வியாழன், 19 அக்டோபர், 2017

கவிஞர் பா.விஜய் பிறந்த நாள் அக்டோபர் 20.


கவிஞர் பா.விஜய் பிறந்த நாள் அக்டோபர்  20.

பா.விஜய் , தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்: ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள்
கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.
இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார்.
2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர்
மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் நடித்த படங்கள்

ஆண்டு திரைப்பபபடம்
2010 ஞாபகங்கள்
2011 இளைஞன்
பா. விஜய் பெற்ற விருதுகள்
ஆண்டு பெற்ற விருதுகள்
2000 சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2001 தமிழ்நாடு திரைப்படச் சங்க விருது
2001 ராஜ் டி.வி. உழைப்பாளர் விருது
2001 வெரைட்டி விருது
2001 பாலர் ஜூனியர் சேம்பர் விருது
2002 லயன்ஸ் கிளப் கவிச்சிற்பி விருது
2002 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது
2003
சர்வதேச தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
2003 வெற்றித் தன்னம்பிக்கையாளர் விருது
2003 சன் பீம் கல்வி நிறுவன விருது
2004 ட்ரைனிட்டி விருது
2004 சன் பீம் கல்வி நிறுவன விருது
2004 த.மு.எ.ச. துறைமுகம் விருது
2004 தேசிய விருது
2005 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது
2005 பாரத் அசோசியேஸன் விருது
2005 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2005 எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது
2005 சென்னை நண்பர்கள் விருது
2005 வெரைட்டி விருது
2005 தினகரன் விருது
2005 பிலிம் டுடே விருது
2006 எம்.ஜி.ஆர். விருது
2006 மலேசிய ஜி.எம்.டி. விருது
2006 தஞ்சை செங்குந்தர் மகாசன விருது
2006
செம்பனார்கோயில் லயன்ஸ் கிளப் வழங்கிய இளம் சாதனையாளர் விருது
2006 கÏர் ரோட்டரி கிளம்ப்பின் மொழிக்காவலர் விருது
2007 கலைமாமணி விருது
2007 ராஜீவ்காந்தி – முப்பனார்விருது
2007 கலைவித்தகர் - கண்ணதாசன் விருது
2007 இளம் கவி அரசர் விருது - கனடா
2007 பாரத் சினி விருது
2008 எம்.ஜி.ஆர். - சிவாஜி விருது
2008 திரை இசை விருது
2008
ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த தொலைக்காட்சி பாடலாசிரியருக்கான விருது
2008 ப்லீம்பேர் விருது
2009 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ்
2009 ப்லீம்பேர் விருது
2009 தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது
2009 பாரத் சினி விருது
2010
தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது சிறந்த பாடலாசிரியர் மற்றும் நடிகருக்கான விருது ஞாபகங்கள்
2010
சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான இசையருவி விருது சர்வம் திரைப்பட பாடல்
2011 சிறந்த பாடலாசிரியருக்கான எடிசன் விருது
2011 BIG FM சிறந்த வெற்றிப் பாடல் விருது
2011 தமிழ்நாடு திரைப்பட சங்க விருது
2011 சிறந்த தொலைக்காட்சி தொடர்ப்பாடல் விருது
2011 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2012 ராஜ் டிவி அகடவிடம் விருது
2012 லயன்ஸ் கிளப் சிறந்த கலைஞர் விருது
2012 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2012 நியூ ஃபிலிம் இந்திய நிறுவன விருது
2012 BIG FM
2012 சிறந்த பாடலாசிரியருக்கான Mirchi Music விருது

பா விஜய்-ன் படைப்புகள்

எண் படைப்பு விளக்கம்
01 இந்தச் சிப்பிக்குள்
02 சுதியோடு வந்த நதி
03 நந்தவனத்து நட்சத்திரங்கள்
04 நிழலில் கிடைத்த நிம்மதி
05 போர்ப் புறா
06 ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது
07 உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று)
08 உடைந்த நிலாக்கள்(பாகம் இரண்டு)
09 உடைந்த நிலாக்கள்(பாகம் மூன்று)
10 சில்மி~pயே
முழுமைய காதல் கவித தொகுப்பு
11 வானவில் பூங்கா (துபாயில் வெளியிட்டத
12
காற்சிலம்பு ஓசையிலே (பாகம் ஒன்று)
13
காற்சிலம்பு ஓசையிலே (பாகம் இரண்டு)
14 நம்பிக்கையுடன்
15
கண்ணாடி கல்வெட்டுகள் - கல்கி தொடர்
16 அரண்மனை இரகசியம் (நாவல்)
17 பா.விஜய் பாடல்கள் (பாகம் ஒன்று)
18 பா.விஜய் பாடல்கள் (பாகம் இரண்டு)
19
உடைந்த நிலாக்கள் பகுதி ஒன்று (ஒலிநாடா)
20 பா.விஜய் கவிதைகள் (ஒலிநாடா)
21 வினாயகர் சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா)
22 கடவுள் வருகிறான் ஜாக்கிரதை (கவிதை)
23 காதல்@காதலிகள்.காம் (கவிதை)
24 பெண்கள் பண்டிகை (கவிதை)
25 இரண்டடுக்கு ஆகாயம் (கவிதை)
26 ஐஸ்கட்டி அழகி (கவிதை)
27 காகித மரங்கள் (கவிதை)
28 கைதட்டல் ஞாபகங்கள் (கவிதை)
29 அடுத்த அக்னி பிரவேசம் (கவிதை)
30 இருநாவல்கள் (நாவல்)
31
போர்ப்புறா - வாழ்க்கைத்தேடி வானம்பாடிகள்
32
18 வயசுல - முழுமையான காதல் கவிதை தொகுப்பு
33 வள்ளுவர் தோட்டம்
34 மஞ்சள் பறவை
35 பேச்சுலர் ரூம்
36 கறுப்பு அழகி
37 ஆப்பில் மாதிரி உன்னை அப்படியே
38 இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு)
39 நண்பன் நண்பி
40 ஒரு கூடை நிலா
41 கண்ணே நீ கயாஸ் தியரி
42 நட்பின் நாட்கள்
43 செய்
44 சமர்
45 ஞாபகங்கள்
46 பா.விஜய் ஓர் பார்வை
47 மோது முன்னேறு
48 தோற்பது கடினம்
49 என் பாட்டுக்கரையில்
50 சௌபர்னிகா
பிரபலமான பாடல்களில் சில...
ஆண்டு திரைப்படம் பாடல்(கள்)
1996 ஞானப்பழம் "மணிமாடக் குயிலே நீ"
1999 நீ வருவாய் என
"பார்த்துப் பார்த்து"
2000
வானத்தைப் போல
"காதல் வெண்ணிலா"
தெனாலி "சுவாசமே"
வெற்றிக் கொடி கட்டு
"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"
சிநேகிதியே "தேவதை வம்சம் நீயே"
பார்வை ஒன்றே போதுமே
"ஏ! அசைந்தாடும் காற்றுக்கும்"
2001
தில் "தில்.. தில்.."
துள்ளுவதோ இளமை
"நெருப்பு கூத்தடிக்குது" All songs except "Kannmunne"
சமுத்திரம் "பைன் ஆப்பிள்"
உள்ளம் கொள்ளை போகுதே
"கவிதைகள் சொல்லவா"
2002
சுந்தரா டிராவல்ஸ்
"மல்லிகை பூவுக்கு மதுர விலாசம்"
சார்லி சாப்ளின்
"முதலாம் சந்திப்பில்"
உன்னை நினைத்து
"பொம்பளைங்க காதலத்தான்"
ரன் "இச்சுத்தா இச்சுத்தா"
2003
ஏப்ரல் மாதத்தில் "மனசே மனசே"
பாய்ஸ்
"னக்கோரு கேர்ள்ப்ரண்ட் வேணுமடா"
2004 ஆட்டோகிராப் "ஒவ்வொரு பூக்களுமே "
2005
அறிந்தும் அறியாமலும்
அனைத்து பாடல்களும்
சந்திரமுகி "அத்திந்தோம்"
2006 பட்டியல் அனைத்து பாடல்களும்
2007
போக்கிரி
"டோலே டோலே", "நீ முத்தம் ஒன்று" & "என் செல்லம் பேரு"
உன்னாலே உன்னாலே
"நான்கு பாடல்கள்" (Out of 6)
சிவாஜி "ஒரு கூடை சன் லைட்", "ஸ்டைல்"
அழகிய தமிழ் மகன்
"மதுரைக்கு போகாதடி"
பில்லா அனைத்து பாடல்களும்
2008
பீமா "ஒரு முகமோ"
குருவி
"பலானது" & "மொழ மொழன்னு"
சக்கரகட்டி "சின்னம்மா" & "நான் எப்போது"
குசேலன் "சொல்லு சொல்லு"
2009
வில்லு "நீ கோப பட்டால்"
அயன் "ஓயாயியே" & "ஹனி ஹனி"
சர்வம் அனைத்து பாடல்களும்
தோரணை
"வா செல்லம்" & "மஞ்சசேல மந்தாகினி"
ஆதவன் ஹசிலி பிசிலி
முத்திரை
"நைட் இஸ் ஸ்டில் யங்" & "நைட் இஸ் ஸ்டில் யங் (Remix"
2010
தீராத விளையாட்டு பிள்ளை
"தீராத விளையாட்டு பிள்ளை" தவிர அனைத்து பாடல்களும்
எந்திரன் "கிளிமஞ்சாரோ"
2011
மாப்பிள்ளை "ஒன்னு ரெண்டு"
காவலன் "விண்ணை காப்பான்"
சிறுத்தை "தாலாட்டு"
2011 கோ "அக நக"
2012
7ஆம் அறிவு
"ஒ ரிங்கா ரிங்கா" & "இன்னும் என்ன தோழா"
நண்பன் "இருக்கானா இல்லையண்ணா"
2012
கலகலப்பு "அனைத்து பாடல்களும்"
மிரட்டல்
"முக மூடி போட நிலவி & ரேடியோ ரேடியோ"
2012 மாற்றான் "தீயே தீயே"



நன்நம்பிக்கை கவிஞனுக்கு வாழ்த்துகள்! #பா.விஜய் பிறந்தநாள் பதிவு விகடன்.

“நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே... ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ, அது பனியோ நீ மோதி விடு...!"
என்று வார்த்தை உரம் போட்டு, இளம் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டிய கவிஞர் பா.விஜயின் பிறந்த நாள் இன்று.
வித்தகக் கவிஞர் என்று போற்றப்படும் பா.விஜயின் பூர்வீகம் கும்பகோணம். பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில். அப்பா பாலகிருஷ்ணன் தனியார் நிறுவன ஊழியர். அம்மா சரஸ்வதி, ஆசிரியை. சிறு வயதிலேயே விஜயை எழுத்தார்வம் ஆட்கொண்டு விட்டது. படிப்பு இரண்டாம்பட்சம் ஆகிவிட்டது. பிளஸ்டூவில் தோல்வியடைந்து மனம் ஒடிந்து நின்ற விஜயை அவரது அப்பா தேற்றினார்.
‘‘படிப்பு போனாப் போகட்டும்... உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் எழுத வருதே. அதுல உன்னை வளர்த்துக்கோ...’’
அந்த வார்த்தைகள் விஜயை உந்தித் தள்ளின. நன்றாக எழுத வேண்டும் என்றால் நிறைய வாசிக்க வேண்டும். தமிழில் உள்ள தொன்மையான இலக்கியங்கள், இலக்கண நூல்களை எல்லாம் தீவிரமாக வாசித்தார். கவிதைகளை எழுதிக் குவித்தார். விஜயின் தீவிரத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்த அவரது தந்தை, மீண்டும் உற்சாகத்தைப் பற்ற வைத்தார்.
Advertisement
“இவ்வளவு நல்லா எழுதுற நீ, திரைப்படங்களுக்குப் பாட்டு எழுத முயற்சி செய்யலாமே’’
விஜய் அந்த வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கினார்.
பாக்யராஜ் மூலம் வாய்ப்பு!
இயக்குனர் பாக்யராஜ், விஜய்க்கு திரையுலக வாசலைத் திறந்து விட்டார். பாக்யராஜ் உடனான ஒரு சந்திப்பில், தாஜ்மஹாலைப் பற்றி, நீரோ மன்னனைப் பற்றி, கஜினியைப் பற்றியெல்லாம் பேசி பிரமிப்பூட்டினார். விஜயின் இலக்கியப் புலமையையும், வரலாற்றுப் புலமையையும் கணித்த பாக்யராஜ், விஜய்க்கு பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். தான் இசையமைத்து நடித்த "ஞானப்பழம்" படத்திலேயே முதல் பாடலை எழுதும் வாய்ப்பையும் வழங்கினார்.
‘உன்னைப்போல் ஒருத்தி
மண்ணிலே பிறக்கவில்லை...
என்னைப்போல் யாரும்
உன்னை ரசிக்கவில்லை’ என்று பா.விஜய் எழுதிய முதல் பாடல் திரையுலகில் பெரிதும் கவனிக்கப்பட்டது. படிப்படியாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் எழுதிய ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடல் அவருக்கு தனியிடத்தை ஏற்படுத்தித் தந்தது. சோர்ந்து கிடக்கும் மனிதர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய அந்தப் பாடல், தேசிய விருதையும் பெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாடநூலிலும் இந்தப் பாடல் இடம்பெற்றது.
Advertisement
மறக்க முடியாத அனுபவம்!
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலுக்காக தேசிய விருது வாங்க டெல்லி சென்ற விஜய், அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமை, குடும்பத்தோடு சந்தித்துப் பேசினார். அப்போது, விஜயையும், அவரது மனைவியையும் இணைந்து அந்தப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டாராம் அப்துல் கலாம். பிறகு, ‘‘சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை பாரதி, தன்னுடைய ‘வெள்ளிப் பனி மலையின் மீது...’ என்ற பாடலில் சொல்லியிருப்பார். அதேபோன்று, நீங்களும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு கனவுப் பட்டியலுடன் ஒரு திரைப்பாடல் எழுதுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தாராம். ‘‘இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் பா.விஜய்.
நம்பிக்கை ததும்பும் பாடல்கள்!
இதுவரை 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் பா.விஜய். ‘இளைஞன்’ படத்தில், "தோழா... வானம் தூரம் இல்லை", ‘ஏழாம் அறிவு’ படத்தில், "இன்னும் என்ன தோழா" என விஜய் எழுதிய பல பாடல்கள் இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றுபவை. திரைப்பாடல்களில் மட்டுமின்றி, பா.விஜயின் கவிதைகளிலும் நம்பிக்கையை களமாக இருக்கிறது.
‘காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது...
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது!’ -
‘துடியாய்த் துடி
சாதிக்க!
படியாய்ப் படி
வாதிக்க!
மரம் குடைய கோடாலி
கொண்டுபோவதில்லை
மரங்கொத்தி...
அவனவன் கையில்
ஆயிரம் ஆயுதம்’
கதாநாயகனான கதை!
`பராசக்தி’ படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என்று இருக்கிறேன் என தன் ஆசையை கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார் பா.விஜய். ‘‘ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய, ‘தாய்’ நாவல் உனக்குப் பொருத்தமாக இருக்கும். அதைச் செய்" என்று ஆலோசனை சொல்ல, அவருடைய எழுத்திலேயே தாய் நாவல் "இளைஞன்" என்ற பெயரில் படமாகியது. படத்தின் கதாநாயகனாக பா.விஜயே நடித்தார். இதையடுத்து ‘ஞாபகங்கள்’, ‘ருத்ரமாதேவி’, ‘நையப்புடை’, ‘ஸ்ட்ராபெர்ரி’ என அவரது நடிப்புப் பயணம் தொடர்கிறது. ஸ்ட்ராபெர்ரி படத்தை இயக்கியதும் அவரே!
ஒரே நாளில் 12 நூல்கள்!
‘உடைந்த நிலாக்கள்’, ‘கண்ணாடி கல்வெட்டுகள்’, ‘காட்டோடு ஒரு காதல்’, ‘நந்தவனத்து நட்சத்திரங்கள்’, ‘வானவில் பூங்கா’, ‘ஒரு கூடை நிலா’, ‘தூரிகை துப்பாக்கியாகிறது’, ‘நிழலில் கிடைத்த நிம்மதி’, ‘வள்ளுவர் தோட்டம்’, ‘அரண்மனை ரகசியம்’, ‘மஞ்சள் பறவை’, ‘கடவுள் வருகிறான் ஜாக்கிரதை’, ‘கறுப்பழகி’, ‘ஐஸ்கட்டி அழகி’, ‘நம்பிக்கையுடன்’, ‘தோற்பது கடினம்’, ‘செய்’ உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஒரே நாளில் தன்னுடைய 12 நூல்களை வெளியிட்டதும் விஜயின் தனித்துவங்களில் ஒன்று. அந்த நூல் வெளியீட்டு விழாவின்போது, விஜய்க்கு ‘வித்தகக் கவிஞர்’ என்று பட்டம் வழங்கினார் கருணாநிதி. ஒரு விழாவில், கவிஞர் வாலி, ‘‘சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய்" என்று குறிப்பிட்டுப் பாராட்டியதும் குறிப்பிடத்தகுந்தது.
‘‘வாழ்க்கையில் ஒரே இடத்தில் தேங்கி நிற்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்’’ என்று கூறும் கவிஞர் பா.விஜயின் பயணங்கள் அனைத்தும் ஜெயிக்கட்டும்...!
பிறந்த நாள் வாழ்த்துகள் பா.விஜய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக