புதன், 5 ஜூலை, 2017

இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா பிறந்த தினம் ஜூலை 6, 1930.



இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா பிறந்த தினம் ஜூலை  6, 1930.

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ( Mangalampalli Balamuralikrishna , தெலுங்கு :
మంగళంపల్లి బాలమురళీకృష్ణ, சூலை 6, 1930 - நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர் , குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.
தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.
இளமைப் பருவம்
முரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார். இவரது தாத்தா கூட ஒரு இசைக்கலைஞர்தான்.
தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு உண்டு. தியாகராஜரின் நேரடி மாணவர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடமிருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் பாலமுரளிகிருஷ்ணா முறையாக கருநாடக இசை கற்றார்.
முரளிகிருஷ்ணா முதன்முதலாகத் தனது ஒன்பதாவது வயதில் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர்
பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். சென்னை அனைத்திந்திய வானொலி, இவர் ஒரு குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் (A Grade) இவரையும் சேர்த்தது.
திருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்களாகிய பெங்களூர் நாகரத்தினம்மாள், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் , மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள்.
கருநாடக இசைக்கான பங்களிப்புகள்
பாடகராக
2006ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று குவைத்தில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய கச்சேரி. அப்போது அவருக்கு வயது 76.
தனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தினார்.
தூர்தர்சன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க காணொளிப் பாடலான மிலே சுர் மேரா தும்ஹாரா எனும் பாடலில் பாலமுரளிகிருஷ்ணா பங்களித்தார். இந்த தேசபக்திப் பாடலில், தமிழ்ப் பாடல் வரிகளை இவர் பாடினார்.
வயலின் இசைக் கலைஞராக
அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய முன்னணிக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருந்தார்.
பாலமுரளிகிருஷ்ணா தனது தந்தை வயலின் வாசிப்பதை கவனித்து வந்து வயலின் வாசிப்பினை கற்றுக் கொண்டவர். தனது இளம்பிராய வயதில், குரல் மாறி பாடுவதற்கு கடினமாக இருந்த காலத்தில் அதிகளவு வயலின் வாசித்து நன்கு கற்றுக் கொண்டார்.
வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனும் வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார்.
வாக்கேயக்காரராக
இவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.
சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி , மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை உருவாக்கினார்.
இயற்றிய கீர்த்தனங்கள்
கீர்த்தனை ராகம் வக
ஓங்கார ப்ரணவ சண்முகப்பிரியா பத வர்
அம்மா அனந்த தாயினி கம்பீரநாட்டை பத வர்
ஏ நாதமு நாட்டை வர்ணம்
சலமு சேசின ராமப்பிரியா வர்ணம்
ஆ பால கோபாலமு அமிர்தவர்ஷினி வர்ணம்
நினு நேர நம்மதி கரஹரப்பிரியா வர்ணம்
ஸ்ரீ சகல கணாதிப பாலயமாம்
ஆரபி கிருத
மகாதேவசுதம் ஆரபி கிருத
கங் கங் கணபதீம் கணபதி கிருத
கணாதிபாம் நாட்டை கிருத
பிறை அணியும் பெருமான்
ஹம்சத்வனி கிருத
உமா சுதம் நமாமி சர்வஸ்ரீ கிருத
மஹநீய நமசுலிவே சுமுகம் கிருத
ஓங்கார காரிணி லவங்கி கிருத
சித்தி நாயகனே அமிர்தவர்ஷினி கிருத
சித்திம் தேஹி மே சித்தி கிருத
ஹீர கணபதிக்கி சுருட்டி கிருத
மஹநீய மதுர மூர்த்தே மஹதி கிருத
குருநி ஸ்மரிம்புமோ ஹம்சவிநோதினி கிருத
வருக வருக பந்துவராளி கிருத
துணை நீயே சாருகேசி கிருத
நீ தய ராதா பூர்விகல்யாணி கிருத
கதி நீவே கல்யாணி கிருத
சிவ கங்கா நாகஸ்வராளி கிருத
மா மாநினி ஹனுமதோடி கிருத
அம்ம நின்னுகோரி கமாஸ் கிருத
கான மாலிஞ்சி கல்யாண வசந்தம் கிருத
சதா தவ பாத சண்முகப்ரியா கிருத
ப்ருஹதீஸ்வர கானடா கிருத
திரிபுர தர்ப்பா
கமல தலாயதா பஹுதாரி கிருத
தில்லானா பிருந்தாவனி தில்ல
தில்லானா சக்கரவாகம் தில்ல
தில்லானா த்வஜாவந்தி தில்ல
தில்லானா குந்தவராளி தில்ல
தில்லானா கதனகுதூகலம் தில்ல
தில்லானா கருடத்வனி தில்ல
தில்லானா பெஹாக் தில்ல
தில்லானா ராகமாலிகை தில்ல
தில்லானா ராகமாலிகை தில்ல
தில்லானா ராகமாலிகை தில்ல
மாமவ கான லோலா ரோஹினி கிருத
கான லோல ராகமாலிகை கிருத
சங்கீதமே கல்யாணி கிருத
நீ சாதி நீவே சந்திரிகா கிருத
சங்கராபரண சயனுதா தீரசங்கராபரணம் கிருத
வேகமே ஆபோகி கிருத
ஹனுமா சரசாங்கி கிருத
வந்தே மாதரம் ரஞ்சனி கிருத
கான சுதா ரச நாட்டை கிருத
சாம கண அமிர்தவர்ஷினி கிருத
மரகத சிம்ஹாசன
சிம்மேந்திர மத்திமம் கிருத
சிம்ஹ ரூப தேவா காம்போதி கிருத
ராஜ ராஜ தீர சங்கராபரணம் கிருத
சிந்தயாமி சட்டதம் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதம்
சுசரித்ர கிருத
அம்பமாமவ ராகமாலிகை கிருத
பங்காரு முரளி ஸ்ரிங்கார ராவளி
நீலாம்பரி கிருத
பாவ மே மகா பாக்யமுரா காபி கிருத
பாஹி சமீர குமாரா மந்தாரி கிருத
வசம தர்மாவதி கிருத
திரைப்படத்துறைக்கான பங்களிப்புகள்
பாலமுரளிகிருஷ்ணா தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைவான பங்களிப்பினைத் தந்திருந்தாலும், அவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன.
ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க, பக்த பிரகலாதா எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தமிழ் , இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  பிற்காலத்தில்
சந்தினே செந்தின சிந்தூரம் எனும் மலையாளத் திரைப்படத்தில் பாடகர் வேடத்தில் நடித்தார்.
பின்னணிப் பாடகராக
ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.
சுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.
ஆண்டு திரைப்படம் மொழி
1964 கலைக்கோவில் தமிழ்

1965 திருவிளையாடல் தமிழ் ப
1966 சாது மிரண்டால் தமிழ்
1970 கண்மலர் தமிழ் ப ந
1977
கவிக்குயில் தமிழ்
ச க
உயர்ந்தவர்கள் தமிழ் ர சீ
நவரத்தினம்
தமிழ் க
தெலுங்கு ப
1979 நூல் வேலி தமிழ்
1983 மிருதங்க சக்கரவர்த்தி தமிழ் த க
1991 சிகரம் தமிழ் ப க
2009 பசங்க தமிழ்
2015 பிரபா தமிழ் ப ப
இசையமைப்பாளராக
ஆதி சங்கராச்சாரியா (சமசுகிருத மொழியின் முதல் திரைப்படம்), இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.
ஆலோசகராக
திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இராகங்கள் குறித்து ஏதேனும் ஐயங்கள் ஏற்படும்போது இவரை நாடினர்.
எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை தனது இசையாசிரியராக கருதினார்; பலமுறை தனது ஐயங்களை தீர்த்துக் கொண்டார். கே. பாலசந்தர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை இயக்கியபோது, அரிதான இராகத்தில் ஒரு பாடலை உருவாக்கித் தருமாறு கேட்டதும், எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை நாடி அவரின் உதவியினைப் பெற்றார். அதிசய இராகம்... ஆனந்த இராகம்... அழகிய இராகம், அபூர்வ இராகம் எனும் பாடல் மகதி இராகத்தில் உருவானது. க, ப, நி எனும் 3 சுவரங்களை மட்டுமே இப்பாடல் கொண்டிருந்தது.
இவரின் மாணவர்கள்
1. பி. லீலா
2. சரத் (மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்)
3. இசை ஆராய்ச்சியாளர் பி. எம். சுந்தரம்
4. நடிகர் கமல்ஹாசன்
5. ஜெ. ஜெயலலிதா
6. நடிகை வைஜெயந்தி மாலா
7. எஸ். பி. சைலஜா
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
பத்மசிறீ (1971)
சங்கீத நாடக அகாதமி விருது , 1975
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1976; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு
சங்கீத கலாநிதி விருது , 1978; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
சிறந்த திரைப்பட இசை இயக்குனர் , 1987; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1987; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு
பத்ம விபூசண் (1991)
சங்கீத கலாசிகாமணி விருது , 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
இசைப்பேரறிஞர் விருது , 2002
சங்கீத கலாசாரதி (2002)
கந்தர்வ கான சாம்ராட் (2005) தமிழ் நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.
சிறந்த பாரம்பரிய இசைப் பாடகர், 2010; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு
யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய மகாத்மா காந்தி வெள்ளிப் பதக்கம்
செவாலியே விருது , வழங்கியது:
பிரான்ஸ்
சொந்த வாழ்க்கை
இவருக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.
பாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ராணிமைந்தன் என்பவர் எழுதியிருக்கிறார்.
மறைவு
பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக 2016 நவம்பர் 22 ஆம் நாள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.


இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!

இசை உலகில் நிகரில்லாத ஓர் ஆளுமை பாலமுரளி கிருஷ்ணா. அவரின் மறைவு ஈடுசெய்யவியலாதது. கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி திரையிசைப் பாடல்கள் வழியாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர். இவர் பாடிய நூற்றுக்கணக்கான திரையிசைப் பாடல்கள் இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. கே.வி.மகாதேவன், இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் தமிழில் தன் இறுதிப் பாடலை, தன்னிடம் இசை பயின்ற சிஷ்யை எஸ்.ஜெ.ஜனனியின் இசையில் பாடியுள்ளார்.
தமிழ்த்திரை நிறுவனத் தயாரிப்பில், நந்தன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'பிரபா' படத்தில் 'பூவே பேசும் பூவே...' எனும் பாடலை ஜனனியுடன் இணைந்து பாடியிருக்கிறார் பாலமுரளிகிருஷ்ணா. குருவுடன் பணியாற்றிய அனுபவங்களை எஸ்.ஜெ.ஜனனியிடம் கேட்டோம்.
Advertisement
"எத்தனை வருடங்களாக பாலமுரளி கிருஷ்ணாவிடம் இசை பயின்றீர்கள்?"
"பத்து வருடங்களுக்கு மேலாக குருவிடம் இசைக் கற்றேன். பாடலின் வரிகளை அவர் பாடும்போது கவனத்துடன் கேட்டாலே போதும், நாமும் சிறப்பாக பாடிவிட முடியும். அந்த ஆற்றல் அவரின் குரலுக்கு உண்டு. அவர் எனக்கு இசைக்கான குரு மட்டுமல்ல. வாழ்க்கைகான வழிகாட்டி. என்னை குழந்தையைப் போல நடத்துவார்."
"உங்கள் இசையில் அவரைப் பாட வைக்கும் எண்ணம் எப்போது தோன்றியது?"
"பிரபா படத்திற்கான இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தத்தை அவரிடம் கூறியபோது, மகிழ்ச்சியோடு வாழ்த்தினார். பிறகு, பூவே பேசும் பூவே பாடலின் மெட்டு உருவாகும்போதே, இதை குரு பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். உடனே குருவிடமும் விருப்பத்தைக் கூறினேன்"
"உடனே சம்மதித்துவிட்டாரா?"
"என் வளர்ச்சியில் அவருக்கு அவ்வளவு அக்கரையுண்டு. அதனால் சிறிதும் தயக்கமின்றி சம்மதித்தார். பாடல் ஒலிப்பதிவின்போது, பாடல் வரிகளைப் பாடிக் காட்டி, 'இது சரிதானா... மாற்றம் இருந்தால் தயக்கம் இல்லாமல் சொல்லு' என்று கேட்டார். ஆனால் நான் திருத்தம் சொல்வதற்கு ஏதுமில்லாமல் மிக அருமையாக பாடிக்கொடுத்தார்"
பூவே பேசும் பூவே பாடலை இந்த இணைப்பில் 21:45 நிமிடங்களிலிருந்து கேட்கலாம்.
Advertisement
"பாடலைப் பற்றி என்ன சொன்னார்?"
"'ரொம்ப ரொம்ப நல்ல ட்யூன்மா... எளிதில் ஈர்க்கும் விதத்தில் இருக்கு. நிச்சயம் எல்லோரையும் வசிகரிக்கும். பெரிய அளவில் மக்களிடையே இந்தப் பாட்டு செல்லும். உனக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு' என்று சொன்னார். ஒரு குழந்தையின் ஆசையை நிறைவேற்றி தந்த மகிழ்ச்சியுடன் அன்றைக்கு இருந்தார். பிறகு, அவரோடு பயணம் செல்லும்போதெல்லாம் காரில் இந்தப் பாடலைப் போடச் சொல்லி ரசிப்பார். கேட்கும்போதெல்லாம் ' நல்ல ட்யூன்... நல்ல ட்யூன்..' என்பார். இதைவிட எனக்கு பெரிய ஆசிர்வாதம் இருப்பதாக நினைக்கவில்லை"
"அவரின் இழப்பை எப்படி உணர்கிறீர்கள்?"
"என்னிடம் அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை 'எல்லாம் வரும்' என்பதுதான். அதுவே எனக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும். குரு பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பு எனக்கு மட்டுமல்ல, இசை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் பேரிழப்புதான். அவரின் இசைக்கு என்றும் அழிவில்லை"
பூவே பேசும் பூவே... பாடலை ஶ்ரீதேவி எழுதியிருக்கிறார். 'இந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடவிருக்கிறார் என இசையமைப்பாளர் ஜனனி கூறியதிலிருந்து அவர் பாடும் கணத்திற்காக காத்திருந்து ரசித்தேன்" என்றார் இயக்குநர் நந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக