வெள்ளி, 6 அக்டோபர், 2017

நடிகை பூஜா காந்தி பிறந்த நாள் அக்டோபர் 7, 1983.



நடிகை பூஜா காந்தி பிறந்த நாள் அக்டோபர் 7, 1983.

பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி ,
திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்
எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.

பிறப்பும் வளர்ப்பும்

பூஜா காந்தி மீரட்  இல் ஒரு பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தில் 1983 அக்டோபர் 7 இல் பிறந்தார். அவரது தந்தை, பவன் காந்தி, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார், ஜோதி காந்தி, ஒரு இல்லத்தரசி. அவர் மீரட்டில் சோபியா கான்வெண்ட் மற்றும் தேவன் பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.இவருடைய ஒரு சகோதரி
ராதிகா காந்தி கன்னடத்தில் நடிகையாகவும் ,மற்றொருவர் சுஹானி காந்தி டென்னிஸ் வீராங்கனையாகவும் உள்ளார்

திரைப்பட வாழ்கை

பூஜா காந்தி விளம்பர மாடலாக டிவி யில் தோன்றினார் . இதை தொடர்ந்து வங்காள படமான டோமெக் ஸலாம் திரைப்படத்தில் 18 வயதில் அவர் அறிமுகமானார். தென்னிந்திய திரைப்பட[[ தமிழ் திரைப்படமான கொக்கி யில் நடித்து புகழ் பெற்றார் . இந்த படம் மிதமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது.
இவருடைய மூன்றாவது படம் கன்னட மொழியில் வெளி வந்த முங்காரு மேல் . இது தொடர்ந்து பெங்களூரில் 865 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது . மேலும் தெலுங்கு மொழியில் வானா [10] மற்றும் பெங்காலி இல் ப்ரீமர் கஹினி  என்ற பெயரில் 2008 இல்வெளிவந்தது. இவர் பின்னர் முங்காரு மேல் என்றே அழைக்கப்பட்டார்
கன்னட மொழியில். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜா காந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்ற காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர்.

பூஜா காந்தி இவ்விதமாக விரைவில் 50 வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் .
சர்ச்சைக்குள்ளான அபிநேத்ரி
நடிகை பூஜா காந்தி மீது மறைந்த இயக்குனர் புட்டண்ணா கனகள் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அபிநேத்ரி' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின் குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல் மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது. கன்னட மூத்த கலைஞர்களைபற்றி அவருக்கும் ஒன்றும் தெரியாது. குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று புட்டன்ன கனகல் மனைவி கர்நாடக பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். என்றாலும் இந்த படம் கல்பனா தற்கொலை செய்து கொண்ட இடத்திலே படமாக்கப்பட்டு ,சுமாரான வெற்றியையும் பெற்றது.

புதிய சர்ச்சை
நடிகை பூஜா காந்தி தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகை பூஜா காந்தி தலைமறைவாகி விட்டார்.பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.
அரசியலும் ,கட்சி தாவலும்
பூஜா காந்தி மத சார்பற்ற ஜனதா தளத்தில் 2012 இல் ஜனவரி 18 இல் இணைந்தார் . பின்னர் அப்போதைய ஆளும் கட்சி கர்நாடக ஜனதா கட்சி எடியூரப்பா தலைமையில் 2013 சட்டசபைக்கு போட்டியிட்டு ரெய்ச்சூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

பூஜா காந்தி
பிறப்பு அக்டோபர் 7, 1983
(அகவை 34)
பஞ்சாப் , இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள்
2003; 2006-நடப்பு.


நிர்வாணமாக நடித்த பூஜா காந்தி!

கன்னடப் படம் ஒன்றிற்காக முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார் நடிகை பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பூஜா காந்தி. தற்‌போது கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இப்போது ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்கும் தண்டுபால்யா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் க்ரைம் நிறைந்த த்ரில்லர் கதை. இந்தபடத்தில் தான் பூஜா உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிக்க யோசித்த பூஜா, பின்னர் படத்திற்கு இந்த காட்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை டைரக்டர் விளக்கி கூறிய பின்னர் நடித்து கொடுத்துள்ளார். சமீபத்தில் தான் இந்த காட்சியை படமாக்கி இருக்கிறார் டைரக்டர்.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜூ கூறுகையில், இந்த படத்தின் கதை 11பேர் கொண்ட ரவுடி கும்பலின் உண்மை கதை. இந்த 11பேரில் ‌லெட்சுமி என்ற பெண்ணும் இருக்கிறார். அவளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, நிர்வாணமாக்கி சித்தரவதை செய்துள்ளனர். இந்த காட்சியை படமாக்க எண்ணினேன். இதற்காக தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன்.

பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். நிர்வாண காட்சி மற்றும் புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன். ஆரம்பத்தில் தயங்கிய பூஜா பின்னர் சில வாரங்களுக்கு பிறகு நிர்வாணமாக நடிக்க சம்மதித்தார். சமீபத்தில் சில ஆட்களை மட்டும் வைத்து ரகசியமாக இந்த காட்சியை படமாக்கினோம். பூஜாவும் எந்தவித கூச்சமோ, பயமோ இல்லாமல் நடித்தார் என்றார்.


ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!

Pooja Gandhi
தண்டுபாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல் காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில், திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழில் கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். சமீபத்தில் தேவகவுடாவை ரோல் மாடலாக அறிவித்து அவரது மகன் குமாரசாமி தலைமையில் இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அரசியலுக்கு வரும் முன்பு அவர் தண்டுபாளையா என்ற படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சலசலப்பு காரணமாகவே எதிர்ப்புகளிலிருந்து தப்பும் வகையில் அவர் கவுடா கட்சியில் இணைந்தார் என்று பேசப்படுகிறது.

சீனிவாஸ் ராஜ் என்பவர் இயக்கி தயாரித்துள்ள தண்டுபாளையா படம் ஒரு ரவுடிக் கும்பலின் கதையாகும். இதில் முதுகுப் பகுதி உள்ளிட்ட பின்பகுதிகள் முழுவதும் அப்பட்டமாக தெரியும் வகையில், முக்கால் நிர்வாணமாக நடித்துள்ளார் பூஜா காந்தி. இப்படத்தில் தான் நடித்தது குறித்து முன்பு பூஜா காந்தி கூறுகையில்,படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால், அவ்வாறு நடித்து உள்ளேன், முதுகுபுறத்தை மட்டும் நிர்வாணமாக காட்டி உள்ளேன். முன்புறம் சேலையால் மறைக்க முயற்சி செய்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் பின்பகுதி மட்டுமல்லாமல், முன்பகுதியிலும் கூட எந்த டிரஸ்ஸையும் பூஜாகாந்தி அணிந்திருப்பதாகத் தெரியவில்லை. மாறாக முன்புறமும் கூட அவர் ஒட்டுத் துணியில்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் திரைப்பட வர்த்தக சபை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக