செவ்வாய், 29 நவம்பர், 2016

நடிகை கே. ஆர். விஜயா பிறந்த நாள் நவம்பர் 30.

நடிகை கே. ஆர். விஜயா பிறந்த நாள் நவம்பர் 30.

கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ்,
கன்னடம், மலையாளம், தெலுங்கு
போன்ற தென்னிந்திய மொழிப்
படங்கள் உட்பட சுமார் 400
திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை
அரசி என அழைக்கப்படும் நடிகை இவர்.
கே. ஆர். விஜயாவின் தாய் கேரளாவையும்
தந்தை ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்.
இவர் 1960 களில் நடிக்கத்
தொடங்கி சுமார் 40
ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து
வருகிறார். இவர் நடித்த முதற்படமான
கற்பகம் 1963 இல் வெளிவந்தது.
நடித்த திரைப்படங்கள்
1. அக்கா
2. அக்கா தங்கை
3. அவள் சுமங்கலிதான்
4. இரு மலர்கள்
5. எதிரொலி
6. என் தம்பி
7. கண்ணன் கருணை
8. கண்ணே பாப்பா
9. கந்தன் கருணை
10. கல்யாண ஊர்வலம்
11. கற்பகம்
12. காட்டு ராணி
13. குறத்தி மகன்
14. கை கொடுத்த தெய்வம்
15. சங்கமம்
16. சத்ய சுந்தரம்
17. சபதம்
18. சர்வர் சுந்தரம்
19. சரஸ்வதி சபதம்
20. செல்வம்
21. சொந்தம்
22. சொர்க்கம்
23. தசாவதாரம்
24. தர்மராஜா
25. தராசு
26. திருமால் பெருமை
27. தீர்க்கசுமங்கலி
28. தொழிலாளி
29. நத்தையில் முத்து
30. நல்ல நேரம்
31. நாணல்
32. நான் ஏன் பிறந்தேன்
33. நீலமலர்கள்
34. பஞ்சவர்ணக்கிளி
35. பணம் படைத்தவன்
36. பதில் சொல்வாள்
பத்ரகாளி
37. பொன்னான வாழ்வு
38. மிட்டாய் மம்மி
39. யாருக்காக அழுதான்
40. ராமன் எத்தனை ராமனடி
41. ராமு
42. விவசாயி
43. ஊட்டி வரை உறவு.

*******************************
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’
என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர்.
விஜயா அவர்கள், தென்னிந்தியத்
திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை
ஆவார். தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம் போன்ற
தென்னிந்திய மொழிகளில்
தன்னுடைய கலைப் பயணத்தைத்
தொடர்ந்த இவர், சுமார் 450–
க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து,
சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா
இடம் பிடித்துள்ளார். ‘கற்பகம்’, ‘கந்தன்
கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’,
‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’,
‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’,
‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன்
எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற
படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த
திரைபடங்களாகும். தமிழ் சினிமாவில்
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர்
மற்றும் சிவாஜி என்னும் இரண்டு
ஜாம்பவான்களுடன் தொடர்ந்து
பல படங்களில் நடித்தப் பெருமை
இவருக்கு உண்டு. நாடக நடிகையாகத்
தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி,
பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால்
‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர்.
விஜயா அவர்களின் வாழ்க்கை வரலாறு
மற்றும் சாதனைகளை விரிவாகக்
காண்போம்.
பிறப்பு: நவம்பர் 30, 1948
பிறப்பிடம்: திருவனந்தபுரம், கேரளா
மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘தெய்வநாயகி’ என்னும்
இயற்பெயர் கொண்ட கே.
ஆர். விஜயா அவர்கள், 1948 ஆம் ஆண்டு
நவம்பர் 30 ஆம் நாள் இந்தியாவின்
கேரளா மாநிலத்திலுள்ள
திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ்
என்பவருக்கும், மங்களத்திற்கும் மகளாகப்
பிறந்தார். இவருடைய தந்தை ஆந்திராவைச்
சேர்ந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை
அவரது தந்தை ஆந்திராவை சேர்ந்தவர்
என்றாலும், இவருடைய தாயார் கேரளா
என்பதால் திருமணத்திற்குப் பிறகு
கேரளாவில் வசித்து வந்தனர். பின்னர்,
தமிழ்நாட்டிலுள்ள பழனிக்குக்
குடிபெயர்ந்தனர். தன்னுடைய குழந்தைப்
பருவத்தை பழனியில் கழித்த அவர், பதினோரு
வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில்
அதிக ஈடுபாடு கொண்டவராக
விளங்கினார். ஒரு காலகட்டத்திற்குப்
பிறகு, அவருடைய நாடக நடிப்பில் மிகவும்
ஈர்க்கப்பட்ட எஸ். எம். குமரேசன் என்னும்
நடிகர், சென்னை வந்தால் நடிக்க
வாய்ப்பு தருவேன் எனக்கூறியதின் பேரில்,
இவருடைய குடும்பம் பழனியில் இருந்து
சென்னைக்குக் குடிபெயர்ந்தது.
சென்னைக்கு வந்து சேர்ந்த இவர்,
சினிமாவில் நடிப்பதற்காக
‘தெய்வநாயகி’ என்னும் தன்னுடைய
பெயரை கே. ஆர். விஜயா என
மாற்றிக்கொண்டார். அதன்
பிறகு, இயக்குனர் கே. எஸ்.
கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் அறிமுகம்
செய்துவைக்கப்பட்ட அவர், 1963 ஆம்
ஆண்டு ‘கற்பகம்’ என்ற திரைப்படத்தில்
கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில்
அறிமுகமானார். அவருடைய முதல் படமே
அவருக்கு மாபெரும் வெற்றியைப்
பெற்றுத் தந்ததால், அதனைத்
தொடர்ந்து, நிறைய படவாய்ப்புகள்
வரத்தொடங்கின.
வெற்றிப் பயணம்
தன்னுடைய முதல் படத்திலேயே, தமிழ்
ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்த அவருக்கு,
‘சர்வர் சுந்தரம்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘நம்ம
வீட்டு தெய்வம்’ போன்ற திரைப்படங்கள்
அவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக்
கொடுத்தத் திரைப்படங்களாக
அமைந்தது. குறுகிய காலத்திற்குள் தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என
நான்கு தென்னிந்திய
மொழிகளிலும் நடித்த அவர்,
வெறும் பத்து ஆண்டுகளுக்குள்
கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட
திரைப்படங்களில் நடித்து, தென்னிந்திய
ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப்
புகழ்பெற்றார். ‘கந்தன் கருணை’,
‘இதயக்கமலம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’,
‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’,
‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன்
எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற
திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களின்
நெஞ்சில் நீங்கா இடம்
பெற்றுள்ளது எனக் கூறலாம்.
அதுமட்டுமல்லாமல், இவர் ‘மடிசார்
மாமி’, ‘குடும்பம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’,
‘ஆனந்தம்’ போன்ற தொலைக்காட்சி
தொடர்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பாக சொல்லப்போனால்,
சிவாஜியுடன் நடித்த அனைத்து
திரைப்படங்களும் மாபெரும்
வெற்றிச் சித்திரங்களாக அமைந்தது
எனலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை
தன்னுடைய வசீகர சிரிப்பால் அனைவரையும்
கவர்ந்த அவர், வேலாயுதம் என்பவரைத்
திருமணம் செய்து
கொண்டார். இவர் சுதர்ஷன் சிட்
ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஆவார்.
இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.
கே.ஆர் விஜயா நடித்த சில
திரைப்படங்கள்
‘சர்வர் சுந்தரம்’ (1967), ‘கை
கொடுத்த தெய்வம்’ (1964),
‘செல்வம்’ (1966), ‘சரஸ்வதி
சபதம்’ (1966), ‘பட்டணத்தில் பூதம்’ (1967),
‘தங்கை’ (1967), ‘கந்தன் கருணை’ (1967), ‘இரு
மலர்கள்’ (1967), ‘ஊட்டி வரை உறவு’ (1967),
‘திருமால் பெருமை’ (1968), ‘நல்ல
நேரம்’ (1972), ‘பால் மனம்’ (1968), ‘குறத்தி
மகன்’ (1972), ‘ஸ்ரீ தேவி’ (1970), ‘பாரத
விலாஸ்’ (1973), ‘ஜஸ்டிஸ்
கோபிநாத்’ (1978), ‘திரிசூலம்’ (1979), ‘கை
கொடுத்த தெய்வம்’ (1964),
‘நெஞ்சிருக்கும் வரை’ (1967),
‘திருடன்’ (1969), ‘என்தம்பி’ (1968),
‘சொர்க்கம்’ (1970), ‘தங்க
பதக்கம்’ (1974) ‘ராமன் எத்தனை
ராமனடி’ (1970),
‘எதிரொலி’ (1970), ‘தவப்
புதல்வன்’ (1972), ‘சத்திய சுந்தரம்’ (1981),
‘ஊரும் உறவும்’ (1982), ‘நீதிபதி’ (1983),
‘மிருதங்க சக்கரவர்த்தி’ (1983), ‘வம்ச
விளக்கு’ (1984), ‘தராசு’ (1984), ‘படிக்காத
பண்ணையார்’ (1985), ‘சாதனை’ (1986),
‘கிருஷ்ணன் வந்தான்’ (1987), ‘மன்னவரு
சின்னவரு’ (1999), ‘உடன் பிறப்பு’ (1993),
‘ஆணழகன்’ (1995), ‘விவசாயி
மகன்’ (1997), ‘கவலைப் படாதே
சகோதரா’ (1998), ‘துர்கா’ (2001),
‘ஷாக்’ (2004), ‘சந்திரமுகி’ (2005),
‘தசாவதாரம்’ (2008), ‘ஆடு புலி’ (2011).
சுமார் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில்
நடித்து வரும் கே. ஆர். விஜயா அவர்கள்,
இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்,
அவருடைய சிரிப்பு என்னும் மந்திரப்
புன்னகையால் ரசிகர்களின்
நெஞ்சங்களைக் கட்டிப் போட்டுள்ளார்
என்று தான் கூற வேண்டும். குறிப்பாக
சொல்லப்போனால் அவருடைய
வசீகரப் புன்னகை ஆண்களை மட்டுமல்ல,
பெண்களையும் கவர்ந்திழுக்கும்
தன்மையுடையது. அவருடைய
தாய்மொழி மலையாளம்
என்றாலும், மிக அழகாகத் தமிழ்
மொழி பேசி நடித்தார். 1963 ஆம்
ஆண்டு தமிழ் சினிமாவில்
கதாநாயகியாகத் தன்னுடைய கலையுலக
வாழ்க்கையைத் தொடங்கி,
கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட
திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நீண்ட
காலம் கதாநாயகியாகவே நடித்த
பெருமைக்குரியவர்.
**********************************

படிக்காததால் நடிக்க வந்தேன்.. .'
நடிகை கே . ஆர் . விஜயா
1960களில் இருந்து 80 வரை இருபது
வருடங்கள், தமிழ் சினிமாவில் புகழ்க்
கொடி பறக்க விட்டவர் ,
கே. ஆர். விஜயா . எம். ஜி. ஆர், சிவாஜி
ஆகிய இரண்டு இமயங்களுக்கும்
ஜோடியாக நடித்தவர்.
தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய
மூன்று மொழிகளில் 450
படங்களுக்கும் மேல் நடித்த
கே. ஆர். விஜயா , இன்னமும் அதே
`புன்னகை அரசி ' யாக ` பளிச் '
சிரிப்புடன் . . . சென்னை
தியாகராயநகர் ராமன்
தெருவில் உள்ள அவருடைய வீட்டில்
அவரை சந்தித்தபோது . . .
``1963 - ல் நான் சினிமாவுக்கு வந்தபோது ,
நடிகர் -நடிகைகளை `நட்சத்திரங்கள் '
என்றுதான் சொல்வார்கள் .
நடிகைகளை , சினிமா தாரகைகளாக
மதித்தார்கள் .
சவுகார் ஜானகி, கே. ஆர். விஜயா ,
சரோஜாதேவி
`கற்பகம் ' படத்தில், நான் பாதி படம்
வரைதான் வருவேன் . என்றாலும் , அந்த
படம் பார்த்தவர்கள் அத்தனை பேர்
மனதிலும், ` கற்பகம்' கதாபாத்திரம்
பதிந்து விட்டது. எனக்கு, ரசிகைகள் நிறைய
பேர் உருவானார்கள். நிறைய ரசிகர்-
ரசிகைகளை நான் சந்தித்து இருந்தாலும் ,
ஒரே ஒரு ரசிகையை இன்று வரை என்னால்
மறக்க முடியவில்லை .
`கற்பகம் ' படம் பார்த்துவிட்டு, எங்கள்
வீட்டுக்கு வந்து என்னை சந்தித்த அந்த
ரசிகை, தனது கழுத்தில் கிடந்த தங்க
சங்கிலி, காதில் கிடந்த கம்மல் , கைகளில்
அணிந்திருந்த வளையல்கள் அத்தனையையும்
கழற்றி கையில் வைத்துக்கொண்டு ,
``எடுத்துக் கொள்ளுங்கள் ''
என்றார் .
அவருடைய அன்பை பார்த்து
நெகிழ்ந்துபோன நான் ,
``இதெல்லாம் வேண்டாம் . உங்க
அன்பு போதும்'' என்று அந்த
பெண்ணின் நகைகளை மீண்டும்
அவருக்கே அணிவித்தேன் . `` நான்
உங்களுக்கு ஏதாவது செய்ய
வேண்டும். . . '' என்று திரும்ப திரும்ப
சொல்லிக்கொண்டிருந்
தார்.
பிறகு ஒருநாள், ஒரு பட்டுப்புடவையுடன்
என் வீட்டுக்கு வந்தார் . இதையாவது
நீங்கள் ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்றார் . வேண்டாம் என்று
சொன்னால், அவர் மனம்
புண்படும் என்பதற்காக , அந்த
பட்டுப்புடவையை
வாங்கிக்கொண்டேன் .
எனக்கு நிறைய ரசிகைகளை உருவாக்கிக்
கொடுத்த இன்னொரு
படம், ` நம்ம வீட்டு தெய்வம். ' அந்த
படம் பார்த்துவிட்டு என்னை சந்தித்த
பெண்கள் எல்லோரும், `` பூஜை ரூமுக்கு
போனால் , உங்க முகம்தான்
தெரியுது'' என்றார்கள் .
`மிருதங்க சக்ரவர்த்தி' படம் வந்த
நேரத்தில், சுசீந்திரம் போய் அங்குள்ள ஒரு
கோவிலில் சாமி
கும்பிட்டுக்கொண்டிருந்தேன்.
யாரோ என் முதுகில் தட்டினார்கள் .
சாமி கூட கும்பிட விடாமல் இடைïறு
செய்வது யார் ? என்று திரும்பி
பார்த்தபோது , ஒரு அழகான பெண்
நின்று கொண்டிருந்தார்.
``மிருதங்க சக்ரவர்த்தி படம் , என்
வாழ்க்கையை போலவே இருக்கிறது . எங்க
வீட்டுக்காரர் ஒரு மிருதங்க கலைஞர் .
நான் பாடகி . எங்கள் வாழ்க்கையில்
நடந்த பல சம்பவங்கள் படத்தில்
உள்ளன '' என்றார் . அதைக்கேட்டு நான்
ஆச்சரியப்பட்டேன் .
எனக்கு பாராட்டு வாங்கி
கொடுத்த இன்னொரு
படம், ` இதயக்கமலம் . ' அந்த படம்
பார்த்துவிட்டு, `` எங்கள் வீட்டுக்கு
உங்களைப்போல் ஒரு மருமகள் வரவேண்டும்''
என்று பல வயதான பெண்கள்
பாராட்டினார்கள்.
அந்த காலகட்டத்தில், நடிகர் -நடிகைகள்
`நட்சத்திரங்களாக ' மதிக்கப்பட்டதற்கு
எம். ஜிஆரும், சிவாஜியும்தான்
காரணம் . எம். ஜி. ஆருடன் நான்
சுமார் பத்து படங்களிலும் ,
சிவாஜியுடன் சுமார் பதினைந்து
படங்களிலும் நடித்து இருக்கிறேன் .
பொதுமக்கள் மத்தியில் நடிகர் -
நடிகை கள் எப்படி நடந்துகொள்ள
வேண்டும்? என்று எம். ஜி . ஆர்.
சொல்லித்தருவார்.
யாரைப்பார்த்தாலும், இரண்டு
கையெடுத்து கும்பிட வேண்டும் என்று
சொல்வார் .
ஒருநாள் எம் . ஜி . ஆர் . என்னிடம் , ``நீ
காலையில் எழுந்ததும் என்ன
செய்வே ?'' என்று கேட்டார் . `` டீ
குடிப்பேன்'' என்றேன். `` பல் துலக்குவதற்கு
முன், கொஞ்சம் அரிசியை எடுத்து
வாயில் போட்டு பிறகு துப்பினால், அந்த
அரிசியை சாப்பிடுகிற கோழி
செத்துப்போயிடும். அந்த அளவுக்கு
அதில் விஷம் இருக்கிறது. அதனால் ,
பல் துலக்குவதற்கு முன் எதையும்
சாப்பிடக்கூடாது'' என்று
சொன்னார் .
அன்று முதல் நான் பல் துலக்கிவிட்டுத்
தான் டீ- காபி சாப்பிடுவேன் .
சிவாஜியிடம் இருந்து நிறைய ஒழுக்கத்தை
கற்றுக்கொண்டேன். அவர்
சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு
வந்துவிடுவார் என்பது எல்லோருக்கும்
தெரிந்த தகவல்.
என் மகள் திருமணத்தன்று , `` விஜயா
பொண்ணுக்கு இன்று
திருமணம் '' என்று தன்னுடன்
குடும்பத்தினரையும் அதிகாலையிலேயே எழ
வைத்து, முதல் ஆளாக திருமண
மண்டபத்துக்கு வந்துவிட்டார் .
எம். ஜி. ஆர்- சிவாஜி வந்த பிறகுதான்
நடிகர் -நடிகைகளுக்கு சமூகத்தில்
மரியாதையும், அந்தஸ்தும் கிடைத்தது.
வெறும் நடிகர்களாக
மட்டுமல்லாமல் , அரசியலிலும் நடிகர் -
நடிகைகள் பிரகாசிப்பதற்கு அவர்கள்
இருவரும்தான் காரணம் .
என் கணவர் வேலாயுதம் அந்த
காலத்தில், சொந்தமாக
விமானமும், கப்பலும் வைத்திருந்தார்.
மொத்தம் 4 பேர் அமரக்கூடிய
அந்த விமானத்தை என் கணவரே
ஓட்டுவார். ஒருமுறை கோவையில் இருந்து
சென்னை திரும்பும்போது , அந்த
விமானத்தின் ஒரு டயர் கீழே
இறங்கவில்லை . அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பினார் . அந்த சம்பவத்துக்குப்பின்,
விமானத்தை விற்று விட்டோம் .
அதேபோல், கப்பலையும் ஒரு சூழ்நிலையில்
கொடுத்து விட்டோம்.
எங்க குடும்பத்தில் நான் ஒருத்திதான்
படிக்காதவள் . படிக்காத
காரணத்தால்தான் நான்
நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன் . 16
வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.
அப்போது எனக்கு தமிழ் சரியாக பேச
வராது . `டியூஷன்' வைத்து தமிழ்
கற்றுக்கொண்டேன்.
என் முதல் படமே ( கற்பகம்)
வெற்றிபெற்றதால் , நிறைய பட
வாய்ப்புகள் வந்தன . வருடத்துக்கு , பத்து
படங்கள் வரை நடித்தேன் . பத்து வருடங்கள்
ரொம்ப பிசியாக இருந்தேன் .
1963- ல் திரையுலகுக்கு வந்த நான், 73 -ல்
நூறு படங்களில் நடித்து முடித்து விட்டேன்.
என்னை சினிமாவுக்கு
அறிமுகப்படுத்தியவர், டைரக்டர்
கே. எஸ் . கோபால கிருஷ்ணன் . ` கற்பகம்'
படப்பிடிப்பு
நடைபெற்றுக்கொண்டிருந்தபோ
து, ஒருநாள் மாலையில், `` சார் , நான்
நாடகத்தில் நடிக்க போகணும்'' என்று
டைரக்டரிடம் கேட்டேன் .
``உனக்கு சினிமா வேண்டுமா ,
நாடகம் வேண்டுமா ? இரண்டில் ஒன்றை
முடிவு செய்துகொள் '' என்று
டைரக்டர் கூறிவிட்டார் . அன்று முதல் ,
படப்பிடிப்பு நடக்கும்போது , வேறு எதை
பற்றியும் சிந்திக்கக் கூடாது என்ற
முடிவுக்கு வந்தேன்.
நான் கதாநாயகியாக
நடித்துக்கொண்டிருந்த
காலகட்டத்தில், பத்து நாட்கள்
அல்லது பதிமூன்று நாட்களில்
எல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்து
இருக்கிறார்கள் . `பலேபாண்டியா, ' 13
நாட்களில் எடுக்கப்பட்ட படம். 20
நாட்களுக்குள் பெரும்பாலும்
படத்தை எடுத்து முடித்து விடுவார்கள்.
அதிகபட்சம் , மூன்று மாதங்கள் படம்
எடுத்தால், அது மிக பிரமாண்டமான
படம் என்று அர்த்தம் .
450 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் ,
இன்று வரை சில படங்கள் என்
நெஞ்சைவிட்டு அகலவில்லை . அந்த
படங்கள்: கற்பகம், செல்வம் ,
கந்தன் கருணை , சரஸ்வதி சபதம்,
இதயக்கமலம் , நம்ம வீட்டு
தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம்,
கல்தூண், மிருதங்க சக்ரவர்த்தி ,
வாயாடி , திருடி, ரோஷக்காரி.
இப்போதும் நான் படங்களில்
நடித்துக்கொண்டுதான்
இருக்கிறேன். தமிழில் , `சரித்திரம் ' என்ற
படத்தில் நடிக்கிறேன். தெலுங்கு,
மலையாள பட வாய்ப்புகளும்
வருகின்றன .
இறைவன் என் படிப்புக்கும், தகுதிக்கும் மீறி
எனக்கு செல்வமும்,
செல்வாக்கும் கொடுத்து
இருக்கிறார் . கணவர், மகள், மருமகன் ,
2 பேரன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் . ''  என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக