வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நினைவு தினம் அக்டோபர் 01,

நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நினைவு தினம் அக்டோபர் 01,  ( 2008 )

பூர்ணம் விஸ்வநாதன் (இறப்பு:
அக்டோபர் 1, 2008 ) தமிழ்நாட்டின்
பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட
நடிகர்.
நாடக வாழ்வு
தனத 18வது வயதில் நாடகங்களில்
நடிக்கத்தொடங்கினார்.
சிறிதுகாலம் புது தில்லியில் வாழ்ந்த
விஸ்வநாதன் 1945 இல் அகில இந்திய
வானொலியில் செய்தி
வாசிப்பாளராக தன் பணியைத்
தொடங்கினார். 1947இல் அகில
இந்திய வானொலியில் முதலாக
இந்தியா விடுதலைச் செய்தியை
கூறியுள்ளார்  . மேடை நாடகங்களில்
நடிக்க ஆரம்பித்து கலைத்துறையில் நுழைந்தார்.
பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற நாடக குழுவை
ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை
மேடை ஏற்றினார். அந்த நாடகக் குழுவின்
பெயராலேயே சாதாரண
விஸ்வநாதனாக இருந்த அவர், பூர்ணம்
விஸ்வநாதன் என்று அழைக்கப்பட்டார்.
எழுத்தாளர் சுஜாதா வின் 10
நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை
ஏற்றி உள்ளார். 1979ம் ஆண்டு துவங்கி
1997ம் ஆண்டு வரை அவர் நாடகங்களை
நடத்தி வந்தார். அடிமைகள், கடவுள்
வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா,
வாசல், ஊஞ்சல், சிங்கம் அய்யங்காரின்
பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10
நாடகங்களை சுஜாதா எழுதி பூர்ணம்
விஸ்நாதன் மேடை ஏற்றினார்.
அண்டர் செகரெட்டரி, 50=50
போன்ற நாடகங்களை தானே எழுதியும்
நடித்துள்ளார். கடைசியாக 1997 ஆம்
ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த
வீடு என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.
அதன்பின்னர், அவரது குழுவைச்
சேர்ந்தவர்கள் கோகுலம் ஒரிஜினல் பாய்ஸ்
கம்பெனி என்ற பெயரில்
நாடகங்களை தொடர்ந்து நடத்தி
வந்தனர்.
டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய
நகரங்களில் இவர் நாடகம்
நடித்துள்ளார்.
திரைப்படங்களில்
86 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
1. வருஷம் 16
2. வறுமையின் நிறம் சிவப்பு
3. தில்லு முல்லு
4. மகாநதி
5. விதி
6. மூன்றாம் பிறை
7. புதுப்புது அர்த்தங்கள்
8. கேளடி கண்மணி
9. ஆண்பாவம்
விருதுகள்
1. சங்கீத நாடக அகாதமி விருது[2]
மறைவு
சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த
பூர்ணம் விஸ்வநாதன் 2008 , அக்டோபர் 1
மாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார்.
மறைந்த பூர்ணம் விஸ்நாதனுக்கு சுசீலா
என்ற மனைவியும், உமா, பத்மஜா என்ற
மகள்களும், சித்தார்தா என்ற மகனும்
உள்ளனர். இவருடைய அண்ணன், முள்ளும்
மலரும் உட்பட பல தமிழ் நாவல்கள்
எழுதிய எழுத்தாளர் உமாசந்திரன் .

**********************************
தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில
நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம்
விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா
ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக
தன் பணியைத் தொடங்கிய
விஸ்வநாதன், தன் குரல் வளத்தால்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த
செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின்
தமிழ்ச் செய்தியில் முதன் முதலில்
கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த
பெருமை இவருக்கு உண்டு.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக்
குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல
பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை
சாரும்.
ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த
தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் படங்கள்
இன்றும் மறக்க முடியாதவை.
கமல்ஹாசனுடன் மகாநதி, மூன்றாம் பிறை
படங்களில் மிக அற்புதமாக நடித்து
ரசிகர்களின் பாராட்டுக்களைப்
பெற்றார்.
விதி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை,
புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண்
பாவம் என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த
படங்களின் எண்ணிக்கை ஏராளம்.
சினிமாவைத் தவிர, நாடகத்திலும் மிகுந்த
ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். தனது
பூர்ணம் தியேட்டர்ஸ் மூலம் பல
நெகிழ்ச்சியூட்டும், அர்த்தமுள்ள
நாடகங்களைத் தந்தவர்.
மறைந்த எழுத்துலக மேதை சுஜாதா, பூர்ணம்
விஸ்வநாதனுக்காகவே எழுதிய
நாடகங்கள் அன்புள்ள அப்பா, ஊஞ்சல்,
அப்பாவின் ஆஸ்டின் கார்... இன்னும் பல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக