வியாழன், 17 நவம்பர், 2016

இயக்குநர் சி.ருத்ரைய்யா நினைவு தினம் நவம்பர் 18, 2014.

இயக்குநர் சி.ருத்ரைய்யா நினைவு தினம் நவம்பர் 18, 2014.
சி.ருத்ரைய்யா (C. Rudhraiya, 1947 -
நவம்பர் 18, 2014) 1978ஆம் ஆண்டு
தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட
ஒரு இயக்குனராக
நுழைந்தவர்.இவரின் சொந்த ஊர்
சேலம் அருகிலுள்ள ஆத்தூர்.
திருச்சி செயிண்ட் ஜோசப்
கல்லூரியில் படித்தவர்.சென்னை
தரமணியில் உள்ள திரைப்படக்
கல்லூரியில் திரைக்கதை
எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்.
இவரது முதல் படமான " அவள்
அப்படித்தான் ", முன்னணி
நட்சத்திரங்களான கமலஹாசன்,
ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா
ஆகியோர் நடித்திருந்தபோதும் , அவர்களிடமிருந்து வழமையாக
ரசிகர்கள் எதிர்பார்க்கும்
அம்சங்களைக் கொண்டிராது,
வேறுபட்ட, உளவியல் தொடர்பான
கதையைமைப்பைக்
கொண்டிருந்ததால்
தோல்வியுற்றது. இருப்பினும்,
இன்றளவும், தமிழில் வெளிவந்த
சிறந்த படங்களில் ஒன்றாகக்
கொண்டாடப்படுகிறது.
புதுமுகங்களை வைத்து 1980
ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா
இயக்கிய "கிராமத்து அத்தியாயம்"
என்னும் திரைப்படமும்
தோல்வியுற்றது. இதன் பிறகு
அவரது படம் எதுவும்
வெளிவரவில்லை. சில
முயற்சிகள் துவக்கத்திலேயே
தோல்வியுற்று விட்டன.
2014 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம்
நாளன்று தனது 67வது
அகவையில் சென்னையில்
காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக