வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

நடிகை சுமலதா பிறந்த நாள் ஆகஸ்ட் 27.



நடிகை சுமலதா பிறந்த நாள் ஆகஸ்ட் 27.
சுமலதா (பிறப்பு 27 ஆகஷ்ட் 1963) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் இருநூறிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

வரலாறு
இவர் தமிழ்நாட்டின் சென்னையில் 1963ல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார்.

திரைப்படங்கள்
தமிழ்
கரையெல்லாம் செண்பகப்பூ (1981) (Tamil)
குடும்பம் ஒரு கதம்பம் (1981) (Tamil)
முரட்டுக் காளை(1980) ....
ஒரு ஓடை நதியாகிறது (1983).

 ஒரு பேட்டியில் சுமலதா பேசியது ....
 தமிழில் ரஜினியின் ‘முரட்டுக்காளை’, ‘கழுகு, ‘திசை மாறிய பறவைகள்’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘ஒரு ஓடை நதியாகிறது’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சுமலதா. இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், கன்னட நடிகர் அம்பரீஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, பெங்களூரில் செட்டிலாகி விட்டார். இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
சுமலதா கூறியதாவது:இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறேன். சினிமாக்களில் அம்மாவுக்கான முக்கியத்துவம் அதிகமாக இல்லை. சும்மா வந்து போவது போல் காட்சிகள் அமைக்கிறார்கள். அப்பாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். எண்பதுகளில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் சந்திப்பு பற்றி கேட்கிறார்கள். அந்தக்காலத்தில் எங்களுக்கு செல்போன் கிடையாது, கேரவன் கிடையாது. அதையும் தாண்டி தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் நட்பை வளர்த்தோம். இப்போது சந்திக்கும்போது, அந்தக்காலத்து நிகழ்ச்சிகளை எல்லாம் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்கிறோம். அந்த நட்பு மனநிறைவை தருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக