சனி, 4 நவம்பர், 2017

நடிகர் கமல்ஹாசன் Kamal Haasan, பிறந்த நாள்: நவம்பர் 7, 1954.






நடிகர் கமல்ஹாசன் Kamal Haasan, பிறந்த நாள்: நவம்பர் 7, 1954.

கமல்ஹாசன் ( Kamal Haasan, பிறப்பு: நவம்பர் 7, 1954), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக
பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.  2009 இல் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி , தெலுங்கு ,
மலையாளம் , கன்னடம் , வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.



வாழ்க்கைக் குறிப்பு

 சென்னை மாநிலம்,
இராமநாதபுரம் , பரமக்குடியில் வைணவ
ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி. கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன் (பி: 1930), சந்திரகாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள்
சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர்.  கமல்காசன் சென்னை
சாந்தோமில் கல்வி கற்றார். தந்தையின் விருப்பப்படி, கமல்காசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார். தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார்.  ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபார்சில் எவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.


திரைப்படக் குறிப்பு

இவர் 2015 ஆம் ஆண்டுவரை 250 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்
விஸ்வரூபம் - 2
சபாஷ் நாயுடு (திரைப்படம்) 2017
கமல்ஹாசன் நடித்துள்ள படங்கள்
இரண்டாயிரத்திபத்து
2015 - சீகட்டி ராஜ்ஜியம் (தெலுங்கு)
2015 - தூங்காவனம்
2015 - பாபநாசம்
2015 – உத்தம வில்லன்.


((லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (LAIFFA) திரையிடப்பட்டது. ஐந்து விருதுகளையும் வாங்கியுள்ளது. சிறந்த நடிகர் - கமல்ஹாசன், சிறந்த படம் - உத்தமவில்லன், சிறந்த இசை - ஜிப்ரான், சிறந்த பாடல் - ஜிப்ரான், சிறந்த ஒலி வடிவமைப்பு - குனல் ராஜன். ரஷ்யன் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதினையும் பெற்றுள்ளது. உத்தமவில்லன்))
2013 – [[விஸ்வரூபம் (2013 திரைப்படம்)
|விஸ்வரூபம்]]
2010 – மன்மதன் அம்பு
இரண்டாயிரம்
2009 – ஈநாடு (தெலுங்கு)
2009 - உன்னைப்போல் ஒருவன்
2008 – தசாவதாரம் (தெலுங்கு)
2008 – தசாவதாரம்
2006 – வேட்டையாடு விளையாடு
2005 – ராமா சாமா பாமா (கன்னடம்)
2005 – மும்பை எக்ஸ்பிரஸ் (த)
2005 – மும்பை எக்ஸ்பிரஸ் (இந்தி (த) (எ)
2005 – மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)
2004 – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2004 – விருமாண்டி (த) (எ) (இ)
2004 – பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)
2003 – நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)
2003 – அன்பே சிவம் (எ)
2002 – பஞ்சதந்திரம்
2002 – பம்மல் கே. சம்பந்தம்
2002 – பிரம்மச்சாரி (தெலுங்கு)
2001 – லேடீச் ஒன்லி
2001 – பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)
2001 – பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)
2001 – ஆளவந்தான் (இரட்டை வேடம்) (கமல்ஹாசன் நடித்த 200 வது திரைப்படம் இதுவே ஆகும்.)
2001 – அபய் (இந்தி) (இரட்டை வேடம்) (எ)
2001 – அபய் (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)
2000 – தெனாலி
2000 – தெனாலி (தெலுங்கு)
2000 - ஹே ராம் (த) (எ) (இ)
2000 – ஹே ராம் (இந்தி) (த) (எ) (இ)
தொண்ணூறுகள்
1998 – காதலா காதலா
1998 – சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
1996 – அவ்வை சண்முகி
1996 – பாமனெ (தெலுங்கு)
1996 – இந்தியன் (இரட்டை வேடம்)
1996 – இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
1996 – பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
1995 – குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
1995 – த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
1995 – சுப சங்கல்பம் (தெலுங்கு)
1995 – சதி லீலாவதி (த)
1994 – நம்மவர்
1994 – மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
1994 – ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
1994 – மகாநதி (b)
1993 – கலைஞன்
1993 – மகராசன் (த)
1992 – தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
1992 – ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
1992 – சிங்கார வேலன்
1991 – குணா
1990 – மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
1990 – மைக்கேல் மதன காமராஜன் (நான்கு வேடம்) (த)
1990 – மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
1990 – இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)


எண்பதுகள்
1989 – இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது மேயர் சாப்
1989 – வெற்றி விழா
1989 – சாணக்யன் (மலையாளம்)
1989 – அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) (கமல்ஹாசன் நடித்த 150வது திரைப்படம் இதுவே ஆகும்.)
ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
1989 – அப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
1989 – அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
1988 – உன்னால் முடியும் தம்பி
1988 – சூர சம்ஹாரம்
1988 – டெய்சி (மலையாளம்)
1988 – சத்யா (த)
1988 – பேசும் படம்
1987 – புஷ்பக் (ஹிந்தி)
1987 – புஷ்பக விமானம் (தெலுங்கு)
1987 – புஷ்பக விமானா (கன்னடம்)
1987 – கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
1987 – நாயக்குடு (தெலுங்கு)
1987 – வேலு நாயக்கன் (ஹிந்தி)
1987 – நாயகன்
1987 – பேர் சொல்லும் பிள்ளை
1987 – அந்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
1987 – விரதம் (மலையாளம்)
1987 – காதல் பரிசு
1986 – டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
1986 – டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
1986 – புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
1986 – ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
1986 – விக்ரம் (த)
1986 – நானும் ஒரு தொழிலாளி
1986 – சிப்பிக்குள் முத்து
1986 – ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது
ஈஷ்வர் அணில் கபோருடன்
1986 – மனக்கணக்கு (நட்புக்காக)
1985 – தேகா பியார் துமாரா (இந்தி)
1985 – ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
1985 – மங்கம்மா சபதம்
1985 – ஜிராப்டார் (இந்தி)
1985 – சாகர் (இந்தி)
1985 – உயர்ந்த உள்ளம்
1985 – அந்த ஒரு நிமிடம்
1985 – காக்கிச் சட்டை
1985 – ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக வாட்ஸ் அப்பில் புது அறிமுகம்., நீங்கள் டைப் செய்யும் இடத்தில் @ என அழுத்தினால் குழுவில் உள்ள அனைவரின் பெயரும் வரும். குரூப்பில் மட்டுமே. மறு தயாரிப்பு.
1984 – கரிஷ்மா (இந்தி)
1984 – எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
1984 – ராஜ் திலக் (இந்தி)
1984 – யாட்கார் (இந்தி)
1984 – ஏக் நை பகெலி (இந்தி)
1984 – ஜே தேஷ் (இந்தி)
1983 – தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
1983 – வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
1983 – பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
1983 – சத்மா (இந்தி)
1983 – சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
1983 – சாகரா சங்கமம் (தெலுங்கு)
1983 – சினேக பந்தம் (மலையாளம்)
1983 – சட்டம்
1983 – உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
1983 – சாரா ஸீ சிந்தகிi (இந்தி)
1983 – வசந்த கோகிலா (தெலுங்கு)
1982 – பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
1982 – அக்னி சாட்சி (நட்புக்காக)
1982 – பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)
1982 – பகடை பன்னிரெண்டு
1982 – ஜே தோ கமல் ஹொகயா (இந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் இந்தித் தயாரிப்பு.
1982 – ராணித் தேனி (நட்புக்காக)
1982 – எழம் ராத்திரி (மலையாளம்)
1982 – சகலகலா வல்லவன்
1982 – சனம் தேரி கசம் (இந்தி)
1982 – ஷிம்லா ஸ்பெஷல்
1982 – மூன்றாம் பிறை - சாத்மாவாக இந்தியில் மறுதயாரிப்பு.
1982 – அந்தி வெயிலிலே (மலையாளம்)
1982 – அந்தகடு (தெலுங்கு)
1982 – வாழ்வே மாயம் (மலையாளம்)
1982 – வாழ்வே மாயம்
1981 – தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
1981 – எல்லாம் இன்பமயம்
1981 – டிக்! டிக்! டிக்!
1981 – அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
1981 – சங்கர்லால்
1981 – சவால்
1981 – கடல் மீன்கள்
1981 – ஏக் தூஜே கே லியே (ஹிந்தி)
1981 – ராஜ பார்வை (த) (கமல்ஹாசன் நடித்த 100வது திரைப்படம் இதுவே ஆகும்.)
1981 – ராம் லக்சுமன்
1981 – பிரேம பிச்சிi (தெலுங்கு)
1981 – மீண்டும் கோகிலா
1981 – ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
1981 – தில்லு முல்லு (நட்புக்காக)
1980 – நட்சத்திரம் (நட்புக்காக)
1980 – மரியா மை டார்லிங் (தமிழ்)
1980 – மரியா மை டார்லிங் (கன்னடம்)
1980 – வறுமையின் நிறம் சிகப்பு
1980 – குரு
1980 – உல்லாசப் பறவைகள்

எழுபதுகள்
1979 – அழியாத கோலங்கள் (நட்புக்காக)
1979 – நீல மலர்கள் (நட்புக்காக)
1979 – மங்கள வாத்தியம்
1979 – கல்யாணராமன் (தமிழ்)
1979 – இடிகாதா காது (தெலுங்கு)
1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும்
1979 – அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
1979 – நினைத்தாலே இனிக்கும்
1979 – தாயில்லாமல் நான் இல்லை
1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
1979 – நீயா!
1979 – சிகப்புக்கல் மூக்குத்தி
1979 – சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
1978 – தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
1978 – தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
1978 – மதனோல்சவம் (மலையாளம்)
1978 – யீட்ட (மலையாளம்)
1978 – அவள் அப்படித்தான்
1978 – மனிதரில் இத்தனை நிறங்களா!
1978 – சிகப்பு ரோஜாக்கள்
1978 – வயனாதன் தம்பன் (மலையாளம்)
1978 – வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
1978 – சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
1978 – இளமை ஊஞ்சலாடுகிறது
1978 – மரோ சரித்திரா (தெலுங்கு)
1978 – நிழல் நிஜமாகிறது
1977 – ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
1977 – சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
1977 – கோகிலா கன்னடத்தில் முதல் படம்
1977 – நாம் பிறந்த மண்
1977 – ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
1977 – ஆடு புலி ஆட்டம்
1977 – 16 வயதினிலே
1977 – ஒர்மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
1977 – நிறைகுடம் (மலயாளம்)
1977 – ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
1977 – கபிதா (வங்காளம்)
1977 – உன்னை சுற்றும் உலகம்
1977 – சிறீதேவி (மலையாளம்)
1977 – மதுர சொப்னம் (மலையாளம்)
1977 – அவர்கள் (கமல்ஹாசன் நடித்த 50 திரைப்படம் இதுவே ஆகும்.)
1977 – ஆசீர்வாதம் (மலையாளம்)
1977 – சிவதாண்டவம் (மலையாளம்)
1977 – உயர்ந்தவர்கள்l
1976 – லலிதா (நட்புக்காக)
1976 – மோகம் முப்பது வருஷம்
1976 – மூன்று முடிச்சு
1976 – னீ எந்தே லகாரி (மலையாளம்)
1976 – பொன்னி (மலையாளம்)
1976 – இதய மலர்
1976 – குமார விஜயம்
1976 – குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
1976 – உணர்ச்சிகள் (மலையாளம்)
1976 – ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
1976 – சத்தியம்
1976 – அருது (மலயாளம்) (நட்புக்காக)
1976 – ஸ்விமிங் பூல் (மலையாளம்)
1976 – மன்மத லீலை
1976 – சமசியா (மலையாளம்)
1976 – அப்பூப்பான் (மலையாளம்)
1976 – அக்னி புஷ்பம் (மலையாளம்)
1975 – அந்தரங்கம்
1975 – ராசலீலா (மலையாளம்)
1975 – மற்றொரு சீதா (மலையாளம்)
1975 – திருவோணம் (மலையாளம்)
1975 – அபூர்வ ராகங்கள்
1975 – மாலை சூட வா
1975 – ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
1975 – பட்டிக்காட்டு ராஜா
1975 – தங்கத்திலே வைரம்
1975 – மேல்நாட்டு மருமகள் (வாணி கணபதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
1975 – தேன் சிந்துதே வானம்
1975 – ஆயிரத்தில் ஒருத்தி
1975 – பட்டாம்பூச்சி
1975 – சினிமா பைத்தியம்
1974 – பணத்துக்காக
1974 – ஆய்னா (ஹிந்தி)
1974 – அந்துலேனி காதா (தெலுங்கு)
1974 – அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
1974 – அவள் ஒரு தொடர்கதை
1974 – விஷ்னு விஜயம் (மலையாளம்)
1974 – அன்புத் தங்கை
1974 – கன்யாகுமாரி (மலையாளம்)
1974 – நான் அவனில்லை
1974 – குமாஸ்தாவின் மகள்
1974 – பருவ காலம்
1973 – சொல்லத்தான் நினைக்கிறேன்
1973 – அரங்கேற்றம்
1972 – குறத்தி மகன்
1970 – மாணவன்
அறுபதுகள்
1963 – ஆனந்த ஜோதி
1963 – வானம்பாடி
1962 – கண்ணும் கரளும் (மலையாளம்)
1962 – பாத காணிக்கைi
1962 – பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
1960 – களத்தூர் கண்ணம்மா



தயாரித்த திரைப்படங்கள்

ராஜ பார்வை
விக்ரம்
அபூர்வ சகோதரர்கள்
சத்யா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
மைக்கேல் மதன காமராஜன்
குணா
தேவர் மகன்
குருதிப்புனல்
ஹே ராம்
விருமாண்டி
மகளிர் மட்டும்
நளதமயந்தி
மும்பை எக்ஸ்பிரஸ்
உன்னைப்போல் ஒருவன்
விஸ்வரூபம்
தூங்காவனம்
சீகட்டி ராஜ்ஜியம்(தெலுங்கு)
எழுதிய திரைக்கதைகள்
1999 – விவி நெ.1 (இந்தி)
1997 – விராசாத் (இந்தி)

இயக்கிய திரைப்படங்கள்
1998 - சாச்சி 420
2000 - ஹே ராம்
2004 - விருமாண்டி
2013 – விஸ்வரூபம்
மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்
2010 – நீல வானம் – மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்)
2006 – புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்)
2004 – மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
2004 – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
2003 – அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
2003 – நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
2000 – ஹே ராம் (சிகையலங்காரம்)
1999 – சிப்பிக்குள்ளே முத்தை – தி பிளாச்ட் இசைக் கொத்து - (பின்னணிக் குரல்)
1998 – சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
1996 – உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
1996 – அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
1995 – சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
1992 – தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
1987 – நாயகன் (பின்னணிப் பாடகர்)
1985 – ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
1978 - சிகப்பு ரோஜாக்கள் (பின்னணிப் பாடகர்)
1975 – அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
1974 – ஆய்னா (நடனங்கள்)
1985 – ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்)
இதர பங்களிப்புகள்
ஆண்டு திரைப்படம் மொழி ப
1971 சவாலே சமாளி தமிழ் த இ
1971 சிறீமந்துடு தெலுங்கு த இ
1971 அன்னை வேளாங்கண்ணி தமிழ்
த இ
உ இ
1972 நிருதசாலா மலையாளம் த இ
1977 அவர்கள் தமிழ் நட
1977 அய்னா இந்தி
உ இ
நட
2000 ஹேராம் தமிழ் நட
2013 விஸ்வரூபம் தமிழ் நட
2015 உத்தம வில்லன் தமிழ் நட
2015 தூங்காவனம் தமிழ் ஒப்
வெளியாகாத திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி இயக்கு
1986 கபார்தர் இந்தி டி. ராமரா
1996 கண்டேன் சீதையை தமிழ் பாலச்சந்தி மேனன்
1997 லேடிசு ஒன்லி இந்தி தினேஷ் சைலேந்த
1997 மருதநாயகம் தமிழ் கமல்ஹாச
விருதுகள்
மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் -
களத்தூர் கண்ணம்மா)
18 பிலிம்பேர் விருதுகள்.
பத்மசிறீ விருது (1990)
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)
பத்ம பூசன் விருது (2014)
தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் கார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற உள்ளார்.



கமல்ஹாசன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இது.(நன்றி விகடன்)

* கமலுக்கு சினிமா சென்டிமென்டுகளில் எப்போதுமே நம்பிக்கை கிடையாது. ‘ஹே ராம்’ படத்தின் தொடக்கக் காட்சியில், முதல் வசனமே இப்படித்தான் இருக்கும்... ‘சாகேத்ராம், திஸ் ஈஸ் பேக்-அப் டைம்’.
* நடிகர்கள் பெண் வேடமிட்டு திரையில் தோன்றுவது அவ்வப்போது நிகழக்கூடியதுதான். அவையெல்லாம் ஒரு சில காட்சிகள்தான் இருக்கும். ஆனால், கமல்ஹாசன்தான், படம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்தார். சிறுவயதில், தான் குருகுலவாசம் செய்த அவ்வை டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவின் மேல் கொண்ட பற்றினாலும், குருவின் மேல் கொண்ட பக்தியினாலும், தனது படத்துக்கு ‘அவ்வை சண்முகி’ என்றே பெயர் வைத்தார்.
* காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பார். உடற்பயிற்சி செய்வதற்கு எப்போதும் தவறுவதே இல்லை. காலை உணவு இட்லி, தோசை சாப்பிடுவார். பிரட் டோஸ்ட், ஆஃபாயில், முட்டை, காபி, டீ, சாப்பிடுவதில்லை.
Advertisement
* கேரளாவின் சிவப்பு அரிசி சாதத்தை விரும்பி சாப்பிடுவார். நான்-வெஜ்ஜில் கமலுக்கு மிகவும் பிடித்தது மீன். அதுவும் கேரளாவில் கிடைக்கும் மீன் என்றால், ரொம்பவே இஷ்டம்.
* எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைத்து இருக்கிறார் ‘குறும்புக்காரா...’ என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்துக் கொண்டாராம்.
* கமலுக்கு திரைப்படங்களைப் பார்ப்பதை விட அதீத ஆர்வம் புத்தகங்களை வாசிப்பதில் உண்டு . இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு வருவார். அதேபோல் திரைப்படத்துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.
* ‘ரஜினியும் நானும் கிளாஸ்மெட் மாதிரி. இன்னும் சொல்லப் போனால், ஒரே பெஞ்ச்மெட் கே.பாலசந்தர் என்கிற பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற பாசம் எங்களிடையே உண்டு. எனினும், கபில்தேவ், இம்ரான்கான் மாதிரி ஆரோக்கியமான போட்டியும் உண்டு’ என்று கூறுவர்.
* பேசும் சினிமா வந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகு, பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார். அந்தப் படம், ‘பேசும்படம்’. படம் பேசியது.


* சினிமாவில் பல நல்ல திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்த பெருமை அவருக்குண்டு. சுரேஷ்கிருஷ்ணாவை ‘சத்யா’ படத்தின் மூலம் இயக்குநராக்கினார். சத்யராஜ், நாசர், சந்தானபாரதி, கரண், டெல்லிகணேஷ் போன்றவர்களெல்லாம், கமலின் படங்களில் நடிப்பதையே பெருமையாகக் கொண்டவர்கள்.
* கமல் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினியும், ஆக மூன்று பேருமே தேசிய விருது பெற்றவர்கள்.
* ‘அந்த நாள்’ (வீணை பாலசந்தர்) படத்துக்குப் பிறகு பாடல்களே இல்லாத படம், ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. சத்யராஜ் நடித்த இந்தப் படம் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் கமல்.
* கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படங்கள் ‘சட்டம் என் கையில்’, ‘அபூர்வ சகோதர்கள்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட். மெட்ராஸ் பாஷையை பேசும் விதத்தை நடிகர் லூஸ் மோகனிடம் கேட்டு அறிந்துகொண்டாராம். மெட்ராஸ் பாஷையைப் பேசி நடிப்பதென்றால், இருவருமே திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல் நடிப்பார்கள்.
* கமலின் தந்தைக்கும் கமலுக்கும் உள்ள உறவு, தேர்ந்த இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பைப் போன்றதாகவே இருந்தது. இருவரும் பரஸ்பரம் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும், கமலின் உள்ளுணர்களை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டு பேசுவார்.
* கமல்ஹாசன் திருவல்லிக்கேணி இந்து ஹை-ஸ்கூலில் படித்தவர்.
* களத்தூர் கண்ணம்மா, ஆனந்த ஜோதி, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, வானம்பாடி ஆகிய 5 படங்களில் நடித்திருந்த நிலையில், கமலின் அப்பா சீனிவாசன், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களைப் பார்க்க வந்தார். ‘சாருஹாசன், சந்திரஹாசன் இரண்டு பேரும் நல்லா படிக்கிறாங்க. இவனைத்தான், என்ன பண்றதுன்னு தெரியலை. படிப்பை விட கலைத் துறையில ஆர்வமா இருக்கான். அதனால உங்கக்கிட்டே கொண்டு வந்துட்டேன்’ என்று கூறி விட்டுச் சென்றார்.
* டி.கே.எஸ். நாடகக் குழுவில் கிடைத்த பயிற்சியால்தான், கமல் உச்சஸ்தாயில் பாட வேண்டிய பாடல்களைக் கூட சர்வ அலட்சியமாக பாட அவரால் முடிந்தது.
* கமலுக்கு, தான் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்க வில்லையே என்ற ஏக்கம் உண்டு. அந்த ஏக்கமே அவரை சினிமாவின் அத்தனை தொழில் நுட்பங்களிலும் கைதேர்ந்தவராக உருவாக்கியது.
* நடிகனாக வேண்டும் என்ற ஆவலில் சினிமாத்துறைக்கு கமல் வரவில்லை, இயக்குநராக வேண்டும் என்ற ஆவலுடன் தான் திரைப்படத்துறைக்கு வந்தார். ஆனால், அவர் இயக்குநாரகி இருந்தால், நல்ல திரைப்படங்கள் கிடைத்திருக்கும். ஆனால், சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே கிடைக்காமல் போயிருக்கும். இவரைப் போலவே காமிரா உமனாக வந்த சுஹாசினி நடிகையாகி சிறந்த நடிகை விருதையும் பெற்றார்.
* பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்று தமிழ்ச் சினிமாவின் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய கமல், என்ன காரணத்தினாலோ, மகேந்திரனின் இயக்கத்தில் நடிக்கவில்லை.
* தமிழ் சினிமாவில் முதன்முதலில் முத்தக் காட்சியில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. படம்: சட்டம் என் கையில்.
* கமலின் தந்தையின் உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கமலும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்கின்றன. சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹாசன் ஆகிய மூவரும் சிதையின் அருகில் நிற்கிறார்கள். திரும்பிப் பார்த்த கமல், ‘அண்ணா நீங்களும் வாங்க’ என்று இருவரையும் அழைக்கிறார். அவர்கள், ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா. அவர்களையும் கொள்ளி வைக்கச் சொல்கிறார் கமல். கதறி துடித்தபடியே அவர்களும் கொள்ளி வைக்கிறார்கள். என் தந்தையை நேசித்த நீங்கள் என்றும் என் சகோதரர்களே’ என்று மவுனமாக கூறினார் கமல்.
* நாகேஷ், மனோரமா, வி.கே.ஆர். ஆகிய மூவரிடமும் மாறாத பாசம் கொண்டவர் கமல். தன்னுடைய தயாரிப்புகளில், தான் நடிக்கும் படங்களில் இவர்கள் இருப்பதை பெரிதும் விரும்புவார்.
* கே.பாலசந்தரின் படங்களில் ஏராளமாக கமல் நடித்தார். அவரது பட்டறையில் அவர் நடித்த படங்கள் எல்லாம் வித்தியாசமான பரிமாணங்களை கொண்டவை. ‘மை டியர் ராஸ்கல்’ என்று விளித்துத்தான் கே.பி. அவர்கள் அவருக்கு கடிதம் எழுதுவார்.
* கமல், டான்ஸ் மாஸ்டராக, பாடகராக, கதாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகனாக, வில்லனாக என்று பல அவதாரங்களை திரைப்படத்துறையில் எடுத்தவர். பிலிம்ஃபேர் விருதை 17 முறை வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்.
* எண்பதுகளின் மத்தியில் ‘மய்யம்’ என்ற பத்திரிகையும், இவரது நற்பணி இயக்கத்தினரால் தொடங்கி நடத்தப்பட்டது.
* எழுத்தாளர் சுஜாதா, சந்தானபாரதி, அனந்து, ஆர்.சி.சக்தி, ஆகியோர் கமலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். இவர்களிடம் கதை குறித்த விவாதங்கள், நவீன சினிமாவைப் பற்றிய விமர்சனங்களை காரசாரமாக எடுத்து வைப்பார்.
அனைத்தையும் அட்வான்ஸாக செய்யும் கமலுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்
இந்திய சினிமாவின் முக்கிய கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக