புதன், 4 அக்டோபர், 2017

நடிகர் சோ ராமசாமி பிறந்த தினம் அக்டோபர் 5, 1934 .





நடிகர் சோ ராமசாமி பிறந்த தினம் அக்டோபர் 5, 1934 .

சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953 - 55 -ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.

கலையுலகம்

1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

விருதுகள்

இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு
கொயங்கா விருதும், 1998 இல்
நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.

படைப்புகள்

இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

அரசியல்

இவர் மாநிலங்களவை உறுப்பினராக
வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.
இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு
சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான[2] போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார். [3] இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்களை சில செய்திகள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்தன.

மறைவு

சோ ராமசாமி,

சோ ராமசாமி மூத்த பத்திரிகை ஆசிரியர், நடக்க ஆசிரியர், நடிகர், வக்கீல், அரசியல் ஆலோசகர் என பன்முக திறமை கொண்டவர். கை ராமசாமி என்பதை விட சோ என்றே அழைக்கப்பட்டவர். இவர் துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் ஆசிரியரும், நிறுவரும் ஆவார்.  அரசியல் துணுக்கு எழுதுவதில் பிரபலமானவர். இவர் 2016  டிசம்பர் 7 -ம் நாள் இயற்கை எய்தினார். 

அறிமுகம் : 

ஸ்ரீனிவாச ஐயர் ராமசாமி என்ற சோ சென்னையில் ஸ்ரீநிவாஸன் ராஜம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். பி எஸ் உயர்நிலை பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு லயோலா கல்லூரியில் படித்தார். அதன் பின் பி எஸ் சி படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும், சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டபடிப்பும் பயின்றார். அதன் பின் 5 வருடங்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் பணியாற்றினார். 

பகீரதன் எழுதிய தேன்மொழியாள் என்ற மேடை நாடகத்தில் சோ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.  அந்த பெயரினையே தனது அடைமொழி பெயராக மாற்றிக்கொண்டார். பின்னாளில் இவரது உண்மையான பெயரை விட சோ என்ற பெயரே பிரபலமானது. 

இவர் 1962 -ல் டி டி கே கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1966 -ல் திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகனும் மக்களும் உள்ளனர். 

திரைப்பயணம்  : 

1963 -ஆம் ஆண்டு சோ பார் மக்களே பார் என்ற படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். 

இவர் நடித்த பல திரைப்படங்கள் இவரது நடிப்பால் பெரிதும் பேசப்பட்டன. அவற்றில் முகம்மது பின் துக்ளக் எக்காலத்திலும் உணர்த்தும் அரசியல் கதையாக அமைந்தது. மேலும், பல்வேறு படங்களில், நகைச்சுவை, குணச்சித்திர வேடம் என பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 

1963 -லிருந்து 2005 வரை சோ அவர்கள் கிட்ட தட்ட 190 திரைப்படங்கள், 15 நாடகங்கள்,  5 படங்களில் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார். 

இவரும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா இருவரையும் நெருங்கிய நண்பர்களாவர். இவ்விருவரும் சேர்ந்து 19 திரைப்படங்களிலும், சோ மற்றும் மறந்த முன்னாள் நடிகை ஆச்சி மனோரமாவும் இணைந்து ஜோடியாக 20 திரைப்படங்கள் வரை நடித்துள்ளனர். 

ராஜ்ய சபா / மாநிலங்களவை உறுப்பினர் :

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் கே ஆர் நாராயணன் அவர்களால், ராஜ்ய சபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டவர். குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் 12 எம்பிக்களில் ஐவரும் ஒருவர். காரணம், இவரது அறிவுத்திறன், இலக்கியங்கள், அறிவியல், சமூகம் மற்றும் கலை ஆகியவற்றில்  உள்ள அனுபவமும் திறமையும் தான். சோ அவர்கள் 1999 முதல் 2005 வரை வாஜ்பாயியால் நியமனம் செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். 

மறைவு :

சோ ராமசாமி அவர்கள் 2016 டிசம்பர் 7 -ஆம் நாள் காலை 4 .30 மணியளவில் கார்டியாக் அர்ரெஸ்ட்  ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82 .

அதே மருத்துவ மனையில் தான் இவரது நெருங்கிய தோழி ஜெயலலிதாவும் இவரின் இறப்பிற்கு ஒரு நாள் முன் காலமானார். 



பல்துறை வித்தகர் 'சோ'- நாடகம் முதல் அரசியல் அரங்கு வரை

 சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.
* இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.
வழக்கறிஞராக சோ
* சோ ராமசாமியின் தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ரூபூதம் உள்ளிட்டோர் வழக்கறிஞர்கள். எனவே இயற்கையாகவே சோ அதில் ஈர்க்கப்பட்டு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்
நாடக உலகில்...
* 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக 'கல்யாணி' என்ற நாடகத்தில் நடித்தார்.
* 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் 'சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. அதன்பிறகு முழு நேர நாடகக் கலைஞராக பாதை மாற்றிக் கொண்டார்.
* சோவின் நாடகங்களில் அரசியல் நையாண்டியும், சமூக விமர்சனமும் கலந்திருக்கும். 1960-களில் அவரது சம்பவாமி யுகே யுகே என்கிற நாடகத்தை தணிக்கை செய்ய தமிழகத்தின் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான பக்தவத்சலம் முயற்சி செய்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.
* சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.
* 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது 'இந்து மகா சமுத்திரம்' நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.
திரைப்பட உலகில்...
* திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
* பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 'யாருக் கும் வெட்கமில்லை', 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
* சோ எழுதிய பல நாடகங்கள், மேடையைத் தாண்டி திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவை குறித்தும், கலாச்சாரம், மதம் குறித்தும் நன்கு கற்றவர். அவை குறித்து விரிவாக எழுதியும் உள்ளார்.
* சோவின் முகமது பின் துக்ளக் நாடகம், திரைப்படமாக உருவாவதைத் தடுக்க அப்போதைய திமுக அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது.
* 'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் கூறுவார்.
பத்திரிகை உலகில்...
* தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970-ம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார்.
* அவரது நையாண்டியும், துணிச்சலும் அவரது கட்டுரைகளிலும், கேலிச்சித்திரங்களிலும் பிரதிபலித்தது.
அரசியல் அரங்கில்...
* அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.
* பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சோ. தனது துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது முதன் முதலில் மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து ஒருவகையில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே சோ எனக் கூறலாம்.
* வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்
* தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.
* சோ தான் பணியாற்றிய துறைகளில் பெற்ற வெற்றிகள் குறித்து பெரிதாக நினைத்துக் கொண்டதில்லை. நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றே கூறுவார். அதனால் தான் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியபோது அதற்கு 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' எனப் பெயர் வைத்தார்.

சோ ராமசாமி பெயர் எப்படி வந்தது?

 துக்ளக் ஆசிரியர் ராமசாமிக்கு சோ என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான சுவாரசியமான தகவல்.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி, உடல் நலமின்றி நவம்பர் 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மறைந்தார்.
வெறும் ராமசாமி என்றால் யாருக்கும் அவரைத் தெரியாது. சோ என்றாலோ சோ ராமசாமி என்றாலோதான் அனைவருக்கும் தெரியும். அப்படி தன் பெயரோடு ஒட்டிக் கொண்ட சோ என்ற பெயர் எப்படி அவரோடு தொடர்ந்தது என்பது சுவாரஸ்யமான விஷயம்
1950களில் நாடகங்களை எழுதி நடிக்க தொடங்கிய சோ, சுமார் 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளளார் `சோ` ராமசாமி. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கும் சோவிற்கு நாடாகத்தில் ஈடுபாடு மிக மிக அதிகம்.
சோ தனது 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. அந்த ஆர்வத்தின் காரணமாக முதன்முதலாக ‘கல்யாணி' என்ற நாடகத்தில் ராமசாமி நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். இவருடைய நாடகத்தில் மிக முக்கியமானது முகமது பின் துக்ளக் நாடகம்தான். அது பின்னர் திரைப்பட மாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து துக்ளக் என்ற அந்தப் பெயரைதான் தனது பத்திரிகைக்கும் பெயராக வைத்துக் கொண்டார்.
பகீரதன் என்பவர் எழுதிய `தேன்மொழியாள்` என்ற மேடை நாடகத்தில்தான் சோவிற்கு `சோ` என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைப்பெயராக பின்னர் மாற்றிக் கொண்டார். அந்தப் பெயர் அவருடைய இயற்பெயரையே மறக்கச் செய்துவிட்டது. இப்போது யாருக்கும் ராமசாமி என்றால் தெரியாது. `சோ` என்றால் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும்.
சட்டம் படித்து, நாடகம், சினிமா என்று தான் இயங்கும் தளத்தை வேறு திசைக்கு மாற்றிக் கொண்ட சோ, பத்திரிகையாளராகவும், அதில் எழுதிய கட்டுரைகளின் மூலம் அரசியல் விமர்சகராகவும் அறியப்பட்டார். பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ம் ஆண்டு வீரகேசரி விருது வழங்கப்பட்டது. 1994ல் கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக