திங்கள், 28 நவம்பர், 2016

நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம் நவம்பர் 29 , 1908

நடிகர் கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணன் பிறந்த தினம்  நவம்பர் 29 , 1908.

கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணன் ( நவம்பர் 29 , 1908 -
ஆகஸ்ட் 30, 1957 ) தமிழ்த் திரைப்பட
நகைச்சுவை நடிகரும் பாடகரும்
ஆவார்.
வாழ்க்கைச்
சுருக்கம்
நாகர்கோவில் அருகே
ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு
நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர்
பிறந்தார். நாடகக் கொட்டகைகளில்
சோடா விற்கும் பையனாக ஏழ்மை
வாழ்க்கை இவரது இளமைப்
பருவம். பின் சாதாரண
வில்லுப்பாட்டுக் கலைஞராக
தனது கலையுலக வாழ்வை
துவங்கினார். பின்னர் நாடக
துறையில் நுழைந்தார்.
சொந்தமாக நாடக
கம்பெனியையும் நடத்தினார்.
அப்போது தமிழகத்தில்
திரைப்படத்துறை
பிரபலமடைந்தது. அதிலும்
நுழைந்து தமிழ்
திரைப்படத்துறையில் முன்னணி
நகைச்சுவை நடிகராக வலம்
வந்தார். திரைப்படத் துறையில்
இவர் அறிமுகமான திரைப்படம்
1936களில் வெளிவந்த சதிலீலாவதி
ஆகும். பெரும்பாலும்
சொந்தமாக நகைச்சுவை
வசனங்களை எழுதி அதையே
நாடகத்திலும்,
திரைப்படங்களிலும்
பயன்படுத்துவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். நகைச்சுவை
மூலமாக கருத்துகளை
பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில்
நடித்தார்.
இவரது மனைவி மதுரமும்
பிரபலமான நடிகை என்பதால்
இருவரும் இணைந்தே பல
படங்களில் நடித்தனர்.
நகைச்சுவையை சினிமா
காட்சிகளாக மட்டுமின்றி
பாடல்களாகவும் அமைக்க
முடியும் என நிரூபித்தவர்.
சொந்த குரலில் பல பாடல்களை
பாடியுள்ளார். பழங்கலைகளின்
பண்பு கெடாமல் அவற்றைப்
புதுமைப்படுத்தி மக்கள்
மன்றத்திற்குத் தந்தவர். அவர்
நடத்திய கிந்தனார்
கதாகாலட்சேபமும்,
தெருக்கூத்து, வில்லுப்பாட்டு
போன்றவைகளும் இதற்குச்
சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில்
பரவ வேண்டும் என்பதில் ஆர்வம்
கொண்டவர். ஏறத்தாழ 150
படங்களுக்கு மேல் நடித்துள்ள
அவர் சீர்திருத்தக் கருத்துக்களை
திரைப்படங்களில் துணிவோடு
எடுத்துக் கூறியவர்.
கலையுலகில் கருத்துக்களை
வழங்கியது போல் தமது
வாழ்க்கையிலும்
ஆயிரக்கணக்கானவர்களுக்கு
பணத்தை வாரி வழங்கியவர்.
காந்தியடிகளிடமும் , காந்திய
வழிகளிலும் பற்று கொண்டவர்.
காந்தியடிகளின் மறைவுக்குப்
பின்னர், அவரது நினைவைப்
போற்றும் வகையில், ஐம்பதாயிரம்
ரூபாய்க்கு மேல் தமது சொந்தப்
பணத்தைச் செலவிட்டு தனது
ஊரில் காந்தியடிகளுக்கு
நினைவுத்தூண் எழுப்பினார்.
கொலைக்
குற்றச்சாட்டு
அப்போது பிரபல கதாநாயகனாக
இருந்த தியாகராஜ பாகவதருடன்
ஒரு கொலை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டார். இது இவரது கலை
பயணத்தில் மிகப்பெரிய
திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியா விடுதலை
பெறுவதற்கு சில மாதங்களுக்கு
முன் தான் குற்றமற்றவர் என
தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30
மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு
பின்னர் விடுதலை பெற்ற
கலைவாணர் மீண்டும் படங்களில்
நடிக்க துவங்கினார். எனினும்
வழக்குகளிலேயே அவரது
சொத்தில் பெரும்பகுதி
கரைந்திருந்தது.
இவர் நடித்த
பிரபலமான
திரைப்படங்கள்
பைத்தியக்காரன் (1947)
நல்ல தம்பி (1949)
அமரகவி (1952)
பணம் (1952)
டாக்டர் சாவித்திரி (1955)
நம் குழந்தை (1955)
முதல் தேதி (1955)
காவேரி (1955)
மதுரை வீரன் (1956)
நன்நம்பிக்கை (1956)
கண்ணின் மணிகள் (1956)
ஆசை (1956)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
புது வாழ்வு (1957)
அம்பிகாபதி (1957)
தங்கப்பதுமை (1959)
தோழன் (1960)
67-ல் என். எஸ். கிருஷ்ணன் (1967)
(என்.எஸ்.கே.நடித்த படங்களின்
தொகுப்பு)
இவர் இயக்கிய
படங்கள்
பணம் (1952)
மணமகள்
இவர் பாடிய
பாடல்கள்
ஜெயிலிக்குப் போய் வந்த
(பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற
(பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி
(பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து
(முதல்தேதி)
இடுக்கண் வருங்கால்
(முதல்தேதி)
சங்கரியே காளியம்மன்
(ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா
(கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே
(மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா
ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி
(ஆசை)
சங்கரியே காளியம்மா
(நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர்
சாவித்திரி)]
காசிக்கு போனா
கருவுண்டாகுமென்ற (டாக்டர்
சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை
(உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு
(உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம்
(ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை
(கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ
(கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே
(பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா
(பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ
(பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை
(பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு
(வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை
(மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே
(சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி
(சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி
(மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு
(மணமகள்)
குடி கெடுத்த
குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில்
(தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா
மஜ்னு)
சும்மா இருக்காதுங்க
(நல்லகாலம்)
மறைவு
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்
1957 ஆகத்து 30 அன்று தனது
49வது வயதில் காலமானார்.
கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளின்
புதல்வி கலைச்செல்வி 1948 மே 18
அன்று காலமானார்.  மனைவி
டி. ஏ. மதுரம் 1974 இல்
காலமானார்.
கலைவாணர்
அரங்கம்
தமிழ்நாடு அரசு கலைவாணர்
என். எஸ். கிருஷ்ணன் நினைவாக
சென்னையில் உள்ள அரசு
அரங்கத்திற்கு கலைவாணர்
அரங்கம் என பெயர்
சூட்டியுள்ளது. இந்த
கலைவாணர் அரங்கம் 1035
இருக்கைகளுடன் குளிர் சாதன
வசதியுடன் அரங்கம்
விழாக்களுக்கும், பொது
நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு
விடப்படுகின்றது.
***********************************
காரோட்டிக்கு பாராட்டுவிழா எடுத்த கலைமேதை
என்.எஸ்.கிருஷ்ணன்!

1950 களின் மத்தியில்
பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா. விழாவில் பங்குபெற்றோர்
அந்நாளைய பிரபல நட்சத்திரங்கள்.
அந்த விழாவை எடுத்து
நடத்தியதும், அந்நாளில் மக்களால்
பெரிதும் போற்றப்பட்ட ஒரு
நட்சத்திரம்தான். ஆனால் இத்தனை
அம்சங்களுடன் நடந்த அந்த விழாவின்
நாயகன், பிரபல நட்சத்திரமோ,
பிரபலமான பிரமுகரோ அல்ல: ஒரு சாதாரண கார் ஓட்டுநர்.
தனக்கு கார் ஓட்டிய ஒரு
ஊழியருக்கு பாராட்டு விழா
எடுத்த அந்த மனிதர் வேறு
யாருமல்ல; “என்னை
மனிதாபிமானி என்று யாராவது
அழைத்தீர்களானால் அதற்கு முழு
முதற் காரணமானவர்
கலைவாணர்தான்” என மறைந்த
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால்
புகழப்பட்ட நகைச்சுவை மேதை,
கலைவாணர் என தமிழக மக்களால்
அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ்.
கிருஷ்ணன்தான் அது!
அவரது நினைவுநாள் இன்று...
நாகர்கோவில் அருகே உள்ள
ஒழுகினசேரி கிராமத்தில், 1908 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள்
பிறந்தவர் கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன். தந்தை
சுடலைமுத்துப் பிள்ளை, தாயார்
இசக்கி அம்மாள். நாகர்கோவில்
சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன்
சுருக்கமே என்.எஸ்.கே!
வறுமை காரணமாக நான்காம்
வகுப்புடன் கலைவாணர்
பள்ளிக்கூடப் படிப்பை
நிறுத்தினார். பிறகு, நாடகக்
கொட்டகையில் சோடா, கலர் விற்கத்
தொடங்கினார். அப்படித்தான் நாடக
ஆர்வம் ஆரம்பம். பின்னாளில்
நாடகங்களில் நடித்துவந்தார். ஆனந்த
விகடனில் தான் எழுதிய
'சதிலீலாவதி' தொடரை அதே
பெயரில் படமாக்கினார்
எஸ்.எஸ்.வாசன். அதுதான்
கலைவாணரின் முதல் படம். ஆனால்,
'சதிலீலாவதி'யை
முந்திக்கொண்டு அவரது 2 வது
படமான 'மேனகா' வெளிவந்தது.
மேனகாவின் வெற்றியால்,
தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும்
கலைவாணரின் நகைச்சுவை
மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களான
பி.யு சின்னப்பா,
தியாகராஜபாகவதர் படங்களில்
நடிக்க ஆரம்பித்தார். திரையுலகில்
புகழடைந்தபின், தானே சொந்தமாக
தனது பாத்திரத்தன்மையை
வடித்து, அதை படங்களில்
பயன்படுத்தினார் கலைவாணர்.
திரைப்படத் துறையில்
பெரும்பாலும் சொந்தமாக
நகைச்சுவை வசனங்களை எழுதி,
அதையே நாடகத்திலும்,
திரைப்படங்களிலும்
பயன்படுத்துவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். வெறுமனே
சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்க
வைக்கக்கூடியதாகவும்,
மேதமையாக இருந்தது அவரது
நகைச்சுவை
காட்சிகள். ஏறத்தாழ 150 படங்களில்
நடித்தார்.
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக
கலைவாணர் அடங்கிய குழு,
ரயிலில் புனே சென்றது.
அப்போது படத்தின் தயாரிப்பாளர்
ரயிலைத் தவறவிடவே, வழிச்
செலவுக்கு மதுரத்தின் நகைகளை
விற்றே குழுவினரின் பசியை
தீர்த்தார் கலைவாணர். அந்தச்
சமயம்தான் இருவருக்கும் காதல்
பூத்தது. மதுரமும் பிரபலமான
நடிகை என்பதால் இருவரும்
இணைந்தே பல படங்களில் நடித்தனர்.
கலைவாணர்- மதுரம் ஜோடி
திரையுலகில் பெரிதும் பேசப்பட்ட
ஜோடி.
நகைச்சுவையை சினிமா
காட்சிகளாக மட்டுமின்றி,
பாடல்களாகவும் அமைக்க முடியும்
என நிரூபித்தவர். சொந்த குரலில்
பல பாடல்களை பாடியுள்ளார்.
பழங்கலைகளின் பண்பு கெடாமல்,
அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள்
மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய
கிந்தனார் கதாகாலட்சேபமும்,
தெருக்கூத்து, வில்லுப்பாட்டு
போன்றவைகளும் இதற்குச் சான்று.
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா
காலட்சேபம் பிரபலம். நந்தனாரை
கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம்
கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட
வராமல் நந்தனாரை
எழுதிக்கொண்டு இருந்தபோது,
'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும்
வேண்டாம், சாப்பிட வாங்க!' என்று
சலித்துக்கொண்டாராம் அவரது
மனைவி செல்லம்மா. அதில்
இருந்து உருவியதுதான் இந்த
கிந்தனார்!' என்று மதுரத்தைச்
சமாளித்திருக்கிறார்.
ஒருமுறை என்.எஸ்.கே ரஷ்யப்
பயணம் மேற்கொண்டார். அதுபற்றி
நிருபர்கள் கேட்க, ' ரஷ்யாவில்
அக்ரஹாரமும் இல்லை...சேரியும்
இல்லை' என்று நறுக் என்று பதில்
அளித்தார்.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில்
பரவ வேண்டும் என்பதில் ஆர்வம்
கொண்டவர். தனது படம் ஒன்றில்
அடுத்த 10 ஆண்டுகளில்
இந்தியாவின் வளர்ச்சி எப்படி
இருக்கும் என அவர்
நகைச்சுவையாகவும், அதே சமயம்
தீர்க்க சிந்தனையோடும் காட்சிகளை
அமைத்தார். ஆச்சர்யமாக
அத்தனையும் நடந்தேறியது.
கலைவாணரின் தீர்க்க சிந்தனையை
மக்கள் போற்றினர்.
திமுக மீதும், அதன் தலைவர்கள்
மீதும் அன்பு கொண்டவராக
இருந்தாலும் எக்காலத்திலும், ஒரு
குறிப்பிட்ட கட்சிக்குரியவராக
கலைவாணர் தன்னை
அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை.
எல்லா கட்சியிலும் அவரது
அன்புக்குரியவர் இருந்தார்கள்.
“கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்.
அவன் மக்களின் ரசிகன்” என்ற தன்
கொள்கையில் இறுதிவரை
உறுதியாக இருந்தார்.
'மணமகள்' படத்தில் பத்மினியை
அறிமுகப்படுத்தி, அவர் 'நாட்டியப்
பேரொளி' பட்டம் பெறக் காரணமாக
இருந்தார். அந்தப் படத்தில்
பாலையாவின் நடிப்பைப் பாராட்டி,
தனது விலை உயர்ந்த காரை
அவருக்குப் பரிசளித்தார்.
கலைவாணர் புகழின் உச்சியில்
இருந்தபோது அவரது
வாழ்க்கையை முடக்கிப்போட்டது
ஒரு வழக்கு.
'இந்து நேசன்' என்ற பத்திரிகையின்
ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை
வழக்கில், கலைவாணருக்கும்
தியாகராஜ பாகவதருக்கும்
மறைமுகத் தொடர்பு இருப்பதாக
கூறி இருவரும் கைதானார்கள்.
பல்வேறு மாதங்களுக்கு பின்,
லண்டன் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்ததில்
கலைவாணர் விடுவிக்கப்பட்டார்.
விடுதலைக்குப்பின்னும்
விடுவிடுவென படங்களில் நடிக்கத்
துவங்கினார் கலைவாணர்.
'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு
தெரியுமா? கொலை நடந்த அன்று
காருக்கு பெட்ரோல் போட்டதுக்
கான ரசீது அவரிடம் இருந்தது.
அதை வைத்துத்தான் அவர்
விடுதலை ஆனார். - கலைவாணர்
குடும்பத்தினரைப்
பார்க்கும்போதெல்லாம் நீதிபதி
கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச்
சிரிப்பாராம்.
சிறையில் இருந்து
விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு
நடந்த பாராட்டு விழாவில்தான்
அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம்
சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர்
பம்மல் கே.சம்பந்தம் முதலியார்.
மேதைமையான அவரது
நகைச்சுவையால் கலைவாணர்,
தென்னாட்டு சார்லி சாப்ளின் என
அழைக்கப் பட்டார். ஆனால் இதற்கு
கலைவாணரின் கருத்து என்ன
தெரியுமா? "என்னைச் சிலர்
தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு
சொல்றாங்க. சார்லி சாப்ளினை
ஆயிரம் துண்டுகள் ஆக்கினால்
கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட
நான் ஈடாக மாட்டேன்!" என்றார்
என்.எஸ்.கே.தன்னடக்கமாக.
தன்னைத் தேடி வருபவர்களின்
துயரங்களை கேட்டு, அவர்களுக்கு
உதவுவதில் அக்கறை காட்டும்
மனிதாபிமானி என்.எஸ். கே. ஒரு
கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே
வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவரது இறுதிநாட்களில், அவரிடம்
வேலை செய்த ஒருவர், 'தன்
மகளுக்குத் திருமணம்' என்று வந்து
நிற்கிறார். சுற்றும்முற்றும்
பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு
விலையுயர்ந்த வெள்ளி கூஜா.
அதை எடுத்துக்கொடுத்து,
'என்னிடம் பணமாக கொடுக்க
எதுவும் இல்லை. இதை விற்றுத்
திருமணச் செலவுக்கு
வைத்துக்கொள்' என்றார். கண்ணீர்
பீறிட்டது அந்த ஊழியரிடம் இருந்து.
தன்
மனைவி மதுரத்திடம், “எவரேனும்
என்னிடம் உதவி கேட்டு, நான்
இல்லை என்று கூறும் நிலை
வந்தால், நான் உயிரோடு இருக்கக்
கூடாது!' என்று அடிக்கடி
கூறுவாராம்.
இவரால் சினிமாவில் அடையாளம்
காணப்பட்டவர்கள் பலர். குமரி
மாவட்டம் இப்போதைய
கேரளாவோடு இருக்கும் போது,
தமிழர்கள் தாய் தமிழகத்தோடு
இணைய வேண்டும் என போராடிய
தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக
நின்றவர்.
தினமும் ஒரு பிச்சைக்காரர்
கலைவாணர் வீட்டு வாசலில் வந்து
நிற்பாராம். ஏதோதோ காரணம்
சொல்லி பணம் கேட்க, இவரும் பணம்
கொடுப்பார். 'அவன் உங்களை
ஏமாற்றுகிறான்' என்று வீட்டில்
உள்ளவர்கள் சொல்ல, ' ஏமாத்தி அவன்
என்ன மாடி வீடா கட்டப்போறான்.
வயித்துக்குத் தானே சாப்பிடப்
போறான். ஏமாத்திட்டுப்
போகட்டுமே' என்பாராம். அத்தனை
மனிதாபிமானி என்.எஸ்.கே
காந்தியை மிகவும் நேசித்த
கலைவாணர், நாகர்கோவில்
நகராட்சி பூங்காவில் தனது
சொந்த செலவில் காந்தி நினைவுத்
தூணை எழுப்பி அதில்
கவிமணியின் கவிதைகளை
இடம்பெறச் செய்தார். இது இன்றும்
கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை
உருவாக்கியவர்களில்
முக்கியமானவரான கலைவாணர்,
அதற்காக தன் சொந்த நிலத்தையும்
வழங்கியவர்.
சேலம் அருகே தாரமங்கலம்
பஞ்சாயத்தில் நடைபெற்ற
அண்ணாவின் படத் திறப்பு
விழாதான் கலைவாணர்
கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.
அதே போல் அண்ணா கலந்துகொண்ட
கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின்
சிலை திறப்பு விழா. கலைவாணர்
நோய்வாய்ப்பட்டு
மருத்துவமனையில் இருந்த சமயம்,
அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி
வதந்திகள் பரவின. நகைச்சுவை
மேதையான அவர், அதையும் தன்
பாணியில், 'மதுரம், நான்
சாகலேன்னா இவங்க விட
மாட்டாங்கபோல. இவங்க
திருப்திக்காகவாவது ஒரு தரம்
நான் அவசியம் சாகணும்
போலிருக்கே!" என்றாராம்.
ஒரு கட்டத்தில் கல்லீரல் பாதிப்பால்
உடல்நிலை பாதிக்கப்பட்டு
சென்னை அரசு பொது
மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார்
என்.எஸ்.கே. ஆனால் தொடர்ந்து
உடல்நிலை மோசமானது.
மருத்துவர்கள் கை
விரித்துவிட்டனர். மருந்து
உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம்
ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-
வது வயதில் காலமானார். தன்
நகைச்சுவையால் தமிழகத்தை
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த
நகைச்சுவை மேதை தமிழர்களை
ஒரே முறை தன் இறப்பின் மூலம்
அழவைத்தார்.
உலகிலேயே நகைச்சுவை
நடிகர்களில் இருவருக்கு
மட்டும்தான் சிலை அமைக்கப்பட்ட
பெருமை உண்டு. ஒருவர் சார்லின்
சாப்ளின், மற்றொருவர்
கலைவாணர்.

*********************************
நாகர்கோவில் அருகே உள்ள
ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல்
ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள்
பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப்
பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள்.
நாகர்கோவில் சுடலைமுத்து
கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே
என்.எஸ்.கே!
வறுமையின் காரணமாக நான்காம்
வகுப்புடன் கலைவாணரின்
பள்ளிக்கூடப் படிப்பு
நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக்
கொட்டகையில் சோடா, கலர் விற்கத்
தொடங்கினார். அப்படித்தான் நாடக
ஆர்வம் ஆரம்பம்!
ஆனந்த விகடனில் தான் எழுதிய
' சதிலீலாவதி' தொடரை அதே
பெயரில் படமாக்கினார்
என்.எஸ்.வாசன். அதுதான்
கலைவாணரின் முதல் படம் ஆனால்,
' சதி லீலாவதி ' யை
முந்திக்கொண்டு என்.எஸ்.கே.
அடுத்து நடித்த ' மேனகா ' படமே
முதலில் திரைக்கு வந்தது.
மொத்தம் 122 படங்களில்
நடித்திருக்கிறார்!
' வசந்தசேனா ' படப்பிடிப்புக்காக
கலைவாணர் அடங்கிய குழு
ரயிலில் புனே சென்றது.
அப்போது ப டத்தின் தயாரிப்பாளர்
ரயிலைத் தவறிவிடவே.
வழிச்செலவுக்கு மதுரத்தின்
நகைகளை விற்றே குழுவினரின்
பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச்
சமயம்தான் இருவருக்கும் காதம்
பூத்தது!
தனக்கு ஏற்கெனவே திருமணம்
நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை
மணந்தார் என்.எஸ்.கே
கலைவாணருக்கு ஏற்கெனவே
திருணமான விஷயத்தை அவரது
குழுவில் இருந்த புளிமூட்டை
ராமசாமி என்பவர் மதுரத்திடம்
போட்டு உடைக்க, இதனால் சில
நாட்கள் கலைவாணரிடம் மதுரம்
பேசாமல் இருந்திருக்கிறார்.
பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா
காலட்சேபம் பிரபலம். நந்தனாரை
கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம்
கோபிக்கவே, ' பாரதியார் சாப்பிட
வராமல் நந்தனாரை
எழுதிக்கொண்டு இருந்தபோது,
' நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும்
வேண்டாம். சாப்பிட வாங்க! ' என்று
சலித்துக்கொண்டாராம் அவர்
மனைவி செல்லம்மா. அதில்
இருந்து உருவியதுதான் இந்த
கிந்தனார்! ' என்று மதுரத்தைச்
சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு
பெண் குழந்தை (கலைச்செல்வி)
பிறந்து நான்கே மாதங்களில்
இறந்துவிட்டது. அதன் பிறகு,
அவர்களுக்குக் குழந்தை இல்லை.
அதனால், மதுரம் தன் தங்கை
டி.ஏ.வேம்பு அம்மாளை
கலைவாணருக்கு மூன்றாவது
தாரமாகத் திருமணம்
செய்துவைத்தார். அவர்களுக்கு
ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
' மணமகள் ' படத்தில் பத்மினியை
அறிமுகப்படுத்தி அவர் ' நாட்டியப்
பேரொளி ' பட்டம் பெறக் காரணமாக
இருந்தார். அந்தப் படத்தில்
பாலையாவின் நடிப்பை பாராட்டி,
தனது விலை உயர்ந்த காரை
அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத்
தமிழகத்துக்கு
அறிமுகப்படுத்தியவர்.
' உடுமலைக்கவியை' கலைவாணர்
வாத்தியாரே என்று தான்
அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத்
தேர்தல் காஞ்சிபுரத்தில்
அண்ணாவை எதிர்த்து
நின்றவர்.ஒரு டாக்டர்.
அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு
வந்த கலைவாணர், ஆரம்பத்தில்
இருந்து கடைசி வரை அந்த
டாக்டரை புகழ்ந்து பேசினார்.
' இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு
அனுப்பினால் உங்களுக்கு இங்கு
வைத்தியம் பார்ப்பது யார்? இவரை
உங்கள் ஊரிலேயே
வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனால், டாக்டருக்கு யாரும்
ஓட்டுப் போடாதீர்கள்.
அண்ணாவையே தேர்ந்தெடுங்கள் '
என்றார். அண்ணா உட்பட அனைவரும்
கைதட்டி ரசித்தனர்!
' இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர்
லட்சுமி காந்தன் கொலை வழக்கில்,
கலைவாணருக்கும் தியாகராஜ
பாகவதருக்கும் மறைமுகத்
தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின்
பேரில் இருவரும் கைதானார்கள்
லண்டன் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்ததில்
கலைவாணர் விடுவிக்கப்பட்டார்.
' உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு
தெரியுமா? கொலை நடந்து
அன்று கோவையில் காருக்கு
பெட்ரோல் போட்டதுக்கான ரசீது
அவரிடம் இருந்தது. அதை
வைத்துத்தான் அவர் விடுதலை
ஆனார்! ' – கலைவாணர்
குடும்பத்தினரைப் பார்க்கும்போது
எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம்
இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து
விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு
நடந்த பாராட்டு விழாவில் தான்
அவருக்கு ' கலைவாணர் ' என்று
பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர்
பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த
பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த
' ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே.
தம்பதியரின் நகைச்சுவை இல்லை.
' என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி
பிரிந்துவிட்டதாக ' பரபரப்பாக
எழுதினார்கள். அப்போது
நடைபெற்ற மதுரத்தின் தம்பி
திருமணத்துக்கு வந்த பாகவதர்,
' எங்களை யாரும் பிரிக்க
முடியாது. எம்.என்றால் மதுரம்,
கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால்
தியாகராஜ பாகவதர். இதுதான்
எம்.கே.டி.! ' என்று சொல்லி
உணர்ச்சிவசப்பட்டார்!
'' என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி
சாப்ளினை ஆயிரம் துண்டுகள்
ஆக்கினால் கிடைக்கும் ஒரு
துண்டுக்குக்கூட நான் ஈடாக
மாட்டேன்! '' என்பார் என்.எஸ்.கே.
தன்டைக்கமாக!
கலைவாணர் தீராத வயிற்று
வலியால் மருந்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர்.
வெளியூரில் இருந்ததால் அவரால்
உடனே வந்து பார்க்க
முடியவில்லை. என்.எஸ்.கே-வே
எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல்
அனுப்பினார், ' நீ என்னைக்
காணவராவிட்டால், பத்திரிகைகள்
உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ
எனக்கு செய்த உதவியை நான்
அறிவேன்.
ஒரு கட்டத்தில் கொடுத்துக்
கொடுத்தே இல்லாமல்
ஆகிப்போனார். அப்போது அவரிடம்
வேலை செய்த ஒருவர், ' எனக்குத்
திருமணம் ' என்று வந்து நிற்கிறார்.
சுற்றும்முற்றும் பார்த்தபோது
கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி
கூஜா. அதை எடுத்துக் கொடுத்து,
' இதை விற்றுத் திருமணச்
செலவுக்கு வைத்துக்கொள் '
என்றார்!
' தம்பி எவரேனும் என்னிடம் உதவி
கேட்டு, நான் இல்லை என்றும்
கூறும் நிலை வந்தால், நான்
இல்லாமல் இருக்க வேண்டும்! ' என்று
அடிக்கடி கூறுவார். யார் எவர்
என்று கணக்குப் பார்க்காமல் வாரி
வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன்
கலைவாணர் வீட்டு வாசலில் வந்து
நிற்பாராம். இவரும் பணம்
கொடுப்பார். ' அவன் உங்களை
ஏமாற்றுக்கிறான் ' என்று வீட்டில்
உள்ளவர்கல் சொல்லவே, ' அவன்
ஏமாத்தி என்ன மாடி வீடா
கட்டப்போறான். வயித்துக்குத்தானே
சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப்
போகட்டுமே ' என்பாராம்!
கலைவாணர், காந்தி பக்தர்
நாகர்கோவிலில் காந்திக்குத் தன்
சொந்தப் பணத்தில் தூண்
எழுப்பினார்.
சென்னையில் ' சந்திரோதயம்' நாடகம்
பெரியார் தலைமையில் நடந்தது.
' நாடகம். சினிமாவால்தான் மக்கள்
பாழாகிறார்கள்! ' என்று அடித்துப்
பேசி அமர்ந்தார் பெரியார்.
அடுத்துப் பேசிய
என்.எஸ்.கே. ' பெரியார் சொன்னவை
அனைத்தும் சரியே. நாங்கள்
கொள்ளை அடிக்கிறோம். எங்களால்
நன்மையைவிட கேடுகளே அதிகம்! '
என்றார். அந்த நேர்மையும்
துணிச்சலும் கலைவாணர்
கைவண்ணம்!
சேலம் அருகே தாரமங்கலம்
பஞ்சாயத்தில் நடைபெற்ற
அண்ணாவின் படத் திறப்பு
விழாதான் கலைவாணர்
கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.
அதே போல் அண்ணா கலந்துகொண்ட
கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின்
சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு
மருத்துவமனையில் இருந்த சமயம்,
அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி
வதந்திகள் பரவின, ' மதுரம், நான்
சாகலேன்னா இவங்க விட
மாட்டாங்கபோல. இவங்க
திருப்திக்காகவாவது ஒரு தரம்
நான் அவசியம் சாகணும்
போலிருக்கே என்றாராம்!
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின்**
உடல்நிலை மோசமானது.
மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
மருந்து உண்பதை
நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு
ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார்.
தமிழகத்தின் ஒவ்வொரு வீடும்
துக்கத்தில் மூழ்கிய தினம் அது!

********************************
நாகர்கோவில் அருகே உள்ள
ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல்
ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள்
பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப்
பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள்.
நாகர்கோவில் சுடலைமுத்து
கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே
என்.எஸ்.கே!
வறுமையின் காரணமாக நான்காம்
வகுப்புடன் கலைவாணரின்
பள்ளிக்கூடப் படிப்பு
நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக்
கொட்டகையில் சோடா, கலர் விற்கத்
தொடங்கினார். அப்படித்தான் நாடக
ஆர்வம் ஆரம்பம்!
ஆனந்த விகடனில் தான் எழுதிய
' சதிலீலாவதி' தொடரை அதே
பெயரில் படமாக்கினார்
என்.எஸ்.வாசன். அதுதான்
கலைவாணரின் முதல் படம் ஆனால்,
' சதி லீலாவதி ' யை
முந்திக்கொண்டு என்.எஸ்.கே.
அடுத்து நடித்த ' மேனகா ' படமே
முதலில் திரைக்கு வந்தது.
மொத்தம் 122 படங்களில்
நடித்திருக்கிறார்!
' வசந்தசேனா ' படப்பிடிப்புக்காக
கலைவாணர் அடங்கிய குழு
ரயிலில் புனே சென்றது.
அப்போது ப டத்தின் தயாரிப்பாளர்
ரயிலைத் தவறிவிடவே.
வழிச்செலவுக்கு மதுரத்தின்
நகைகளை விற்றே குழுவினரின்
பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச்
சமயம்தான் இருவருக்கும் காதம்
பூத்தது!
தனக்கு ஏற்கெனவே திருமணம்
நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை
மணந்தார் என்.எஸ்.கே
கலைவாணருக்கு ஏற்கெனவே
திருணமான விஷயத்தை அவரது
குழுவில் இருந்த புளிமூட்டை
ராமசாமி என்பவர் மதுரத்திடம்
போட்டு உடைக்க, இதனால் சில
நாட்கள் கலைவாணரிடம் மதுரம்
பேசாமல் இருந்திருக்கிறார்.
பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா
காலட்சேபம் பிரபலம். நந்தனாரை
கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம்
கோபிக்கவே, ' பாரதியார் சாப்பிட
வராமல் நந்தனாரை
எழுதிக்கொண்டு இருந்தபோது,
' நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும்
வேண்டாம். சாப்பிட வாங்க! ' என்று
சலித்துக்கொண்டாராம் அவர்
மனைவி செல்லம்மா. அதில்
இருந்து உருவியதுதான் இந்த
கிந்தனார்! ' என்று மதுரத்தைச்
சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு
பெண் குழந்தை (கலைச்செல்வி)
பிறந்து நான்கே மாதங்களில்
இறந்துவிட்டது. அதன் பிறகு,
அவர்களுக்குக் குழந்தை இல்லை.
அதனால், மதுரம் தன் தங்கை
டி.ஏ.வேம்பு அம்மாளை
கலைவாணருக்கு மூன்றாவது
தாரமாகத் திருமணம்
செய்துவைத்தார். அவர்களுக்கு
ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
' மணமகள் ' படத்தில் பத்மினியை
அறிமுகப்படுத்தி அவர் ' நாட்டியப்
பேரொளி ' பட்டம் பெறக் காரணமாக
இருந்தார். அந்தப் படத்தில்
பாலையாவின் நடிப்பை பாராட்டி,
தனது விலை உயர்ந்த காரை
அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத்
தமிழகத்துக்கு
அறிமுகப்படுத்தியவர்.
' உடுமலைக்கவியை' கலைவாணர்
வாத்தியாரே என்று தான்
அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத்
தேர்தல் காஞ்சிபுரத்தில்
அண்ணாவை எதிர்த்து
நின்றவர்.ஒரு டாக்டர்.
அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு
வந்த கலைவாணர், ஆரம்பத்தில்
இருந்து கடைசி வரை அந்த
டாக்டரை புகழ்ந்து பேசினார்.
' இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு
அனுப்பினால் உங்களுக்கு இங்கு
வைத்தியம் பார்ப்பது யார்? இவரை
உங்கள் ஊரிலேயே
வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனால், டாக்டருக்கு யாரும்
ஓட்டுப் போடாதீர்கள்.
அண்ணாவையே தேர்ந்தெடுங்கள் '
என்றார். அண்ணா உட்பட அனைவரும்
கைதட்டி ரசித்தனர்!
' இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர்
லட்சுமி காந்தன் கொலை வழக்கில்,
கலைவாணருக்கும் தியாகராஜ
பாகவதருக்கும் மறைமுகத்
தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின்
பேரில் இருவரும் கைதானார்கள்
லண்டன் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்ததில்
கலைவாணர் விடுவிக்கப்பட்டார்.
' உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு
தெரியுமா? கொலை நடந்து
அன்று கோவையில் காருக்கு
பெட்ரோல் போட்டதுக்கான ரசீது
அவரிடம் இருந்தது. அதை
வைத்துத்தான் அவர் விடுதலை
ஆனார்! ' – கலைவாணர்
குடும்பத்தினரைப் பார்க்கும்போது
எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம்
இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து
விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு
நடந்த பாராட்டு விழாவில் தான்
அவருக்கு ' கலைவாணர் ' என்று
பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர்
பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த
பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த
' ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே.
தம்பதியரின் நகைச்சுவை இல்லை.
' என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி
பிரிந்துவிட்டதாக ' பரபரப்பாக
எழுதினார்கள். அப்போது
நடைபெற்ற மதுரத்தின் தம்பி
திருமணத்துக்கு வந்த பாகவதர்,
' எங்களை யாரும் பிரிக்க
முடியாது. எம்.என்றால் மதுரம்,
கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால்
தியாகராஜ பாகவதர். இதுதான்
எம்.கே.டி.! ' என்று சொல்லி
உணர்ச்சிவசப்பட்டார்!
'' என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி
சாப்ளினை ஆயிரம் துண்டுகள்
ஆக்கினால் கிடைக்கும் ஒரு
துண்டுக்குக்கூட நான் ஈடாக
மாட்டேன்! '' என்பார் என்.எஸ்.கே.
தன்டைக்கமாக!
கலைவாணர் தீராத வயிற்று
வலியால் மருந்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர்.
வெளியூரில் இருந்ததால் அவரால்
உடனே வந்து பார்க்க
முடியவில்லை. என்.எஸ்.கே-வே
எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல்
அனுப்பினார், ' நீ என்னைக்
காணவராவிட்டால், பத்திரிகைகள்
உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ
எனக்கு செய்த உதவியை நான்
அறிவேன்.
ஒரு கட்டத்தில் கொடுத்துக்
கொடுத்தே இல்லாமல்
ஆகிப்போனார். அப்போது அவரிடம்
வேலை செய்த ஒருவர், ' எனக்குத்
திருமணம் ' என்று வந்து நிற்கிறார்.
சுற்றும்முற்றும் பார்த்தபோது
கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி
கூஜா. அதை எடுத்துக் கொடுத்து,
' இதை விற்றுத் திருமணச்
செலவுக்கு வைத்துக்கொள் '
என்றார்!
' தம்பி எவரேனும் என்னிடம் உதவி
கேட்டு, நான் இல்லை என்றும்
கூறும் நிலை வந்தால், நான்
இல்லாமல் இருக்க வேண்டும்! ' என்று
அடிக்கடி கூறுவார். யார் எவர்
என்று கணக்குப் பார்க்காமல் வாரி
வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன்
கலைவாணர் வீட்டு வாசலில் வந்து
நிற்பாராம். இவரும் பணம்
கொடுப்பார். ' அவன் உங்களை
ஏமாற்றுக்கிறான் ' என்று வீட்டில்
உள்ளவர்கல் சொல்லவே, ' அவன்
ஏமாத்தி என்ன மாடி வீடா
கட்டப்போறான். வயித்துக்குத்தானே
சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப்
போகட்டுமே ' என்பாராம்!
கலைவாணர், காந்தி பக்தர்
நாகர்கோவிலில் காந்திக்குத் தன்
சொந்தப் பணத்தில் தூண்
எழுப்பினார்.
சென்னையில் ' சந்திரோதயம்' நாடகம்
பெரியார் தலைமையில் நடந்தது.
' நாடகம். சினிமாவால்தான் மக்கள்
பாழாகிறார்கள்! ' என்று அடித்துப்
பேசி அமர்ந்தார் பெரியார்.
அடுத்துப் பேசிய
என்.எஸ்.கே. ' பெரியார் சொன்னவை
அனைத்தும் சரியே. நாங்கள்
கொள்ளை அடிக்கிறோம். எங்களால்
நன்மையைவிட கேடுகளே அதிகம்! '
என்றார். அந்த நேர்மையும்
துணிச்சலும் கலைவாணர்
கைவண்ணம்!
சேலம் அருகே தாரமங்கலம்
பஞ்சாயத்தில் நடைபெற்ற
அண்ணாவின் படத் திறப்பு
விழாதான் கலைவாணர்
கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.
அதே போல் அண்ணா கலந்துகொண்ட
கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின்
சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு
மருத்துவமனையில் இருந்த சமயம்,
அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி
வதந்திகள் பரவின, ' மதுரம், நான்
சாகலேன்னா இவங்க விட
மாட்டாங்கபோல. இவங்க
திருப்திக்காகவாவது ஒரு தரம்
நான் அவசியம் சாகணும்
போலிருக்கே என்றாராம்!
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின்
உடல்நிலை மோசமானது.
மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
மருந்து உண்பதை
நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு
ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார்.
தமிழகத்தின் ஒவ்வொரு வீடும்
துக்கத்தில் மூழ்கிய தினம் அது!

***********************************

கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்
பிறந்தநாள் இன்று (நவம்பர் 29).
அவரைப் பற்றிய அரிய
முத்துக்கள் பத்து…
 நாகர்கோவில்
ஒழுகினசேரி யில் பிறந்தவர்.
வறுமையால் 4-ம் வகுப்புடன்
படிப்பை நிறுத்திவிட்டு
வேலைக்குப் போனார்.
காலையில் டென்னிஸ் பந்து
பொறுக்கிப் போடும் வேலை.
பகலில் மளிகைக் கடையில்
பொட்டலம் மடிக்கும் வேலை.
மாலையில் நாடகக் கொட்ட
கையில் சோளப்பொரி,
கடலை மிட்டாய், முறுக்கு
விற்பனை.
 நாடக மேடை அவரை
ஈர்த்தது. மகனின் ஆர்வத்தைக்
கண்ட தந்தை அந்த ஊரில் நாடகம்
போட வந்த ஒரிஜினல் பாய்ஸ்
கம்பெனியில்
சேர்த்துவிட்டார். பல நாடக
கம்பெனிகளில்
பணியாற்றினார். நாடகத்தில்
வில்லுப்பாட்டு போன்ற பல
சோதனை முயற்சிகளை
மேற்கொண்டவர்.
 பல நாடகங்களை எழுதி
இயக்கியுள்ளார்.
திரையுலகில் கொடிகட்டிப்
பறந்தபோதும் நாடகம் மீதான
ஈர்ப்பு குறையவில்லை.
மற்றவர்களுக்கு
உதவுவதற்காகவே பலமுறை
நாடகம் போட்டிருக்கிறார்.
 இவரது திரையுலக
வாழ்வைத் தொடங்கிவைத்த
படம் ‘சதிலீலாவதி’. ஆனால்,
அதன் பிறகு இவர் நடித்த
‘மேனகா’ முதலில்
வெளிவந்தது. முதல்
படத்திலேயே தனக்கான
காட்சிகளை எழுதினார்.
நகைச்சுவைக்கு என்று தனி
ட்ராக் எழுதிய முதல்
படைப்பாளி.
 நடிகை பத்மினி, உடுமலை
நாராயண கவியை அறிமுகம்
செய்தது இவர்தான்.
பாலையாவின் நடிப்பை
பாராட்டி தன் விலை உயர்ந்த
காரை பரிசளித்தார்.
காந்தியடிகளின் தீவிர பக்தர்.
அவரது நினைவைப்
போற்றும் வகையில் தன்
ஊரில் சொந்த செலவில்
நினைவுத் தூண்
எழுப்பினார்.
 சார்லி சாப்ளினுடன்
ஒப்பிட்டுப் பேசியதற்கு,
‘சாப்ளினை ஆயிரம் துண்டு
போட்டாலும் அதில் ஒரு
துண்டுக்குகூட நான் ஈடாக
மாட்டேன்’ என்று
தன்னடக்கத்துடன் கூறினார்.
இவரது கிந்தனார் காலட்சேபம்
மிகவும் பிரபலம்.
 தமிழ் சினிமா வரலாற்றில்
நகைச்சுவையை
பாடல்களாகவும் அமைக்க
முடியும் என்பதை
நிரூபித்தவர். சொந்தக்
குரலில் பல பாடல்களைப்
பாடியுள்ளார். சில படங்களை
இயக்கியுள்ளார்.
அண்ணாவுக்காக தேர்தல்
பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர்,
அவரை எதிர்த்துப்
போட்டியிட்ட ஒரு டாக்டரைப்
பற்றி புகழ்ந்து பேசினார்.
கடைசியில், ‘இவ்வளவு நல்ல
டாக்டரை சட்டசபைக்கு
அனுப்பினால் உங்களுக்கு
யார் வைத்தியம் பாப்பாங்க?
அதனால் அவரை இங்கேயே
வைத்துக்கொண்டு
அண்ணாவுக்கு ஓட்டு போட்டு
சட்டசபைக்கு
அனுப்பிவையுங்கள்’ என்றார்.
 குறுகிய காலத்தில் சுமார்
150 திரைப்படங்களில் நடித்தவர்.
1947-ல் சென்னை
திருவல்லிக்கேணி நடராஜா
கல்விக் கழகம் சார்பில்
இவருக்கு ‘கலைவாணர்’ பட்டம்
வழங்கப்பட்டது.
 கலைவாணருக்கும்
எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு
இருந்தது. உதவி என்று
கேட்டு யார் வந்தாலும்
அள்ளிக் கொடுத்த வள்ளல் இவர்.
 நகைச்சுவையில்
புரட்சியை ஏற்படுத்திய
இவரது நினைவாக
சென்னையில் உள்ள அரசு
அரங்கத்துக்கு ‘கலைவாணர்
அரங்கம்’ என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளது.
நகைச்சுவை மூலம் மக்களின்
சிந்தனையைத் தூண்டி,
இன்றும் மக்களின் மனங்களில்
வாழும் என்.எஸ்.கே. 49 வயதில்
காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக