வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

நடிகர் விஷால் பிறந்த நாள் ஆகஸ்ட் 29,


நடிகர் விஷால் பிறந்த நாள் ஆகஸ்ட் 29,
விஷால் (விஷால் கிருஷ்ணா ரெட்டி) (பிறப்பு - ஆகஸ்ட் 29, சென்னை) தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

வாழ்க்கை
விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்.

தொழில்
கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வரலாறு
எண் ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறீப்புகள்
1 2004 செல்லமே ரகுனாதன்
2 2005 சண்டக்கோழி பாலு
3 திமிரு கணேஷ்
4 2006 சிவப்பதிகாரம் சத்திய மூர்த்தி
5 2007 தாமிரபரணி பரணிபுத்திரன்
6 மலைக்கோட்டை அன்பு
7 2008 சத்தியம் சத்தியம்
8 2009 தோரணை முருகன்
9 2010 தீராத விளையாட்டுப் பிள்ளை கார்த்திக்
10 2011 அவன் இவன் வால்ட்டர் வணங்காமுடி
11 வெடி பிரபாகரன்
12 2013 பாண்டிய நாடு
13 2014 நான் சிகப்பு மனிதன்
14 கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிறப்புத்தோற்றம்
15 பூஜை வாசு தயாரிப்பும் இவரே
16 2015 ஆம்பள சரவணன் தயாரிப்பும் இவரே
17 மதகஜ ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக