சனி, 7 அக்டோபர், 2017

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் - அக்டோபர் 8 , 1959 .


கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் - அக்டோபர் 8 , 1959 .

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( ஏப்ரல் 13 , 1930 - அக்டோபர் 8 , 1959 ) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை அருகே உள்ள
செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும் ,
கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
பொதுவுடைமை ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர் , நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசிந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.

கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
1. விவசாயி
2. மாடுமேய்ப்பவர்
3. மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5. இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத் தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12. தண்ணீர் வண்டிக்காரர்
13. அரசியல்வாதி
14. பாடகர்
15. நடிகர்
16. நடனக்காரர்
17. கவிஞர்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
இது 1959 -ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய உங்களுடன் கீழக்குறிச்சி தமிழன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :


கருப்பொருள்:இயற்கை
பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு
1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )
6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருப்பொருள்:சிறுவர்
12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
21.தூங்காதே தம்பி தூங்கதே ( நாடோடி மன்னன் 1958 )
22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )
கருப்பொருள்:காதல்,மகிழ்ச்சி,சோகம்
25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )
27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத்திரை 1960 )
39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்:காதல்
1. 51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
2. 52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
3. 53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
4. 54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
5. 55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
6. 56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
7. 57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
8. 58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
9. 59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
10. 60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத்திரை 1960 )
11. 61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
12. 62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
13. 63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
14. 64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
15. 65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
16. 66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
17. 67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
18. 68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
19. 69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
20. 70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
21. 71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )
22. 72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
23. 73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
24. 74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
25. 75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
26. 76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
27. 77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
28. 78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
29. 79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
30. 80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
31. 81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
32. 82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
33. 83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
34. 84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
35. 85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
36. 86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
37. 87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
38. 88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
39. 89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
40. 90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
41. 91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
42. 92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
43. 93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )
கருப்பொருள்:நகைச்சுவை
94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )
கருப்பொருள்: கதைப்பாடல்
104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )
கருப்பொருள்: நாடு
106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )
கருப்பொருள்: சமூகம்
111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)ஸ்ரீ
கருப்பொருள்: அரசியல்
121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
127.தேனாறு பாயுது செங்கதிரும் ( படித்த பெண் 1954 )
கருப்பொருள்: தத்துவம்
128.ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
129.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
130.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
131.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
132.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
133.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
134.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
135.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
136.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
137.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
138.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
139.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
140.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்
139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்: இறைமை
160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பொது
170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
179.கையில வாங்கினேன் ( இரும்புத்திரை 1960 )
180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )


மணி மண்டபம்
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.


 குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

 சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது.

 விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

 பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

 இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

 எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.

 மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

 இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக