திங்கள், 31 ஜூலை, 2017

நடிகர் டெல்லி கணேஷ் பிறந்த தினம் ஆகஸ்ட் 01.



நடிகர் டெல்லி கணேஷ் பிறந்த தினம் ஆகஸ்ட்  01.

டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர்.
கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும்
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார். [1]
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர் . டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி ,
நாயகன், மைக்கேல் மதன காமராஜன் ,
ஆஹா மற்றும் தெனாலி .
டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.
பெற்ற விருதுகள்
1. முதலமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களிடம் இருந்து பசி (1979) திரைப்படத்துக்காக "தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான" விருதினைப் பெற்றார்.
2. டெல்லி கணேஷ் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான " கலைமாமணி " விருது பெற்றார். [2]
டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
பட்டினப்பிரவேசம் (1977)
மாரியம்மன் திருவிழா (1978)
ஒரு வீடு ஒரு உலகம் (1978)
பசி (1979)
ஆடு பாம்பே (1979)
வெள்ளி ரதம் (1979)
உறங்காத கண்கள் (1979)
அதிசய ராகம்(1979)
ராஜ பார்வை (1981)
பட்டம் பதவி (1981)
அன்று முதல் இன்று வரை (1981)
அன்புள்ள அத்தான் (1981)
ராஜாங்கம் (1981)
எங்கம்மா மகாராணி (1981)
மூன்று முகம் (1982)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
சிம்லா ஸ்பெஷல் (1982)
புதுக்கவிதை (1982)
நிஜங்கள் (1982)
நாடோடி ராஜா (1982)
இனியவளே வா (1982)
தணியாத தாகம்(1982)
சிவப்பு சூரியன் (1983)
சூரப்புலி (1983)
அனல் காற்று (1983)
டௌரி கல்யாணம்(1983)
நாலு பேருக்கு நன்றி (1983)
உண்மைகள் (1983)
தேன்கூடு (1984)
அச்சமில்லை அச்சமில்லை (1984)
புதியவன் (1984)
உங்க வீட்டு பிள்ளை (1984)
கொம்பேறி மூக்கன் (1984)
ஊருக்கு உபதேசம் (1984)
சிந்து பைரவி (1985)
ஸ்ரீ ராகவேந்திரா (1985)
பாடும் வானம்பாடி (1985)
கெட்டிமேளம் (1985)
கல்யாண அகதிகள் (1985)
அண்ணி (1985)
சமயபுரத்தாளே சாட்சி (1985)
யார் (1985)
இளங்கன்று (1985)
கடிவாளம் (1985)
சிதம்பர ரகசியம் (1985)
ஹேமாவின் காதலர்கள் (1985)
புன்னகை மன்னன் (1986)
சம்சாரம் அது மின்சாரம் (1986)
புதிர் (1986)
மனிதனின் மறுபக்கம் (1986)
டிசம்பர் பூக்கள் (1986)
படிக்காத பாடம் (1986)
பாலைவன ரோஜாக்கள் (1986)
அடுத்த வீடு (1986)
சோறு (1986)
தர்ம தேவதை (1986)
மிஸ்டர் பாரத் (1986)
நான் அடிமை இல்லை (1986)
நாயகன் (1987)
இவர்கள் இந்தியர்கள் (1987)
மனிதன் (1987)
பருவ ராகம்(1987)
பூக்கள் விடும் தூது (1987)
கடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987)
மக்கள் என் பக்கம் (1987)
சொல்லுவதெல்லாம் உண்மை (1987)
சிறைப்பறவை (1987)
தாயே நீயே துணை (1987)
வேலுண்டு வினையில்லை (1987)
கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா (1987)
முப்பெரும் தேவியர் (1987)
வேலைக்காரன் (1987)
காவலன் அவன் கோவலன் (1987)
உன்னால் முடியும் தம்பி (1988)
நெருப்பு நிலா (1988)
தாய் பாசம் (1988)
ரத்த தானம் (1988)
பாசப் பறவைகள் (1988)
மாப்பிள்ளை சார் (1988)
இது தான் ஆரம்பம் (1988)
காளிச்சரண் (1988)
கதாநாயகன் (1988)
சத்யா (1988)
என் உயிர் கண்ணம்மா (1988)
இது தான் ஆரம்பம்(1988)
அபூர்வ சகோதரர்கள் (1989)
சகலகலா சம்மந்தி(1989)
தாயா தாரமா (1989)
படிச்ச புள்ள (1989)
அபூர்வ சகோதரிகள்(1989)
மீனாட்சி திருவிளையாடல்(1989)
தர்மம் வெல்லும் (1989)
சின்னப்பதாஸ்(1989)
ஒரே ஒரு கிராமத்திலே (1989)
ராசாத்தி கல்யாணம்(1989)
சிவா (1989)
தலைவனுக்கோர் தலைவி (1989)
மைக்கேல் மதன காமராஜன் (1990)
சத்ரியன் (1990)
தங்கைக்கு ஒரு தாலாட்டு (1990)
எதிர்காற்று (1990)
அரங்கேற்ற வேளை (1990)
வேடிக்கை என் வாடிக்கை (1990)
சீதா (1990)
நல்ல காலம் பொறந்தாச்சு (1990)
புரியாத புதிர்(1990)
உச்சிவெயில் (1990)
சிகரம் (1991)
இதய ஊஞ்சல் (1991)
இதய வாசல் (1991)
என் பொட்டுக்குச் சொந்தக்காரன் (1991)
அர்ச்சனா ஐ. ஏ. எஸ். (1991)
அண்ணன் காட்டிய வழி (1991)
விக்னேஷ்வர் (1991)
வைதேகி கல்யாணம் (1991)
ருத்ரா (1991)
மூக்குத்திப் பூ மேலே(1991)
நீ பாதி நான் பாதி (1991)
நாட்டுக்கு ஒரு நல்லவன்(1991)
காவல் நிலையம் (1991)
தீச்சட்டி கோவிந்தன்(1991)
பெரிய கவுண்டர் பொண்ணு (1992)
அம்மா வந்தாச்சு(1992)
ஊர் மரியாதை (1992)
கலிகாலம் (1992)
ஏர்முனை (1992)
சிவந்த மலர் (1992)
சின்னமருமகள் (1992)
மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
பட்டத்து ராணி (1992)
பங்காளி (1992)
திருமதி பழனிச்சாமி (1992)
மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
ராஜதுரை (1993)
ஆதித்யன் (1993)
என் இதய ராணி (1993)
முத்துபாண்டி (1993)
ஜாதிமல்லி (1993)
நம்மவர் (1994)
பட்டுக்கோட்டை பெரியப்பா(1994)
புதிய மன்னர்கள் (1994)
முதல் பயணம் (1994)
வண்டிச்சோலை சின்ராசு (1994)
வாட்ச்மேன் வடிவேலு (1994)
வா மகளே வா (1994)
அரண்மனைக் காவலன் (1994)
உங்கள் அன்புத் தங்கச்சி (1994)
முதல் உதயம்(1995)
விட்னஸ் (1995)
வேலுச்சாமி (1995)
கிழக்கு மலை (1995)
கோலங்கள் (1995)
சின்ன வாத்தியார் (1995)
டியர் சன் மருது (1995)
அவதாரம் (1995)
அவள் போட்ட கோலம் (1995)
ஆணழகன் (1995)
அவ்வை சண்முகி (1996)
காலா பானி (சிறைச்சாலை) (1996)
கிழக்கு முகம் (1996)
மிஸ்டர். ரோமியோ (1996)
செங்கோட்டை (1996)
வாழ்க ஜனநாயகம் (1996)
வெற்றி விநாயகர் (1996)
ஆஹா(1997)
மூவேந்தர் (1997)
காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)
அரிச்சந்திரா (1997)
அரவிந்தன் (1997)
அபிமன்யு (1997)
பொற்காலம்(1997)
வீரபாண்டிக் கோட்டையிலே (1997)
பகைவன் (1997)
இருவர் (1997)
தர்ம சக்கரம் (1997)
மாறாத உறவு (1997)
மை இந்தியா (1997)
காதலா காதலா (1998)
பொன்மனம் (1998)
கொண்டாட்டம் (1998)
கண்ணாத்தாள் (1998)
கோல்மால் (1998)
சிவப்பு நிலா(1998)
என் ஆச ராசாவே(1998)
புதுமைப்பித்தன் (1998)
சங்கமம் (1999)
மனம் விரும்புதே உன்னை (1999)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
அன்புள்ள காதலுக்கு (1999)
இரணியன் (1999)
தொடரும் (1999)
நிலவே முகம் காட்டு (1999)
ஒருவன் (1999)
பிரியமானவளே (2000)
ஹே ராம் (2000)
மிடில் கிளாஸ் மாதவன் (2001)
தெனாலி (2001)
அழகான நாட்கள் (2001)
தவசி (2001)
மிட்டா மிராசு (2001)
கிருஷ்ணா கிருஷ்ணா (2001)
ஆனந்தம் (2001)
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி (2001)
மிட்டா மிராசு (2001)
தென்காசிப் பட்டணம் (2002)
தமிழன் (2002)
பாபா (திரைப்படம்) (2002)
மாறன் (2002)
நைனா (2002)
பேசாத கண்ணும் பேசுமே (2002)
ஜூனியர் சீனியர் (2002)
காமராசு (2002)
ஜே! ஜே! (2003)
தம் (2003)
நளதமயந்தி (2003)
சாமி (2003)
அரசு (2003)
ஆளுக்கொரு ஆசை (2003)
ஜூலி கணபதி(2003)
ராமச்சந்திரா (2003)
எதிரி(2004)
தஸ் (2005)
ஆணை (2005)
லண்டன் (2005)
மந்திரன்(2005)
தலை நகரம் (2006)
மெர்குரி பூக்கள்(2006)
கோவை பிரதர்ஸ்(2006)
சொல்லி அடிப்பேன் (2007)
மாமதுரை (2007)
சபரி (2007)
முனி (2007)
பொய் சொல்ல போறோம் (2008)
தெனாவட்டு (2008)
மாசிலாமணி (2009)
வேட்டைக்காரன் (2009)
அயன் (2009)
உனக்காக என் காதல் (2010)
துரோகம் நடந்தது என்ன (2010)
போக்கிரி ராஜா (2010)
குட்டிப் பிசாசு (2010)
பௌர்ணமி நாகம் (2010)
அம்பாசமுத்திரம் அம்பானி (2010)
கொல கொலயா முந்திரிக்கா (2010)
தமிழ் படம் (2010)
காதலர் கதை (2011)
ஆயிரம் விளக்கு (2011)
சபாஷ் சரியான போட்டி (2011)
பொன்னர் சங்கர் (2011)
பவானி ஐ. பி. எஸ். (2011)
இளைஞன்(2011)
காவலன் (2011)
காசேதான் கடவுளடா (2011)
கருவறை (2012)
குறிப்பிடத்தக்க சின்னத்திரை தொடர்கள்
மர்ம தேசம்
கஸ்தூரி
பொறந்த வீடா புகுந்த வீடா
பல்லாங்குழி
வசந்தம்
மனைவி
எங்கே பிராமணன்
செல்லமே
இப்படிக்குத் தென்றல்
திருப்பாவை
மனிதர்கள்
தினேஷ் கணேஷ்
வீட்டுக்கு வீடு லூட்டி
ஆஹா
பின்னணிக் குரல்
விஷ்ணுவர்த்தன் (மழலைப் பட்டாளம்)
சிரஞ்சீவி (47 நாட்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக