செவ்வாய், 22 நவம்பர், 2016

இயக்குநர் கே. சுபாஷ் நவம்பர்  23 ல் ( இன்று) காலமானார்.

இயக்குநர் கே. சுபாஷ் நவம்பர்  23 ல் ( இன்று) காலமானார்.

கே. சுபாஷ் (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்)
தமிழ் , இந்தி திரைப்பட இயக்குநர் , திரைக்கதை
ஆசிரியர் ஆவார். விஜயகாந்த் நடித்த
சத்ரியன் , அஜித் குமார் நடித்த பவித்ரா ,
ஆயுள் கைதி, பிரபுதேவா நடித்த நினைவிருக்கும்
வரை , ஏழையின் சிரிப்பில் போன்ற பல
வெற்றித் திரைப்படங்களை
இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற
இந்தியத் திரைப்பட இரட்டை
இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு
ஆகியோரில், கிருஷ்ணன் அவர்களின்
மகனாவார்.
திரை வாழ்க்கை
நாயகன் திரைப்படத்தை மணிரத்னம்
இயக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி
இயக்குனராகப் பணியாற்றியதன்
மூலமாக தனது திரை வாழ்க்கையைத்
தொடங்கினார்.
திரைப்பட விபரம்
இயக்குனராக
ஆண்டு திரைப்படம் மொழி
1988 கலியுகம் தமிழ்
1989 உத்தம
புருசன் தமிழ்
1990 சத்ரியன் தமிழ்
1991 ஆயுள் கைதி தமிழ்
1991 வாக்குமூலம் தமிழ்
1991 பிரம்மா தமிழ்
1992 பங்காளி தமிழ்
1994 பவித்ரா தமிழ்
1994 பிரம்மா இந்தி
1997 நேசம் தமிழ்
1997 அபிமன்யு தமிழ்
1999 நினைவிருக்கும்
வரை தமிழ்
1999 சுயம்வரம் தமிழ்
2000 ஏழையின்
சிரிப்பில் தமிழ்
2000 சபாஷ் தமிழ்
2001 லவ் மேரேஜ் தமிழ்
2002 123 தமிழ்
2005 இன்சான் இந்தி
திரைக்கதை ஆசிரியராக
அந்தாகடு ( தெலுங்கு)
சன்டே ( இந்தி )
சென்னை எக்ஸ்பிரஸ் ( இந்தி )
என்டர்டெயின்மெண்ட் ( இந்தி)
தில்வாலே ( இந்தி )

**********************************
Thats tamil news
பிரபல இயக்குநர் கே சுபாஷ்
இன்று சென்னையில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 57.
கே சுபாஷ் தமிழில் பல வெற்றிப்
படங்களை இயக்கியவர். பழம் பெரும்
இயக்குநர் ஆர் கிருஷ்ணனின் மகன்
(இரட்டையர் கிருஷ்ணன் - பஞ்சு).
1988-ல் கலியுகம் படம் மூலம் இயக்குநராக
தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தொடர்ந்து உத்தம புருஷன்,
சத்திரியன், பிரம்மா, நினைவிருக்கும் வரை,
ஏழையின் சிரிப்பில், சபாஷ் என பல
வெற்றிப் படங்களைத் தந்தார்.
குறிப்பாக சத்திரியன், பிரம்மா போன்ற
படங்கள் பெரும் வெற்றியைப்
பெற்றவை.
தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும்
வெற்றிகரமான கதாசிரியராகத்
திகழ்ந்தார்.
ஷாரூக்கான் - ரோஹித் ஷெட்டி
கூட்டணியின் முக்கிய தூணாகத் திகழ்ந்தவர்
சுபாஷ். சூப்பர் ஹிட் படங்களான
சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, அக்ஷய்
குமார் நடித்த
எண்டர்டெயின்மென்ட், ஹவுஸ்ஃபுல்
3 மற்றும் அஜய் தேவ்கன் நடித்த சண்டே போன்ற
படங்களின் கதாசிரியர் சுபாஷ்தான்.
உடல் நலக் குறைவு காரணமாக
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்த சுபாஷ் இன்று
மரணமடைந்தார்.
இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4
மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள
அவரது இல்லத்திலிருந்து
தொடங்குகிறது.
முகவரி: கோலவிழியம்மன் கோவில் தெரு,
ஹபிபுல்லா தெரு, தி நகர்
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தொடர்புக்கு: 7358428234 /
9940599839.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக