வெள்ளி, 21 ஜூலை, 2017

பாடகி எஸ். பி. சைலஜா பிறந்த நாள் ஜூலை 22, 1953



பாடகி எஸ். பி. சைலஜா பிறந்த நாள் ஜூலை 22, 1953

எஸ். பி. சைலஜா (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.

பிறப்பு

சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.

குடும்பம்

சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவார்.

பின்னணி பேசிய திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் நடிகை மொழி
1983 வசந்த கோகிலா ஸ்ரீதேவி தமிழ்
1991 குணா ரேகா தமிழ்
2000 தெனாலி தேவயானி தமிழ்
பாடிய சில தமிழ் பாடல்கள்
திரைப்படம் பாடல் உடன்
பொண்ணு ஊருக்கு புதுசு
சோலைக் குயிலே காலைக்
கல்யாணராமன் மனதுக்குள் ஆடும் இளமை
வாடா ௭ன் ராஜா கண்ணா
இளமை காலங்கள்
படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ
உதிரிப்பூக்கள் கல்யாணம் பாரு அப்பாவோட
தனிக்காட்டு ராஜா
ராசாவே உன்ன நா ௭ண்ணிதா
ஜானி
ஆசைய காத்துல தூதுவிட்டு
குழுவ
பூந்தளிர் மனதில் ௭ன்ன நினைவுகளோ
எஸ். பி. பாலசு
ராஜா சின்ன ரோஜா
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட
௭ஸ் பி பாலசு
மாநகர காவல்
வண்டிக்கார சொந்த ஊரு மதுர
௭ஸ் பி பாலசுப்பிரமணியம்.



என்றும் இனியவை - S.P.சைலஜா

திருக்குறள் உலகப் பொதுமறை என்பது போல, இசையும் கூட உலகத்தின் பொதுவான மொழி என்று கூறலாம். இசை எல்லோரையும் அழச் செய்கிறது, சிரிக்கச் செய்கிறது, சாந்தப் படுத்துகிறது. இசையை ரசிக்கும் போது மனிதன் ஒரு தவ நிலைக்குப் போய்விடுகிறான். இசைக்கு உயிர் கொடுப்பவர்களால் உருவாக்கப்படும் இசை, அதனை ரசிப்பவர்களால் மட்டுமே தொடர்ந்து வாழ்கிறது. எந்த விஷயமுமே உருவாக்கப் படுவது எத்தனை முக்கியமோ, அதை விட பல மடங்கு அதனை ரசிக்க பலர் இருந்தால் மட்டுமே அது தொடர்ந்து பயணிக்க முடியும். அந்த வரிசையில் S.P.சைலஜா அவர்களின் அசத்தலான குரலினை யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது.
இசைக்கு மொழி தடையில்லை என்பதை நிரூபிப்பது போல இவரும் சுந்தரத் தெலுங்கு பிரதேசத்தில் தன் இசைப் பயணத்தை தொடங்கியவர். தமிழகத்திலும் தன் இசைக் கொடியை நாட்டி இருக்கிறார். தனது பதினைந்தாவது வயதில் பாட ஆரம்பித்த இவரது குரல் இன்றும் எப்படி இளமை மாறாமல் அப்படியே உள்ளது என்பது வியப்பாக உள்ளது.
"பொண்ணு ஊருக்கு புதுசு" என்கிற படத்தில் வரும் "சோலைக் குயிலே காலைக் கதிரே" என்ற படத்தில் இவரது குரலில், சரிதா மிதிவண்டி ஓட்டிக்கொண்டே மலை கிராமம் முழுவதும் சுற்றிவரும் போது பாடலைக் கேட்கும் நாமும் அந்த கிராமத்தை ஒரு வலம் வந்து விடுவோம். அந்த அளவிற்கு மிக இனிமையான பாடல். பாடல் வரிகளும் இந்தப் பாடலின் இனிமைக்கு வலிமை சேர்த்துள்ளன. "ரோசாப்பூ ரவிக்கைக்காரி" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்" பாடலில் தனது சகோதரர் S.P.B.யைப் போல, சற்று குரலை மாற்றிப் பாடினாலும் பாடல் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.
"சலங்கை ஒலி" என்ற படத்தின் மூலம் நடிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரைப் போன்ற நல்ல குரல்வளம் கொண்டவர்களின் பாடல்களைக் செவிமடுக்கும்போது மனம் அமைதி பெறுகிறது. S.P.சைலஜா அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் சிலவற்றை கேட்டு மகிழ்வோம்.
ஆசைய காத்துல தூது விட்டு.. (ஜானி)
சின்னஞ்சிறு வயதில்.. (மீண்டும் கோகிலா)
அரிசி குத்தும்.. (மண் வாசனை)
ஏதோ.. நினைவுகள்.. (அகல் விளக்கு)
கீதம்.. சங்கீதம்.. (கொக்கரக்கோ)
காலை நேரக் காற்றே.. (பகவதிபுரம் ரயில்வே கேட்)
கண்ணுக்குள்ளே.. யாரோ.. (கை கொடுக்கும் கை)
மலர்களில் ஆடும் இளமை.. (கல்யாண ராமன்)
மாமன் மச்சான்.. (முரட்டுக் காளை)
மனதில்.. என்ன நினைவுகளோ.. (பூந்தளிர்)
ஒரு கிளி உருகுது.. (ஆனந்தக் கும்மி)
வரம் தந்த சாமிக்கு.. (சிப்பிக்குள் முத்து)
மொட்டு விட்ட முல்லைக் கோடி.. (இன்று நீ நாளை நான்)
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. (தனிக்காட்டு ராஜா)
வான் போலே வண்ணம் கொண்டு.. (சலங்கை ஒலி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக