திங்கள், 26 செப்டம்பர், 2016

பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த நாள் செப்டம்பர் 28.

பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த நாள் செப்டம்பர் 28.

லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar,
பி. செப்டெம்பர் 28 , 1929 )
இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற
ஒரு பாடகியாவார். இந்தியாவின்
இசைக்குயில் எனப் போற்றப்
படுபவர். இந்தியக்
குடிமக்களுக்கு (civilian)
வழங்கப்படும் மிக உயர்ந்த
விருதான பாரத ரத்னா விருது
பெற்ற இரண்டு பாடகர்களில் இவர்
ஒருவராவார். இவரது கலையுலக
வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும்
மேலாக நீடித்து வருகிறது.
நான்கு வயதில் பாடுவதற்கு
ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பாடல்களைப்
பாடியுள்ளார்.
குடும்ப
வாழ்க்கை
திருமணம் செய்யாமலே இருந்து
விட்டவர். பாடகி ஆஷா
போஸ்லேயின் சகோதரி.
கலையுலக
வாழ்க்கை
முதன் முதலாக 1942 இல் கிதி
ஹசால் என்ற மராத்திப் பாடலைப்
பாடினார். 1948 இல் இவர் பாடிய
மஜ்பூர் என்ற திரைப்படம்
இவருக்கு திருப்புமுனையை
ஏற்படுத்தியது. இதனை
தொடர்ந்து வந்த படங்களான பர்சாத் ,
அந்தாஸ் , துலாரி , மகால் போன்ற
படங்கள் இவருக்குப் பெரும்
புகழை ஈட்டிக் கொடுத்தன.
இவரது பாடல்கள் அந்தக் காலத்தில்
தொடங்கி இன்றுவரை
தனித்துவமான கவர்ச்சியோடு
பலரையும் கவர்ந்து
கொண்டிருக்கின்றன.1942 ஆம்
ஆண்டு சினிமா துறையில்
பாடத்தொடங்கிய அவர், முதன்
முதலாக “கிதி ஹசால்” என்ற
மராத்தி பாடலைப் பாடினார்.
அதே ஆண்டில் அவருடைய
தந்தையும் இறந்து விடவே,
குடும்பம் கடுமையான நிதி
நெருக்கடிக்கு உள்ளானது. அந்த
நேரத்தில் இசையமைப்பாளர்
குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்”
என்ற திரைப்படத்தில் பாட
வாய்ப்பு அளித்தார். இது
அவருடைய வாழ்க்கையில் ஒரு
திருப்புமுனையை
ஏற்படுத்தியது எனலாம். இதனை
தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’,
‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள்
இவருக்கு பெரும் புகழை
ஈட்டிக்கொடுத்தது.
1942 முதல் சினிமா துறையில்
பாடத்தொடங்கிய அவர், அனில்
பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன்,
நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி.
ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம்
சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத்
ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி,
ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர்
பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன்
மோகன், மற்றும் உஷா கன்னா,
ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ்
ரோஷன், அனு மாலிக், ஆனந்த்
மிலிந்த், ஷிவ் ஹரி, ராம்
லட்சுமண், ஏ.ஆர் ரகுமான்,
இளையராஜா என கிட்டத்தட்ட
எல்லா இசையமைப்பளர்களுடன்
இணைந்து பாடியுள்ளார்.
விருதுகள்
பாரத ரத்னா
தாதாசாஹெப் பால்கே
விருது
1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி
இசையமைத்து வெளிவந்த
“மதுமதி” என்ற திரைப்படத்தில்,
இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி”
என்ற பாடல், இவருக்கு முதல்
ஃபிலிம்பேர் விருதினை
பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல்
ஹேமந்த் குமார் இசையமைத்த
“பீஸ் சால் பாத்” திரைப்படத்தில்
“கஹின் தீப் ஜலே கஹின் தில்”
என்ற பாடல் இவருக்கு
இரண்டாவது ஃபிலிம்பேர்
விருதினை பெற்றுத்தந்தது. 1973
ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன்
இசையமைத்து வெளிவந்த
“பரிஜாய்” என்ற திரைப்படதில்
இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற
பாடல் சிறந்த பின்னனி
பாடகருக்கான முதல் “தேசிய
விருதை” பெற்றுத்தந்தது. 1969
ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது”
வழங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு
பீட்டி நா பிடாய் ரெய்னா
(பரிஜாய்) என்ற பாடலுக்காக
தேசிய விருது வழங்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக
பாடல்களை பாடியதற்காக
“கின்னஸ் புத்தகத்தில்” இடம்
பிடித்தார். 1975 ஆம் ஆண்டு ரூதே
ரூதே பியா (கோரா காகஸ்) என்ற
பாடலுக்காக தேசிய விருது
வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு
“தாதா சாஹேப் பால்கே விருது”
வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு
யாரா சீலி சீலி (லேகின்) என்ற
பாடலுக்காக தேசிய விருது
வழங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு
பிலிம்பேர் வாழ்நாள்
சாதனையாளர் விருது. 1996 ஆம்
ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள்
சாதனையாளர் விருது. 1997 ஆம்
ஆண்டு ராஜீவ் காந்தி விருது.
1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன்
விருது” வழங்கப்பட்டது. 1999 ஆம்
ஆண்டு என்.டி.ஆர் விருது
மற்றும் வாழ்நாள்
சாதனையாளருக்கான ஜீ
சினிமா விருது. 2000 ஆம்
ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ
மூலம் வாழ்நாள் சாதனையாளர்
விருது. 2001 ஆம் ஆண்டு ஹீரோ
ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ்
மூலமாக சிறந்த பின்னனி
பாடகருக்கான மில்லேனியம்
விருது வழங்கப்பட்டது. 2001 ஆம்
ஆண்டு “நூர்ஜஹான் விருது”
வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு
“மகாராஷ்டிரா ரத்னா விருது”
வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு
“பாரத் ரத்னா விருது”
வழங்கப்பட்டது. ஆஜா ரெ பர்தேசி
(மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி
தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ
மேரே மந்திர் தும்ஹீ மெரி
(க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே
லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1969),
தீதி தேரா தீவார் தீவானா (ஹம்
ஆப்கே ஹே ஹைன் கோன் 1994)
போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர்
விருது வழங்கப்பட்டது. லதா
மங்கேஷ்கர் அவர்கள், பெங்கால்
திரைப்பட பத்திரிக்கையாளர் கழக
விருதுகள் என மேலும் பல
விருதுகளை பெற்று,
இன்றளவும் புகழ் பெற்ற
பாடகியாக விளங்கி வருகிறார்.
இவர் பாடிய
பாடல்களில் சில
வந்தே மாதரம்
வளையோசை - சத்யா (தமிழ்)
1988 ‘சஜா’ (1951), ‘பைஜு
பவ்ரா’ (1952), ‘ஆக் ஆஹ்’ (1953), ‘ஸ்ரீ
420’ (1955), ‘தேவதாஸ்’ (1955), ‘கதவு
எண் 44’ (1955), ‘சோரி சோரி’ (1956),
‘முகல் ஆஸம்’ (1960),
‘கோஹினூர்’ (1960), ‘சோடே
நவாப்’ (1961), ‘பரஸ்மணி’ (1963), ‘பூத்
பங்களா’ (1965), ‘பட்னி பட்னி’ (1966),
‘அபிலாஷா’ (1969), ‘ கேரவன்’ (1971),
‘காதி பதங்’ (1971), ‘ அமர்
பிரேம்’ (1972), ‘ஆன்ந்தி’ (1975),
‘சாந்தினி’ (1989), ‘லம்ஹே’ (1991),
‘தர்’ (1993), ‘யேஹ் தில்லகி’ (1994),
‘தில்வாலே துல்ஹனியா லே
ஜாயேங்கே’ (1995), ‘ஹை தலாக்
தில்’ (1997), ‘மொகபத்தீன்’ (2000),
‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’ (2002),
‘சாரா’ (2004), ‘தில் சே’ (1998), ‘ஒன் 2
க 4 ‘ (2001), ‘புகார்’ (2000),
‘ஜுபைதா’ (2001), ‘ரங் தே பசந்தி
(2006), ‘லகான்’ (2001), ‘அனார்கலி’,
‘அல்பேலா’, ‘ஆஷா’, ‘அடாலட்’,
‘ரயில் மேடை’, ‘சாச்சா
ஜிந்தாபாத்’ போன்ற
திரைப்படங்களில் இவர் பாடிய
பாடல்கள் பலரையும் கவர்ந்தது
எனலாம்.

**********************************
'இந்தியாவின் இசைக்குயில்'
என்று புகழ்பெற்றவரும், 'பாரத
ரத்னா' விருது பெற்றவருமான
லதா மங்கேஷ்கர் முதலில்
படவுலகில் நடிகையாகத் தான்
காலடி எடுத்து வைத்தார். 8
படங்களில் நடித்த பிறகு,
பின்னணி பாடகியாக புகழ்
பெற்றார். அவர் 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பாடல்களைப்
பாடியுள்ளார்.
ஒவ்வொரு நொடியிலும்
ஏதாவது ஒரு வானொலியில்
அவர் பாட்டு ஒலித்துக் கொண்டு
இருக்கும்.
பிரபல மராத்திய நாடக நடிகர்
மாஸ்டர் தினாநாத் மங்கேஷ்கர்,
குஜராத்தைச் சேர்ந்த சுதாமதி
ஆகிய தம்பதிகளுக்கு 28.9.1929
அன்று இந்தூரில் பிறந்தவர்தான்
லதா. இவரது உடன்பிறந்தோர்கள்
மீனா, ஆஷா, உஷா என்ற மூன்று
சகோதரிகள். ஹிருதயநாத் என்ற
ஒரு சகோதரர்.
தான் மேடையில் பாடும் கஷ்டமான
பாடல்களை லதா வெகு இலகுவாக
'ஹம்' செய்யும் திறமை,
தினாநாத்தைத் திகைக்க வைத்தது.
துரதிர்ஷ்டவசமாக லதாவுக்கு
ஐந்து வயதாகும் போது
பெரியம்மை எனப்படும் 'வைசூரி'
தீவிரமாகத் தாக்கி, அவரது
முகத்தில் மாறாத வடுக்களை
பதித்துச் சென்றது.
பிறவியிலேயே ரோஷமும்
முன்கோபமும் உள்ள லதா,
பள்ளிக்கூட ஆசிரியருடன்
சண்டையிட்டுக் கொண்டு
பள்ளிக்கூடம் செல்லாமலேயே
நின்றுவிட்டார்.
தன் தந்தையின் மேடை நாடகங்களில்
லதா பங்கேற்றார். தனது ஏழாவது
வயதில் 'சுபத்திரா' நாடகத்தில்
நாரதராக வந்து இனிய பாடல்கள்
பாடி, மேடையில் வெற்றிகரமாக
பவனி வந்தார். 'இசைதான்
வாழ்க்கை' என்று முடிவு எடுத்து,
முதலில் தன் தந்தையிடம் இசை
பயின்றார். பின் அமனந்தன்கான்
சாகோப்பிடம் முறையாக சங்கீதம்
பயின்றார். வீட்டில் ஓய்வாக
இருக்கும் போதெல்லாம் இயற்கை
ஒலிகளை இசையாக வரித்து ரசிக்க
ஆரம்பித்தார்.
சமையல் செய்யும் போது அவரது
தாய்வழிப் பாட்டி பாடும் கிராமியப்
பாடல்கள், வீட்டுக்கதவு திறந்து
மூடும் சத்தம், சிறகடிக்கும்
பறவைகள் ஒலி, சலசல என்ற
நீரோடையின் ராகம் இப்படி எந்த
சப்தத்தையும் இசையாய்
உள்வாங்கும் இசைநாட்டம் லதாவிடம்
இருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் படவுலகில்
பாடி நடிக்கும் நடிகராக
கே.எல்.சைகால், நடிகையாக
நூர்ஜகான் ஆகியோர் கொடிகட்டிப்
பறந்தனர். பாடுவதற்குக் கடினமான
அவர்களது பாடல்களை, லதா வெகு
சுலபமாகப் பாடி, அனைவரையும்
வியக்க வைத்தார்.
1942-ம் ஆண்டில், தனது 13-வது
வயதில் லதா தன் திரையுலகப்
பயணத்தைத் தொடங்கினார். அந்த
ஆண்டு மார்ச் மாதம் 'கிட்டி
ஹாஸால்' (எவ்வளவுதான்
சிரிப்பாய்) என்ற மராத்திய
திரைப்படத்திற்கு முதன் முதலாக
அவர் பாடல் ஒலிப்பதிவு
செய்யப்பட்டது. அந்த முதல் பாடல்
'நாச்சுயாகடே,
கேலுஸாரி' (நண்பர்களே
வாருங்கள், நாம் ஆடி
விளையாடலாம்) என்பதாகும்.
துரதிர்ஷ்டமாக படம் வெளியான
போது இந்தப் பாடல் படத்தில்
நீக்கப்பட்டிருந்தது. லதா
சோகமானார்.
துயருக்குமேல் துயராக அதே
ஆண்டு லதாவின் தந்தை தினாநாத்,
தன் இளம் வயதிலேயே (44 வயது)
அகால மரணமடைந்தார்.
மூத்தமகள் என்ற நிலையில்,
குடும்பப் பொறுப்பை ஏற்க
வேண்டிய சூழ்நிலைக்கு லதா
தள்ளப்பட்டார். கலையைத் தவிர
வேறேதும் அறியாத சிறுமி லதா,
மாஸ்டர் வினாயக்கின் ஆதரவினால்
முழுநேர குழந்தை நட்சத்திரமாக
பணியேற்று அவர் முதன் முதலாக
எடுத்த 'பஸலி மங்கள கார்' என்ற
மராத்தி திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் 1942-ல் வெளிவந்தது. இதில்
சிறுமி லதா மராத்தியில் பாடிய
'நாட்டாளி சைத்ராச்சி நாவலாயே'
என்ற பாடல்தான் அவர்பாடி
திரையில் ஒலித்த முதல் பாடல்.
மற்றொரு மராத்திப் படமான
'காஜாபாஹா'வில் தான் இந்தியில்
அவர் பாடிய 'மாடா ஏக் சப்போட்கி'
என்ற பாடல் இடம்பெற்றது.
எனினும் லதா முதன் முதலாகப்
பாடிய இந்திப் படம் 'பாடிமா'
என்பதாகும். இதற்கு இசை
அமைத்தவர் கே.தத்தா. இந்தப்படத்தில்
லதா பாடியதுடன் நடித்தும்
இருக்கிறார்.
குழந்தைப் பருவத்தில்
பெற்றோருடன் லதா. படத்தில்
இருப்பவர்கள் : தாயார் சுதாமதி.
அவர் மடியில் ஆஷா, 5 வயது
லதா, தந்தை தினாநாத்
மங்கேஷ்கர், மீனா.
சிறுமி லதாவுடன் அப்படத்தில்
கதாநாயகியாக நடித்தவர் நடிகை
நூர்ஜஹான்.
லதா தனித்துப் பாடிய முதல்
இந்திப்படம் என்ற பெருமை 'ஆப்கி
சேவா மெயின்' என்ற படத்திற்கே
கிடைத்தது. அந்தப்பாட்டு
'பாலகூர்ன் கர் ஜோரிரே' (உன் பாத
அடிகளை என் இரு கரம் கூப்பி
வணங்குகிறேன்) என்பதாகும்.
இப்படி லதா பாடி நடித்த மராத்தி,
இந்தி திரைப்படங்களின்
எண்ணிக்கை எட்டு ஆகும்.
லதாவை மறுபடியும் துரதிர்ஷ்டம்
துரத்த ஆரம்பித்தது. அவரது
திரையுலக பாதுகாவலரான
மாஸ்டர் வினாயக் மரணம் அடைந்தார்.
இப்போது 'கஸாஞ்சி'யால்
பழக்கமான இசை அமைப்பாளர்
குலாம் ஹைதர், லதாவை
வாய்ப்புக்காக பிலிமிஸ்தான்
ஸ்டூடியோவுக்கு அழைத்துச்
சென்றார். அங்கு பரீட்சார்த்தமாக
லதா-மதன்மோகன் டூயட் ஒன்று
பதிவு செய்யப்பட்டு கேட்கப்பட்டது.
அதில் லதாவின் குரல் சன்னமாக
இருப்பதாகக் கூறி பிலிம்ஸ்தான்
ஸ்டூடியோ தலைவர் முகர்ஜு
கைவிரித்து விட்டார்.
ஆனாலும் குலாம் ஹைதர் மனம்
தளராமல் 'மஜ்பூர்' படத்தில்
லதாவைப் பாடவைத்தார்.
இப்பாடலால் லதா மக்களுக்கு
ஓரளவு அறிமுகமானார்.
பிறகு கேம்சந்த் பிரகாஷ் இசையில்
'ஜீத்தி' என்ற படத்தில் லதா பாடினார்.
இதுவும் மக்களிடையே லதாவின்
குரலுக்கு செல்வாக்கை
ஏற்படுத்திக் கொடுத்தது.
கலைவாணியின் இசையருள்
லதாவுக்கு பரிபூரணமாக
கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு
முக்கிய காரணம் பழம்பெரும் இந்தி
இசை அமைப்பாளர் நவுஷாத் அலி.
இது பற்றி, நவுஷாத் ஒரு
கட்டுரையில் எழுதி
இருப்பதாவது:-
'1946-ம் ஆண்டில் கர்தார்
ஸ்டூடியோவில், ஒரு பாடலுக்கு
இசை அமைப்பதற்கான ஏற்பாட்டில்
முனைந்திருந்தேன். அப்போது ஒரு
சிறு பெண், மெல்லிய குரலில் ஒரு
பாட்டைப் பாடியபடி என்னைக்
கடந்து சென்றாள். அந்தக் குரல்,
என்னை நெகிழச் செய்தது.
'வாய்ப்பு அளித்தால், அந்தப் பெண்
இசையின் சிகரத்தைத் தொடுவாள்'
என்று நினைத்தேன்.
அந்தப் பெண்ணின் பெயர் லதா
மங்கேஷ்கர் என்றும், மராத்திய
படங்களில் பெரும்பாலும்
'கோரஸ்' (கோஷ்டி கானம்) பாடுபவர்
என்றும் அறிந்தேன். அந்தப்
பெண்ணுக்கு ஒரு 'கஜல்' பாடல் பாட
வாய்ப்பு அளிக்க விரும்புவதாக
நான் கூறியதைக் கேட்டு,
ஸ்டூடியோவில் இருந்த
அனைவரும் வியப்படைந்தனர்.
தனது 13 வயதில் லதா மங்கேஷ்கர்
சினிமாவில் நடித்த காட்சிகள்
காரணம், அப்போது 'கஜல்'
பாடுவதில், நூர்ஜஹான், சுரய்யா,
ஷம்சத் பேகம், ராஜ்குமாரி,
ஜேஹர்பாய் ஆகியோர்
முன்னணியில் இருந்தனர். அப்படி
இருக்க இந்த சின்னப் பெண்ணுக்கு
கஜல் பாட வாய்ப்பு தருவானேன்
என்று அவர்கள் எண்ணினார்கள்.
அதை நான் பொருட்படுத்தவில்லை.
லதாவை அழைத்து வரச் செய்தேன்.
'சாந்தினி ராத்' என்ற இந்திப்
படத்துக்கு, லதாவின் பாடலைப்
பதிவு செய்தேன்.
குரல் சன்னமாக இருந்தாலும், நான்
லதாவை உற்சாகப்படுத்தி, கொஞ்சம்
உரத்த குரலில் பாடச் செய்து,
மீண்டும் பதிவு செய்தேன்.
பாடல் மிக அருமையாக அமைந்தது.
நானும், ஒலிப்பதிவாளரும்
மிகவும் மகிழ்ச்சி அடைந்து
லதாவை வாழ்த்தினோம்.
இந்தப் பாடலுக்கு, லதாவுக்கு
ஊதியமாக 60 ரூபாவை பட அதிபர்
கொடுத்தார். லதா அதை
மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு
விடை பெற்றார்.'
இவ்வாறு நவுஷாத்
குறிப்பிட்டுள்ளார்.
'சாந்தினி ராத்' படம் 1949-ல்
வெளிவந்து வெற்றிபெற்றது.
'சாந்தினி ராத்'திற்குப் பிறகு,
அதே ஆண்டு வெளிவந்த 'துலாரி'
தான் லதா மங்கேஷ்கரை ஒரு சிறந்த
பின்னணிப் பாடகி என்பதை
மக்களுக்கு முழுவதுமாக
உணர்த்தியது.
பின் நவுஷாத்திடம், உருது மொழி
உச்சரிப்பில் பயிற்சி பெற்றதுடன்
பின்னணி பாடுவதற்கு
தேவையான அத்துணை
நுணுக்கங்களையும் கற்றுத்
தேர்ந்தார் லதா.
இந்த சமயத்தில், தன் படங்களின் தொடர்
தோல்வியால் துவண்டிருந்த
தயாரிப்பாளர் மெஹ்பூப்கான்,
திலிப்குமார், ராஜ்கபூர், நர்கீஸ்
ஆகிய மூன்று மெகா ஸ்டார்களைக்
கொண்டு, 'அந்தாஸ்' என்ற பெரிய
பட்ஜெட் படத்தை தயாரிப்பதில்
தீவிரமாக இருந்தார்.
படத்தின் இசையமைப்பாளர்
நவுஷாத். படத்தில் நர்கீஸ்
பாடுவதாக வரும்
பாடல்களையெல்லாம் லதாவையே
பாடச் செய்யலாமென்ற தன்கருத்தை
தயாரிப்பாளரிடம் தெரிவித்தார்,
நவுஷாத். உடனே தயாரிப்பாளர்,
'சகோதரரே! அதெல்லாம்
எனக்கொன்றும் தெரியாது!
சங்கீதத்திற்கு நீங்களே நீதிபதி!
உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்'
என்று பச்சைக் கொடி
காட்டிவிட்டார்.
மெஹ்பூப் ஸ்டூடியோவில்
'அந்தாஸ்' படத்திற்காக லதாவின்
பாடல்கள் தொடர்ந்து பதிவு
செய்யப்பட்டன. மெஹ்பூப்
ஸ்டூடியோவில் லதாவின் இனிய
பாடல்கள் பதிவு செய்யப்படுவதை
ஓர் இளைஞர் ஒதுங்கி நின்று
ரசித்துக் கொண்டிருந்தார்.
அவர்தான் குடத்திற்குள் இருந்த
லதாவின் இசைப் பேரொளியை
குன்றின்மேல் ஏற்றுவித்த
பெருமைக்குரிய நடிகர் ராஜ்கபூர்!
தனது படமான 'பர்சாத்'தில், சங்கர்-
ஜெய்கிஷன் இசை அமைப்பில்
லதாவைப் பாட வைத்தார்.
இப்பாடல்கள் அனைத்தும் 'ஹிட்'.
இதனால் லதா வீடறிய, நாடறிய,
உலகறிய பெரும் புகழ் பெற்றார்.
நவுஷாத் போல் லதாவின் இனிய
குரலை பயன்படுத்திய இசை
அமைப்பாளர்கள் வரிசை நீண்டது.
இந்த இசை அமைப்பாளர்கள்
வரிசையில் புகழ்பெற்ற அனில்
பிஸ்வாஸ் (அநோகிப்யார்), கேம்சந்த்
பிரகாஷ் (மஹல்), ஷியாம்சுந்தர்
(லாகூர்), விநோத் (ஏக்தி லட்கி),
சி.ராமச்சந்திரா (அனார்க்கலி),
ஹ§ஸன் லால் பகத்ராம்
(பாடிபெஹன்), மதன்மோகன் (அன்பத்),
வசந்த் தேசாய் (தோ ஆங்கேன்
பாராஹாதி), லட்சுமிகாந்த்-
ப்யாரிலால் (பாரஸ்மணி)
போன்றோர் பலர் அடங்குவார்கள்.
ஆனால் ஏனோ பிரபல இசை
அமைப்பாளர் ஓ.பி.நய்யார் இசை
அமைப்பில், லதா ஒரு பாட்டுக்கூட
பாடவில்லை!
இதற்கிடையில் நூர்ஜஹான்,
குர்ஷித் போன்ற பின்னணி
பாடகிகள் பாகிஸ்தானில்
குடியேறினர். இதனால் லதாவின்
குரலுக்கு தேவை
அதிகமாயிற்று.
தவிர ஐந்து மராத்திப் படங்களுக்கு
லதா மாற்றுப் பெயரில் இசை
அமைத்திருந்தார். லதா மங்கேஷ்கர்
இசை அமைத்த மராத்தியப் படங்களில்
ஒன்றான 1966-ம் ஆண்டில் வெளிவந்த
'சதிமன்ஸே' என்ற படம் அந்த ஆண்டின்
சிறந்த இசை அமைப்பாளர் விருதை
லதாவுக்குப் பெற்றுத்தந்தது.
40 ஆயிரம் பாடல்கள்
லதா பாட்டு இடம்பெறாத படமே
இல்லை என்ற அளவுக்கு, நீண்ட
காலம் இந்திப் பட உலகில்
முடிசூடா ராணியாகத் திகழ்ந்தார்,
லதா.
இந்தியில் மட்டுமல்லாமல் உருது,
மராத்தி, குஜராத்தி, வங்காளி,
பஞ்சாபி, அசாமி, தமிழ், தெலுங்கு
உள்பட பல மொழிகளில் லதா
பாடியுள்ளார். (தமிழில் அவர்
பாடிய சில படங்கள் 'ஆன்', 'வானரதம்').
லதா பாடிய பாடல்களின்
எண்ணிக்கை 40 ஆயிரம் என்று
'கின்னஸ்' சாதனை புத்தகம்
கூறுகிறது.
லதாவின் தங்கை ஆஷா
போன்ஸ்லேயும் பின்னணி
பாடகிகளில் முக்கிய இடத்தைப்
பெற்றுள்ளார். மீனா, உஷா
ஆகியோரும் பாடத் தெரிந்தவர்களே.
சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கர்
ஒரு இசை அமைப்பாளராகத்
திகழ்கிறார்.
பாரத ரத்னா
லதாவுக்கு 'பத்மபூஷண்' விருதை,
1969-ல் மத்திய அரசு வழங்கியது.
திரைப்படத்துறையில் வாழ்நாள்
சாதனை படைத்ததற்காக, 1989-ல்
தாதா சாகேப் பால்கே விருது
வழங்கப்பட்டது.
மேலும் பல விருதுகளைப்
பெற்றுள்ள லதாவுக்கு,
அவற்றுக்கெல்லாம் சிகரம் போல
'பாரத ரத்னா' விருது 2001-ம்
ஆண்டில் வழங்கப்பட்டது.
திருமணம்
லதா தவிர, அவரது குடும்பத்தில்
மற்ற அனைவரும் திருமணம்
ஆனவர்களே. லதா, தன் தந்தை
விட்டுச் சென்ற குடும்பப்
பொறுப்பை இளம் வயதிலேயே
ஏற்று, உடன் பிறந்தோரை
கரையேற்றுவதற்கே தன்
வாழ்க்கையை அர்ப்பணித்ததால்,
திருமணம் செய்து
கொள்ளவில்லை.
லதா வசதிபடைத்தவராக
இருந்தாலும், எளிமையைக்
கைவிடவில்லை. மும்பையில்
புகழ்பெற்ற மகாலட்சுமி
கோவிலுக்கு எதிரே உள்ள
பெத்தார் ரோட்டில், ஒரு
அடுக்குமாடி கட்டிடத்தில் தான்
இப்போதும் வசிக்கிறார்.
திரை இசைக்கு பிதாமகர் என்று
போற்றப்படும் நவுஷாத்,
லதாவுக்கு கீழ்க்கண்டவாறு
புகழாரம் சூட்டியுள்ளார்.
'ஒவ்வொரு தலைமுறையிலும் சில
கலைஞர்கள் தோன்றி, லட்சக்
கணக்கானவர்களின் இதயங்களை
கவருகிறார்கள். அதில்
கே.எல்.சைகால் ஒருவர்.
மற்றொருவர் லதா.
என்னைப் பொறுத்தவரை, இந்தியத்
திரை உலக வரலாற்றிலேயே சிறந்த
பாடகி லதா தான். லதாவுக்குப்
பிறகும் பலர் வருவார்கள்,
போவார்கள். சில சமயம் லதாவைக்
காட்டிலும் மிகுந்த
திறமைசாலிகள் வரலாம். ஆனால்,
லதாவைப் போல் இன்னொருவர்
நிச்சயம் வரமாட்டார்.
லதா, லதாதான்!
அவருக்குப் பிறகு, வேறு லதா
மங்கேஷ்கர் வரவும் முடியாது.
தோன்றவும் முடியாது!'
இவ்வாறு நவுஷாத் கூறியது,
நாட்டு மக்களின் ஒட்டுமொத்த
கருத்தாகும்.
கிசுகிசு...
லதா மங்கேஷ்கர் அமைதியான
குணமும், மென்மையாக பேசும்
தன்மையும் கொண்டவர்.
குடும்பத்திற்காக தனது வாழ்வை
அர்ப்பணித்த அவர் திருமணம்
செய்துகொள்ளவில்லை.
இருப்பினும் சினிமா உலகில் அவர்
புகழின் உச்சியில் இருந்தபோது
பல கிசுகிசுக்களையும்,
பிரச்சினைகளையும் சந்தித்தார்...
புகழ்பெற்ற பின்னணிப்பாடகர்
ஹேமந்த் குமாருடன் இணைத்து
லதா கிசுகிசுக்கப்பட்டார்.
ஹேமத்குமார் ஏற்கனவே திருமணம்
ஆனவர். இந்த கிசுகிசுவை லதா
மறுத்தார்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ராஜ்சிங்
துங்கப்பூருக்கும் லதாவுக்கும்
இடையே நெருங்கிய நட்பு
இருந்தது. இருவரும் சேர்ந்து பல
நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டுள்ளனர்.
எஸ்.டி.பர்மனுக்கும் லதா
மங்கேஷ்கருக்கும் இடையே கருத்து
மோதல் ஏற்பட்டது. இதையடுத்து
அவர் சில ஆண்டுகள் அவரது
இசையமைப்பில் பாடுவதை
புறக்கணித்தார்.
பின்னர் அவர்களுக்குள் சமசரம்
ஏற்பட்டது. இதுபோல பின்னணி
பாடகர் முகமது ராபியுடன்
லதாவுக்கு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அவருடன் சேர்ந்து
பாடுவதை தவிர்த்தார். மேலும் சில
ஆண்டுகள் அவரை சந்திக்கவும்
மறுத்தார். பின்னர் அவர்களுக்குள்
சமரசம் ஏற்பட்டது.
லதாவின் தங்கை ஆஷாவும்
பாடகியே. ஆஷா தனது
விருப்பப்படி திருமணம் செய்து
கொண்டார். இதனால் ஏற்பட்ட
மனத்தாங்கலில் சகோதரியுடன்
பேசுவதையும், அவரை
சந்திப்பதையும் தவிர்த்தார் லதா.
பின்னர் அந்த திருமணம் தோல்வி
அடைந்து, ஆஷா திரும்பிய
போதும், தங்கையை ஏற்க லதா
மறுத்தார். மேலும் ஆஷாவுக்கு
பாடல் பாட வாய்ப்பு கொடுக்கும்
இசையமைப்பாளர்களை லதா
புறக்கணிக்கத் தொடங்கியதாக
குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல
வேறு பல புதிய பாடகிகள்
அறிமுகம் ஆனபோதும் அவர்கள்
வளர்ச்சியை தடுக்க லதா முயற்சி
செய்ததாக புகார் கூறப்பட்டது.
இப்போது சகோதரிகளுக்குள்
ஒற்றுமை நிலவினாலும், அது
தாமரை இலை தண்ணீர் போல
இருப்பதாகவே கூறப்படுகிறது.
நேருவை கலங்க வைத்த பாடல்
வந்தே மாதரம்..., ஜனகனமன...,
சாரே ஜகாங்கே... போன்ற தேச
பக்தி பாடல்களை லதா மங்கேஷ்கர்
பாடி இருக்கிறார். இருப்பினும்
அவர் பாடிய ஒரு தேச பக்தி
பாடலைக் கேட்டு பிரதமர் நேரு
கண்ணீர் வடித்தார்.
அது 'ஆயி மேரே வாதன் கி
லாகோ...' எனத்தொடங்கும்
பாடலாகும். இதை பிரதீப் எழுதி
இருக்கிறார். இசை சி.ராமச்சந்திரா.
1963-ம் ஆண்டு நடைபெற்ற பொது
நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நேரு
கலந்து கொண்டார். அந்த
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லதா
இந்தப் பாடலைப் பாடினார்.
இந்தியா-சீனா யுத்தத்தை
அடிப்படையாகக்கொண்டு இந்தப்
பாடல் அமைந்து இருந்தது.
இதைக்கேட்டு பிரதமர் நேரு
கண்களில் இருந்து கண்ணீர்
கொட்டியது.
இந்த நிகழ்வைத்தொடர்ந்து தான்
கலந்து கொள்ளும் இசை
நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை
பாடுவதை வழக்கமாக்கி
கொண்டார், லதா மங்கேஷ்கர்.
சிவாஜி கணேசனின் அன்புச்
சகோதரி
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை
தனது ‘ராக்கி சகோதரர்’ என்று லதா
அன்புடன் அழைக்கிறார். 1950-ம்
ஆண்டு சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த
சில இந்திப்படங்களில் லதா
பாடிஇருக்கிறார். பின்னர்
மும்பையில் நடந்த சிவாஜி நடித்த
நாடகம் ஒன்றை லதா தனது
சகோதரிகளுடன் பார்த்தார்.
அப்போது அவர்கள் சிவாஜியை
சந்தித்தனர். அப்போது முதல்
சிவாஜி-லதா குடும்பத்தினர்
இடையே நெருக்கம் அதிகரித்தது.
ஒவ்வொரு ஆண்டும் ராக்கி
தினத்தில் லதா மங்கேஷ்கரிடம்
இருந்து சிவாஜிக்கு ராக்கி
கயிறு வந்துவிடும். அதேபோல
ஒவ்வொரு தீபாவளிக்கும் சிவாஜி
தரப்பில் இருந்து புடவை மற்றும்
பிற சீர்வரிசைப்பொருட்கள்
லதாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஹாலிவுட் படத்தில் பாடினார்
லதா மங்கேஷ்கர் முகமது
ராபியுடன் இணைந்து 'எட்டர்னல்
சன்சைன் ஆப் தி ஸ்பாட்லஸ் மைண்ட்'
என்ற ஆங்கிலப் படத்தில் 2 பாடல்கள்
பாடியுள்ளனர். இந்தப் படத்தில்
ஜிம்கேரியும் கேதே வின்ஸ்லட்டும்
நடித்துள்ளனர். இந்தப் பாடல்கள்
பின்னணி இசைப்பாடலாக இந்தப்
படத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரான்சு அரசின் கவுரவம்
பிரான்சு அரசு 2006-ம் ஆண்டு லதா
மங்கேஷ்கருக்கு தனது நாட்டின்
உயரிய விருதான 'லெஜியான் டி
ஹானர்' என்ற விருதை வழங்கியது.
ஆனால் இந்த விருதைப்பெற பாரிஸ்
நகருக்கு செல்ல லதா மங்கேஷ்கரால்
இயலவில்லை. இதையடுத்து
பிரான்சு அரசு அதிகாரிகள்
மும்பைக்கு வந்து இந்தப் பரிசை
அவருக்கு அளித்து கவுரவித்தனர்.
லதா பெயரில் 'செண்ட்'
ஒரு கலைஞர் புகழ்பெறும் போது
அவரது பெயரில் தயாரிப்புகள்
வெளிவருவது வழக்கம். அதுபோன்ற
ஒரு பெருமை பாடகி ஒருவருக்கு
கிடைப்பது மிக அபூர்வம். அந்த
வகையில் லதா மங்கேஷ்கர் பெயரில்
ஒரு செண்ட் தயாரித்து
வெளியிடப்பட்டது. இந்த செண்ட்
பாட்டில் ஒன்றின் விலை ரூ, 1,700
ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக