செவ்வாய், 17 அக்டோபர், 2017

கவிஞர் கண்ணதாசன் நினைவு தினம்– அக்டோபர் 17



கவிஞர் கண்ணதாசன் நினைவு தினம்– அக்டோபர் 17

கண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17
1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும்,
அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
குடும்பம்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம்
பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு: மே 31 , 2012 ) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. [1] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[2]
,[3] . கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். [4] ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார். [5]
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
அரசியல் ஈடுபாடு
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். [6]
மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல்
சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல்
அமெரிக்காவிலிருந்து அவரது சடலம்
சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் [7] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறைக்கான பங்களிப்புகள்
திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்
கதை எழுதிய திரைப்படங்கள்
ராஜா தேசிங்கு
வசனம் எழுதிய திரைப்படங்கள்
நாடோடி மன்னன்
மகாதேவி
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
மதுரை வீரன்
இலக்கியப் படைப்புகள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
1. மாங்கனி
2. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
3. ஆட்டனத்தி ஆதிமந்தி
4. பாண்டிமாதேவி
5. இயேசு காவியம்
6. முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
9. பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
1. அம்பிகை அழகுதரிசனம்
2. தைப்பாவை
3. ஸ்ரீகிருஷ்ண கவசம்
4. கிருஷ்ண அந்தாதி
5. கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்
1. கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
2. பஜகோவிந்தம்
புதினங்கள்
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
அரங்கமும் அந்தரங்கமும்
அதைவிட ரகசியம்
ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
ஒரு கவிஞனின் கதை
காமினி காஞ்சனா
காதல் கொண்ட தென்னாடு
சிவப்புக்கல் மூக்குத்தி
சிங்காரி பார்த்த சென்னை
சுருதி சேராத ராகங்கள்
சுவர்ணா சரஸ்வதி
ரத்த புஷ்பங்கள்
நடந்த கதை
மிசா
முப்பது நாளும் பவுர்ணமி
தெய்வத் திருமணங்கள்
வேலங்குடித் திருவிழா
விளக்கு மட்டுமா சிவப்பு
பிருந்தாவனம்
சிறுகதைகள்
1. குட்டிக்கதைகள்
2. மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
3. செண்பகத்தம்மன் கதை
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
சமயம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
01. 02. 03. 04. 05. ஞானம் பிறந்த கதை 06. நெஞ்சுக்கு நிம்மதி 07. 08. போகம் ரோகம் யோகம் 09. 10. உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
1. பகவத் கீதை
2. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
3. திருக்குறள் காமத்துப்பால்
4. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
5. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
பேட்டிகள்
1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
2. சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை
1. ஐயம் அகற்று
2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது ( சேரமான் காதலி படைப்பிற்காக)


“இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது!” - கண்ணதாசன்.

“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது'' என்றவர் கவியரசு கண்ணதாசன். அவருடைய பிறந்ததினம் இன்று. பல மனிதர்களிடையே பழகி அதற்கான அனுபவங்களைப் பெற்றதால்தான், அவர் அந்த வரிகளை அப்படி எழுதியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் கண்ணதாசன், மனிதர்களுக்கேற்ற ஒரு மகத்துவமிக்க வரிகளை இப்படி எழுதியிருந்தார். ''யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்''.

மனித மனங்களில் இந்த மந்திர வரிகளை விதைத்த அவர், அந்தக் காலத்தில் தாம் செய்த தவறுகள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.



''சேராத கூட்டத்தில்
    என்னை மறந்துநான்
        சேர்ந்தநாள் அந்தநாளே

செறிவான புத்தியைத்
    தவறான பாதையில்
        செலுத்தினேன் அந்தநாளே!''

இப்படி வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், சந்தித்த பிரச்னைகளையும் தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது; அரசியலில் கால்வைத்த பிறகு, அவரால் அனைத்தையும் உணர்ந்துகொள்ள முடிந்தது; உடலுக்கு அழிவு தரக்கூடியதிலிருந்து அவர் விலகியபோது காலனிடம் சிக்கிக்கொள்ள நேர்ந்தது.


அவர், தன்னுடைய அரசியல் களம் எப்படிப்பட்டது என்பதை மிகவும் தெளிவாகத் தன்னுடைய சுயசரிதைகளிலும், பிற நூல்களிலும் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் தி.மு.க-வில் காலடி எடுத்துவைத்த கவிஞர், அவருடைய நண்பரும் தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதியைப் பற்றி அரசியல்ரீதியாக இப்படிக் குறிப்பிடுகிறார்.

கருணாநிதியுடன் கண்ணதாசன்...

''கருணாநிதியின் அரசியல் சாமர்த்தியம்!''


''கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான்; எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்; எந்த ஊரில் கிளை இருக்கிறது, இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல்நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி. பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால், அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழவைக்க வேண்டும் என்றால், அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரைச் சாகசம் செய்தாவது வரவழைத்துவிடுவார்; உள்ளே இழுத்துவிடுவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகூட ஆள்களை இழுத்துக்கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆள்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர் விஷயத்தில், யானை தடம் தப்பியதைப்போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம். நிர்வாகத்தில் ஏற்கெனவே இருந்த எல்லாரையும்விட அவர் திறமைசாலி என தலைமைச் செயலகத்தில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள்'' என்று கருணாநிதியைப் பற்றிச் சொன்ன கவிஞர் கண்ணதாசன், அதேவேளையில்... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றியும் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“எம்.ஜி.ஆர் கெட்டிக்காரர்!”

“யாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தால், எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒருகட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால், அரசியலில் அவர் நடந்துகொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கிற சக்தி இல்லை என்பது புரிந்தது. திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்டபோது... அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவுவரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள்... அவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்'' என்று எம்.ஜி.ஆரைப் பற்றிப் புகழ்கிறார்.

அரசியல் கண்ணோட்டம்!

கருணாநிதி, எம்.ஜி.ஆர் மட்டுமல்லாது, தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி எனப் பலருடைய பண்புகளையும் அவர்கள் நடந்துகொண்ட விதங்களையும் எந்த நேரத்திலும் தயங்காது துணிச்சலுடன் சொன்னவர் கண்ணதாசன். பொதுவாக, ''கட்சித் தலைவர்கள் அதாவது, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாழ்வதையே விரும்பினார்கள்; தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயலாபத்துக்காகவே செயல்பட்டனர்; கொள்கைகளைப் பற்றி மேடையில் முழங்கினாலும், அவர்கள் அதில் நம்பிக்கையோ, உடன்பாடு உள்ளவர்களோ இல்லை'' என்பதே அவரது வாதமாக இருந்தது. மேலும், அவர் வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வோர் இயக்கங்களிலும் இருந்தபோது... அரசியல் தலைவர்கள் பலரையும்  தன் எழுத்துகளால் பந்தாடினார்; அதே சமயத்தில் அவர்களுடன் நெருங்கியிருந்தபோது பாராட்டவும் செய்தார். இப்படிக் கண்ணதாசனின் எழுத்தோவியத்தில் அடிப்பட்டவர்களும், அழகாக்கப்பட்டவர்களும் எத்தனையோ பேர்? அவர், அரசியல் தலைவர்களை மட்டுமல்லாது பலருடைய ஆட்சியைப் பற்றியும்  விமர்சனம் செய்தார்.


''ஆடும் மாடும் அமைச்சர்களாயின!''

ஒருசமயம், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழக - கேரள எல்லையில் இருந்த தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு சேர்க்கப்படாமல் கேரளத்தில் சேர்ந்தன. இதை, தமிழக அமைச்சர்கள் பொருட்படுத்தாமல் விட்டதைக் கண்ட கண்ணதாசன்,

''மேடும் குளமும் கேரளாக்காயின
ஆடும் மாடும் அமைச்சர்களாயின'' - என்று எழுதினார்.

அதுமட்டுமல்லாது, அடிப்படைத் தத்துவமான மக்கள் நலன் என்பதே நிலையானது என்பதைக் கண்ட கவிஞர், அதை அடையும் வழியில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, தலைவரும் தர்பாரும் மாறும் என்பதை,

''தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’' - என்று சுட்டிக்காட்டினார்.

இப்படி எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், அரசியல் என்ற பயணத்தில் தொடர்ந்து பயணிக்கவில்லை என்றபோதும், அதில்பட்ட கசப்பான உணர்வுகள் அவரது மனதை ஒருவகையில் காயப்படுத்தின என்பதும் நிஜம்.

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...



` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...
  `ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
   அவன் பாட்டை எழுந்து பாடு!



கவியரசு' கண்ணதாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்
பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன் (Kannadasan) நினைவு தினம் இன்று (). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:


* சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர். இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராய ணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி யும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

* சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.

* சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரிய ராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

* கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

* சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

* 'பாகப்பிரிவினை' படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

* 'பராசக்தி', 'ரத்தத் திலகம்', 'கருப்புப் பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கைகொடுக்கவில்லை. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

* மேலே யாரோ எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுமாம்! 'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த 'கண்ணதாசன் கவிதைகள்', 'அம்பிகை அழகு தரிசனம்' உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.

* கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, 'வன வாசம்' என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'குழந்தைக் காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

* ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக