சனி, 26 நவம்பர், 2016

பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் நவம்பர் 30, 1945.

பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் நவம்பர் 30, 1945.

வாணி ஜெயராம் (பிறப்பு:
நவம்பர் 30, 1945 ) திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ் , தெலுங்கு,
மலையாளம் , கன்னடம் உட்பட பல இந்திய
மொழிகளில் பாடியுள்ளார்.
வாணி ஜெயராம் இந்திய
திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.
இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு
குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம்
அறிமுகமானார். அன்று முதல் நான்கு
தலைமுறைகளாக பின்னணி பாடி
வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை
பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும்
பக்திப்பாடல்களை பாடியுள்ளார்.
வெளிநாடுகள் சென்று பல இசை
நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
சொந்த
வாழ்க்கை மற்றும்
பின்னணி
வாணிஜெயராம் தமிழ்நாட்டில்
உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில்
பிறந்தவர். இவரின் தாயார் பெயர்
பத்மாவதி.
தொடக்கம்
தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக
1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற
திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய
மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம.
சு. விசுவநாதன் இசையில்
பாடினார்.அதன் பின்னர் ஏழு
சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே,
௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது
செல்லாமல் நெஞ்சள்ளி போவது,
கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான
பாடல்களை தமிழ்த்திரையுலகில்
பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை,
பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப்
பாடல்களும் பாடியுள்ளார்.இவர்
தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும்
தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா,
குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன
பல இந்திய மொழிகளில்
பாடல்களை பாடியுள்ளார்.
வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த
பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய
விருதுகளைப் பெற்றுள்ளார். இவர்
தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும்
குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த
பின்னணிப் பாடகிக்கான விருதுகளை
பெற்றுள்ளார்.
பெற்ற தேசிய
விருதுகள்
1975 – தேசிய விருது – சில பாடல்கள்
( அபூர்வ ராகங்கள் )
1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான
தேசிய விருது – சில பாடல்கள்
( சங்கராபரணம்)
1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான
தேசிய விருது – "அனத்திநீயர ஹர" ( சுவாதி
கிரணம் )

************************************

என்றும் இனியவை -
வாணி ஜெயராம்
வானவில்லின் வண்ணங்களை, ஏழு
ஸ்வரங்களின் வாயிலாக தன்
குரலில் கொண்டுவந்து, அவரது
பாடல்களை கேட்போரது
செவிகளில் தேன் வடியச் செய்த
பாடகி வாணி ஜெயராம்.
குயிலைப் போன்ற குரல் வளம்
கொண்டவர்களைப் பற்றி ஒரு
சொலவடை உண்டு. இறைவனுக்கு
போன ஜென்மத்தில்
தேனாபிஷேகம்
செய்திருப்பார்களோ என்று.
இவரது கம்பீரமான குரலைக்
கேட்கும்போது அது உண்மையாக
இருக்கும் என்றுதான்
தோன்றுகிறது. கம்பீரம் மட்டுமல்ல,
கனிவு, குழைவு, எத்தனையோ
உணர்ச்சிகளை உள்ளடக்கிய குரல்
இவருடைய செந்தூரக் குரல்.
பொதுவாக நடனத்தில், நடன
அசைவுகளில் நவரசத்தை
வெளிப்படுத்துவார்கள். இவரது
வெண்கலக் குரல் எண்ணிலடங்கா
ரசங்களை காட்டக் கூடியது.
இவரது குரல்தான் அதிசயக் குரல்
என்றால், தமிழில் அட்சர சுத்தமாகப்
பேசத் தெரிந்த ஒரு பாடகி,
தமிழகத்தில் வேலூரில் பிறந்த ஒரு
பாடகி, தமிழ் இசை உலகில் ஒரு
நல்ல இடத்தில், நிறைய பாட
வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதும்
ஒரு அதிசயம்தான். தமிழகத்தில்
பிறந்தாலும், இந்திய இசைத்
துறையையே ஒரு கலக்கு கலக்கி
இருக்கிறார் இந்த குரலழகி,
இசையழகி வாணி ஜெயராம். தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம்
என்ற தென்னிந்திய மொழிகள்
மட்டுமல்லாது, மொத்தம்
பதினான்கு மொழிகளில்
பாடியிருக்கிறார் இந்த
குரலோவியம். எந்த மொழியில்
பாடினாலும் அந்த மொழியின்
வார்த்தைகளை கொஞ்சம் கூட அதன்
அர்த்தம் மாறாமல் தெளிவாக
பாடுவதில் வாணி ஜெயராம்
வல்லவர்.
*******
உயர்ந்தவர்கள் திரைப்படத்தில் இடம்
பெற்ற இறைவன் இரண்டு
பொம்மைகள் செய்தான் தான்
விளையாட, அவை இரண்டும்
சேர்ந்தொரு பொம்மையைச்
செய்தன தாம் விளையாட என்ற
பாடலில் ஜேசுதாஸ் அவர்களின்
குரலுடன் இணைந்து வரும்
வாணிஜெயராம் குரலில்
இழையோடும் சோகம், அந்த
பாடலில் வரும், உங்களுக்காக
நானே சொல்வேன்,
உங்களுக்காக நானே கேட்பேன்,
தெய்வங்கள் கல்லாய்ப் போனால்
பூசாரி இல்லையா என்ற பாடல்
வரிகளின் முழுமையான
அர்த்தத்தை வெளிக்கொணரும்
வண்ணம் அமைந்த பாடல். பாடலின்
அர்த்தம் தெரிந்து பாடுபவர்களால்
தான் இத்தனை உணர்ச்சிகரமாகப்
பாட முடியும். தங்களது
குறைபாடு, தங்கள் குழந்தைக்கும்
வந்து விடக் கூடாது என்ற
சுஜாதா, கமல் நடிப்பு, தவிப்பு
இந்தப் பாடலில் அற்புதமாக வெளிப்
பட்டிருக்கும். இந்தப் பாடலைக்
கேட்பவர்கள், கண்ணில் கண்ணீர்
வடியாமல் இருக்க வாய்ப்பே
இல்லை.
*******
பாலைவனச் சோலை படத்தில்
வரும் மேகமே மேகமே என்று
தொடங்கும் பாடலில், சங்கர் கணேஷ்
அவர்களின் இசை விளையாட்டும்,
வாணி ஜெயராம் அவர்களின்
கூர்மையான குரலமைப்பும்,
வைரமுத்து அவர்களின் வார்த்தை
ஜாலங்களும், உதாரணமாக தினம்
கனவு, எனதுணவு, நிலம்
புதிது, விதை பழுது,
எனக்கொரு மலர் மாலை நீ வாங்க
வேண்டும், அது எதற்கோ? என்ற
கொக்கியில் முடியும் பாடல்
வரிகள், அனைத்தும் ஒன்றிணைந்த
இசைச் சித்திரம், இந்த பாடல். வட
இந்திய இசையின் சாயலைக்
கொண்ட பாடல் இது.
*******
அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்
பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனைப் பாடல் என்று
தொடங்கும் பாடல் இவரது குரல்
வளத்திற்கு தீனி போட்ட பாடல்.
இன்ப துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும் , என்றும்
எனக்காக நீ அழலாம், இயற்கையில்
நடக்கும், நீ எனக்காக உணவு
உண்ண எப்படி நடக்கும் என்ற
வாழ்வியலை நமக்குப்
பட்டவர்த்தனமாக உணர்த்தும் பாடல்
வரிகள். வாழ்வின் சந்து, பொந்து,
இண்டு, இடுக்கு என எல்லா
விஷயங்களையும் தன் பாடல்களில்
கொண்டு வந்த கருத்துப் பெட்டகம்
கண்ணதாசன் இயற்றிய பாடல்
அல்லவா இது. அதனால்தான்
இறைவன் தன் பக்கத்தில் சீக்கிரமே
அழைத்து வைத்துக் கொண்டார்
போல. இவற்றையெல்லாம் தாண்டி
M.S.V. அவர்களின் இசைமழை, ஸ்ரீ
வித்யா அவர்களின், தனது
கண்களிலேயே நவரசங்களையும்
கொட்டி நடிக்கும் திறம் பெற்ற
அவரது தேர்ந்த நடிப்பு என, இவை
அனைத்தும் சேர்ந்த கூட்டணி இந்தப்
பாடலை உலகம் உள்ளவரை
அழியாமல் வைத்திருக்கும்.
*******
வாணிஜெயராம் பாடல்களைக்
குறிப்பிடும்போது இந்தப்
பாடலைக் கட்டாயம் குறிப்பிட்டுச்
சொல்லித்தான் ஆக வேண்டும்.
முள்ளும் மலரும் படத்தில் வரும்,
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
என்ற பாட்டைக் கேட்பவர்கள், இந்த
பாடல் கேட்கும்போது செவிக்கு
உணவிட்டு விட்டு, உடனே
வயிற்றுக்கு உணவளித்துதான் ஆக
வேண்டும். பழையதுக்குத்
தோதா, புளிச்சிருக்கும்
மோரு, பொட்டுக் கடலை
தேங்காய் சேர்த்து அரச்ச
துவையலு, சாம்பாரு
வெங்காயம், சலிக்காது
தின்னாலும், அதுக்கு இணை
உலகத்துல இல்லவே இல்ல என
இப்படி பாடலைக் கேட்டு விட்டு
யாருக்காவது பசி எடுக்காமல்
இருக்குமா. (ஆஹா, பாடல்
ஆசிரியருக்குத்தான் எத்தனை
தீர்க்க தரிசனம், வெங்காயத்திற்கு
இணையா(விலையில்) எதுவும்
இல்லை என்று பல வருடங்கள்
முன்னரே சொல்லிவிட்டார்).
*******
"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்
போவது", "என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்", "கேள்வியின்
நாயகனே", என்று வாணி ஜெயராம்
அவர்களின் குரல் இனிமைக்கு,
சாட்சிகளாக எத்தனையோ
பாடல்களை உதாரணமாகக்
கூறலாம். அவரது பாடல்களைக்
கேட்டு அந்த சுகானுபவத்தைப்
பெறலாம்.
யாரது.. சொல்லாமல் நெஞ்சள்ளி
போறது.. (நெஞ்சமெல்லாம் நீயே)
என் கல்யாண வைபோகம்.. (அழகே
உன்னை ஆராதிக்கிறேன்)
கேள்வியின் நாயகனே.. (அபூர்வ
ராகங்கள்)
ஏ பி சி, நீ வாசி.. (ஒரு கைதியின்
டைரி)
அந்த மானைப் பாருங்கள் அழகு..
(அந்தமான் காதலி)
என்னுள்ளில் எங்கோ..
(ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..
(வைதேகி காத்திருந்தாள்)
கவிதை கேளுங்கள்.. (புன்னகை
மன்னன்)
நானே நானா.. (அழகே உன்னை
ஆராதிக்கிறேன்)
நாதமெனும் கோவிலிலே..
(மன்மத லீலை)
ஒரே நாள், உன்னை நான்..
(இளமை ஊஞ்சலாடுகிறது)
ஒரே ஜீவன், ஒன்றே உள்ளம்.. (நீயா)
*********************************

எஸ்.பி.
பாலசுப்ரமணியம் &
வாணி ஜெயராம்
ஜோடி பாடல்கள்
பாடல்: சொர்க்கத்திலே
முடிவானது
திரைப்படம்: லலிதா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளேல்லாம் வளமாது
இவர் வாழுவுதான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்
எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்
நாயகன் நாயகி பாவம் காண்பது
கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன் வேறெதை
சொல்வேன்
தடுக்கின்றதே மன சாட்சி
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள்
உண்டு
ஆனந்த ராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
இருவரின் கண்களை சந்திக்க
வைப்பது
இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற
நன்மையும் தீமையும்
மனிதர்கள் செய்கின்ற வேலை
தேர் கொண்டு வந்தேன் சிலை
மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும்
இல்லை
உறவுக்கு என்றும் வயதாவதில்லை
உரிமைக்கு என்றும்
பிரிவென்பதில்லை
உரிமைக்கு என்றும்
பிரிவென்பதில்லை
வானத்து சந்திரன்
அங்கிருந்தால்தான்
இத்தனை காவியம் உண்டு
வாழ்கின்ற வாழ்வினில்
அன்பிருந்தால்தான்
வெள்ளி விழாக்களும் உண்டு
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளேல்லாம் வளமாது
இவர் வாழுவுதான் வாழ்வென்பது
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: நாலு பக்கம் வேடர் உண்டு
திரைப்படம்: அண்ணன் ஒரு கோவில்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா
காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல்...கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா
ஆரண்ய காண்டம் இதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
ஆரண்ய காண்டம் இதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
சாகுந்தலம் படிக்க இறங்கு
தலையடியில் கைவைத்து உறங்கு
தலையடியில் கைவைத்து உறங்கு
அம்மம்மா என்னம்மா
நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா
பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிருதம் கலந்து கொடுத்து
பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிருதம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீருவரை குடித்து
சல்லாப நாடகத்தை நடத்து
சல்லாப நாடகத்தை நடத்து
அம்மம்மா என்னம்மா
நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா
காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல்...கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா
நாலு பக்கம் வேடர் உண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல்...இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: மாமன் வீட்டு மயிலுக்கு
திரைப்படம்: இதயத்தில் ஒரு
உதயம்
இசை: ஹம்சலேகா
மாமன் வீட்டு மயிலுக்கு நான்
டாட்டா சொல்லிப்புட்டேன்
காமன் வீட்டு கன்னுக்குட்டிய
லேசா கிள்ளிப்புட்டேன்
மாலை நேரம் வந்துவிட்டா
தேவதாஸ் நான்
காலை நேரம் வந்துவிட்டா
காளிதாசன் நான்
பள்ளியறையில் அள்ளி
அணைக்க
புள்ளிமயிலே வா யம்மா
மாமன் வந்த நேரத்துல மஞ்சம்
துடிக்கிறதே
காமன் வீட்டு கன்னுக்குட்டிக்கு
நெஞ்சு துடிக்கிறதே
சுந்தராங்கியே யம்மா யம்மா
பந்து ஆட வா
அந்த லீலைகள் தொடங்கட்டும்
சிந்து பாட வா
கட்டில் ஆடட்டும் ஒருமுறை கட்டி
ஆட வா
மெத்தை யுத்தத்தில் பலமுறை
வெற்றி காணவா
வித்தை வேளையில் உன்னுடன்
ஒத்து ஊதவா
பத்து மணிகிட்டே பலமுறை
முத்தம் வைக்கவா
உன் சரசம் என் சிரசில் ஏறி
விட்டதடி
காதல் ரசம் ஏறியதில்
காய்ந்ததிந்த கொடி
போதையில் கொஞ்சம் லீலையில்
கொஞ்சம்
ஆடட்டும் மஞ்சம் கட்டிப்புடி
மாமன் வந்த நேரத்துல மஞ்சம்
துடிக்கிறதே
காமன் வீட்டு கன்னுக்குட்டிக்கு
நெஞ்சு துடிக்கிறதே
மோகம் வந்தது சிவசிவ மூச்சு
வாங்குது
மாலை நேரத்தில் அடிக்கடி
சேலை நழுவுது
முத்த காய்ச்சலில் அடிக்கடி
மூச்சு கொதிக்குது
தங்க உடம்புதான் என்னை வந்து
தங்க அழைக்குது
மாலை வேளையில் இமை
ரெண்டும் தந்தி அடிக்குது
முல்லைப்பூவை கிள்ளவே
மனசு தவிக்குது
நீ அணைச்ச இடம் முழுக்க
நெருப்பு எரியுது
நீ இழுக்க நான் இழுக்க
நெருப்பு எரியுது
காலம் முழுக்க கட்டில் வேணும்
தொட்டில் மட்டும் கூடாது
மாமன் வீட்டு மயிலுக்கு நான்
டாட்டா சொல்லிப்புட்டேன்
காமன் வீட்டு கன்னுக்குட்டிய
லேசா கிள்ளிப்புட்டேன்
மாலை நேரம் வந்துவிட்டா
தேவதாஸ் நீ
காலை நேரம் வந்துவிட்டா
காளிதாசன் நீ
பள்ளியறையில் அள்ளி
அணைக்க
புள்ளிமயில் நான் வருவேனே
மாமன் வீட்டு மயிலுக்கு நான்
டாட்டா சொல்லிப்புட்டேன்
காமன் வீட்டு கன்னுக்குட்டிய
லேசா கிள்ளிப்புட்டேன்
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: பொன்னோவியம் ஒன்று
திரைப்படம்: குமரிப் பெண்ணின்
உள்ளத்திலே
இசை: ஷங்கர் கணேஷ்
பொன்னோவியம் ஒன்று ரதியின்
வடிவிலே
பூமியில் எழில் கொண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின்
வடிவிலே
பூமியில் எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவிய பாவை நீ
கண்ணிலாடிடும் காவிய பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகைச்
செண்டு
கையில் மயங்கும் மல்லிகைச்
செண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின்
வடிவிலே
பூமியில் எழில் கொண்டு
அணைக்கையில் மணக்கின்ற
அமுதெனும் உன் மேனி
அழகினை கண்களால் அளந்திடவா
இதழ்களில் இதழ் கொண்டு இனிய
கதை ஒன்று
இதழ்களில் இதழ் கொண்டு இனிய
கதை ஒன்று
எழுதிட சம்மதம்
தருவாயா ... தருவாயா
மணவறை மாலைகள் சூடிய
பின்னாலே
மலர்மகள் என்னை நீ தொட வரலாம்
உனக்கென்று சிவந்துள்ள பழுத்த
பலா என்னை
பறித்திட வேகமா
அவசரமா ... அவசரமா
தனிமையில் இருக்கையில் தாமதம்
செய்யாதே
என்னிடம் வெட்கம் ஏன்
இளங்குயிலே
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள்
எல்லோருக்கும்
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள்
எல்லோருக்கும்
சீதனம் வெட்கம்தான்
தெரியாதா ... தெரியாதா
பொன்னோவியம் ஒன்று ரதியின்
வடிவிலே
பூமியில் எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவிய பாவை
நான்
கையில் மயங்கும் மல்லிகைச்
செண்டு
உன் கையில் மயங்கும் மல்லிகைச்
செண்டு
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: சப்தஸ்வரம் புன்னகையில்
கண்டேன்
திரைப்படம்: நாடகமே உலகம்
இசை: வி.குமார்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ
விழி ஜாலத்தில் உருவானதோ
மேனியில் ஆனந்த லயங்கள்
மோஹன ராகத்தின் நயங்கள்
அங்கங்கள் எங்கெங்கும்
தாளத்தின் கோலங்களே
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ
விழி ஜாலத்தில் உருவானதோ
மூவகை தமிழ் பேசும் பூவிழி
இரண்டென்ன
மூவகை தமிழ் பேசும் பூவிழி
இரண்டென்ன
நால் வகை குணம் கொண்டு
ஆடுமோ
நாயகன் தொடும் போது நாணம்
விளையும்
நாயகன் தொடும் போது நாணம்
விளையும்
நாணலின் இனம் போலே தேகம்
வளையும்
நேரம் பொன்னான நேரம்
நெருங்க சொல்கின்றதோ
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
ஆடையைக் களைந்தாடும்
ஆசையில் வரும் தென்றல்
ஆடையைக் களைந்தாடும்
ஆசையில் வரும் தென்றல்
ஆடவன் துணை கண்டு அஞ்சுமோ
மாதுளம் கனி ஆகும்
மாலைப்பொழுது
மாதுளம் கனி ஆகும்
மாலைப்பொழுது
மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை
அழகு
யாவும் கண்ணா உன் சொந்தம்
எடுத்துக் கொண்டாடவா
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ
விழி ஜாலத்தில் உருவானதோ
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: குறிஞ்சி மலரில் வழிந்த
ரசத்தை
திரைப்படம்: அழகே உன்னை
ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ்
மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஒரு மாலை இடவும் சேலை
தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலைப்பொழுதில் லீலை
புரியும்
ஆசை பிறக்காதோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ்
மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
மேள தாளம் முழங்கும் முதல் நாள்
இரவு
மேனி மீது எழுதும் மணல் தான்
உறவு
தலையில் இருந்து பாதம்
வரையில்
தழுவிக் கொள்ளலாம்
அதுவரையில் நான்...
அதுவரையில் நான் அனலினில்
மெழுகோ
அலைகடலில் தான் அலையும்
படகோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ்
தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலை இடவும் சேலை
தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில் காளை
உனது
உள்ளம் பொறுக்காதோ
காற்று வந்து தொடத்தான்
கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே
பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல
எவரும் இல்லையே
பிறர் அறியாமல்...
பிறர் அறியாமல் பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது
வீணை மீது விரல்கள் விழுந்தால்
ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால்
யோகம்
உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்
ஸ்ருதி விலகாமல் இணையும்
நேரம்
சுவை குறையாமல் இருக்கும்
கீதம்
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ்
தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலை இடவும் சேலை
தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்த வேளை வரையில் காளை
உனது
உள்ளம் பொறுக்காதோ
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: ரொம்ப நாளாக
எனக்கொரு
திரைப்படம்: என்னடி மீனாட்சி
இசை: ஷங்கர் கணேஷ்
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில்
சொல்ல
ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில்
சொல்ல
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
நீரிலே ஆடையாய் நானும்
மாறவோ
நேரிழை மார்பிலே மேடை
போடவோ
நீரிலே ஆடையாய் நானும்
மாறவோ
நேரிழை மார்பிலே மேடை
போடவோ
சின்னப்பிள்ளை செய்யும்
தொல்லை
சின்னப்பிள்ளை செய்யும்
தொல்லை
இன்னும் என்னவோ...நீயும்
கண்ணனோ
ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம்
என்னவோ
மஞ்சம் அமைத்து மன்னன்
அணைத்து
மஞ்சம் அமைத்து மன்னன்
அணைத்து
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ
ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை
என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை
என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
அன்றில் பறவை கண்ட உறவை
அன்றில் பறவை கண்ட உறவை
பெண்மை கொண்டதோ கண்ணில்
நின்றதோ
ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில்
சொல்ல
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: நள்ளிரவில் பள்ளியறை
நாடகம்
திரைப்படம்: ஒரு கை பார்ப்போம்
இசை: விஜயபாஸ்கர்
நள்ளிரவில் பள்ளியறை நாடகம்
தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில்
காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல
சொல்லவா
அம்மாடியோ நான்
சின்னப்பொண்ணு அல்லவா
நள்ளிரவில் பள்ளியறை நாடகம்
தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில்
காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல
சொல்லவா
அம்மாடியோ நான்
சின்னப்பொண்ணு அல்லவா
அங்கங்கே நான் தொடத்தொட
அங்கங்கள் தான் சுடச்சுட
அணைக்கையில் பூமேனி வாட
அம்மம்மா ஓ சிலிர்க்குது
எங்கெங்கேயோ இனிக்குது
ஆசை தேனாறு ஊறுமோ
அன்னம் கொஞ்சம் பக்கம் வந்தால்
இன்னும் இன்னும் தித்திக்கும்
மன்னன் இன்னும் சொல்லித் தந்தால்
இன்பம் எல்லாம் சந்திக்கும்
நள்ளிரவில் பள்ளியறை நாடகம்
தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில்
காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல
சொல்லவா
அம்மாடியோ நான்
சின்னப்பொண்ணு அல்லவா
அன்புச் சின்னம் பதிக்கவோ
இன்பத் தேனில் குளிக்கவோ
இதைவிட ஏகாந்தம் ஏது
எல்லாம் இன்று புரிந்தது
சொர்க்கம் ஒன்று தெரிந்தது
மேலும் நான் கூற வேண்டுமா
கட்டிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும்
கற்றுக் கொண்ட பாடங்கள்
கன்னிப்பெண்ணின் நெஞ்சில்
நிற்கும்
காதல் தேவன் வேதங்கள்
நள்ளிரவில் பள்ளியறை நாடகம்
தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில்
காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல
சொல்லவா
அம்மாடியோ நான்
சின்னப்பொண்ணு அல்லவா
சொல்லாததை நான்... அம்மாடியோ
நான்
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
பாடல்: மோகம் வந்து நெஞ்சில்
மோதும்
திரைப்படம்: நினைவுகள்
மறைவதில்லை
இசை:
மோகம் வந்து நெஞ்சில் மோதும்
காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்
உள்ளம் துடிக்குது மின்னல்
அடிக்குது
கைகள் அணைக்குது நெஞ்சம்
இனிக்குது
சுகம்... ம்ம்... சுகம்... ம்ம்... சுகம்...ம்ம்
மோகம் வந்து நெஞ்சில் மோதும்
காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்
பூவே வா வா காதல் நீராடு
வாழ்வே நீதான் எங்கும் தேனாறு
பசி தீர்க்கும் பழமாக நீ
மாறவேண்டும்
பனியோடு மலர்போல
உறவாடவேண்டும்
அருகிலே நெருங்கி வா
கதைகளை சொல்ல வா
மோகம் வந்து நெஞ்சில் மோதும்
காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்
நாணம் நீங்கும் நாளும் உன்னாலே
காமன் பானம் பாயும் உன்னாலே
மடிமீது கொடிபோல
விளையாடும் வேளை
இளந்தென்றல் தாலாட்ட
இளைப்பாறும் சோலை
இதழ்களில் இதழ்களால் கவிதைகள்
சிந்த வா
மோகம் வந்து நெஞ்சில் மோதும்
காலம்
தேகம் இன்று ராகம் பாடும் நேரம்
உள்ளம் துடிக்குது மின்னல்
அடிக்குது
கைகள் அணைக்குது நெஞ்சம்
இனிக்குது
சுகம்... ம்ம்... சுகம்... ம்ம்... சுகம்...ம்ம்
-------------------------------------------------------
-------------------------------------------------------
------
ஜானகி ஶ்ரீராமனின் காதல் நாயகி
அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான
சேதி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன்
பாதி
மரகத பைங்கிளி அருகினிலே
வருகையிலே தருகையிலே
மன்னன் தேவை இன்னும்
என்னென்ன
மதுரச இதழ்களை திறந்து விடு
தேனை எடு விருந்து கொடு
ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன
காலங்கள் கூடட்டும் கல்யாணம்
ஆகட்டும்
கண்ணா உன் ஏக்கங்கள் அந்நாளில்
தீரட்டும்
ஜானகி ஶ்ரீராமனின் காதல் நாயகி
அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான
சேதி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன்
பாதி
திருமகள் பழகிடும் நடையழகும்
இடையழகும் சடையழகும்
தேவன் கோவில் தேரைப்போல் ஆட
பருவத்து கனியென பறிப்பதென்ன
ரசிப்பதென்ன ருசிப்பதென்ன
போதும் போதும் என்றே போராட
தேன் கொண்ட கிண்ணங்கள் நீ
கொண்ட கன்னங்கள்
நேர் வந்து நின்றாலே வேறென்ன
எண்ணங்கள்
ஜானகி ஶ்ரீராமனின் காதல் நாயகி
அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான
சேதி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன்
பாதி
நான் சொல்ல வந்தேன் நலமான
சேதி
வைகாசி மாதம் கல்யாணத்
தேதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக