வியாழன், 27 ஜூலை, 2017

இசையமைப்பாளர் வி. குமார். பிறந்த தினம் ஜூலை 28.


இசையமைப்பாளர்  வி. குமார்.  பிறந்த தினம் ஜூலை  28.

”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன் ,
கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். இவர் தொடர்ச்சியாக பல கே. பாலச்சந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். காதோடுதான் நான் பேசுவேன் , உன்னிடம் மயங்குகிறேன் , நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் , கண்ணொரு பக்கம் , இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள் ,சிவப்புகல்லு மூக்குத்தி , வா வாத்யாரே வூட்டாண்ட , நீ போட்ட மூகுத்தியோ , நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை , போன்றப் பாடல்கள் இவரின் தலைசிறந்த பாடல்களாகும்.

இசையமைத்த திரைப்படங்கள்
1. நீர்க்குமிழி
2. நாணல்
3. அவளும் பெண்தானே
4. ஆயிரத்தில் ஒருத்தி
5. காரோட்டிக்கண்ணன்
6. கஸ்தூரி விஜயம்
7. மஞ்சள் முகமே வருக
8. தேன்சிந்துதே வானம்
9. ஏழைக்கும் காலம் வரும்
10. ஆசை 60 நாள்
11. இது இவர்களின் கதை
12. கணவன் மனைவி
13. மிட்டாய் மம்மி
14. நல்ல பெண்மணி
15. பணக்கார பெண்
16. அன்று சிந்திய ரத்தம்
17. முன்னூறு நாள்
18. ஒருவனுக்கு ஒருத்தி
19. சொன்னதைச் செய்வேன்
20. சொந்தமடி நீ எனக்கு
21. தூண்டில் மீன்
22. அன்னபூரணி
23. இவள் ஒரு சீதை
24. கண்ணாமூச்சி
25. மக்கள் குரல்
26. சங்கரி
27. காலம் ஒரு நாள் மாறும்
28. இணைந்த துருவங்கள்
29. மங்கல நாயகி
30. அலங்காரி
31. நாடகமே உலகம்
32. அவளுக்கு நிகர் அவளே
33. கலியுகக் கண்ணன்
34. ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு
35. ராஜ நாகம்
36. சுவாதி நட்சத்திரம்
37. தாய் பாசம்
38. அரங்கேற்றம்
39. கட்டிலா தொட்டிலா
40. மல்லிகைப் பூ
41. பெண்ணை நம்புங்கள்
42. பெத்த மனம் பித்து
43. பொன்வண்டு
44. மேஜர் சந்திரகாந்த்
45. ஜானகி சபதம்
46. நினைவில் நின்றவள்
47. புத்திசாலிகள்
48. பொம்மலாட்டம்
49. எதிர் நீச்சல்
50. ஆயிரம் பொய்
51. இரு கோடுகள்
52. நிறைகுடம்
53. நவகிரஹம்
54. பத்தாம் பசலி
55. பெண் தெய்வம்
56. நூற்றுக்கு நூறு
57. பாட்டொன்று கேட்டேன்
58. புதிய வாழ்க்கை
59. ரங்க ராட்டினம்
60. வெகுளிப்பெண்
61. டெல்லி டு மெட்ராஸ்
62. மாப்பிள்ளை அழைப்பு
63. உனக்கும் எனக்கும்
64. வெள்ளிவிழா
65. தெய்வகுழந்தைகள்
66. எல்லாரும் நல்லவரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக