வெள்ளி, 11 நவம்பர், 2016

நடிகர் எஸ். ஏ. அசோகன் நினைவு தினம் நவம்பர் 11.

நடிகர் எஸ். ஏ. அசோகன் நினைவு தினம் நவம்பர் 11.

எஸ். ஏ. அசோகன் (S. A. Ashokan) ஒரு
தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர்
பொதுவாக அசோகன்
என்றறியப்படுகிறார்.  தமிழ்த்
திரைப்படவுலகில் சிறந்த வில்லன் நடிகராக
அறியப்பட்ட இவர் ஒரு குணசித்திர
நடிகருமாவார்.
இளமைப் பருவம்
திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது
இயற்பெயர் ஆன்டனி ஆகும். தனது
சிறுவயது முதலே, மேடைநாடகங்களில்
பங்கேற்பதிலும் பேச்சுப் போட்டி மற்றும்
கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம்
காட்டினார். திருச்சியிலுள்ள புனித
சூசையப்பர் கல்லூரியில் தனது இளங்கலைப்
பட்டப்படிப்பை முடித்தார்.
தொழில்
வாழ்க்கை
பட்டப்படிப்பு முடித்த பின்னர் இயக்குநர் டி.
ஆர். ராமண்ணாவைச் சந்தித்தார். அவர்
அசோகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ராமண்ணாவின் விருப்பப்படி, ஆன்டனி
என்ற தன் பெயரை அசோகன் என
திரையுலகிற்காக மாற்றிக்
கொண்டார். முதன்முதலில்
ஔவையார் என்ற தமிழ்த் திரைப்படத்தில்
அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில்
வெளியான கப்பலோட்டிய தமிழன்
திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னேறத்
தொடங்கினார். இத்
திரைப்படத்தில் ஆஷ் துரை வேடமேற்று
நடித்திருந்தார். 1960 மற்றும் 1970 களில்
பெரும்பாலும் வில்லன்
கதாபாத்திரங்களிலேயே நடித்தாலும் பல
குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில் அவரது குரலின்
தொனியும், வசனங்களை அவர்
உச்சரித்த பாணியும் அவருக்கு
நல்லபெயரைப் பெற்றுத்தந்தன.
குறிப்பிடத்தக்க
திரைப்படங்கள்
1. வல்லவனுக்கு வல்லவன்
2. கர்ணன்
3. உலகம் சுற்றும் வாலிபன்
4. கந்தன் கருணை
5. வீரத்திருமகன்
6. ஆட்டுக்கார அலமேலு
7. அடிமைப் பெண்
8. அன்பே வா
9. காஞ்சித் தலைவன்
10. ராமன் தேடிய சீதை
மறைவு
எஸ். ஏ. அசோகன் 1982 நவம்பர் 11 அன்று
தனது 52ஆவது அகவையில் மாரடைப்பால்
காலமானார். மூன்று ஆண்டுகளின்
பின்னர் இவரது மனைவி மேரி ஞானம்
(சரசுவதி) காலமானார். இவர்களின்
இரண்டு மகன்களில் அமல்ராஜ்
காலமாகிவிட்டார். மற்றையவர்
வின்சென்ட் அசோகன்
தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து
வருகிறார்.
***********************************

70களின் பிற்பகுதி வரை வந்த
பெரும்பாலான தமிழ் படங்களில்
வில்லன் கதாபாத்திரத்துக்கு
கொடுமை செய்யும் வேலையை மட்டுமே
இயக்குனர்கள் கொடுத்தார்கள்.
மக்கள் வில்லனைப் பார்த்து பயப்படும் போல்
காட்சி அமைப்பு இருக்குமே தவிர, ரசிக்கும்
படியான வில்லனிசம் குறைவாகவே இருந்தது.
ரஜினிகாந்த் 16 வயதினிலே,மூன்றுமுடிச்சு
படங்களில் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை
கொண்டுவந்தார். ஆனால்
உடனடியாக அவருக்கு கிடைத்த இணை
நாயகன், கதாநாயகன் வேடங்களால்
அவர் வில்லத்தனத்திற்க்கு வேலையில்லாமல்
போய்விட்டது. பின் வந்த சத்யராஜ்
எல்லோராலும் ரசிக்கப்படும் வில்லத்தனத்தை
கொண்டுவந்தார். 24 மணி நேரத்தில்
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறங்களே,
காக்கி சட்டையில் தகடு தகடு என
வில்லத்தனத்தில் ஒரு நாவல்டியை
கொண்டு வந்தார். தற்போது கனா
கண்டேன் பிரித்விராஜ் வரை இது
தொடர்கிறது.
ஆனால் இம்மாதிரி இல்லாத 60,70
களில் கிடைத்த வேடங்களில் மாறுபட்ட பாடி
லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மூலம்
ரசிக்கும்படியான வில்லத்தனத்தை
காட்டியவர் எஸ் ஏ அசோகன். 50 களின்
இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான
இவர் 80கள் வரை பல வேடங்களில் நடித்தார்.
இவர் ஏற்ற சில முக்கிய வேடங்களைப்
பார்க்கலாம்.
அன்பே வா
எம் ஜி யார்க்கும் சரோஜா தேவிக்கும்
இடையேயான ஈகோ மோதலில், தனக்கு பிடிக்காத
அத்தானான விமானி அசோகனை திருமணம்
செய்து கொள்ள சம்மதிப்பார்.
ஆனால் உண்மை தெரிந்ததும் இவர்
விட்டுக்கொடுத்து விட்டு,
கிறுக்கத்தான் கிறுக்கத்தான் என்று
சொல்வாயே என்று ஆரம்பித்து
அமர்த்தலாக வசனம் பேசி விட்டு
செல்வார். இந்த காட்சியில் இவரது
ஸ்டைல் மிக ரசிக்கும்படியாக இருக்கும்.
மூன்றெழுத்து
புதையல் ரகசியத்தை வைத்திருக்கும்
மூன்றெழுத்தில் ஒரு எழுத்து இவரிடம்
இருக்கும். மிகப்பெரிய குடுமியுடன்,
வேட்டிமீது பெல்ட் அணிந்து இழுத்து
இழுத்து பேசும் மாடுலேஷனில்
பின்னியிருப்பார். இந்த வாய்ஸ்தான்
எல்லா மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் தற்போது
பயன்படுகிறது.
ரகசிய போலிஸ் 115
இதில் செல்வந்தரின் மகனாக இருந்து
கொண்டு, சமூக விரோதியாக இருக்கும்
வேடம். நடனக் காரியுடன் காதலும் உண்டு.
இம்மாதிரி வேடங்களுக்கு இவர் உடல் வாகு
எளிதில் பொருந்திப் போகும். அதற்கு
ஏற்றார் போல குரலிலும் ஒரு கண்ணியத்தைக்
கொண்டுவந்து விடுவார்.
உலகம் சுற்றும் வாலிபன்
விஞ்ஞானி பைரவனாக அசத்தியிருப்பார்
இந்தப் படத்தில். எம்ஜியார் (விஞ்ஞானி
முருகன்) மின்னலை துப்பாக்கி தோட்டாவில்
அடைக்கும் ரகசியத்தை கண்டு பிடித்துவிட்டு,
ரிலாக்ஸுக்காக காதலி மஞ்சுளா உடன்
உலகம் சுற்ற கிளம்புவார். அப்போது அசோகன் "
முருகன் காதலியோட உலகத்த சுத்தப்
போறான், நான் காரணத்தோட அவன சுத்தப்
போறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு
ரியாக்ஷன் கொடுப்பார்.
அப்போதுதான் படம் களை கட்டும்.
துணிவே துணை
இந்தப் பட ஹீரோ ஜெய்ஷங்கர்
அறிமுகமான இரவும் பகலும் படத்தில் "
இரந்தவனும் சொமந்தவனும்" என்ற
பாடலை பாடியிருப்பார் எஸ் ஏ அசோகன்.
எம்ஜியார் படங்களுக்குப் பின் அதிகமாக
ஜெய்ஷங்கர் படங்களிலேயே அசோகன்
வில்லனாக நடித்தார். எஸ் பி
முத்துராமன் இயக்கிய இந்தப் படத்திலும்
வழக்கமான வில்லன் வேடமே. ஆனால்
இந்தப் படத்தின் கதை,பாடல்கள் மற்றும்
காட்சியமைப்பு காரணமாக எல்லா
வேடங்களும் மனதில் நிற்கின்றன.
அலாவுதீனும் அற்புத விளக்கும்
இந்தப் படத்தில் ஜாடியில் அடைக்கப்
பட்டிருக்கும் பூதமாக கலக்கியிருப்பார்.
இவர் உருவத்துக்கு அந்த வேடம் மிகப்
பொருத்தமாக இருக்கும்.
அப்பாவித்தனமான முகத்துடன், அசட்டு
சிரிப்புடன், கொஞ்சும் குரலில்
பூதமாக வித்தியாசத்தை காட்டியிருப்பார்.
கங்கா, ஜம்பு டைப் கௌபாய் உடை படங்கள்
காமிரா மேன், இயக்குனர் கர்ணன்
ஜெய்ஷங்கரை வைத்து இயக்கிய பல
கௌபாய் படங்களில் இவர் தான்
பெரும்பாலும் வில்லனாக நடித்தார்.
இவரது ஆகிருதி அதற்க்கு உதவியாக
இருந்தது. இப்படங்களில் பல வித்தியாச
மானெரிசங்களை இவர் பயன்படுத்தி
இருந்தாலும் அவை அவ்வளவாக மக்களை
கவரவில்லை என்றே சொல்ல்லாம்
இவர் நடித்த சில படங்கள்
1958 - மாயமனிதன்
1961- மனப்பந்தல், தாய் சொல்லை
தட்டாதே
1962 - கண்னாடி மாளிகை, பாத
காணிக்கை
1963 - இது சத்தியம், காஞ்சித் தலைவன்
1964 - என் கடமை, வாழ்க்கை வாழ்வதற்க்கே
1965 - காட்டு ராணி, தாழம்பூ
1966 - அன்பே வா
1968 - ரகசிய போலிஸ் 115, மூன்றெழுத்து
1973 - உலகம் சுற்றும் வாலிபன், பூக்காரி
1976 - துணிவே துணை
1980 - பில்லா
இவரைப் போலவே வில்லனாக தன் வாழ்வை
தொடங்கிய இவரது மகன்
வின்சென்ட் அசோகன் (ஏய், நீ வேனுன்டா
செல்லம்) தற்போது சில படங்களில்
கதாநாயகனாகவும் (சில நேரங்களில்)
நடித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக