செவ்வாய், 8 நவம்பர், 2016

நடிகர் பி. எஸ். வீரப்பாநினைவு தினம் நவம்பர் 9, 1998.

நடிகர்  பி. எஸ். வீரப்பாநினைவு தினம் நவம்பர் 9, 1998.

பி. எஸ். வீரப்பா  (அக்டோபர் 9, 1911 -
நவம்பர் 9, 1998) புகழ்பெற்ற தமிழ்த்
திரைப்பட நடிகர் ஆவார்.
பெரும்பாலான படங்களில்
வில்லனாக நடித்த இவர் திரைப்படத்
தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஆரம்ப கால
வாழ்க்கை
1911 -ம் ஆண்டு காங்கேயத்தில் பிறந்த
வீரப்பா பொள்ளாச்சியில்
உள்ள தனது தாத்தாவின் வீட்டில்
வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம்
கொண்டிருந்த போதிலும்,
அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும்,
குறைந்த குடும்ப வருமானம் இருந்த
காரணத்தினாலும் பல சிறு
வியாபாரம், தொழில்களில்
ஈடுபட்டார். சென்னைக்கு வரும் முன்னர்
கோயில் திருவிழாக்களில் நடைபெறும்
நாடகங்களில் நடித்து வந்தார்.
சிவன்மலையில் அப்படி நடைபெற்ற ஒரு
நாடகத்தில் இவரைப் பார்த்த கே. பி.
சுந்தராம்பாளும் அவரது சகோதரரும்,
சென்னைக்கு வருமாறும்,
திரைப்படங்களில் நடிக்குமாறும்
வலியுறுத்தினர். சென்னைக்கு வந்த பிறகு
கே. பி. சுந்தராம்பாள் தன்னுடைய ஒரு
சிபாரிசுக் கடிதத்துடன் இவரை இயக்குனர்
எல்லீஸ் ஆர். டங்கனிடம் அனுப்பினார்
[ சான்று தேவை ].
திரைப்பட வாழ்க்கை
பி. எஸ். வீரப்பாவின் உரத்த சத்தத்துடன்
கூடிய பயங்கரச் சிரிப்பு அந்தக்காலத்துத்
திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பிரபலம்
[ சான்று தேவை ]. கே. பி. சுந்தராம்பாள்
முக்கிய வேடத்தில் நடித்த, டங்கனின்
மணிமேகலை என்கிற திரைப்படத்தில் வீரப்பா
அறிமுகமானார். தனது முத்திரைச்
சிரிப்பான உரத்த ஹா ஹா ஹா..
என்பதை சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில்
செய்தார். இந்தச் சிரிப்பிற்குக் கிடைத்த
வரவேற்பின் காரணமாக அதன் பிறகு,
இதை தனது பாணியாக எல்லா
படங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார்.
எம். ஜி. ஆர் , சிவாஜி கணேசன்
போன்றோரிலிருந்து கமல்ஹாசன்,
ரஜினிகாந்த் , விஜயகாந்த் போன்றோர்
படங்கள் வரை நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
ஸ்ரீ முருகன் (1946)
இதய கீதம் (1950)
மாப்பிள்ளை (1952)
மதன மோகினி (1953)
ஜெனோவா (1953)
நாம் (1953)
காவேரி (1955)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
(1956)
மர்ம வீரன் (1956)
மகாதேவி (1957)
தங்கமலை ரகசியம் (1957)
செங்கோட்டை சிங்கம் (1958)
சிவகங்கை சீமை (1959)
பி. எஸ். வீரப்பாவின்
புகழ்பெற்ற நடிப்பு
பாணிகள், முத்திரை
வசனங்கள்
எதிர் நாயகன்களுக்கு உரிய உரத்த
ஹா ஹா ஹா.. சிரிப்பு ( சக்கரவர்த்தி
திருமகள் திரைப்படத்திலிருந்து, கிட்டத் தட்ட
எல்லா படங்களிலும்)
சபாஷ், சரியான போட்டி.. ( வஞ்சிக்கோட்டை
வாலிபன் திரைப்படத்தில்)
மணந்தால் மகாதேவி, இல்லையேல்
மரண தேவி ( மகாதேவி திரைப்படத்தில்)

*********************************
பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல....
பி.எஸ்.வீரப்பா!
அந்த அட்டகாசமான
அதிரடிச் சிரிப்பை தமிழ் சினிமா ரசிகர்களால்
மறக்கவே முடியாது. ஒரு குரூரச் சிரிப்பை அத்தனை
ரசனையாக மாற்றியவர் பி.எஸ்.வீரப்பா.
வில்லனாகத்தான் அவரைப் பல படங்களில்
ரசிகர்கள் பார்த்தார்கள் என்றாலும்
அன்றைய கதாநாயகர்களுக்கு இணையான
உடற்கட்டு, முகவெட்டு
கொண்டவர் அவர். அதைவிட
முக்கியமானது, அவருடைய தமிழ் உச்சரிப்பு.
மிகத் தெளிவாக வசனங்களைப்
பேசக்கூடியவர். அதனால்தான் வில்லனாக
அவர் பேசிய வசனங்கள்கூட,
கதாநாயகர்கள் பேசும் வசனங்களையும்
மிஞ்சி மனதிலே நின்றது, நிற்கிறது. இன்றைய
‘பஞ்ச்’ வசனங்களுக்கு அவரே முன்னோடி.
“சபாஷ்.. சரியான போட்டி” என்ற அவரது
குரல், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில்
இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்
கலந்து’ பாடலுக்கு நடுவே ஒலிக்கும்.
அருமையான அந்தப் பாடலைவிடவும்
வீரப்பாவின் குரல், ரசிகர்களை அதிகளவில்
கவர்ந்தது. இன்றுவரையும் அந்த வசனம்
உயிர்த்திருக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கதாநாயகனாக நடித்த ‘மகாதேவி’
படத்தில், “மணந்தால் மகாதேவி.. இல்லையேல்
மரணதேவி” என்று வீரப்பா பேசிய வசனமும்
தலைமுறை கடந்து உச்சரிக்கப்படுகிறது.
இன்றைய ஈரோடு மாவட்டம் காங்கேயத்தைச்
சேர்ந்தவரான பி.எஸ்.வீரப்பா 1911ல்
பிறந்தவர். பொள்ளாச்சியில் இருந்த
தனது தாத்தா வீட்டில் வளர்ந்தார்.
குடும்பச் சூழலால் சரியாக கல்வி கற்கும்
வாய்ப்பு இல்லை. நாடகங்களில் நடித்தார்.
சிவன்மலை கோவில் திருவிழாவில் ஒரு
நாடகத்தில் நடிக்கும்போது,
கே.பி.சுந்தராம்பாளை சந்திக்கும் வாய்ப்பு
வீரப்பாவுக்குக் கிடைத்தது. அவரை சினிமாவுக்கு
வரும்படி அழைத்தார் கே.பி.எஸ்.
சென்னைக்கு வந்த வீரப்பாவை இயக்குநர்
எல்லீஸ் ஆர்.டங்கனிடம்
கே.பி.சுந்தராம்பாள் அனுப்பிவைத்தார்.
கே.பி.எஸ்ஸின் சிபாரிசால் நடிக்கும்
வாய்ப்பைப் பெற்றார் வீரப்பா.
அப்போது, ‘மணிமேகலை’ என்ற படத்தை டங்கன்
இயக்கி வந்தார். 1939ல் அந்தப் படத்தில்
வீரப்பா அறிமுகமானார்.
தொடர்ந்து ‘உதயணன்
வாசவதத்தா’, ‘ஸ்ரீமுருகன்’ ஆகிய
படங்களிலும் நடித்தார். ஸ்ரீவள்ளி படத்தில்
எம்.ஜி.ஆரும் நடித்தார். இருவருக்கும் அப்போது
தொடங்கிய நட்பு, எம்.ஜி.ஆர் நடித்த
கடைசிப்படமான ‘மதுரையை மீட்ட
சுந்தரபாண்டியன்’ வரை தொடர்ந்தது.
எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான்
“ஹா.. ஹா.. ஹா..” என வீரப்பா
முதன்முதலாகத் தன்னுடைய டிரேட் மார்க்
சிரிப்பை வெளிப்படுத்தினார். அதற்குத்
திரையரங்கில் கிடைத்த பலத்த வரவேற்பைத்
தொடர்ந்து, வீரப்பா நடித்த பல
படங்களிலும் அதேபாணியில்
அட்டகாசமாகச் சிரித்து அசத்தினார்.
அந்த சிரிப்பொலி கேட்டாலே,
திரையரங்கம் அதிருமளவில் கைதட்டல் கேட்கும்.
நடிகராக மட்டுமின்றி
படத்தயாரிப்பாளராகவும் ஆகி
ஆலயமணி, ஆனந்தஜோதி போன்ற பல
வெற்றிப்படங்களை வீரப்பா
தந்துள்ளார். அறிஞர் அண்ணா, கலைஞர்
மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி,
என்.டி.ராமராவ், ஜெயலலிதா என 6
முதல்வர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு
பெற்றவர் பி.எஸ்.வீரப்பா. அவருடைய
நடிப்பிற்கும் சிரிப்பிற்கும் நடிகர்திலகம்
சிவாஜிகணேசனே ரசிகராக இருந்தார்
என்றால் அதைவிட வேறென்ன
பெரிய விருது வேண்டும்?.
எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் நடித்ததுடன்
கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற அடுத்த
தலைமுறை நாயகர்களின் படங்களிலும்
வில்லனாக நடித்தவர் வீரப்பா. 1998ல்
அவர் காலமாகும்வரை திரைத்
தொடர்புகளுடனேயே இருந்தார்.
இன்றுவரையும் நம் காதுகளில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
பி.எஸ்.வீரப்பாவின் கம்பீரமான
சிரிப்பொலி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக