எம் என் நம்பியார்
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மே 21, 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
குணச்சித்தரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இளமை
கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்.
இல்லறம்
1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
மறைவு
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008, நவம்பர் 19 பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.
நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
திரை வாழ்க்கை
நாடக கம்பேனி
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.
நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 ஆம் ஆண்டு பக்த ராம்தாசு என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.
வித்யாபதி (1946) திரைப்படத்தில் நாராயண பாகவதராக நம்பியார், எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்
பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தது. 1939 இல் இருந்து பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கினார்.
1944 இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ். வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர்.
இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார். கல்யாணி (1952), கவிதா (1962) ஆகியவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் எம்.ஜி.ஆருடன் நம்பியார்
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம். ஜி. இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் இராமச்சந்திரனுடன் சேர்ந்து நடித்தார்.
எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் குணச்சித்திர வேடமேற்றார். ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் விஜய்காந்தின் சுதேசி படத்தில்லேயே கடைசியாக நடித்தார்.
தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.
திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.
குறிப்பிடத்தக்கப் படங்கள்
நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல்.
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புக்கள்
1935 பக்த ராமதாஸ் தமிழ் நகைச்சுவயாளனாக
1946 வித்யாபதி தமிழ்
1947 ராஜகுமாரி தமிழ்
1947 கஞ்சன் தமிழ்
1948 அபிமன்யு தமிழ்
1949 வேலைக்காரி தமிழ்
1950 மந்திரி குமாரி தமிழ் ராஜகுரு
1951 மர்மயோகி தமிழ்
1951 சர்வாதிகாரி தமிழ் தெ கெலன்ட் பிலேட் திரைப்படத்தின் மறுஆக்கம்[1]
1952 ஜங்கில் ஆங்கிலம்
1953 பெற்றதாய் தமிழ்
1953 பெற்றதாய் தெலுங்கு சங்கர்
1956 அமரதீபம் தமிழ்
1957 ராஜராஜன் தமிழ்
1958 உத்தம புத்திரன் தமிழ்
1958 நாடோடி மன்னன் தமிழ்
1961 பாசமலர் தமிழ்
1963 பணத்தோட்டம் தமிழ்
1965 எங்க வீட்டுப் பிள்ளை
1965 ஆயிரத்தில் ஒருவன் தமிழ்
1966 தாலி பாக்கியம் தமிழ்
1966 நாடோடி தமிழ்
1966 நான் ஆணையிட்டால் தமிழ்
1967 காவல்காரன் தமிழ்
1968 புதிய பூமி தமிழ்
1968 ரகசிய போலீஸ் 115 தமிழ்
1976 சத்யம் தமிழ்
1978 தக்காளி அம்பு மலையாளம்
1979 அவேசம் சேகர்
1979 பஞ்சரத்னம் மலையாளம்
1979 மாமாங்கம் மலையாளம்
1980 சந்திர பிம்பம் மலையாளம்
1980 அரங்கும் அய்யனாரும் மலையாளம்
1980 சக்தி மலையாளம்
1980 குரு (1980 திரைப்படம் தமிழ்
1981 கர்ஜனை தமிழ்
1981 கோளிலெல்லம் மலையாளம்
1981 தடவரா மலையாளம்
1982 சிலந்திவலா மலையாளம் சேகர்
1982 தூறல் நின்னு போச்சு தமிழ்
1983 தாய் வீடு தமிழ்
1984 நான் மகான் அல்ல (1984 திரைப்படம்)" தமிழ்
1986 மெல்லத் திறந்தது கதவு தமிழ்
1993 ஜென்டில்மேன் (திரைப்படம்) தமிழ்
1993 பாசமலர்கள் தமிழ்
1993 எஜமான் தமிழ்
1996 பூவே உனக்காக தமிழ்
1997 வள்ளல் தமிழ்
1998 மூவேந்தர் தமிழ்
1999 ரோஜாவனம் தமிழ்
1999 பூப்பரிக்க வருகிறோம் தமிழ்
2001 சார்ஜா டூ சார்ஜா
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும் தமிழ்
2002 வருஷமெல்லாம் வசந்தம் தமிழ்
2002 பாபா தமிழ்
2003 வின்னர் (திரைப்படம்) தமிழ்
2004 அரசாட்சி (திரைப்படம்) தமிழ்
2005 அன்பே ஆருயிரே தமிழ்
2006 சுதேசி
அம்பிகாபதி (1957)
எங்க வீட்டுப் பிள்ளை
மன்னவன் வந்தானடி
தூரன் நின்னு போச்சு
பல்லாண்டு வாழ்க
சுவாமி ஐயப்பன்
நினைத்ததை முடிப்பவன்
உலகம் சுற்ரும் வாலிபன்
சவாலே சமாளி
இராஜ ராஜ சோழன்
நெஞ்சம் மறப்பதில்லை
என் தம்பி
அன்பே வா
மக்களை பெற்ற மகராசி
வேலைக்காரி (1949)
திகம்பர சாமியார் (1950)
கல்யாணி (1952)
வித்யாபதி (1946)
கவியின் கனவு
கர்ஜனை (1981)
அவசர போலிஸ் 100(1991)
பக்த ராமதாஸ் (1935)
அரசிளங்குமாரி
தமிழ்[தொகு]
அஞ்சாத சிங்கம்
அபிமன்யு (திரைப்படம்)
அம்மா (திரைப்படம்)
அமரதீபம்
அவசரப் போலிஸ் 100 (திரைப்படம்)
அழகி (திரைப்படம், 1953)
அன்பே அன்பே
அன்னையின் ஆணை
ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)
ஆயிரம் கண்ணுடையாள்
இல்லறமே நல்லறம்
இளங்கன்று (1985 திரைப்படம்)
எங்கள் வீட்டு மகாலட்சுமி
எங்க ஊரு காவல்காரன்
எங்க வீட்டுப் பிள்ளை
என் மகள்
எஜமான்
கஞ்சன் (திரைப்படம்)
கணவனே கண் கண்ட தெய்வம்
கல்யாண ராசி
கல்யாணி (திரைப்படம்)
கற்புக்கரசி
கன்னியின் சபதம்
காஞ்சனா (1952 திரைப்படம்)
காத்திருந்த காதல்
காதல் சடுகுடு (திரைப்படம்)
காவேரி (திரைப்படம்)
சமய சஞ்சீவி
சர்க்கரை பந்தல்
சர்வாதிகாரி (திரைப்படம்)
சாட்சி (திரைப்படம்)
சாரங்கதாரா
சொல்லுத்தம்பி சொல்லு
டாக்டர் சாவித்திரி
தங்கப்பதுமை
தப்புக் கணக்கு
தம்பி தங்கக் கம்பி
தாய்நாடு (1989 திரைப்படம்)
தாய் மூகாம்பிகை (திரைப்படம்)
திகம்பர சாமியார்
தில்லானா மோகனாம்பாள்
தூறல் நின்னு போச்சு
தேவகி (திரைப்படம்)
தேவதாஸ்
நம்பினார் கெடுவதில்லை
நல்லவன் (திரைப்படம்)
நல்லவன்
நல்ல தங்கை
நாடோடிப் பாட்டுக்காரன்
நாடோடி மன்னன்
நாம்
நான் பெற்ற செல்வம்
நேர்மை (திரைப்படம்)
பக்த ராம்தாஸ்
படகோட்டி (திரைப்படம்)
படித்தபெண்
பாக்தாத் திருடன்
பாகப்பிரிவினை
பாச மலர்கள்
பிரியசகி (1952 திரைப்படம்)
பெண்குலத்தின் பொன் விலக்கு
பெண்ணரசி
பெரிய மருது (திரைப்படம்)
பெற்றதாய்
பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
போர்ட்டர் கந்தன்
மக்களை பெற்ற மகாராசி
மர்மயோகி
மறுமலர்ச்சி (திரைப்படம்)
மாங்கல்யம் (திரைப்படம்)
மாநகர காவல் (திரைப்படம்)
மாயாபஜார்
மிஸ்ஸியம்மா
மூவேந்தர் (திரைப்படம்)
மோகினி (திரைப்படம்)
யானை வளர்த்த வானம்பாடி
ரம்பையின் காதல் (1956 திரைப்படம்)
ராசய்யா (திரைப்படம்)
ராஜ ராஜன்
ராஜா வீட்டுப் பிள்ளை
வணங்காமுடி (திரைப்படம்)
வருஷமெல்லாம் வசந்தம்
வாழ்க்கை ஒப்பந்தம்
வித்யாபதி
விலங்கு (1987 திரைப்படம்)
வின்னர் (திரைப்படம்)
விஜயகுமாரி (திரைப்படம்)
வீரக்கனல்
வேலைக்காரி (திரைப்படம்)
ஜென்டில்மேன் (திரைப்படம்)
எம்.என்.நம்பியார் -அபூர்வ தகவல்கள்-18
திரைப்படங்களில் கெட்டவராக நடித்தவர் சொந்த வாழ்க்கையில் நல்லவராக விளங்கினார். அவர்தான் மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார்.
நம்பியாருடைய பள்ளிப் பருவத்தில், அவரது மாமா(தமக்கையின் கணவர்) ஊட்டியில் தேநீர் கடை நடத்தி வந்தார். அங்கு சென்ற நம்பியார் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். தேநீர் கடையில் வியாபாரம் குறைந்ததால், சகோதரி குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பாத நம்பியார் குடும்பத்திலிருந்து வெளியேறினார். ராணுவத்தில் சேர்வதற்காக மனு செய்தார். ராணுவத்தில் மாமிசம் சாப்பிட வேண்டும் என்ற காரணத்தினால், தாவர உணவாளரான இவர் ராணுவத்தில் சேரும் எண்ணத்தைக் கைவிட்டார்.
நான்காவது பாரம் (9 ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தபோது நாடகங்களில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நவாப் ராஜமாணிக்கம் நடத்திய ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார் நம்பியார்.
தனது 16ஆவது வயதில், நம்பியார் முதன் முதலில் பக்த ராமதாஸ் (1935) படத்தில் நடித்தார். நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் நடிக்கப்பட்டு வந்த பக்த ராமதாஸ் நாடகம் அதே பெயரில் படமாக்கப்பட்டபோது, இப்படத்தின் மூலம் மந்திரி மாதண்ணா என்ற வேடத்தில் நடித்து திரையுலகில் நுழைந்தார் நம்பியார். இப்படத்தில் இவரின் சம்பளம் 40 ரூபாய்.
இரண்டாவதாக நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியின் இன்பசாகரன் நாடகமும் அதே பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. படம் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில், ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீவிபத்தினால் திரைக்கு வராமல் தீக்குள் போனது இப்படம்.
10 ஆண்டுகள் கடந்து ஜுபிடர் ஃபிலிம்ஸ் தயாரித்த வித்யாபதி படத்தில், நாராயண பாகவதர் என்ற வேடத்தில் நடித்தார். இப்படத்தில் இவரது மனைவியாக எம்.எஸ்.எஸ். பாக்கியம் நடித்தார். இந்த நகைச்சுவை ஜோடி பலபடங்களில் தொடர்ந்து நடித்தது. ஜுபிடர் ஃபிலிம்ஸ் தயாரித்த ராஜகுமாரி, கஞ்சன், அபிமன்யூ, மோகினி, வேலைக்காரி ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார் நம்பியார்.
1944 இல் நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பனி நடத்திய ஐயப்பன் நாடகத்தில் நம்பியார் நடித்தார். 12 ஆண்டுகள் நவாப் கம்பனியிலிருந்த இவர், பின்பு சக்தி கிருஷ்ணசாமியின் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். சக்தி நாடக சபாவில் நடிக்கும்போது, கவியின் கனவு நாடகம் இவருக்குப் பெரும் புகழை அளித்தது.
இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தி ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், தேவதா என்ற இந்திப் படத்திலும் நடித்துள்ளார். சமூக கதைகள், சரித்திர கதைகள் என அனைத்து படங்களிலும் இவர் நடிப்பு நன்றாக இருந்தது.
2006 இல் விஜயகாந்த்துடன் சுதேசி படம்வரை இவர் நடித்துள்ளார். தான் 750 படங்களில் நடித்திருப்பதாக ஒரு பேட்டியில் நம்பியார் கூறியுள்ளார்.
நல்லதங்கை படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் எம்.என்.நம்பியார். ரகசிய போலீஸ் 115 படத்தில் ஒரே உருவத்தைக் கொண்ட வில்லன், போலீஸ் ஆகிய இரு வேடங்களில் நடித்துள்ளார். வேலைக்காரி படத்தில் செல்வந்தர் வீட்டுப் பையன் மூர்த்தி, போலிச் சாமியார் ஹரிஹரதாஸ் ஆகிய இரு வேடங்களில் நடித்துள்ளார் இவர்.
கதாநாயகன், கதாநாயகனின் நண்பன், காமெடியன், வில்லன் என்று பலவித வேடங்களில் நடித்தவர் நம்பியார்.
பிற்காலப் படங்களில் கெட்டவனை நம்பியார் என்று குறிப்பிடும் அளவிற்கு, நம்பியாரின் வில்லன் நடிப்பு தமிழ்த் திரை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது. (போக்கிரி படத்தில் விஜய் பாடும் ஒரு பாடல். நம்பியாரைப் போல இருந்தேனே, இப்ப எம்ஜிஆரைப் போல மாத்திட்டா).
திகம்பரசாமியார் படத்தின் நாயகனான எம்.என்.நம்பியார் திகம்பரசாமியார், செவிட்டு மந்திரவாதி, முகமதிய தனவந்தர், வெற்றிலை வியாபாரி, நாதஸ்வர வித்வான், மைனர், போஸ்ட்மேன், குடுகுடுப்பைக்காரன் போன்ற இன்னும் சில வேடங்களுடன் மொத்தம் 11 வேடங்களில்(!) நடித்துள்ளார்.
நல்லதங்கை படத்தில் நாயகன் மூர்த்தியாக நம்பியாரும் நாயகனின் மனைவி மோகனாவாக மாதுரிதேவியும் நடித்துள்ளனர்.
கஞ்சன் படத்தில் நாயகன் வேலப்பனாக நம்பியாரும் நாயகி அமராவதியாக டி.ஜி.கமலாதேவியும் நடித்துள்ளனர். நாயகனின் மாமனாராகவும் கஞ்சனாகவும் நடித்தவர் எஸ்.வி.சுப்பையா.
பாக்ய தேவதை படத்தில் ஜெமினிக்கு ஜோடி ராஜசுலோச்சனா. எம்.என்.நம்பியாருக்கு ஜோடி சாவித்திரி. ஜெமினியும் நம்பியாரும் இப்படத்தில் சகலைகளாக நடித்தனர்.
நல்லவன் படத்தில் நாயகனாக ஆர்.எஸ்.மனோகரும், துணை நாயகனாக அரைப் பைத்தியம் வேடத்தில் நம்பியாரும் நடித்துள்ளனர்.
ராஜகுமாரி படத்தில் நாயகன் சுகுமாரனை (எம்.ஜி.ஆர்) ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றும் வேடத்தில் பகுவும் (எம்.என்.நம்பியார்) பகுனியும் (எம்.எஸ்.எஸ். பாக்கியம்) நடித்திருந்தனர்.
சர்வாதிகாரி படத்தில் எம்.என்.நம்பியார்தான் சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரி மகாவர்மனை அடக்கும் நாயகன் பிரதாபனாக எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள்வீச்சு சண்டைக்கலை அறிந்தவர்கள். இப்படத்தின் ஒரு சண்டைக் காட்சியின்போது எம்.ஜி.ஆர். வீசிய கத்தியின் நுனி நம்பியாரின் விரலில் பாய்ந்து விட்டது. அதன்பின் இருவரும் கவனமாக வாள்களைக் கையாண்டார்கள்.
தேவதாûஸ தீய வழியில் இழுத்துச் செல்லும் நண்பனாக நம்பியார் நடித்த படம் தேவதாஸ்.
மிஸ்ஸியம்மா படத்தில், நாயகியின் (சாவித்திரி) தந்தைக்கு கடன் கொடுத்துவிட்டு நாயகியை பெண் கேட்கும், டேவிட் என்ற ஆங்கிலோ இந்திய காமெடி வில்லன் வேடம் நம்பியாருக்கு.
அம்பிகாபதி படத்தில் புலவர் ஒட்டக்கூத்தராகவும், ஹரிச்சந்திரா படத்தில் விஸ்வாமித்திரராகவும் நம்பியார் நடித்தார்.
ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் 106 வயதுடைய பூர்வஜென்ம வில்லன் வேடத்தில் அருமையாக நடித்திருப்பார் இவர்.
திருடாதே படத்தில் தீக்காயத்துடனான கோர முகத்துடனும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கோர பற்களுடனான வெற்றுடம்புடனும் எம்.ஜி.ஆருடன் மோதுவார் நம்பியார்.
சரித்திரப் படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிப்பவர்கள், கால்களின் எளிதான நடமாட்டத்திற்காக முழுக்கால்சராய் அணிந்து நடிப்பார்கள் அல்லது கால்களை ஒட்டியபடி உடையணிந்திருப்பார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் இரு கால்களையும் சாக்கினுள் விட்டதுபோல் லுங்கியணிந்து தடுமாற்றமில்லாமல் சண்டை காட்சியில் திறம்பட நடித்திருப்பார்.
படத்தின் கதையோட்டத்திற்கும் வெற்றிக்கும் ஆதாரமாக இவர் நடித்த கொடுமையான வில்லன் வேடங்களுக்காக, பெண்களிடமிருந்து கிடைத்த வசவுகளும் திட்டுகளுமே, இவருக்கு கிடைத்த விருதுகளும் பட்டங்களுமாக விளங்குகின்றன.
எம்.ஜி.ஆர். படங்களில் அதிக அளவில் வில்லனாக நடித்தவர் இவர். எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரி முதல், எம்.ஜி.ஆர். இறுதியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரை, எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும் இணக்கமாக இருந்தாலும் ஓரிரு சமயங்களில் இருவருக்கும் பிணக்கு வந்ததும் உண்டு. என் அண்ணன் படப்பிடிப்பில் இருவருக்கும் சிறு மனஸ்தாபம் உண்டானது. இப்படத்திற்கு பின்பு திரைக்கு வந்த மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம், தேடிவந்த மாப்பிள்ளை, குமரிக் கோட்டம், ரிக்ஷாக்காரன் - ஆகிய படங்களில் நம்பியார் நடிக்கவில்லை.
சிவாஜியுடனும் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தங்கப் பதுமை, ராஜபக்தி, அன்னை இல்லம், தில்லானா மோகனாம்பாள், தெய்வ மகன், சவாலே சமாளி, திரிசூலம், குலமா குணமா, ராஜபார்ட் ரங்கதுரை போன்ற பல படங்களில் சிவாஜியுடன் வில்லனாக நடித்தார் நம்பியார்.
எம்.என்.நம்பியாரைப் போலவே தமிழ்த் திரையில் பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் ஆகியோரும் சிறந்த வில்லன் நடிகர்களாக விளங்கி வந்தார்கள். இந்த நால்வரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்படம் அரசகட்டளை.
எம்.ஜி.ஆரை விட (1917) குறைந்த வயதுடையவர் நம்பியார் (1919). ஆனால் படவுலக அனுபவத்தில் எம்.ஜி.ஆரை விட (சதிலீலாவதி 1936) ஓராண்டு மூப்புடையவர் நம்பியார் (பக்த ராமதாஸ் 1935).
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பலதலைமுறை நாயகர்களுடனும் வில்லனாக மோதியவர் நம்பியார்.
நடைமுறையில் நகைச்சுவையுணர்வு உள்ள இவரை, காலம் வில்லனாக நடிக்க வைத்ததும் ஒரு விந்தைதான்.
---------------------------------------------
கேரளா மாநிலம் கண்ணனூர் தாலுக்கா மஞ்சேரி என்ற சிற்றூரில் 05.03.1919 இல் பிறந்தார் எம்.என்.நம்பியார்.
தந்தையின் பெயர் கேளு நம்பியார் என்பதாகும். மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதில் உள்ள மஞ்சேரியும் நாராயணனும் எம்.என். என்று இனிஷியலாக சுருங்கி, அவரின் நம்பியார் என்ற குடும்பப் பெயருடன் சேர்ந்து எம்.என்.நம்பியார் என்று நிலைத்து விட்டது.
1946 இல் இவருடைய திருமணம் நடைபெற்றது. இவர் துணைவியின் பெயர் ருக்மணி என்பதாகும். வெளியூர்களுக்கு நம்பியார் செல்லும்போது, தனது துணைவியையும் உடன் அழைத்துச் சென்று அங்கும் துணைவி சமைக்கும் உணவைத்தான் உண்பார்.
1982 இல் நடிகர்கள் சிலருடன் சேர்ந்து கைலாய ஆன்மீக யாத்திரை சென்று, அரனின் அருள்பெற்று வந்தார் நம்பியார்.
தமிழக அரசு இவருக்கு 1967 இல் கலைமாமணி விருதும், 1990 இல் எம்.ஜி.ஆர். விருதும், 1992 இல் ஜெயலலிதா விருதும் அளித்தது.
மிகச்சிறந்த ஐயப்ப பக்தரான இவர், அனைவராலும் பக்தி கலந்த மரியாதையுடன் குருசாமி என்று அழைக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை புனித பயணம் மேற்கொண்டார்.
அமிதாப்பச்சன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களான கன்னிசாமிகளுக்கு நம்பியார்தான் குருசாமியாக இருந்தார்.
19.11.2008 இல் இவர் ஐயப்பன் திருவடிகளில் ஐக்கியமானார்.
நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற இரு மகன்களும் சிநேகலதா என்ற ஒரு மகளும் உள்ளனர். சுகுமாரன் நம்பியார் பாரதீய ஜனதா கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
நம்பியார் நாயகனாக நடித்த படங்கள்...
திகம்பரசாமியார், கல்யாணி, கஞ்சன், நல்ல தங்கை.
நகைச்சுவை வேடங்களில் நடித்த சில படங்கள்...
கவிதா, வித்யாபதி, ராஜகுமாரி, மர்மயோகி, மோகினி, தூறல் நின்னு போச்சு.
நம்பியார் நல்லவராக நடித்த சில படங்கள்...
ரகசிய போலீஸ் 115, கண்ணே பாப்பா, சுபதினம், வருவான் வடிவேலன், சுவாமி ஐயப்பன்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, மு.கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய 6 முதலமைச்சர்களுடன் கலைப் பணி ஆற்றியுள்ள ஒரே நடிகர் எம்.என்.நம்பியார் மட்டுமே. அண்ணா கதை திரைக்கதை வசனம் எழுதிய வேலைக்காரி படத்திலும், திரைக்கதை வசனம் எழுதிய நல்லவன் வாழ்வான் படத்திலும் நம்பியார் நடித்துள்ளார். மு.கருணாநிதி வசனம் எழுதிய அபிமன்யூ, அரசிளங்குமரி, ராஜகுமாரி போன்ற படங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பல படங்களிலும் நம்பியார் நடித்துள்ளார். (புதிய பூமி படத்தில் நம்பியார் ஜெயலலிதாவுக்கு தந்தையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது). வி.என்.ஜானகியுடன் வேலைக்காரி, மோகினி, தேவகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமாராவுடன் எம்.என்.நம்பியார் நடித்துள்ளார். மாயாபஜார் படத்தில் பாண்டவர்களின் ஆலோசகர் கண்ண பரமாத்மாவாக என்.டி.ராமாராவும், கெüரவர்களின் ஆலோசகர் சகுனி மாமாவாக எம்.என். நம்பியாரும் நடித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக