திங்கள், 29 ஆகஸ்ட், 2016

இசைப் பாடகர் கொத்தமங்கலம் சீனு நினைவு தினம் ஆகஸ்ட் 30.


திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகர் கொத்தமங்கலம் சீனு நினைவு தினம் ஆகஸ்ட் 30.

கொத்தமங்கலம் சீனு (பெப்ரவரி 17, 1910- ஆகத்து 30, 2001) தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு
வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு பிழைப்பைத் தேடி செட்டிநாடு பகுதியில் உள்ள கொத்தமங்கலம் வந்தார். ஆரம்பத்தில் கிராமபோன் இசைத்தட்டுகளில் இவரது பாடல்கள் வெளிவந்தன. பின்னர் பாடகரும் நடிகருமான கொத்தமங்கலம் சுப்புவுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு, மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் கொடுத்து வந்தார்.

இவரது குரல் இனிமை இவரை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவர் நடித்த முதல் திரைப்படம் சாரங்கதாரா. இது 1935 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் தாசி அபரஞ்சி, பக்த சேதா, விப்ரநாராயணா போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவரது கடைசித் திரைப்படம் துளசி ஜலந்தர். இது 1947 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1947 இற்குப் பின்னர் இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தாலும், இதற்குப் பின்னர் அவர் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

பிற்காலத்தில் இவர் வானொலியிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார்.

நடித்த திரைப்படங்கள்
சாரங்கதாரா (1935)
விப்ரநாராயணா (1938)
திருமங்கை ஆழ்வார் (1940)
மணிமேகலை (1940)
சூர்யபுத்திரி (1941)
கச்சதேவயானி (1941)
சோகாமேளர் (1942)
கிருஷ்ணபிடாரன் (1942)
தாசி அபரஞ்சி (1944)
பக்த சேதா
சகடயோகம் (1946)
பொன்னருவி (1947)
ஏகம்பவாணன் (1947)
மகாத்மா உதங்கர் (1947)
துளசி ஜலந்தர் (1947)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக