தமிழ்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் செல்வம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
பூவேலி முரளி தமிழ் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
சுந்தர பாண்டியன் பாண்டி, சுந்தர் தமிழ்
1999 சின்ன ராஜா ராஜா, திலிப் தமிழ்
நிலவே முகம் காட்டு மூர்த்தி தமிழ்
ஆனந்த பூங்காற்றே ஹரிதாஸ் தமிழ் சிறப்புத் தோற்றம்
சுயம்வரம் ராம்குமார் தமிழ்
ரோஜாவனம் முத்து தமிழ்
உனக்காக எல்லாம் உனக்காக சக்திவேலு தமிழ்

2000களில்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2000 தை பொறந்தாச்சு அரவிந்து தமிழ் சிறப்புத் தோற்றம்
சந்தித்த வேளை ஆடலரசு தமிழ்
கண்ணன் வருவான் கண்ணன் தமிழ்
சீனு சீனு தமிழ்
குபேரன் குபேரன் தமிழ்
2001 உள்ளம் கொள்ளை போகுதே கவுதம் தமிழ் சிறப்புத் தோற்றம்
லவ்லி சந்துரு தமிழ்
அழகான நாட்கள் சந்துரு தமிழ்
2002 தேவன் சக்கரவர்த்தி தமிழ் சிறப்புத் தோற்றம்
கேம் தமிழ்
2003 இன்று கவுதமன் தமிழ்
2004 மனதில் சிவா, அக்னி தமிழ்
2006 குஸ்தி சிங்கம் தமிழ்
2007 கலக்குர சந்துரு சந்துரு தமிழ்

2010களில்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 மாஞ்சா வேலு சுபாஷ் சந்திர போஸ் தமிழ்
ராவணன் ஞானப்பிரகாசம் தமிழ்
2011 புலி வேஷம் ஈசுவரன் மூர்த்தி தமிழ்
2013 ஓம் 3டி அரிசந்திர பிரசாத் தெலுங்கு
2015 அனேகன் தமிழ் முதல் முறையாக எதிர்நாயகன் வேடத்தில்
பாடிய பாடல்கள்
ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் உடன் பாடியவர்கள்
1991 சுய மரியாதை "வான்மீது மேகம்" சிவாஜிராஜா
1992 அமரன் "வெத்தலை போட்ட சோக்குல"
"முஸ்தபா" ஆதித்யன்
1993 சின்ன ஜமீன் "ஒனப்பு தட்டு" இளையராஜா சுவர்ணலதா
1997 சிஷ்யா "அப்பல்லோ அப்பல்லோ" தேவா
1997 பிஸ்தா "கோழிக்கறி கொண்டு வரட்டா" எஸ். ஏ. ராஜ்குமார்
1998 பூவேலி "கதை சொல்லப் போறேன்" பரத்வாஜ்
1998 அரிச்சந்திரா "அரிச்சந்திரன்" ஆனந்த், கோபால், சாலீன்



தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடிப்பார் என  எதிர்பார்க்க பட்ட நடிகர் கார்த்திக் கால ஓட்டத்திலும் தனக்கென வகுத்து கொண்ட தவறான  கொள்கையினாலும்,கால்சீட் சொதப்பல் போன்ற காரண்ங்களால் தமிழ் சினிமாவிலிருந்து  கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்க பட்டார்.

 தமிழ் சினிமாவிலிருந்து ஒதுக்க பட்டாலும் தமிழ் சினிமாவில் அவர் விட்டு சென்ற்
இடம் இன்னும் காலியாகவே உள்ளது என்றால் அது மிகை அல்ல.

அவரிடம் பல குறைகள் இருந்தாலும் ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் இன்றைய இளைய  தலைமுறையிடம் காணமுடியும்.

குறிப்பாக படித்த நுனி நாக்கில் ஆங்கிலம் பேசகூடிய அப்பாவியான கேரக்டர் என்றால்
அனைத்து நடிகர்களுக்கும் உடனே ஞாபகத்தில் வரகூடியது கார்திக்கின் கோகுலத்தில் சீதை  படம் தான். அந்த படத்தில் அவருடைய நடிப்பு பல நடிகர்களுக்கு ஒரு பல்கலை கலகம்.  உதாரணத்திற்கு பிரியமானவளே படத்தில் விஜயோட நடிப்பில் கார்த்திகோட தாக்கத்தை  காணலாம்.

அதே போல துருதுருப்பான காதலன் ரொமான்டிக் காதலன் என்றால் அனைவருக்கும் ஞாபகம்  வருவது அந்த மௌன ராகம் கேரக்டர்தான்.


நகரத்து கதைகளில் மட்டும் அல்ல கிராமத்து கதைகளில் கூட கதாபாத்திரத்துடன்
பொருந்தி விடுவார். கிழக்கு வாசல்,பொன்னுமணி,போன்ற கிராமத்து கதை அம்சம்
உள்ள  படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

 இவருடைய நடிப்பில் யாருடைய சாயலையும் காணமுடியாது.அந்த வகையில் நடிப்பில்  தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி கொண்டவர்.  தொடர்ந்து மூன்று வருடம் பிலிம் பேர் விருதை வெண்ர பெருமை கமலுக்கு பிறகு இவறையே  சாரும்.


1988ம் வருடம் அக்னி நட்சத்திரம் படத்துக்காகவும்,1989ம் வருடம் வருஷம் பதினாறு
படத்துக்காகவும்,1990ம் வருடம் கிழக்கு வாசல் படத்துகாகவும் இவர் இந்த விருதை
வென்றிருகின்றார். இது அல்லாமல் 1993ம் வருடத்தின் பிலிம் பேர் விருதையும் இவர்
பொண்ணுமணி படத்துக்காக வென்றிருக்கின்றார்,

 தமிழ் நாட்டு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு முறையும்,நந்தி அநார்ட்
ஒருமுறையும் பெற்றிருப்பது குறிப்பிட தக்கது.

தமிழ் சினிமாவில் இவர் முன்னனி நடிகராக இருந்த போது அப்போதைய முன்னனி
நடிகர்களுடன் ஈகோ பார்காமல் சேர்ந்து நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. அவ்வாறு  சேர்ந்து நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தன.


நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினியுடனும், நன்றி படத்தில் அர்ஜுனுடனும்,அக்னி
நட்சத்திரம், உரிமை கீதம்,குஸ்தி போன்ற படங்களில் பிரபுவுடமும்,ஊமை விழிகள், தேவன்  போன்ற படங்களில் விஜய காந்துடனும்,மௌன ராகம் படத்தில் மோகனுடனும்,உன்னிடத்தில்  என்னை கொடுத்தேன், ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துடனும் சேர்ந்து  நடித்துள்ளார்.


அதே போள் இவர் கால்சீட் சொதப்புகின்றார் என்ற பேச்சு பரவலாக இருந்தாலும் இவரை
இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இவரை வைத்து இயக்குவதே இவரின் திறமைக்கு
சான்று..


மணிரத்தினம் இயகத்தில் மௌன ராகம்,அக்னி நட்சத்திரம், இராவணன் போன்ற
படங்களிலும்,ஆர்.வி.உதய குமார் இயக்கத்தில் உரிமை கீதம்,கிழக்கு வாசல்,பொண்ணு
மணி,நந்தவன தேரு போன்ற படங்களிலும்,இயக்குனர் ராஜ் கபூர் இயகத்தில் சின்ன
ஜமீன்,குஸ்தி,ஆனந்த போங்காற்றே போன்ற படங்களிலும்,ஆர்.ராஜேஸ்வர் இயக்கத்தில்
இதயதாமரை, அமரன் போன்ற படங்களிலும், பி.வாசு இயக்கத்தில் இது நம்ம போமி,சீணு,புலி  வேஷம் போன்ற படங்களிலும்,சுந்தர் .சி. இயக்கத்தில் இயக்கத்தில் உள்ளத்தை  அள்ளித்தா,மேட்டுக்குடி,உனக்காக எல்லாம் உனக்காக,உள்ளம் கொள்ளை போகுதே பொன்ற  படங்களிலும்,பாரதி ராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை,நாடோடி தென்றல் போன்ற  படங்களிலும், நடித்துள்ளார்.

இன்றைய தலைமுறை நடிகரான ஜெயம் ரவிக்கு பிடித்தமான நடிகர் இவர்தான் என்பது
பலபேறுக்கு தெரியாது.

 இவருடன் சேர்ந்து நடித்த பல நடிகைகள் பல பேர் மீண்டும் இவருடன் சேர்ந்து நடிக்க ஆசைபடுவது உண்டு. . நடிகை குஷ்புவின்  வீட்டில் இருக்கும் ஒரே நடிகரின் போட்டோ நம்ம கார்த்திக் உடையது தான்.நடிகை மீனா  தனக்கு பொருத்தமான நடிகர் கார்த்திக் தான் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டது  குறிப்பிடதக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக