புதன், 11 அக்டோபர், 2017

நடிகை சினேகா பிறந்த நாள் அக்டோபர் 12, 1981.



நடிகை சினேகா பிறந்த நாள் அக்டோபர் 12, 1981.

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


இயற் பெயர் சுகாசினி ராஜாராம்
பிறப்பு அக்டோபர் 12, 1981
(அகவை 35)
மும்பை , இந்தியா
நடிப்புக் காலம் 2000 - இன்றளவும்
குறிப்பிடத்தக்க படங்கள்
சத்யா/ஜனனி -
பார்த்திபன் கனவு
திவ்யா -
ஆட்டோகிராப்
இணையத்தளம் http://www.sneha-online.com/


புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகை சினேகா தமிழ் திரையில் கால் பதித்து 8 ஆண்டுகள் முடியப்போகிறது. இன்னமும் முன்னணி நடிகை போல பல படங்களை கைவசம் வைத்துள்ளார். எப்படி ஒரு நிருபரின் கையில் கண்டிப்பாக பேப்பர், பேனா இருக்க வேண்டுமோ... அதேப்போல சினிமா நிருபரின் டைரியில் நடிகர்- நடிகைகளில் பயோடேட்டா இருக்க வேண்டும். இனி என் டைரியில் இருந்து சிலபல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அந்த வரிசையில் என்னை மட்டுமல்ல தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கவர்ந்து வைத்துள்ள பு.இ. சினேகாவின் வாழ்க்கை வரலாறை இங்கே தொகுத்து அளிக்கிறேன். சினிமா ரசிகர்கள் எனக்கு தரும் ஊக்கத்தைப் பொருத்து நிருபர் தளம் இன்னும் விரிவடையும்.

பிறந்த நாள் : அக்டாபர் 12
பிறந்த ஊர் : மும்பை
இயற்பெயர் : சுகாசினி
சிறப்பு : புன்னகை
அறிமுக படம் : விரும்புகிறேன்


சினேகாவின் வாழ்க்கை வரலாறு:
சுகாசினி என்ற பெயரையுடைய சினேகா உண்மையிலேயே சினேகமான நடிகை. விரும்புகிறேன் படத்தில் நடிகர் பிசாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்புதான் திரையுலகில் நுழைய அடித்தளம் அமைத்து கொடுத்தது. ஆனால் 2001ம் ஆண்டு என்னவளே என்ற படம்தான் சினேகாவுக்கு முதலில் வெளியானது. அந்த ஆண்டிலயே அவர் நடித்த ஆனந்தம் படம் சூப்பர் ஹிட். இதைத்தொடர்ந்து சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. ரசிகர்கள் மத்தியில் புன்னகை இளவரசியாக திகழ்ந்த சினேகாவும் காதல் சர்ச்சையில் சிக்கினார். அவரது ஆண் நண்பர் நாக் ரவியுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தியை கண்ணீருடன் மறுத்து வந்த சினேகா தற்போது தொடர்ந்து கலைப்பணி ஆற்றி வருகிறார். 2004ம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் சினேகாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.


சினேகா இதுவரை நடித்துள்ள திரைப்படங்கள்:
2001 - என்னவளே (முதலில் வெளிவந்த படம்)
2001 - ஆனந்தம்
2002 - விரும்புகிறேன் (முதலில் நடித்த படம்)
2002 - உன்னை நினைத்து
2002 - பார்த்தாலே பரவசம்
2002 - பம்மல் கே. சம்பந்தம்
2002 - ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
2002 - ஏப்ரல் மாதத்தில்
2002 - புன்னகை தேசம்
2003 - காதல் சுகமானது
2003 - வசீகரா
2003 - கிங்
2003 - பார்த்திபன் கனவு
2004 - அது
2004 - ஜனா
2004 - ஆட்டோகிராப்
2004 - போஸ்
2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2004 - சின்னா
2005 - ஆயுதம்
2005 - ஏபிசிடி
2006 - மெர்குரிப் பூக்கள்
2006 - புதுப்பேட்டை
2007 - நான் அவனில்லை
2008 - பிரிவோம் சந்திப்போம்..

சிரமப்பட்டு சினிமாவுக்கு வந்த தமிழ்பெண் சினேகா!

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் சினேகா என்று சினேகாவின் அம்மா பத்மாவதி முதன் முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். கல்யாண பத்திரிகை கொடுக்க பட்டுப்புடவை எடுக்க நகை வாங்க என்று கல்யாண வேலைகளில் ரொம்பவே பிஸியாக இருக்கும் சினேகா அம்மா பத்மாவதி முதன்முறையாக சினேகாவை பற்றியும், அவரது கல்யாண ஏற்பாடுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதோ…. சினேகா சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு. விரும்புகிறேன் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்த சினேகா, தொடர்ந்து நிற்க கூட நேரம் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்தார். வீட்டில் அவள் தான் கடைக்குட்டி ரொம்ப செல்லமா வளர்த்தோம். இன்னும் சொல்லப் போனால் சினிமாவில் அவர் படாத கஷ்டமே இல்லை.

அவ்வளவு பிரச்சினையையும் அவள் சந்தித்த போது, அவளை தூக்கி விட ஆள் இல்லை. சினேகா என்றதால் எல்லாவற்றையும் சமாளித்து எல்லாவற்றையும் கடந்து பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள்கிட்ட நல்ல பெயர் எடுத்து ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாட்டில் வர்ற கஷ்டம் மாதிரியே சினேகாவின் வாழ்க்கை இருந்தது. அவ்வளவு கஷ்டத்தையும் கடந்து அவளுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார் கடவுள்.


மே மாதம் சினேகா பிரசன்னா திருமணம் நடக்க இருக்கிறது. திருமணம் நெருங்க, நெருங்க எல்லோருக்கும் ஏற்படுகிற திருமண பதட்டம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு. வீட்டில் இருக்கும்போது சினேகா என் ரூம்க்கு வந்து ஒரு நாளைக்கு 4 முறையாவது ஐ லவ் யு மம்மி என்று சொல்லுவாள். சினேகாவிற்கு இப்ப வரைக்கும் நான் தான் சாப்பாடு தரணும். அவ்வளவு செல்லமா வளர்த்துவிட்டோம்.

சமீபத்தில் தாம்பூலம் மாற்ற பிரசன்னா வீட்டிற்கு சென்றோம். அங்கு பிரசன்னா அம்மா அப்பா சொல்ற விஷயத்தை அப்படியே சினேகா கேட்டார். மேலும் நீங்கள் எந்த விஷேசம் என்றாலும் சொல்லுங்க நானும் கலந்து கொள்கிறேன். விரதம் எல்லாம் இருப்பேன் என்று சினேகா சொன்னார்.

பிரசன்னா குடும்பத்தாரின் அனைத்து கண்டிஷன்களுக்கும் சினேகா ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினேகா பிரசன்னா இருவரையும் தனிக்குடித்தனம் வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளோம். இதற்காக அடையாறில் ஒரு வீடு பார்த்துள்ளோம்.

சினேகாவுக்கு இதுவரைக்கும் சமைக்கத் தெரியாது. இப்பத்தான் என் கூட சமையல் அறையில் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு வருகிறாள். கல்யாணத்திற்கு சென்னையில் பல கடைகளில் பட்டுபுடவை வாங்கிட்டோம்.

அப்புறம் ஐதரபாத், மும்பையில் கொஞ்சம் டிரஸ் வாங்கியிருக்கோம். மேலும் மெகந்தி விழாவுக்காக சினேகா விரும்பி ஒரு தங்க அணிகலன் கேட்டார். அதனால் அவருக்காக அதை ஸ்பெஷலாக வாங்கியிருக்கோம். இரண்டு பேரும் குடும்பமும் வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு பேர் குடும்பம் சார்பிலும் திருமணம் நடத்த உள்ளோம்.

சினேகா 2 முதல்வரிடமும் விருது வாங்கியிருக்கிறார். இதுதவிர நந்தி, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். இப்போது சினேகா, ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டீச்சராக நடிக்கிறார். இந்தப் படத்திற்கும் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சினேகாவை சினிமாவில் நடிக்காதே என்று பிரசன்னா எதுவும் சொல்லவில்லை.

அது அவருடைய விருப்பம் என்று கூறிவிட்டார்.

இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சினேகா இன்னும் முடிவு செய்யவில்லை.

எங்க வீட்டு கடைசி பெண்ணின் கல்யாணம் அதனால் அவளுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய, சந்தோஷமாக இருக்க எல்லோரும் வேண்டுங்க என்று பணிவோடு கேட்டுக் கொண்டு தனது பேட்டியை முடித்தார் பத்மாவதி. நன்றி தினக்கதிர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக