திங்கள், 22 ஆகஸ்ட், 2016

நடிகர் டி. எஸ். பாலையா பிறந்த தினம் ஆகஸ்ட் 23.


நடிகர்  டி. எஸ். பாலையா பிறந்த தினம் ஆகஸ்ட் 23.
டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

அவரின் புகழ்பெற்ற பிற படங்கள்:
வேலைக்காரி (1949)
உத்தம புத்திரன் (1940)
ஆர்யமாலா (1941)
மனோன்மணி (1942)
மீரா (திரைப்படம்) (1945)
வால்மீகி (1946)
மோகினி (1948)
ஏழை படும்பாடு (1950)
ஓர் இரவு (1951)
மதுரை வீரன் (1956)
பாகப்பிரிவினை (1959)
திருவிளையாடல் (திரைப்படம்) (1965)
பாமா விஜயம் (1967)
தில்லானா மோகனாம்பாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக