வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

நடிகர் அர்ஜூன் பிறந்த நாள்ஆகஸ்டு 15,


நடிகர் அர்ஜூன்  பிறந்த நாள்ஆகஸ்டு 15,
அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15, 1964) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.

இவர் நடித்துள்ள படங்கள் சில...

முதல்வன்
ரிதம்
குருதிப் புனல்
ஜென்டில்மேன்
ஜெய்ஹிந்த்
நன்றி
சேவகன்
வாத்தியார்
மருதமலை
ஏழுமலை
மனைவி ஒரு மாணிக்கம்
யார்
சுயம்வரம்
வேதம்
கொண்டாட்டம்
கோகுலம்
மங்காத்தா
கர்ணா
தாயின் மணிக்கொடி
ஒற்றன்
கடல்
மூன்று பேர் மூன்று காதல்
பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)
விருதுகள்[தொகு]
கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக)

ஆஞ்சநேயர் பக்தர்

தமிழ் சினிமாவின் ஆக்ஷ்ன் கிங் என்று வர்ணிக்கப்படும் நடிகர் அர்ஜூன், தீவிர ஆஞ்சநேயர் பக்தர். அதன் வெளிப்பாடு, சென்னை அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டு வருகிறார். ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வரும் இக்கோவில் பணியில், ஆஞ்சநேயர் சிலையை நிறுவ கர்நாடக மாநிலத்தில் இருந்து ஸ்பெஷலாக சிலை செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டது.

அதன்படி, இந்த சிலையை பீடத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா (07.04.12) காலை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பங்கேற்றார். 28 அடி உயரமும், 140 டன் எடை கொண்ட இந்த சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டது விஷேசமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக