சனி, 12 நவம்பர், 2016

பாடகி பி. சுசீலா பிறந்த நாள் நவம்பர் 13,

பாடகி பி. சுசீலா பிறந்த நாள் நவம்பர் 13,
பி. சுசீலா அல்லது  புலப்பாக்க
சுசீலா (பிறப்பு: நவம்பர் 13, 1935)
இந்தியாவின் முன்னணி திரைப்படப்
பின்னணிப் பாடகி. இவர் தமிழ் ,
தெலுங்கு, மலையாளம் , கன்னடம்
உட்படப் பல இந்திய மொழிகளில்
நாற்பதாண்டுகளாக 25,000
பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள
விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ்
கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார்.
சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும்
உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி
பயின்றவர். ஆந்திராவின்
புகழ்பெற்ற இசை மேதை துவாரம்
வெங்கடசாமி நாயுடுவிடம்
முறையாக இசை பயின்றவர்.
இசைத் துறை
சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை
வானொலியில் பாப்பா மலர்
நிகழ்ச்சியில்
பாடத்தொடங்கினார்.
சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட
இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது
பெற்றதாய் படத்தில் முதன் முதலில்
பின்னணி பாட வைத்தார். 1953 ஆம்
ஆண்டில் இப்படத்தில் ஏ. எம்.
ராஜாவுடன் இணைந்து
பெண்டியாலா
நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு
அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார்.
1955 இல் வெளிவந்த கணவனே கண்
கண்ட தெய்வம் படத்தில்
இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி
விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற
பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை
வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம்
இசையமைத்த "டொக்டர்" என்ற
சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.
பல பாடல்களுக்கு ஏராளமான
விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம்
ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான
பரிசைப் பெற்றுக் கொண்டார்.
இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில்
வெளிவந்த சில நேரங்களில் என்ற
திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற
பாடலைப் பாடினார்.
1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ்
என்பவரைத் திருமணம் புரிந்தார்.
இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற
மகன் உள்ளார்.
விருதுகள்
கம்பன் புகழ் விருது , 2016 வழங்கியது:
கொழும்புக் கம்பன் கழகம்,
இலங்கை
இந்திய அரசின் பத்ம பூஷன் விருது -
ஜனவரி 2008
தேசிய அளவில் மிகச்சிறந்த பின்னணிப்
பாடகி விருது ஐந்து தடவைகள்
ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி
பெங்கையா விருது (2001)
கலைமாமணி விருது
பி. சுசீலா பாடிய சில
பாடல்கள்:
ஆலயமணியின் ( பாலும் பழமும் )
யாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால்
பசி தீரும் )
பார்த்தால் பசி ( பார்த்தால் பசி
தீரும் )
காவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )
இளமை கொலுவிருக்கும் ( ஹலோ
மிஸ்டர் ஜமின்தார் )
தண்ணிலவு ( படித்தால் மட்டும்
போதுமா )
முத்தான முத்தல்லவோ ( நெஞ்சில்
ஓர் ஆலயம் )
அமுதைப் பொழியும் ( தங்கமலை
ரகசியம் )
பருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )
தூது செல்ல ( பச்சை விளக்கு )
பக்கத்து வீட்டு ( கற்பகம் )
நெஞ்சத்திலே நீ ( சாந்தி )
லவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )
அத்தான் என் அத்தான்
( பாவமன்னிப்பு )
சிட்டுக்குருவி ( புதியபறவை )
அத்தை மகனே ( பாத காணிக்கை )
கண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )
கொஞ்சி கொஞ்சி ( கைதி
கண்ணாயிரம் )
ஆயிரம் பெண்மை ( வாழ்க்கைப்
படகு )
ஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில்
ஒருவன் )
நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த
ஜோதி )
நீ இல்லாத ( தெய்வத்தின்
தெய்வம் )
அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
உன்னைக் காணாத ( இதய கமலம் )
என்னை மறந்ததேன் ( களங்கரை விளக்கம் )
இதுதான் உலகமா
( ஆடிப்பெருக்கு )
கண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )
மாலைப் பொழுதின்
( பாக்கியலெட்சுமி )
மலரே மலரே ( தேன் நிலவு )
மன்னவனே ( கற்பகம் )
நாளை இந்த வேளை ( உயர்ந்த மனிதன் )
நான் உன்னை வாழத்தி பாடுகிறேன்
( நூற்றுக்கு நூறு )
காதல் சிறகை ( பாலும் பழமும் )
ஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )
ராமன் எத்தனை ( லெட்சுமி
கல்யாணம் )
தங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )
சொன்னது நீ தானா
( நெஞ்சில் ஓர் ஆலயம் )
என்ன என்ன ( வெண்ணிற ஆடை )
அத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த
மனிதன் )
காட்டுக்குள்ளே திருவிழா ( தாய்
சொல்லைத் தட்டாதே )
அத்தை மகள் ( பணக்கார குடும்பம் )
பாலிருக்கும் ( பாவமன்னிப்பு )
பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
உன்னை ஒன்று ( புதிய பறவை )
என்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )
அம்மாம்மா காற்று வந்து
( வெண்ணிற ஆடை )
காண வந்த ( பாக்யலெட்சுமி )
மறைந்திருந்து ( தில்லானா
மோகனாம்பாள் )
பச்சை மரம் ( ராமு )
தேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )
சிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே
சமாளி )
இரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )
உனக்கு மட்டும் ( மணப்பந்தல் )
தமிழுக்கும் அமுதென்று
( பஞ்சவர்ணக்கிளி )
வெள்ளிக்கிழமை ( நீ )
ரோஜா மலரே ( வீரத்திருமகன் )
ஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர்
ஜமின்தார் )
தாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )
காத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம்
பிள்ளை )
மதுரா நகரில் ( பார் மகளே பார் )
அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
என்னருகே நீ இருந்தால் ( திருடாதே )
காற்று வந்தால் ( காத்திருந்த
கண்கள் )
மெளனமே பார்வையால்
( கொடி மலர் )
பால் வண்ணம் ( பாச மலர் )
போக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )
வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
பார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )
ஒருத்தி ஒருவனை ( சாரதா )
ஒரே கேள்வி ( பனித்திரை )
நெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )
இயற்கை என்னும் ( சாந்தி நிலையம் )
ஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா
சாய்ந்தாடு )
யாதும் ஊரே ( நினைத்தாலே இனிக்கும் )
ஆயிரம் நிலவே வா ( அடிமைப்
பெண் )
மாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளே
வா )
என் கண்மணி ( சிட்டுக்குருவி )
விழியே கதையெழுது ( உரிமைக் குரல் )
தங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும்
வாலிபன் )
மஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )
பேசுவது கிளியா ( பணத்தோட்ட )
அன்று வந்ததும் ( பெரிய இடத்துப்
பெண் )
அன்புள்ள மான்விழியே ( குழந்தையும்
தெய்வமும் )
வாழ நினைத்தால் ( தாயில்லாமல்
நானில்லை )
அடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )
அமைதியான நதியினிலே ( ஆண்டவன்
கட்டளை )
நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )

********************************
17, 695 பாடல்கள் பாடி பிரபல பின்னணிப்
பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை
படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ்
ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர்.
தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசை
யில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரா வின்
புகழ்பெற்ற இசை மேதை துவாரம்
வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக
இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில்
இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.
பதினைந்து வயதில் சென்னை
வானொலியில் பாப்பா மலர்
நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார்.
இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட
இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது
படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி
பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய
‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’,
‘உன்னைக் கண் தேடுதே…’ பாடல்களால்
பிரபலமடைந்தார்.
பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜிக்கி
போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி
வந்த பின்னணி உலகில் இந்த இளம்
பாடகியின் பயணம் அவ்வளவு
சுலபமானதாக இல்லை. தனித்தன்மை
வாய்ந்த தன் குரல் இனிமையால்
தொடர்ந்து பல மொழிகளில்
ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின்
ஆட்சி, அரை நூற்றாண்டுகள்
தொடர்ந்தது.
1955 முதல் 1985 வரை வெளிவந்த
கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர்
பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில்
கண்டசாலா, தமிழில் டி.எம்.
சவுந்திரராஜன், கன்னடத்தில் பி.பி. நிவாஸ்
ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள்
தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம்
படைத்தன. குறிப்பாக, டி.எம்.
சவுந்திரராஜனுடன் தமிழில்
நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப்
பாடியுள்ளார்.
தாய் மொழி தெலுங்கு
என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு
தனித்தன்மையுடன் விளங்கியது.
நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-
ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ்.
விஸ்வநாதன் இசையமைப்பில்
தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர்.
ரஹ்மான் என ஏராளமான
இசையமைப்பாளர்களின் இசையில்
பாடியுள்ளார்.
5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன் விருது,
10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள்,
கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில
அரசினர் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவின் இசைக்குயில் லதா
மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு
உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து
வந்தார். தற்போது பக்திப் பாடல்கள்,
மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில்
கவனம் செலுத்தத்
தொடங்கிவிட்டார்.
பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும்
மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பி.சுசீலா இசைத் துறைக்கு வந்து 60
ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி
உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்
ஆயிரக்கணக்கான பாடல்களை
பாடியுள்ளார். அவரின் இத்தகைய
நெடிய இசைப் பயணத்தையும்,
சாதனையையும் பாராட்டும்விதமாக
அவருக்கு இந்தக் கவுரவம் கிடைத்துள்ளது.
அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற
அவருடைய சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரம்
அளித்துள்ளது. 1960 முதல் இன்றுவரை பி.
சுசீலா 17, 695 பாடல்களைப்
பாடியுள்ளார்.

*********************************
தென்னிந்திய திரை உலகின்
புகழ்பெற்ற பின்னணி பாடகி
பி.சுசீலாவின் பிறந்த நாள் இன்று.
அவரை பற்றிய அரிய முத்துகள் பத்து...
 ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில்
பிறந்தவர். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில்
படிக்கும்போதே இசை யில் ஏற்பட்ட
ஆர்வத்தால் ஆந்திரா வின்
புகழ்பெற்ற இசை மேதை துவாரம்
வெங்கடசாமி நாயுடுவிடம்
முறையாக இசை பயின்றார். ஆந்திர
பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில்
டிப்ளமோ முடித்தார்.
 பதினைந்து வயதில் சென்னை
வானொலியில் பாப்பா
மலர் நிகழ்ச்சியில் பாடத்
தொடங்கினார். இவரது
இசைத் திறமையால் கவரப்பட்ட
இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ்
தனது படத்தில் இவரை முதன் முதலாக
பின்னணி பாட வைத்தார். 1955ல்
இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி
விளையாடுவதும்..’, ‘உன்னைக் கண்
தேடுதே…’ பாடல்களால்
பிரபலமடைந்தார்.
 பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி,
ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம்
செலுத்தி வந்த பின்னணி உலகில்
இந்த இளம் பாடகியின் பயணம்
அவ்வளவு சுலபமானதாக இல்லை.
தனித்தன்மை வாய்ந்த தன் குரல்
இனிமையால் தொடர்ந்து பல
மொழிகளில் ஹிட் பாடல்களை
அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை
நூற்றாண்டுகள் தொடர்ந்தது.
 1955 முதல் 1985 வரை வெளிவந்த
கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர்
பின்னணி பாடியுள்ளார்.
தெலுங்கில் கண்டசாலா,
தமிழில் டி.எம். சவுந்திரராஜன்,
கன்னடத்தில் பி.பி. நிவாஸ்
ஆகியோருடன் இவர் பாடிய டூயட்
பாடல்கள் தென்னிந்திய திரையிசை
உலகில் சரித்திரம் படைத்தன.
குறிப்பாக, டி.எம்.
சவுந்திரராஜனுடன் தமிழில்
நூற்றுக்கணக்கான டூயட்
பாடல்களைப் பாடியுள்ளார்.
 தாய் மொழி
தெலுங்கு என்றாலும் இவரது
தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன்
விளங்கியது. நாகேஸ்வரராவ்,
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும்
பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பில் தொடங்கி,
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான்
என ஏராளமான
இசையமைப்பாளர்களின் இசையில்
பாடியுள்ளார்.
 5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன்
விருது, 10க்கும் மேற்பட்ட மாநில
விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர
மாநில அரசினர் விருது போன்றவை
குறிப்பிடத்தக்கவை.
 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப்
பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம்,
பெங்காலி, இந்தி, ஒரியா,
சமஸ்கிருதம், சிங்களம் என பல
மொழிப் படங்களிலும்
பாடல்களைப் பாடியுள்ளார்.
 இந்தியாவின் இசைக்குயில் லதா
மங்கேஷ்கருடன் இவருக்கு
நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை
ஹிட் பாடல்களை அளித்து வந்தார்.
தற்போது பக்திப் பாடல்கள்,
மெல்லிசை பாடல்கள்
ஆகியவற்றில் கவனம் செலுத்தத்
தொடங்கிவிட்டார்.
 பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக
1000க்கும் மேற்பட்ட பக்திப்
பாடல்களைப் பாடியுள்ளார்.
 ஒவ்வொரு வருடமும் இவரது
பிறந்த நாளான நவம்பர் 13 அன்று
இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வரும்
வருவாயில், வறுமையில் உள்ள
இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர
பென்ஷன் தொகையை
அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக