நடிகை சுகுமாரி பிறந்த நாள் அக்டோபர் 6 , 1940
சுகுமாரி ( அக்டோபர் 6 , 1940 - மார்ச் 26 2013 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார். நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான
பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு
நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.
மறைவு
தீக்காயம் பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரி 2013 மார்ச் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக