செவ்வாய், 27 செப்டம்பர், 2016

பாடகி பிரசாந்தினி பிறந்த நாள் செப்டம்பர் 28.

பாடகி பிரசாந்தினி பிறந்த நாள் செப்டம்பர் 28.

பிரசாந்தினி தமிழில் முதன்மையாகப்
பாடிவரும் ஒரு திரைப்படப் பின்னிணிப்
பாடகி. இவர் புகழ்பெற்ற பாடகர்
மலேசியா வாசுதேவனின் மகளும்
யுகேந்திரனின் உடன் பிறந்தவரும் ஆவார்.
இவர் ஹாரிசு ஜெயராஜின் இசையில்
உருவான 12பி என்னும் படத்தின் மூலம்
பின்னணிப் பாடகியாக
அறிமுகமானார்.
***********************************
பாடகி பிரசாந்தினி சிறப்புகள்
***********************************
அண்மைக்காலங்களில் வெளிவரும்
படங்களில் இடம்பெறும் நல்ல
பாடல்களை புதிய பாடகர்கள்
பாடிவருகின்றமை தமிழ் சினிமாவை
பொறுத்தவரை நல்ல ஆரோக்கியமான
விடயம்தான். முன்னைய காலத்தை போல ஒரு
சிலர் மட்டும் தனிக்காட்டு ராஜாக்களாக
இல்லாது பல புதுமுகங்கள்
இந்தகாலத்தில் பாடகர்களாக
அறிமுகமாகி சிறப்பாக பாடிவருவது
வரவேற்க்கதக்கது. அப்படியான ஒரு
பாடகியை பற்றிதான் நான் இப்போது
குறிப்பிடபோகிறேன். மலேசியா வாசுதேவனின்
மகளும், பாடகர் + நடிகர் + இசையமைப்பாளர்
யுகேந்திரனின் இளைய சகோதரியுமாகிய இவரை
பாடகியாக 2001ல் அறிமுகப்படுத்திய
பெருமை இசையமைப்பாளர்
ஹாரிஸ்ஜெயராஜையே சாரும்.
இவர்தான் அந்த பாடகி பிரசாந்தினி.
12B படத்தில் இடம்பெற்ற ”ஒரு புன்னகை
பூவே” என தொடங்கும் நல்ல ஒரு
பாடலின் மூலம் இவர்
அறிமுகமாகியிருந்தாலும், அந்த பாடலில்
ஆண் குரலே முக்கியத்துவம்
பெற்றிருந்ததால் இவரால்
தனக்கான ஒரு தனிமுத்திரையை அந்த பாடல்
மூலமாக பெற முடியவில்லை. அதன் பின்
யுவன்சங்கர்ராஜா, வித்தியாசாகர்,
யுகேந்திரன் போன்ற இசையமைப்பாளர்கள்
இவருக்கு வாய்ப்புகளை வழங்கியிருந்தனர்.
தனது முதல் பாடலுக்கு பிறகு பத்திற்கும்
மேற்பட்ட பாடல்களை பாடியிருந்தபோதிலும் அவை
ஒன்றும் இவரை நல்ல பாடகி என்ற அந்தஸ்தை
ரசிகர்கள் மத்தியில் சேர்க்கவில்லை. எனினும்
2006ல் ”வெயில்” படம் மூலம்
இசையமைப்பாளராக அறிமுகமான
ஜீ.வி.பிரகாஸ்குமார், அந்த படத்தில்
மிகவும் சிறிய பாடலான ”இறைவனே
உணர்கிற தருணம்” என்றபாடலில்
பிரசாந்தினிக்கு வாய்ப்பை
வழங்கியிருந்தார்.
பிரசாந்தினியின் அறிமுகத்திலிருந்த
8வருடத்தின்பின்னர் அதாவது 2009ல்
வாரணம் ஆயிரத்தில் தனது இசையில் பாட
ஹாரிஸ் ஜெயராஜ் இவரை மீள
அழைத்திருந்தார். ”முன் தினம் பார்த்தேனே”
என்று ஆரம்பிக்கும் அந்த சூப்பர் ஹிட் பாடல்
இவரை சிறந்த பாடகியாக
இனங்காட்டியிருந்தது.
எது எப்பிடியிருப்பினும் இந்தபாடல் அடைந்த
பிரபல்யத்தோடு ஒப்பிடும்போது இந்த பாடலை
சிறப்பாக பாடியவரில் ஒருவரான
பிரசாந்தினியால் அந்தளவுக்கு
பிரபல்யமாக முடியவில்லை. எதிர்பார்த்த
அளவிற்கு அவருக்கு நல்ல வாயப்புகளும்
கிடைக்கவில்லை. மீண்டும் ஜீ.வி.பிரகாஸ் 2008ல்
சேவல்படத்தில் ”நம்ம ஊரு நல்லா இருக்கு”
என்ற பலபாடகர்கள் பாடிய பாடலில்
இவருக்கும் வாயப்பளித்திருந்தார். பின்னர்
தீனா, பரத்வாஜ், சபேஸ்முரளி போன்றோரின்
இசையில் பிரபலமேயில்லாத பாடல்கள்
ஓரிரெண்டை பாடியிருந்தார்.
என்னைபொறுத்தவரை இவரது நல்ல
காலம் இந்தவருடத்திலிருந்துதான்
ஆரம்பமாகியிருக்கிறது என
சொல்ல முடியும். 
ஆடுகளம் படத்தில்
மீண்டும் ஜீ.வி.பிரகாஸின் இசையில் நல்ல
ஹிட்பாடல் ”ஐயையோ நெஞ்சு அலையுதடி”
இல் பாட வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது.
அத்துடன் அதே காலத்தில் வெளியான
ஹாரிஸ் ஜெயராஜின்
மெகாஹிட் அல்பமான ”எங்கேயும்
காதல்”இல் ”லோலிட்டா” பாடலில் இவரது
குரலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பின் வெளியான ”கோ”
பாடல்களில் அனைவராலும் ரசிக்கப்பட்ட
”என்னமோ ஏதொ” பாடலில் முக்கிய
ஹம்மிங் இவரது குரலுக்குரியது.

நன்றி : பொட்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக