ஞாயிறு, 2 ஜூலை, 2017

நடிகை கனிகா பிறந்த நாள் ஜூலை 03.



நடிகை கனிகா பிறந்த நாள் ஜூலை 03.

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கனிகா , ஓர்
தமிழ்த் திரைப்பட நடிகையாவார் . இவர்
கன்னட, மலையாள , தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பிள்ளைப் பருவம்
திவ்யா, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையிலிருந்த பிரபலமான பல்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார் .பின்னர் இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.
பின்குரலும் பாடுதலும்
இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும்,
அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும் ,
சிவாஜி திரைப்படத்தில்
சிரேயாவுக்கும் குரல் கொடுத்தார்..


திரைத்துறை
நடிகையாக
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2002 'ஃபைவ் ஸ்டார் ஈசுவரி த
2003 'ஒட்டேசி செப்புதன்னா திவ்யா த
2004
அன்னவாரு சுப்புலட்சுமி க
எதிரே காயத்ரி நடராசன் த
ஆட்டோகிராப் தேன்மொழி செந்தில் த
2005 டான்சர் திவ்யா த
2006
நா ஆட்டோகிராப் சந்தியா த
' திவ்யா க
என்னிதும் சினேகா ம
வரலாறு காயத்ரி த
2008 ராசகுமாரி ராசகுமாரி க
2009
பாக்யதேவதா டெய்சி பென்னி ம
பழசிராசா கைதேரி மாகம் ம
மை பிக் பாதர் அன்சி ம
2010 துரோணா துளசிமணி ம
2011 கிறித்தியன் பிரதர்சு ஸ்டெல்லா ம
2012 'கோப்ரா ஆனி ம
'ஸ்பிரிட் மீரா ம
பின் குரல் கொடுப்பவராக
ஆண்டு படம் இவருக்காக மொழ
2005 சச்சின் ஜெனிலியா டி சௌசா தமிழ்
2005 அன்னியன்' சதா தமிழ்
2007 சிவாஜி ' ஷ்ரேயா தமிழ்
பின்னணிப் பாடகராக
ஆண்டு தலைப்பு படம் மொ
2002 "எங்களுக்கு" பைவ் ஸ்டார் தமிழ்
2011 "டேதடி" தூக்குடு தெலுங்கு.

விளம்பரங்கள்
கனிகா, நன்கறியப்பட்ட பல நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தியுள்ளார். குறிப்பிடத்தக்கவற்றுள் சில:
தி சென்னை சில்க்சு
கல்யாண் சேலைகள், நகைகள்
ரத்னா தங்க மாளிகை
டாட்டா கோல்டு பிளசு
ஆச்சி மசாலா
சீமாசு சில்க்சு
விருதுகள்
ஏசியானெட் திரைப்பட விருதுகள் - பாக்யதேவதா, பழசிராஜா ஆகிய படங்களுக்காக சிறப்பு விருது

2009 ஆண்டிற்கான மலையாளத் திரைப்பட விருது, சிறந்த நடிகை, பாக்யதேவதா, பழசிராஜா ஆகிய படங்களுக்காகப் பெற்றார்.
2009 ஆண்டிற்கான கேரளத் திரைப்பட சங்கத்தின் சிறப்பு நடிகைக்கான விருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக