வியாழன், 17 நவம்பர், 2016

நடிகை பி. எஸ். சரோஜா பிறந்த தினம் நவம்பர் 18, 1929.

நடிகை பி. எஸ். சரோஜா பிறந்த தினம் நவம்பர் 18, 1929.

பி. எஸ். சரோஜா (பிறப்பு: நவம்பர்
18, 1929) தமிழ்த் திரைப்பட
நடிகையாவார்.
ஆரம்ப வாழ்க்கை
சரோஜாவின் பூர்வீகம் சேலம்
ஆகும். இவர் பாலசுப்ரமணியம்,
ராஜலட்சுமி ஆகியோருக்கு
திருவனந்தபுரத்தில் பிறந்தார்.
சரோஜா சிறுமியாக
இருந்தபோதே அவரது குடும்பம்
சென்னை ராயபுரத்தில்
குடியேறியது. சரோஜாவின்
தாத்தா ஒரு வயலின் ஆசிரியர்.
அம்மா வாய்ப்பாட்டில் தேர்ந்தவர்.
பி. எஸ். சரோஜா தாயாரிடம்
வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார்.
சிறுவயதிலேயே தெலுங்குக்
கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு
இசையில் தேறினார். சரோஜா
ராயபுரம் புனித அந்தோணியார்
தொடக்கப் பள்ளியில்
சேர்க்கப்பட்டார்.
வட்டரங்குப்
பயிற்சி
சரோஜா ஒன்பது வயதுச்
சிறுமியாக இருந்த போது
அவரது பள்ளி மைதானத்தில்
‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும்
வட்டரங்குக் குழு
முகாமிட்டிருந்தது.
சரோஜாவும் ஆர்வத்தின்
காரணமாக பள்ளிக்கூடத்துக்கு
சரிவர போகாமல் அங்கேயே பல
நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ்
பயிற்சிகளைக்
கவனித்துக்கொண்டிருந்தார்.
சர்க்கசுப் பயிற்சியாளர் டி. எம்.
நாமசிறீ என்பவர் சரோஜாவின்
ஆர்வத்தைக் கண்டு அவளுக்குப்
பயிற்சியளித்தார். நாமசிறீயிடம்
சரோஜா முழுக் கலையையும்
கற்றுக்கொண்டார். ஆனாலும்,
தனது 12வது அகவையில் சர்க்கஸ்
அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த
நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்
கம்பெனி’ மூடப்பட்டது.
திரைப்பட
வாய்ப்பு
வட்டரங்கு நிறுவனம்
மூடப்பட்டாலும் தனது
மாணவர்களுக்குத் தொடர்ந்து
பயிற்சியளித்துவந்தார் நாமசிறீ.
இந்த நேரத்தில் ராயபுரத்தில்
ராசாசி கலந்துகொண்ட
காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்
கூட்டம் தொடங்கும்முன் தனது
மாணவர்களைச் சாகசங்கள்
செய்துகாட்டச் செய்தார் ஆசிரியர்.
ராசாசி சாகச நிகழ்ச்சியைக்
குறிப்பிட்டுப் பாராட்டிப்
பேசினார். இந்தக் கூட்டத்துக்கு
ராசாசியுடன் வந்திருந்த
காங்கிரஸ் ஊழியரான
தட்சிணாமூர்த்தி என்பவர்
ஜெமினி ஸ்டுடியோவில்
பணியாற்றிவந்தவர். இவர்
சரோஜாவின் அழகையும் சாகசத்
திறமையையும் கண்டு மாதம் 45
ரூபாய் சம்பளத்துக்கு
சரோஜாவை ஜெமினி
ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார்.

1941-ல் வெளியான ‘மதன
காமராஜன்' திரைப்படக்
குழுநடனம் மூலம்
திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின் ஜெமினியிலிருந்து
வெளியேறி, ஜுபிடர்
நிறுவனத்தில் சேர்ந்தார். ஜுபிடர்
தயாரிப்பில் மிகப் பெரிய
வெற்றிப் படமாக அமைந்த ‘குபேர
குசேலா’வில் (1943)
டி.ஏ.ஜெயலட்சுமியுடன்
இணைந்து ஆடி பிரபலமானார்.
குடும்பம்
பி. எஸ். சரோஜாவின் கணவர்
பண்டிட் போலாநாத் ஆக்ராவைச்
சேர்ந்தவர். சரோஜா நடித்த பல
படங்களுக்கு நடன இயக்குனராகப்
பணியாற்றியவர். 1943 ஆம் ஆண்டில்
சரோஜாவைக் காதலித்துத்
திருமணம் செய்து கொண்டார். [2]
போலோநாத் பரதக் கலையுடன்
மணிப்பூரி, கதக் போன்ற
நடனங்களிலும் சரோஜாவுக்குப்
பயிற்சி அளித்தார். போலோநாத்
பர்மா ராணி , ராஜராஜேஸ்வரி
ஆகிய படங்களில் தனி நடனம்
ஆடும் வாய்ப்புகளை
சரோஜாவுக்கு பெற்றுத்தந்தார்.
சரோஜா தனது கணவருடன்
இணைந்து கீத காந்தி
திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் நடன கலா
மந்திர் என்ற பெயரில் நடனப்
பயிற்சிப் பள்ளி ஒன்றை
நிறுவியிருந்தனர்.
இவர்களுக்கு கலாராணி என்ற
முதல் மகள் பிறந்தாள்.
இன்பவல்லி திரைப்படத்தில் ஒரு
காட்சியில் நடிப்பதற்காக 1949 மே
11 அன்று இரவு தமது
வாகனத்தில் போலோநாத்தும்,
சரோஜாவும் பயணம் செய்தபோது
சேலத்திற்கு அருகில் எட்டு மைல்
தூரத்தில் வாகனம்
விபத்துக்குள்ளாகியதில்
போலோநாத் படுகாயம் அடைந்து
மே 12 அன்று சேலம்
மருத்துவமனையில் காலமானார்.
சரோஜா சிறுகாயங்களுடன்
உயிர் தப்பினார்.  போலோநாத்
மரணமடந்து சில காலத்திற்குப்
பின்னர் பி. எஸ். சரோஜா டி. ஆர்.
ராமண்ணாவை திருமணம்
செய்துகொண்டார்.
கதாநாயகியாக
பி.யு.சின்னப்பாவும் , டி.ஆர்.
ராஜகுமாரியும் இணைந்து
நடித்த விகடயோகி
திரைப்படத்தில் இரண்டாவது
கதாநாயகியாக நடிக்கும்
வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகு
பி.எஸ்.ராமையாவின் ‘தன
அமராவதி' திரைப்படத்தில்
கதாநாயகன்
எஸ்.எம்.குமரேசனுக்கு
இணையாக தனிக்
கதாநாயகியாக நடித்தார்.
அன்றைய உச்ச நட்சத்திரமான
டி.ஆர். மகாலிங்கத்துடன்
'பாரிஜாதம்' படத்தில் நடித்தார்.
எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் ,
மலையாளத் திரைப்பட நடிகர்
திக்குரிசி சுகுமாரன் நாயர்
ஆகியோருடன் இணைந்து
நடித்துப் புகழ்பெற்றார்.

************************************
தமிழ் சினிமாவின் முதல்
கனவுக் கன்னி டி.ஆர்.
ராஜகுமாரி, சகலகலாவல்லி
பானுமதி, நாட்டியப்
பேரொளி பத்மினி, நடிகையர்
திலகம் சாவித்திரி,
கன்னடத்துப் பைங்கிளி
சரோஜாதேவி என்று
பத்துக்கும் அதிகமான
கதாநாயகிகள் தென்னிந்திய
சினிமாவில் கொடிகட்டிப்
பறந்துகொண்டிருந்த 50-
களில்தான்
பி.எஸ்.சரோஜாவும்
பெரும்புகழ் பெற்றார்.
சேலம்தான் சரோஜா
குடும்பத்தின் பூர்வீகம்.
பாடும் திறன், ஆடும் திறன்,
சர்க்கஸில் பார் விளையாடும்
திறன் எனப் பன்முகத்
திறமைகொண்ட பி.எஸ்.
சரோஜா 1929-ம் ஆண்டு நவம்பர்
18-ம் தேதி பாலசுப்ரமணியம் –
ராஜலட்சுமி தம்பதிக்கு
திருவனந்தபுரத்தில்
பிறந்தார். பத்து மாதக்
குழந்தையான சரோஜாவுடன்
சென்னை ராயபுரத்தில்
குடியேறியது அவரது
குடும்பம். சரோஜாவின்
தாத்தா தேர்ந்த வயலின்
ஆசிரியர்.
அம்மா வாய்ப்பாட்டில் வல்லவர்.
களைப்புடன் வீடு வரும்
கணவருக்காக ஆர்மோனியம்
வாசித்துக்கொண்டே பாடி
அசத்துவாராம். தாத்தாவும்
அம்மாவும் தந்த தாக்கம்
காரணமாக இசையின்பால்
ஈர்க்கப்பட பி.எஸ். சரோஜா,
அம்மாவிடம் வாய்ப்பாட்டு
கற்றுக்கொண்டார்.
சிறுவயதிலேயே
தெலுங்குக் கீர்த்தனைகள்
பாடும் அளவுக்கு இசையில்
தேறினார்.
காந்தமாய் இழுத்த சர்க்கஸ்
பாடும் திறமையை
வளர்த்துக்கொண்ட சரோஜா,
ராயபுரம் புனித
அந்தோணியார் தொடக்கப்
பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
வீட்டிலிருந்து கூப்பிடு
தூரத்தில் பள்ளிக்கூடம்.
ஒன்பது வயதுச் சிறுமியாக
மூன்றாம் வகுப்பு
படித்துக்கொண்டிருந்தபோது
சர்க்கஸ் அவரது
வாழ்க்கைக்குள் நுழைகிறது.
பள்ளி மைதானத்தில்
முகாமிட்டிருந்தது
‘தமிழ்நாடு சர்க்கஸ்’. கேரள,
ஒரிய பெண்கள், ஆண்களைக்
கொண்டு அமைக்கப்பட்ட சர்க்கஸ்
கம்பெனிகள்
புகழ்பெற்றிருந்த அந்தக்
காலத்தில், தமிழ்க்
கலைஞர்களைக் கொண்டு
தமிழ் முதலாளிகளால்
தொடங்கப்பட்டிருந்த சர்க்கஸ்
கம்பெனி அது. இரவில் வண்ண
விளக்குகள் மின்ன பேண்ட்
வாத்திய ஒலியுடன் ஈர்த்த
சர்க்கஸ் கூடாரம் பகலில்
அமைதியாக இருக்கும்.
ஒருநாள் சர்க்கஸ்
கூடாரத்தைக் கடந்து
பள்ளிக்குப்
போய்க்கொண்டிருந்த
சரோஜா, கூடாரத்தின் உள்ளே
“ ஆ...ஊ...” என்று
கேட்டுக்கொண்டிருந்த
ஒலிகளைக் கேட்டு உள்ளே
நுழைந்துவிட்டார். அங்கே
சிலம்பம்,
களரி, ஜிம்னாஸ்டிக்ஸ்
பயிற்சிகளில்
ஈடுப்பட்டிருந்தார்கள் சர்க்கஸ்
கலைஞர்கள். அவர்களுக்குப்
பயிற்சி
அளித்துக்கொண்டிருந்தவர்
சர்க்கஸ் வாத்தியார் டி.எம்.நம.
மதியம்வரை
பள்ளிக்கூடத்துக்கு
மட்டம்போட்டுவிட்டு அங்கே
ஒளிந்திருந்து சர்க்கஸ்
பயிற்சிகளைக்
கவனித்துக்கொண்டிருந்த
சரோஜாவை ஒருநாள்
கையும் மெய்யுமாகப்
பிடித்தார் நாம.
“எவ்வளவு நாட்களாக இந்த
வேலையைச் செய்கிறாய்?”
என்று வாத்தியார் கேட்க,
பயந்து நடுங்காமல் “ஒரு
திங்களுக்கு மேல்” என்றார்.
அத்தோடு நிற்கவில்லை
சரோஜா. அவர்கள் முன்னாள்
அந்தர்பல்டியடித்துக்
காண்பித்தார். அத்தனை
சீக்கிரம்
கற்றுக்கொள்ளக்கூடிய
வித்தை அல்ல அது.
ஆச்சரியத்துடன் சிறுமி
சரோஜாவை
அழைத்துக்கொண்டு அவளது
வீட்டுக்கு வந்தார் வாத்தியார்
நாம “ கண்களால் பார்த்த
ஞானத்தில் அந்தர்பல்டி
அடிக்கக்
கற்றுக்கொண்டிருக்கிறாள்
உங்கள் மகள். அவள் இனி என்
சிஷ்யப்பிள்ளை” என்றார்.
“ஐயோ இவளது அப்பாவுக்குத்
தெரிந்தால் தோலை உரித்து
உப்புக்கண்டம்
போட்டுவிடுவார், சர்க்கஸ்
வேண்டாம் “ என்று
மன்றாடிப்பார்த்தார் அம்மா.
ஆனால் பட்டினிகிடந்து
சாதித்தார் சரோஜா.
அப்பாவுக்குத் தெரியாமல்
நாமயிடம் மூன்றே
ஆண்டுகளில் முழு
வித்தைகளைக்
கற்றுக்கொண்ட சரோஜா 12
வயதில் சர்க்கஸ்
அரங்கேற்றத்துக்காகக்
காத்திருந்த நேரத்தில்
‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’
மூடப்பட்டது.
ஜெமினியில் தொடங்கிய
பயணம்
சர்க்கஸ் கம்பெனி
மூடப்பட்டாலும் தனது சிஷ்யப்
பிள்ளைகளுக்குத் தொடர்ந்து
சர்க்கஸ்
பயிற்சியளித்துவந்தார்
நாமஸ்ரீ. இந்த நேரத்தில்
ராயபுரத்தில் ராஜாஜி
கலந்துகொண்ட
பிரம்மாண்டமான காங்கிரஸ்
பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் கூட்டம் தொடங்கும்முன்
தனது மாணவர்களைச்
சாகசங்கள் செய்துகாட்டச்
செய்தார் வாத்தியார். இந்த
சாகச நிகழ்ச்சியைக் கண்ட
மக்கள் பலத்த ஆராவாரம்
செய்து
உற்சாகப்படுத்தினார்கள்.
ராஜாஜி பேசும்போது சாகச
நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப்
பாராட்டிப் பேசினார். இந்தக்
கூட்டத்துக்கு ராஜாஜியுடன்
வந்திருந்தார் காங்கிரஸ்
ஊழியரான தட்சிணாமூர்த்தி.
ஜெமினி ஸ்டுடியோவில்
பணியாற்றிவந்த இவர்,
சரோஜாவின் அழகையும்
சாகசத் திறமையையும்
கண்டு
ஆச்சரியப்பட்டுப்போனார்.
பின்னர் மாதம் 45 ரூபாய்
சம்பளத்துக்கு சரோஜாவை
ஜெமினி ஸ்டூடியோவில்
சேர்த்துவிட்டார். கோரஸ்
பாடுவது, நடனமாடுவது,
துணைநடிப்பு என எல்லாம்
செய்யத் தெரிந்தவர் என்று
ஜெமினி ஸ்டுடியோ
வட்டாரத்தில் பிரபலமானர்
சரோஜா. 1941-ல் வெளியான
‘மதன காமராஜன்'
திரைப்படத்தில் குழுநடனம்
ஆடியதன் மூலம் திரையில்
முதல்முறையாகத்
தோன்றினார். ஆனால்
துணைநடிகை
வேடத்துக்குக்கூட
ஜெமினியில் கடும் போட்டி
நிலவியதால்
ஜெமினியிலிருந்து
வெளியேறினார்.
பிறகு ‘ஜுபிடர்
நிறுவனத்தில் சேர்ந்த
அவருக்கு எதிர்பார்த்த
வாய்ப்பு அமைந்தது. ஜுபிடர்
தயாரிப்பில் மிகப் பெரிய
வெற்றிப் படமாக அமைந்த
‘குபேர குசேலா’வில் (1943)
டி.ஏ.ஜெயலட்சுமியுடன்
இணைந்து ஆடினார் பி.எஸ்.
சரோஜா. இந்தப் பாடல் காட்சி
பட்டிதொட்டியெங்கும்
பிரபலமானது.
காதலும் கதாநாயகி வாய்ப்பும்
ஜுபிடர் நிறுவனம் அடுத்துத்
தயாரித்த ‘மகா மாயா’
படத்தில் நடனமாடினார். இந்தப்
படத்தின் நடன இயக்குநர்
பண்டிட் போலோ நாத்
சரோஜாவின் நடனத்
திறமையைக் கண்டு அவரை
மனம்விட்டுப் பாராட்ட, அவரிடம்
மனதைப் பறிகொடுத்தார்
பி.எஸ்.சரோஜா. வட
இந்தியரான போலோ நாத்
பரதக் கலையுடன் மணிபூரி,
கதக் போன்ற நடனங்களிலும்
விற்பன்னராக இருந்தார்.
அவற்றைத் தன் காதலியான
சரோஜாவுக்குச் சொல்லிக்
கொடுத்தார்.
தென்னிந்தியப் படங்களில்
அந்நாளின் பிரபலமான நடன
இயக்குநராகப்
பணியாற்றிவந்த அவர், மார்டன்
தியேட்டர்ஸ் நிறுவனம்
தயாரிப்பில் 'பர்மா ராணி',
'ராஜராஜேஸ்வரி' ஆகிய
படங்களில் தனி நடனம் ஆடும்
வாய்ப்புகளை
சரோஜாவுக்கு
பெற்றுத்தந்தார். இவர்களது
காதல், திருமணத்தில்
முடிந்தது. கலாராணி என்ற
முதல் மகள் பிறந்தாள்.
இளம் வயதில் தயாகி,
இல்லறத்தில் ஈடுபாடு காட்டிய
சரோஜாவுக்கு ‘தமிழ்
சினிமாவின் தந்தை’
கே. சுப்பிரமணியம் வழியாக
முதல் கதாநாயகி வாய்ப்பு
அமைந்தது.
பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.
ராஜகுமாரியும் இணைந்து
நடித்த அவரது 'விகடயோகி'
திரைப்படத்தில் இரண்டாவது
கதாநாயகியாக நடிக்கும்
வாய்ப்பு அமைந்தது. அதன்
பிறகு பி.எஸ்.ராமையாவின்
‘தன அமராவதி' திரைப்படத்தில்
கதாநாயகன்
எஸ்.எம்.குமரேசனுக்கு
ஜோடியாகத் தனிக்
கதாநாயகியாக நடித்தார்.
‘தன அமராவதி’க்குப் பிறகு
பிரபலமான கதாநாயகியாக
உயர்ந்தார் சரோஜா. அன்றைய
சூப்பர் ஸ்டார் டி.ஆர்.
மகாலிங்கத்துடன் 'பாரிஜாதம்'
படத்தில் நடித்தவர்,
பின்னாட்களில் சூப்பர்
ஸ்டார்களாக உயர்ந்த எம்.ஜி.ஆர்,
சிவாஜி, மலையாளப் பட
உலகின் முதல் சூப்பர் ஸ்டார்
திக்குரிசி சுகுமாரன் நாயர்
ஆகியோருடன் நடித்துப்
புகழ்பெரும் அளவுக்கு
உயர்ந்தார்.

தமிழ் சினிமாவின் தந்தை
என்றும் ‘தேசாபிமான
இயக்குநர்’என்றும்
கொண்டாடப்பட்ட
கே.சுப்ரமணியம் பல
புகழ்பெற்ற நட்சத்திரங்களை
உருவாக்கியவர். அவரது
ஆஸ்தான கதாநாயகியருள்
ஒருவராக வளர்ந்தவர் பி.எஸ்.
சரோஜா. 1941-ல் வெளியான
‘மதன காமராஜன்’படத்தின்
மூலம் நடன மங்கையாகத்
திரையில் தோன்றிய
சரோஜா, தொடர்ந்து
பத்துக்கும் அதிகமான
படங்களில் நடனமாடி
ரசிகர்களைக் கவர்ந்தார்.
ஜுபிடர் நிறுவனம் தயாரித்த
‘மகா மாயா’ படத்தில்
நடனமாடும்போது அந்தப்
படத்தின் நடன இயக்குநர்
பண்டிட் போலோ நாத்துடன்
ஏற்பட்ட நட்பு நாளடைவில்
காதலாய் கனிந்து
திருமணத்தில் முடிந்தது.
சரோஜா இல்லத் தலைவியாய்
மாறியிருந்த
நிலையில்தான் இயக்குநர்
கே.சுப்ரமணியம் முதல்
கதாநாயகி வாய்ப்பினைத்
தனது ‘விகட யோகி’படத்தில்
சரோஜாவுக்கு வழங்கினார்.
சரோஜாவின் திறமை, வசீகரம்
ஆகியவற்றை நன்குணர்ந்த
சுப்ரமணியம், தனது
‘விசித்திர வனிதா' படத்தில்
முக்கியக் கதாபாத்திரம்
அளித்தார். அடுத்து 1949-ல்
வெளியாகிப் பெரும்புகழ்
பெற்ற ‘கீத காந்தி' படத்தில்
பி.எஸ்.சரோஜாவை மீண்டும்
கதாநாயகியாக்கினார்.
படத்தின் நாயகன் டி.ஆர்.
ராமச்சந்திரன். இந்தப் படத்தில்
சரோஜா தனது கணவர்
போலேநாத் ஷர்மாவுடன்
இணைந்து ஆடிய நடனம்
புகழ்பெற்றது. மனமொத்த
தம்பதிகளாக வலம் வந்த
இவர்களது வாழ்வில் விதி
விளையாடியது.
படப்பிடிப்புக்காக சேலம்
நகருக்குக் கணவருடன் காரில்
பயணித்துக்கொண்டிருந்தபோ
சேலம் அருகில் நிகழ்ந்த
சாலை விபத்தில்
சரோஜாவின் கணவர் சம்பவ
இடத்திலேயே மரணமடைந்தார்.
காயங்களுடன்
உயிர்பிழைத்தார் சரோஜா.
இந்த நேரத்தில் அவர்
சிகிச்சைபெற்று வந்த
மருத்துவமனைக்குச் சென்று
அவரை அடிக்கடி நலம்
விசாரித்து வந்தார்கள் டி.ஆர்.
ராஜகுமாரியும் அவரது
சகோதரர் டி.ஆர்.
ராமண்ணாவும். கே.
சுப்ரமணியத்தின் படங்களில்
ஒலிப்பதிவாளராகப்
பணியாற்றி வந்த டி.ஆர்.
ராமண்ணா, சரோஜா
போலோநாத் தம்பதியுடன்
தொடக்கம் முதலே நட்பு
பாராட்டிவந்தவர்.
துணிவும் மனமாற்றமும்
பி.எஸ். சரோஜா சிறு
வயதுமுதலே துடுக்கும்
துணிச்சலும் நிறைந்த
பெண்ணாக வளர்ந்தார்.
எதற்கும் யாருக்கும் அஞ்சாத
குணம் அவரிடம் இருந்தது.
ஆனால் கணவரை திடீரென்று
இழந்து நின்றபோது இனி
திரைப்படங்களில்
நடிப்பதில்லை என்று
முடிவெடுத்தார்.
சரோஜாவின் முடிவை
அறிந்த ராமண்ணா,
“திரையுலகில்
நட்சத்திரமாகப் புகழ்பெறும்
பாக்கியத்தைக் கடவுள்
எல்லோருக்கும்
தருவதில்லை” என்று
எடுத்துக் கூறி சரோஜாவின்
மனமாற்றத்துக்குக்
காரணமாக அமைந்தார்.
விபத்திலிருந்து மீண்டு
வந்து நடிப்பதை
நிறுத்தியிருந்த சரோஜா,
ராமண்ணாவின்
அறிவுரையை ஏற்று
மலையாளத் திரையுலகின்
முதல் வெள்ளிவிழாக்
காவியமாக அமைந்த ‘ஜீவித
நவுகா’ திரைப்படத்தில்
நடித்தார். மலையாளப்
படவுலகின் முதல் சூப்பர்
ஸ்டார் திக்குறிச்சி
சுகுமாரன் நாயருடன் இந்தப்
படத்தில் நடித்தார். தமிழ்ப்
பாடல்கள் இடம்பெற்ற இந்த
மலையாளப் படம், தமிழில்
‘பிச்சைக்காரி’ என்ற பெயரில்
வெளியானது. நிஜ வாழ்வில்
ஏற்பட்ட இழப்பின் வலி நீங்காத
காலகட்டத்தில் இந்தப் படத்தில்
சிறப்பான சோக நடிப்பைத்
தந்து, தமிழ், மலையாள
ரசிகர்களின் அபிமானத்தைப்
பெற்றுக்கொண்டார். பிறகு
தன் மீது பரிவுகாட்டிய
திரையுலக நண்பர் டி.ஆர்.
ராமண்ணாவை மறுமணம்
செய்துகொண்டார் சரோஜா.
பேரறிஞர் அண்ணாவின் கதை,
வசனத்தில் கே.ஆர். ராமசாமி
உள்ளிட்ட பல பிரபல
நட்சத்திரங்கள் நடிப்பில்
ஏ.வி.எம். தயாரித்த ‘ஓர் இரவு'
படத்தில் முக்கியக்
கதாபாத்திரம் ஏற்றுநடித்தார்
சரோஜா. இந்த நேரத்தில்
‘லட்சுமி காந்தன்’ கொலை
வழக்கில் சிக்கிச் சிறையில்
வாடிய ஏழிசை வேந்தர்
எம்.கே.டி. அந்த
வழக்கிலிருந்து
விடுதலையாகி வெளியே
வந்ததும் படங்களைத்
தயாரித்து நடித்துவந்தார்.
ஆனால் சிறை மீண்ட பிறகு
அவர் நடித்த படங்கள்
ரசிகர்களின் ஆதரவைப்
பெறவில்லை. அது மட்டுமல்ல,
பாகவதருடன் நடிக்க
அந்நாளின் கதாநாயகிகள்
பலரும் அஞ்சினர். ஆனால்
பி.எஸ். சரோஜா அஞ்சவில்லை.
எம்.கே.டி. நடிப்பில் 1952-ல்
வெளியான ‘அமரகவி' என்ற
படத்தில் அவருடன் துணிந்து
நடித்தார் பி.எஸ்.சரோஜா.
அந்தப் படத்தில் பாகவதர் பாடிய
“யானைத் தந்தம்போலே
பிறைநிலா வானிலே
ஜோதியாய் வீசுதே” என்ற
புகழ்பெற்ற பாடல்காட்சியில்
அவருடன் தோன்றினார்.
இரு திலகங்களுடன் இணைந்து
டி.ஆர். மகாலிங்கம்,
திக்குறிச்சி, எம்.கே.டி என
அந்நாளின் சூப்பர்
ஸ்டார்களுடன் ஜோடியாக
மிளிர்ந்த சரோஜா
அவர்களுக்குப் பிறகு தமிழ்
சினிமாவை
ஆக்கிரமித்துக்கொண்ட
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்கிற
இரு பெரும் நடிகர்களோடும்
நடித்தார்.எஸ்.எஸ்.ஆர்.
ஏ.பி.நாகராஜன், பிரேம்நசீர்
எனத் திலங்களுக்கு
இணையான புகழ்பெற்ற
நடிகர்களுடன் நடிக்கவும்
தவறவில்லை. எம்.ஜி.ஆருடன்
‘ஜெனோவா’ படத்தில்
முதலில் ஜோடி சேர்ந்த
சரோஜா அடுத்து
‘கூண்டுக்கிளி’ படத்தில்
எம்.ஜி.ஆரின்
மனைவியாகவும்,
சிவாஜியின் காதலியாகவும்
நடித்தார். இருபெரும்
திலகங்கள் இணைந்து நடித்த
ஒரே படத்தின் நாயகி என்ற
பெருமை சரோஜாவுக்குக்
கிடைத்தது.
அந்தப் படத்தை இயக்கியவர்
சரோஜாவின் கணவரான
டி.ஆர். ராமண்ணா. கலைஞரின்
கதை, வசனத்தில் கணவரின்
இயக்கத்தில்,1957-ல் எம்.ஜி.ஆர்
நடித்த படம் ‘புதுமைப்பித்தன்’.
மூன்றாவது முறையாக
எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த
சரோஜா, இந்தப் படத்துக்காக
தனது கணவரின்
அறிவுரையை ஏற்று வாள்
சண்டை பயிற்சிபெற்று
எம்.ஜி.ஆருடன் மோதும்
காட்சியில் நன்றாக நடித்து
அசத்தினார்.
தயாரிப்பு நிர்வாகி
கணவருடன் இணைந்து
மூன்று தயாரிப்பு
நிறுவனங்களைத்
துணிவுடன் தொடங்கிய
சரோஜா, அவற்றின் மூலம்
‘வாழப் பிறந்தவள்’, பெரிய
இடத்துக்குப் பெண்’,
‘குலேபகாவலி’, ‘பாசம்’,
`காத்தவராயன்’, `
கூண்டுக்கிளி’, ‘தங்கச்
சுரங்கம்’ ‘புதுமைப் பெண்’
‘அருணகிரிநாதர்’ என பல
வெற்றிப் படங்களைத்
தயாரித்தார்.
‘அருணகிரிநாதர்’ படத்தில்
அருணகிரியாராக
வேடமேற்ற
டி.எம்.சௌந்தரராஜனின்
தங்கையாக நடித்து
அசத்தினார்.
தாம் தயாரிக்கும் படங்களின்
பண நிர்வாகத்தையும்
பொறுப்புடன்
கவனித்துக்கொண்ட இவர்,
தனது தயாரிப்பில் நடித்த
எம்.ஜி.ஆர்., சிவாஜி,
ஜெயலலிதா, சரோஜாதேவி,
ரவிச்சந்திரன் ஆகிய
முன்னணி நட்சத்திரங்களுக்கு
வீடு தேடிச் சென்று
அவர்களது ஊதியத்தை
வழங்கிவருவதை வழக்கமாக
வைத்திருந்தார்.
பி.எஸ்.வீரப்பா, நம்பியார்,
டி.எஸ். பாலையா,
எம்.ஆர்.ராதா என்று
அந்நாளின் புகழ்பெற்ற
வில்லன் நடிகர்களுடன்
நடித்திருக்கிறார் சரோஜா.
நாடகவேந்தன்
ஆர்.எஸ்.மனோகருக்கு
ஜோடியாக நடித்த
‘வண்ணக்கிளி’ மிகப் பெரிய
வெற்றிப் படமாக அமைந்தது.
முரடனான கணவனிடம்
பெல்டால் அடிவாங்கி
வன்கொடுமைக்கு ஆளாகும்
கிராமத்துப் பெண்ணாக
நடித்து பெரும்புகழ்
பெற்றார். அந்தப் படத்தில்
இடம்பெற்ற ‘அடிக்கிற கை
தான் அணைக்கும்', ‘சின்ன
பாப்பா எங்கள் செல்ல பாப்பா’
ஆகிய இரண்டு பாடல்
காட்சிகளில் அவரது நடிப்பை
அனைத்துப் பத்திரிகைகளும்
பாராட்டித் தள்ளின.
டி.ஆர். ராமண்ணாவுடன்
மனமொத்த வாழ்வை வாழ்ந்த
பி.எஸ். சரோஜாவுக்கு
கலாராணி, சாந்தி ஆகிய
இரண்டு மகள்களும் கணேஷ்
என்ற மகனும் உள்ளனர். திரை
நடிப்பு தவிர இவர்
நேசித்துவந்த மற்றொன்று
தோட்டக் கலை. தாம்பரம்
அருகே 18 ஏக்கர் நிலத்தை
வாங்கிய சரோஜா அதில்,
பழங்கள், காய்கறிகள், பூக்கள்
ஆகியவற்றைப் பயிர்செய்வதில்
அதிக ஆர்வம் செலுத்தினார்.
தோட்டகலைக்காகப் பல
பரிசுகளையும் பெற்றார்.
நான்கு தென்னிந்திய
மொழிகளிலும் பல
வண்ணங்களில்
கதாபாத்திரங்களை ஏற்று
முத்திரை பதித்த இவர், காலம்
மறந்துவிட்ட வெற்றிக்
கதாநாயகி.

***********************************
சினிமா நடிகையர் வாழ்வில்
எத்தனையோ அதிசயங்களை
பார்த்திருக்கிறோம். திரையங்கில்
'சோடா' விற்ற பையன்தான்,
பிற்காலத்தில் 'கலைவாணர்' என்று
புகழ் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!
ஊமைப் படக்காட்சிகளுக்கு விளக்கம்
சொல்லும் பையனாக இருந்த
நரசிம்ம பாரதி தான், பிறகு புகழ்
பெற்ற கதாநாயகன் ஆனார்.
பாட்டாளியாயிருந்த
பட்டுக்கோட்டையார் தான்
பிற்காலத்தில் கருத்து செறிவு
மிக்க பாடல்கள் எழுதி
படைப்பாளியானார்.
பின்னாளில் பெரிய நடிகையான
ஒரு பெண் தான் வாழ்க்கையின்
தொடக்க காலத்தில் ஒரு சர்க்கசில்
'பார்' விளையாடும் பெண்ணாக
இருந்தார். அந்த நடிகை தான்
பி.எஸ்.சரோஜா.
''சர்க்கஸ் பெண்மணி" எப்படி பிரபல
நடிகை ஆக முடிந்தது?
கேரளத்துக் கிளி பி.எஸ்.சரோஜா
பிறப்பில் கேரளத்தைச் சேர்ந்தவர்.
1929ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ந்தேதி
திருவனந்தபுரத்தில் ஒரு வேளாளர்
குடும்பத்தில் பிறந்தவர்.
சரோஜாவுக்கு ஒரு தங்கையும்,
இரண்டு தம்பிகளும் உண்டு.
தந்தைக்கு ஓட்டல் தொழில்.
சரோஜாவின் தாய் வழி பாட்டியின்
ஊர் சேலம் ஆகும்.
ஓட்டல் வியாபாரம்
சூடுபிடிக்காததால் சரோஜாவின்
குடும்பம் சேலத்துக்கு
குடிபெயர்ந்தது. அப்போது
சரோஜாவுக்கு வயது மூன்று.
இந்த வயதில் குழந்தை சரோஜாவை
பெற்றோர் சேலம் கான்வென்ட்
பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
குடும்பம் மறுபடியும் இடம்
பெயர்ந்து ஒரு வழியாக
சென்னையில் நிலைத்தது. பின்னர்
சரோஜாவுக்கு நான்கு வயது
ஆகும் போது, சென்னை
ராயபுரத்திலுள்ள செயின்ட்
ஆண்டனீஸ் கான்வென்ட் போர்டிங்
பள்ளியில் சேர்த்து விட்டனர். தனது
ஒன்பதாவது வயதில் மூன்றாம்
வகுப்பை எட்டினார்.
சர்க்கஸ்
இந்த நேரத்தில், ராயபுரத்தில்
'தமிழ்நாடு சர்க்கஸ்' என்ற பெயரில்
புதியதொரு சர்க்கஸ் கம்பெனி
முகாமிட்டிருந்தது. மாலை
நேரங்களில் வண்ண வண்ண
விளக்கொளியில் சர்க்கஸ்
சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பகல்
நேரத்தில் சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள்
வித்தைகளில் பயிற்சி பெற்று
வந்தனர்.
இந்த சர்க்கஸ் கூடாரம் சரோஜா
பள்ளிக்கூடம் செல்லும்
வழியில்தான் இருந்தது. சர்க்கஸ்
கூடாரத்தை கடந்து செல்லும்
போதெல்லாம் உள்ளே இருந்து
வரும் ஓசைகளும்,
இசைக்கருவிகளின் முழக்கங்களும்
சரோஜாவின் ஆர்வத்தை
அதிகமாக்கியது. உள்ளே அப்படி
என்னதான் நடக்கிறது என்று அறிய
ஆவல் எழுந்தது.
யாருமறியாமல் கூடாரத்தின்
திரையை ஒதுக்கி உள்ளே
பார்க்கும் போது ஆண், பெண்கள்
மும்முரமாக சர்க்கஸ் பயிற்சி
செய்து கொண்டிருப்பதை
பார்த்தார். சகலகலா வல்லவர் ஒருவர்,
இவர்களை
ஆட்டுவித்துக்கொண்டிருப்பதையும்
பார்த்தார்.
இப்படி மறைமுகமாக பார்க்கும்
வேடிக்கை, வாடிக்கையானது.
இப்படி சர்க்கஸ்காரர்களுக்கு பயிற்சி
அளிக்கும் சர்க்கஸ் வாத்தியார் பெயர்
டி.எம்.நமஸ்ரீ என்பதையும் சரோஜா
தெரிந்து கொண்டார்.
துரோணரிடம் ஏகலைவன் கற்றது
போல நமஸ்ரீ சொல்லிக்கொடுக்கும்
வித்தைகளை யாருமறியாமல்
வீட்டில் பழகிப் பார்த்தார் சரோஜா.
ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்த சர்க்கஸ்
வேலை பழகப்பழக சுலபமாக
தெரிந்தது. இப்படி தன்
முயற்சியால் குரு இல்லாமல்
வித்தையை கொஞ்ச காலம் கற்று
வந்தார்.
பின்னர் தன்னை
தைரியப்படுத்திக்கொண்டு
வாத்தியார் நமஸ்ரீயிடம் சென்று,
சர்க்கஸில் சேர வேண்டும் என்று
தனது ஆசையை தெரிவித்தார்.
அவருடைய ஆர்வத்தை
கண்டுகொண்ட நமஸ்ரீ,
சரோஜாவுக்கு ஊக்கமளித்து
பயிற்சி அளித்தால், சர்க்கஸில் நல்ல
புகழ் பெற முடியும் என்று கருதி
அவருக்கு தேகாப்பியாசப்
பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டார்.
எதிர்ப்பு
ஆனால் சரோஜா சர்க்கஸில்
சேருவதற்கு அவரது அம்மா
எதிர்ப்புத் தெரிவித்தார். எந்த
தாய்க்குத்தான் தன் மகள் அந்தரத்தில்
'பார் விளையாடுவதும்', 'அந்தர்
பல்டி' அடித்து கை காலை
உடைத்துக் கொள்வதும் பிடிக்கும்?
ஆனால், அழுது அடம்பிடித்து
அம்மா வின் ஒப்புதலை சரோஜா
பெற்றார். சர்க்கஸ் ஆட்டத்தை
தொழிலாகக் கொள்ளக்கூடாது
என்றும், படிப்புக்கு குந்தகம்
விளைய கூடாதென்றும், இது அப்ப
£வுக்குத் தெரியக்கூட£தென்றும்
தாயார் பொண்ணுக்கு அறிவுரை
கூறி அரை மனதோடு மகளை
சர்க்கஸ் பயிற்சியில் சேரவிட்டார்.
இப்போது சரோஜா நமஸ்ரீயிடம்
முறையாக சர்க்கஸ் பயிற்சி பெற
ஆரம்பித்தார்.
இரண்டு வருடங்கள் இவ்விதம் ஓடின.
இப்போது சரோஜா அனைவரும்
வியக்கும் வண்ணம் சர்க்கஸில் நல்ல
பயிற்சி பெற்றார். ஆனால் அதை
தொடர முடியாமல் இடர்பாடு
ஏற்பட்டது. கம்பெனி
நிர்வாகிகளுக்கு இடையே
மனஸ்தாபம் ஏற்பட்டு சர்க்கஸ்
கம்பெனிக்கு மூடுவிழா
நடந்துவிட்டது.
ஜெமினி ஸ்டூடியோ
தன் மாணவர்களுக்கு
கற்றுக்கொடுத்த சர்க்கஸ் வித்தைகள்,
எப்படியும் வெளிவர வேண்டும்
என்ற அடங்காத ஆசை
கொண்டிருந்தார் நமஸ்ரீ. அதற்குரிய
வாய்ப்புக்காக காத்துக்கிடந்தார்.
சென்னை ராயபுரத்தில் ராஜாஜி
தலைமையில் ஒரு காங்கிரஸ்
கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்
நடப்பதுண்டு.
அவ்வகையில் இந்த கூட்டத்தினர்
முன் நமஸ்ரீயும், அவரது
மாணவமாணவிகளும் (சரோஜா
உள்பட) சர்க்கஸ் வேலைகள் செய்து
காட்டி தங்கள் திறமைகளை
வெளிப்படுத்தினர். இக்காட்சி களை
மக்கள் பெரிதும் பாராட்டினர்.
ராஜாஜியும் பாராட்டினார்.
ராஜாஜியுடன் இந்தக் கூட்டத்தில்
தட்சணாமூர்த்தி என்ற காங்கிரஸ்
ஊழியர் கலந்து கொண்டார். அவர்
ஆனந்த விகடன் பத்திரிகையில்
பணிபுரிந்து வந்தார்.
சரோஜாவின் திறமையை பார்த்து
பிரமித்துப்போன தட்சணாமூர்த்தி,
அவரைப் பற்றிய தகவல்களைத்
திரட்டிக் கொண்டார். எழிலான,
துடிப்பான இந்தப் பெண்
சினிமாவில் நடித்தால் சீக்கிரம்
முன்னுக்கு வந்து விடுவாள்
என்று திடமாக நம்பினார்.
1. பி.எஸ். சரோஜா தன் முதல்
கணவர் பண்டிட்
போலோநாத்துடன்...
2. டைரக்டர் ராமண்ணா (நடிகை
பி.எஸ். சரோஜாவின்
இரண்டாவது கணவர்)
தான் பணிபுரிந்து வந்த 'ஆனந்த
விகடன்' பத்திரிக்கையின் அதிபர்
எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி
ஸ்டூடியோவில், எண்பத்தி ஐந்து
ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு
துணை நடிகையாக சரோஜாவை
சேர்த்து விட்டார், தட்சணாமூர்த்தி.
1941ம் ஆண்டு அமிர்தம் டாக்கீஸின்
'மதன காமராஜன்' திரைப்படம்
வளர்ந்து வந்தது. புதியதாக சேர்ந்த
சரோஜாவின் வனப்பும் திறனும்
அவர் சினிமாவில் வெகுசீக்கிரம்
முக்கிய இடத்துக்கு
முன்னேறுவார் என்று
ஸ்டூடியோவில் பலரும் கணித்தனர்.
'மதனகாமராஜன்' காதலி
பிரேமாவின், அந்தரங்கத்தோழி
பாத்திரத்தை சரோஜாவுக்கு
கொடுப்பதென முடிவாயிற்று.
ஆனால் ஏனோ அது
நிறைவேறவில்லை.
எனினும் மதனகாமராஜனில், பத்து
பேரோடு சேர்ந்து நடனமாடினார்.
துணை நடிகையாக ஆடுவது
சரோஜாவுக்கு பிடிக்கவில்லை.
எனவே ஜெமினி ஸ்டூடியோவை
விட்டு விலகி ஜூபிடர் பிச்சர்ஸ் படக்
கம்பெனி யில் சேர்ந்தார்.
ஜூபிடர் தயாரித்த மகத்தான
வெற்றிப்படமான 'கண்ணகி'யில்,
‘குறவஞ்சி' நாட்டியம் இடம்
பெறுவதாக இருந்தது. நடிகைகள்
யோகம், மங்களம், டி.ஏ.ஜெயலட்சுமி,
ரஜினி, குமாரி ஆகியோருடன்
சரோஜாயும் ஆடும் நடனம்
படமாக்கப்பட்டது. ஆனால், இந்த
நடனக்காட்சி 'கண்ணகி'யில் இடம்
பெறவில்லை.
எனினும் 1943ல் ஜூபிடர் தயாரித்த
'குபேர குசேலா'வில்,
டி.ஏ.ஜெயலட்சுமியும்,
சரோஜாவும் இணைந்து ஆடினர்.
ஜெமினியில் ஒரு சிறிய வாய்ப்பு
கிடைத்தது. 'மங்கம்மா' சபதத்தில்
சிற்றின்பப் பிரியனான இளவரசன்
(ரஞ்சன்), பெண்களின் நெற்றியுடன்
தன் நெற்றியை மோதி 'ட்டீ'
கொடுப்பார். ரஞ்சனுடன்
இக்காட்சியில் இடம் பெற்றவர்
சரோஜா தான்!
காதல் திருமணம்
ஜூபிடர் தயாரிப்பில் 1944ல்
வெளிவந்த 'மகா மாயா' படத்தில்
எஸ்.வரலட்சுமியுடன் இணைந்து
நடனம் ஆடும் வாய்ப்பு
சரோஜாவுக்கு கிடைத்தது.
அத்துடன், அவர் வாழ்க்கையில்
முக்கிய திருப்பம் ஏற்பட இப்படம் தான்
காரணம். தன் வருங்கால கணவரான
போலோ நாத்தை அப்போதுதான்
சந்தித்தார்.
1. ‘‘அடிக்கிற கைதான்
அணைக்கும்’’ பாடல் காட்சியில்
ஆர்.எஸ். மனோகர்பி.எஸ்.சரோஜா.
2. டைரக்டர் கே.
சுப்பரமணியத்தின் ‘விகட
யோகி’ படத்தில்,
பி.யு. சின்னப்பாவுடன் பி.எஸ்.
சரோஜா.
ஜூபிடரில் டான்ஸ் மாஸ்டராகப்
பணியாற்றி வந்த பண்டிட் போலோ
நாந், டெல்லி அருகில் உள்ள
ஆக்ராவைச் சேர்ந்தவர். கதக்,
மணிபுரி போன்ற வட
இந்திய நடனங்களில் மிகுந்த தேர்ச்சி
பெற்றவர். அந்த நடனங்களை எல்லாம்
சரோஜாவுக்கு கற்றுக்
கொடுத்தார். மார்டன் தியேட்டர்ஸ்
தயாரித்த 'பர்மா ராணி',
'ராஜராஜேஸ்வரி' ஆகிய படங்களில்
நடனம் ஆட சரோஜாவுக்கு வாய்ப்பு
வாங்கித்தந்தார்.
போலோ நாத்துக்கும்,
பி.எஸ்.சரோஜாவுக்கும் ஏற்பட்ட
நட்பு காதலாக மாறியது. 1943ல்
இருவரும் திருமணம் செய்து
கொண்டனர். இருவருக்கும் ஒரு
பெண் குழந்தை பிறந்தது. பெயர்
கலாராணி.
கதாநாயகி
இந்த சமயத்தில் டைரக்டர்
கே.சுப்பிரமணியம், தான் தயாரித்த
'விகடயோகி' திரைப்படத்தில்
முக்கிய வேடத்தில் நடிக்க
பி.எஸ்.சரோஜாவுக்கு
வாய்ப்பளித்தார்.
பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.
ராஜகுமாரியும் இணைந்து நடித்த
இந்தப் படத்தில் இரண்டாவது
கதாநாயகி வேடம் சரோஜாவுக்கு
கிடைத்தது. இவருக்கு ஜோடி
எஸ்.எம்.குமரேசன்.
இதன் பின், பி.எஸ்.ராமையவின் 'தன
அமராவதி'யில் கதாநாயகியாக
நடித்தார். கதாநாயகன்
எஸ்.எம்.குமரேசன். இந்தப்படத்தில்
தான் நகைச்சுவை நடிகர்
சந்திரபாபு அறிமுகம் ஆனார்.
கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்து
விட்ட பி.எஸ்.சரோஜா, அன்றைய
'சூப்பர் ஸ்டார்'
டி.ஆர்.மகாலிங்கத்துடன்
'பாரிஜாதம்' என்ற படத்தில்
இணைந்து நடித்தார்.
கே.சுப்பிரமணியத்தின் 'விசித்திர
வனிதா' என்ற படத்தில் முக்கிய
வேடத்தில் நடித்தார்.
கே.சுப்பிரமணியத்தின் புகழ்
பெற்ற படமான 'கீத காந்தி'யில்,
பி.எஸ்.சரோஜாவும், அவர் கணவர்
போலோ நாத்தும் சேர்ந்து
நடித்தது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் கணவர் மரணம்
இனிமையாக சென்று
கொண்டிருந்த சரோஜாவின் இல்லற
வாழ்வில் விதி விளையாடியது.
சரோஜா தன் கணவருடன் காரில்
சென்று கொண்டிருந்த போது,
சேலத்துக்கு அருகே கார் பயங்கர
விபத்தில் சிக்கி நொறுங்கியது.
போலோ நாத் அதே இடத்தில் மரணம்
அடந்தார். சரோஜா காயத்துடன்
தப்பினார். சிகிச்சைக்குப்பின்
சரோஜா குணம் அடைந்தாலும்,
கணவர் இறந்த சோகத்தில் இருந்து
விடுபட வெகு காலம் பிடித்தது.
இந்த சமயத்தில் சில
மலையாளப்படங்களில் நடிக்க
சரோஜாவுக்கு அழைப்பு வந்தது.
'ஜீவித நவுகா' (வாழ்க்கைப்படகு)
அல்லது 'பிச்சைக்காரி' என்ற
பெயரில் வந்த படத்தில் சரோஜாவின்
நடிப்பு சிறப்பாக அமைந்தது. படம்
பெரிய வெற்றி பெற்றது. அவர்
நடித்த 'அம்மா' மற்றொரு
வெற்றிப்படமாகும்.
பேரறிஞர் அண்ணாவின்
கதைவசனத்தில் ஏ.வி.எம். தயாரித்த
'ஓர் இரவு' படத்தில் முக்கிய
வேடத்தில் நடித்தார்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த
'அமரகவி' என்ற படத்தில்
பி.எஸ்.சரோஜா கதாநாயகியாக
நடித்தார்.
எம்.ஜி.ஆர். சிவாஜி
எம்.ஜி.ஆருடன் ஜெனோவா,
புதுமைப்பித்தன் ஆகிய படங்களில்
ஜோடியாக நடித்தார். எம்.ஜி.ஆரும்,
சிவாஜி கணேசனும் இணைந்து
நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'
படத்தில் கதாநாயகி பி.எஸ்.சரோஜா
தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இயக்குனர்
ராமண்ணா. கதை வசனத்தை
எழுதியவர் விந்தன்.
மற்றும் அருணகிரிநாதர்,
ஆசைமகன், அம்மா, பிரியசகி,
வண்ணக்கிளி ஆகியபடங்களில்
பி.எஸ்.சரோஜா நடித்தார்.
மறுமணம்
பி.எஸ்.சரோஜாவுக்கும், இயக்குனர்
ராமண்ணாவுக்கும் ஏற்கனவே
அறிமுகம் இருந்தது. சரோஜா உடல்
நலம் இன்றி ஆஸ்பத்திரியில் இருந்த
போது, அவர் அடிக்கடி
ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலம்
விசாரித்து வந்தார்.
இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
பிறகு மனங்களும் ஒன்றுபட்டன.
'திரை உலகில் துணை இன்றி ஒரு
பெண் தனித்து வாழ்வது கடினம்'
என்பதை உணர்ந்த சரோஜா,
ராமண்ணாவை மறுமணம் செய்து
கொண்டார்.
அவருக்கு ஏற்கனவே போலோநாத்
மூலம் பிறந்த குழந்தை கலாராணி,
சேவாசதன் பள்ளியில் சேர்ந்து
படித்தது.
பி.எஸ்.சரோஜாவின் பிற்காலப்
படங்களில், 'வண்ணக்கிளி'
ரசிகர்களை மிகவும் கவர்ந்த
படமாகும். அதில் இவரும்
ஆர்.எஸ்.மனோகரும் பாடுவது போல்
அமைந்த 'அடிக்கிற கை தான்
அணைக்கும்' என்ற பாடல்
பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்த
பாடலாகும்.
பி.எஸ்.சரோஜாவும்,
ராமண்ணாவும் சில
ஆண்டுகளுக்கு முன்
காலமானார்கள்.

நன்றி.:தினத்தந்தி . தி இந்து தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக