வியாழன், 11 ஆகஸ்ட், 2016

நடிகை வைஜெயந்தி மாலா பிறந்த தினம் ஆகஸ்ட் 13.


நடிகை வைஜெயந்தி மாலா பிறந்த தினம் ஆகஸ்ட் 13.
வைஜெயந்திமாலா பாலி (Vyjayanthimala Bali, பிறப்பு: ஆகத்து 13, 1936) இந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.

ஆரம்ப கால வாழ்க்கை
வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.

இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.

திரைப்படத் துறையில்
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
வஞ்சிக்கோட்டை வாலிபன்
இரும்புத்திரை
சித்தூர் ராணி பத்மினி
தேன் நிலவு
மர்ம வீரன்
அரசியல் வாழ்க்கை
வைஜயந்திமாலா பாலி
பாராளுமன்ற உறுப்பினர் (லோக் சபா) தென் சென்னை மக்களவைத்தொகுதி
பதவியில்
1984–1991
பிரதமர் இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
வி.பி.சிங்
சந்திரசேகர்
பி.வி.நரசிம்ம ராவ்
முன்னவர் ரா._வெங்கட்ராமன்
பின்வந்தவர் R. ஸ்ரீதரன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (1984 - 1999)
பாரதிய ஜனதா கட்சி (1999 முதல் நடப்பு)
1984இல் முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி போட்டியிட்டார். மீண்டும் 1989இல் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.


அபூர்வ தகவல்கள்-19
வைஜெயந்திமாலா
ஆடலழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட வைஜெயந்திமாலா, தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ஹிந்தி நடிகையாகப் பிரபலமானார்.
வைஜெயந்திமாலா, சிறுவயதில் வழுவூர் ராமையாப் பிள்ளையிடம் பரத நாட்டியம் பயின்று தனது நாட்டிய திறனை நன்கு வளர்த்துக் கொண்டார்.
வைஜெயந்திமாலாவின் அம்மா வசுந்தராதேவி, மைசூர் அரண்மணையில் யுவராஜா முன்னிலையில் பாட்டு கச்சேரி நிகழ்த்தினார். பின்பு வசுந்தராதேவி, தன் கணவர் எம்.டி.ராமன், தாயார் யதுகிரி, மகள் வைஜெயந்திமாலா ஆகியோருடன் ரோம், வாடிகன், மிலான், பாரீஸ், லண்டன் ஆகிய உலக நகரங்களுக்கு பயணம் சென்றார். அங்கு இவர் கச்சேரியும் இவரின் மகள் வைஜெயந்திமாலா நடனத்தையும் நடத்தி விட்டு தாய்நாடு திரும்பினார்கள்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷ்ய பிரதமர் புல்கானின், யூகோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் ஆகியோர் இந்தியா வந்தபோது, இந்திய அரசாங்கத்தின் சார்பில் நடனமாடி இவர்களை மகிழ்வித்தார் வைஜெயந்திமாலா.
ஹிந்தியில் 19 படங்கள், தெலுங்கில் 2 படங்கள், வங்காளத்தில் 1 படம் நடித்துள்ள வைஜெயந்திமாலா, தமிழில் மொத்தம் 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம் வாழ்க்கை. கடைசிப் படம் சித்தூர் ராணி பத்மினி. டி.ஆர்.ராஜகுமாரி, கே.ஆர்.ராமசாமி நடித்த விஜயகுமாரி (1950) என்ற படத்தில் ஒரு நடனம் மட்டும் ஆடியுள்ளார்.
இவர் நடித்த 12 படங்களில் பாட்டாளியின் சபதம், வாழ்க்கை, பெண், அதிசயப் பெண், இரும்புத் திரை, தேன் நிலவு ஆகிய படங்கள் சமூக கதையமைப்பைக் கொண்ட படங்களாகவும், மர்ம வீரன், வஞ்சிக் கோட்டை வாலிபன், ராஜ பக்தி, பாக்தாத் திருடன், பார்த்திபன் கனவு, சித்தூர் ராணி பத்மினி - ஆகிய 6 படங்கள் ராஜா ராணி கதையமைப்பைக் கொண்ட படங்களாகவும் உள்ளன. இப்படங்களில் பாட்டாளியின் சபதம் படம் மட்டும் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படமாகும்.
இவர் நடித்த வாழ்க்கை, தேன்நிலவு ஆகிய இரு படங்களும் 100 நாட்களுக்கும், இரும்புத் திரை 175 நாட்களுக்கும் திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. இவர் தமிழில் நடித்த வாழ்க்கை, தெலுங்கில் ஜீவிதம் என்ற பெயரிலும், இந்தியில் பஹார் என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. மூன்று படங்களிலுமே வைஜெயந்திமாலாதான் நாயகி. மூன்று படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.
இந்தியில் வெற்றி பெற்ற ஆஷா என்ற படம் தமிழில் அதிசயப் பெண் என்று படமானபோது வெற்றி பெறவில்லை. இந்த இரு படங்களிலும் இவரே கதாநாயகியாக நடித்தார். இவர் நடித்த 12 தமிழ் படங்களுமே கருப்பு வெள்ளை படங்களாகும். தமிழில் வண்ணப் படம் எதிலும் இவர் நடிக்கவில்லை என்றாலும், அதிசயப் பெண் படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் வண்ணத்தில் வார்க்கப்பட்டிருந்தது.
பாக்தாத் திருடன் படத்தின் டைட்டிலில் ஆடலழகி வைஜெயந்திமாலா என்று இவர் பெயர் பதியப்பட்டுள்ளது.
சில நடிகர்களின் செல்லப் பெயர்களை பாடலில் நுழைத்து விடுவார்கள் பாடலாசிரியர்கள். வைஜெயந்திமாலாவின் செல்லப் பெயரான பேபி என்பதை, தேன் நிலவு படத்தில் "ஓஹோ எந்தன் பேபி நீவாராய் எந்தன் பேபி' என்ற பாடலில் நுழைத்திருப்பார் கண்ணதாசன்.
8வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் சபாஷ் சரியான போட்டி என்று பி.எஸ்.வீரப்பாவின் வசனம் இடம்பெற்ற "கண்ணும் கண்ணும்' என்ற துவைத நடனப் போட்டி பாடல் காட்சியில் பேபியும் (வைஜெயந்திமாலாவும்) பப்பியும் (பத்மினி) உண்மையிலேயே போட்டி போட்டுக் கொண்டு நடனமாடினார்கள். இப்பாடல் காட்சியில் யாராவது ஒருவர் தோற்பது போல் காட்சியை முடிக்க வேண்டும். ஆனால், தோற்கும் விஷயத்திற்கு பேபியின் பாட்டியும் ஒப்புக்கொள்ளவில்லை, பப்பியின் அம்மாவும் ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு பாடலின் முடிவில் யாரும் ஜெயிப்பது போலவோ தோற்பது போலவோ காட்சி அமைக்கப்படவில்லை. சாதுரியம் பேசிய இந்த இரு நாயகிகளின் பிரச்னையை சாதுரியமாக தீர்த்துவிட்டார் இயக்குநர் எஸ்.எஸ்.வாசன்.
8இவர் எந்தப் படத்திலும் இரு வேடங்களில் நடித்ததில்லை. இருப்பினும் மர்ம வீரன் படத்தில் வரும் "இத்தனை நாளாக என்னிடம் சொல்லாமல்' என்ற பாடல் காட்சியில் சிங்கனாக ஆண் வேடத்திலும் சிங்கியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
8திரைப்பாடல்களில் எலந்தப் பயம், எளநி எளநி, வளையல் ஐயா வளையல், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போன்ற பொருட்களை விற்கும் பாடல்களை கேட்டிருக்கிறோம். பெண்களை விற்கும் பாடல்களும் திரைப் பாடல்களில் உள்ளன. ஹரிச்சந்திரா படத்தில் உலகம் அறியா புதுமை என்று பாடியபடி ஹரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதியை விற்பனை செய்வான். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சாட்டையடிக்கு பயந்தபடி ஆடாமல் ஆடுகிறேன் என்று ஆடும் ஜெயலலிதாவை விற்பார்கள்.பாக்தாத் திருடன் படத்தில்சாட்டையடிக்கு பயந்தபடி, கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதையா என்று ஆடிப் பாடும் அடிமைப்பெண் ஜெரினாவை (வைஜெயந்திமாலாவை) விற்பனை செய்வார்கள். பொன்னுக்கு விலைகூறும் பொருளாகினேன் என்று கண்ணீரோடு பாடும் இவளை நாயகன் அபு (எம்.ஜி.ஆர்.) ஏலத்தில் எடுக்கிறார்.
8நடிகர் ஸ்ரீராம் தயாரித்த மர்ம வீரன் படத்தில் வைஜெயந்தி நடிக்கும்போது, வைஜெயந்தி நடத்தி வந்த நாட்டியக் குழுவில் ஹார்மோனியம் வாசித்து வந்த வேதாவுக்கு, மர்ம வீரன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக்கு உதவி புரிந்தார் ஆடலழகி. வேதா இசையமைத்த முதல் தமிழ்ப்படம் மர்ம வீரன் என்பது குறிப்பிடத்தக்கது. மர்ம வீரன் படத்திற்கு முன்பே ஸ்ரீராம் செய்த சிபாரிசால், 10 சிங்களப் படங்களுக்கு இசையமைத்திருந்தார் வேதா.
8அதிசயப் பெண் படத்தின் எழுத்துப் பகுதியில், ஆடை அணி அலங்காரம் ஸ்ரீமதி யதுகிரிதேவி என்று பதிவாகியுள்ளது. பாட்டி யதுகிரி பேத்தி வைஜெயந்தியை வீட்டில் அலங்கரித்து அழகு பார்த்ததுடன், இந்தப் படத்திலும் பேத்தியை அலங்கரித்து அழகு பார்த்துள்ளார்.
8வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் எலியும் பூனையுமாக நடித்த வைஜெயந்திமாலாவும் பத்மினியும், ராஜபக்தி படத்தில் காந்தமும் இரும்புமாக நடித்திருப்பார்கள்.
8இரும்புத் திரை படத்தில், வசுந்தராதேவியும் வைஜெயந்திமாலாவும் அம்மா மகளாக நடித்திருப்பார்கள். கதைப்படி எஸ்.வி.ரங்காராவின் முதல் மனைவியாக வசுந்தராதேவியும் இவர்கள் மகளாக வைஜெயந்திமாலாவும் நடித்தார்கள். அடுத்த மனைவியாக ராதாபாயும் இவர்கள் மகளாக சரோஜாதேவியும் நடித்தார்கள்.
குமாரி ருக்மணி - லட்சுமி, எஸ்.பி.எல்.தனலட்சுமி-ஜோதிலட்சுமி, டி.எஸ்.தமயந்தி } குசலகுமாரி ஆகிய அம்மா - மகள்கள் நடிகைகளாக விளங்கியதுபோல, வசுந்தராதேவியும் வைஜெயந்திமாலாவும் நடிகைகளாக விளங்கினார்கள்.
வசுந்தராதேவி:
வைஜெயந்திமாலாவின் தாயார் வசுந்தராதேவியும் சிறந்த நடிகையாக விளங்கியுள்ளார். எம்.என்.ஸ்ரீனிவாசன் - யதுகிரி தம்பதிக்கு பிறந்தவர் வசுந்தராதேவி.
ஐந்துவயதில் அட்சராப்பியாசம் பெறத்தொடங்கிய வசுந்தராதேவிக்கு எட்டுவயதில் எம்.டி.ராமனுடன் கல்யாணம் நடந்தது. இவரின் 16 ஆவது வயதில் (13.08.1933 இல்) வைஜெயந்திமாலா பிறந்தார்.
வசுந்தராதேவி 5 படங்களில்நடித்துள்ளார். ரிஷ்யசிருங்கர் (1941) படத்தில், முனிவர் ரிஷ்யசிருங்கரை (ரஞ்சன்) மயக்கும் அரண்மனை தாசிப்பெண் மாயாவாக நடித்தார். மங்கம்மாசபதம் (1943) படத்தில், நாயகி மங்கம்மாவாக இவர் நடித்தார். இப்படத்தில் நாயகனாக நடித்த ரஞ்சன் மங்கம்மாவின் கணவனாகவும் மகனாகவும் இருவேடங்களில் நடித்தார். உதயணன்-வாசவதத்தா (1946) படத்தில், நாயகன் உதயணனாக சங்கீதவித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியமும் வாசவதத்தையாக வசுந்தராதேவியும் நடித்தார்கள். நாட்டியராணி (1949) படத்திலும் வசுந்தராதேவி நடித்துள்ளார். இரும்புத்திரை(1960) படத்தில், வசுந்தராதேவியும் வைஜெயந்திமாலாவும் அம்மா-மகளாக நடித்திருப்பார்கள்.
எம்.என்.ஸ்ரீனிவாசன்:
வசுந்தராதேவியின் தந்தையும் வைஜெயந்திமாலாவின் தாய்வழிப்பாட்டனாருமாகிய எம்.என்.ஸ்ரீனிவாசனும் ஒருநடிகராக இருந்துள்ளார். ஸ்ரீமதிபரிணயம் (அல்லது) ஸ்ரீராமஜென்மகாரணம் (1936) என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் எம்.என்.ஸ்ரீனிவாசன். இயக்குநர் ராஜாசாண்டோ இயக்கி மூன்று வேடங்களில்நடித்தவிஷ்ணுலீலா (1938) படத்தில் பிரம்பலன் என்ற புராணவேடத்தில் நடித்துள்ளார் இவர். எஸ்.டி.எஸ்.யோகியார் எழுதி இயக்கிய அதிர்ஷ்டம் (1939) படத்தில் வக்கீல் சோமநாதனாக நடித்துள்ளார் ஸ்ரீனிவாசன்.
திருமணம்:
10.03.1968 இல் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் பாலிக்கும் வைஜெயந்திமாலாவுக்கும் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுசீந்திரபாலி என்ற மகன் உள்ளார்.
வைஜெயந்திமாலா நடித்த தமிழ்ப் படங்கள்:
வாழ்க்கை (1949), பெண் (1954), மர்ம வீரன் (1956), பாட்டாளியின் சபதம் (1958), வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958), அதிசயப் பெண் (1959), இரும்புத்திரை (1960), ராஜ பக்தி (1960), பாக்தாத் திருடன் (1960), பார்த்திபன் கனவு (1960), தேன் நிலவு (1961), சித்தூர் ராணி பத்மினி (1963).
வைஜெயந்திமாலா நாயகியாக நடித்த நாயகர்கள்:
எம்.ஜி.ஆர். (பாக்தாத் திருடன்)
சிவாஜி கணேசன் (சித்தூர் ராணி பத்மினி, இரும்புத் திரை, ராஜ பக்தி)
ஜெமினி கணேசன் (வஞ்சிக்கோட்டை வாலிபன், பெண், தேன் நிலவு, பார்த்திபன் கனவு)
ஏ.நாகேஸ்வரராவ் (அதிசயப் பெண்)
ஸ்ரீராம் (மர்ம வீரன்)
டி.ஆர்.ராமச்சந்திரன் (வாழ்க்கை)
வழக்கு
என்னுடைய மைனர் பெண் வைஜெயந்திமாலாவையும் அவருடைய சொத்துகளையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வாதியாக 1949 இல் வியாஜ்ஜியம் தொடுத்தார் வசுந்தராதேவி. பிரதிவாதிகள் கணவர் எம்.டி.ராமன், தாயார் யதுகிரி ஆகியோர். வழக்கு வசுந்தராதேவிக்கு பாதகமாக தீர்ப்பாகிவிட்டது.
பத்மஸ்ரீ விருது
நாட்டியமாலா என்ற பத்திரிகையை நடத்தியுள்ளார் இவர். 1984 லும் மீண்டும் 1989 லும் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருமுறை எம்.பி. பதவி வகித்துள்ளார் இவர். 1968 இல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. 1974 இல் இந்திய அரசுஇவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. ஃபிலிம்பேர் வழங்கிய சிறந்த நடிக்கைக்கான விருதை மூன்று முறை பெற்றுள்ளார் இவர். 25.10.1995 இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
நன்றி -விக்கிபீடியா,சினிமா எக்ஸ் பிரஸ் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக