திங்கள், 22 ஆகஸ்ட், 2016

நடிகை எஸ். வரலட்சுமி பிறைந்த நாள் ஆகஸ்ட் 13.


நடிகை எஸ். வரலட்சுமி பிறைந்த நாள் ஆகஸ்ட் 13.
எஸ். வரலட்சுமி, (ஆகஸ்ட் 13, 1927 - செப்டம்பர் 22, 2009) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.

வாழ்க்கை வரலாறு
வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.

தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு
சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார்[1]. இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.

விருதுகள்
கலைமாமணி விருது
கலைவித்தகர்
கவிஞர் கண்ணதாசன் விருது (2004)
சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு (சிவாஜி குடும்பத்தினர் வழங்கியது) அக்டோபர் 2007
திரைப்படப் பட்டியல்
குறிப்பு: இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல.

நடிகை
குணா, 1992
அடுத்த வாரிசு
கனகதாரா (தெலு)
கோடாரிகம் (தெலு)
லாயர் சுகாசினி (தெலு)
மாமாகாரம் (தெலு)
சதி துளசி (தெலு)
டிங்கு ரங்கு (தெலு)
வய்யாரி பாமா (தெலு)
நத்தையில் முத்து,1973,
பால பாரதம், 1972, (தெலு)
பொம்ம பொருசா, 1971, (தெலு)
பிரேம் நகர், 1971,(தெலு)
ஆதர்ச குடும்பம், 1969 (தெலு)
ஆபூர்வ பிறவிகள், 1967
பாமா விஜயம், 1967
சத்ய அரிச்சந்திரா, 1965
பவ்ரு வாகனா,
லவ குச, 1963,
ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம், 1963 (தெலு)
மகாமந்திரி திம்மரசு, 1962 (தெலு)
ஸ்ரீ வெங்கடேசுவர மகாத்மியம், 1960 (தெலு)
மாங்கல்ய பலம், 1958
சக்கரவர்த்தி திருமகள்,1957
சதி சாவித்திரி, 1957,
எதிர்பாராதது, 1954,
சதி சக்குபாய், 1954,
சுவப்னசுந்தரி, 1950
வாலி சுக்ரீவா, 1950 (தெலு)
ஜீவிதம், 1949, (தெலு)
பாலராஜூ, 1948 (தெலு)
சேவா சதன், 1938
பாலயோகினி, 1936 (தெலு)
வீரபாண்டிய கட்டபொம்மன்
கந்தன் கருணை
ராஜராஜ சோழன்
பூவா தலையா
சவாலே சமாளி
நினைத்ததை முடிப்பவன்
நீதிக்குத் தலைவணங்கு
மாட்டுக்கார வேலன்
பணமா? பாசமா?
பாடகி[தொகு]
குணா, 1992
கந்தன் கருணை, 1967
வீரபாண்டிய கட்டபொம்மன், 1959

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக