புதன், 29 நவம்பர், 2017

பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் நவம்பர் 30 ,1945.



பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள்  நவம்பர் 30 ,1945.

வாணி ஜெயராம் (பிறப்பு: நவம்பர் 30 ,1945 ) திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர்
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.  வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி வாணிஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தாயார் பெயர் பத்மாவதி.

தொடக்கம்

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய
மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார்.அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது செல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

பாடல்கள்
1.நித்தம் நித்தம் நெல்லு சோறு! 2.மல்லிகை என் மன்னன் மயங்கும்.. 3.என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்.. 4.ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்! 5.என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்! 6.வேறு இடம் தேடி போவாளோ? தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. , இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

பெற்ற தேசிய விருதுகள்
1975 – தேசிய விருது – சில பாடல்கள் ( அபூர்வ ராகங்கள்)
1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சில பாடல்கள் ( சங்கராபரணம் )
1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" ( சுவாதி கிரணம்)



வாணி ஜெயராமின் இந்த க்ளாஸிக்குகளை கேட்டிருக்கிறீர்களா? #HBDvanijayaram

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக... வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட் பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர். இந்நாளில் அவருடைய சிறந்த பாடல்கள் சிலவற்றை பார்ப்போம்.
நித்தம் நித்தம் நெல்லு சோறு!

தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது. பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி முடித்திருப்பார். இந்தப்பாடலை கேட்டு முடித்த பிறகும் அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான இசையும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்து இருக்கும்.
"பச்சரிசி சோறு.. உப்பு கருவாடு...
சின்னமனூரு வாய்க்கா செலு கொண்ட மீனு
குருத்தான மொல கீற வாடாத சிறு கீற
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆச வந்து என்னை மீறுது"
என இளையராஜாவின் இசையில்,  கங்கை அமரனின் வரிகளில் மனதை மயக்கும் பாடல் இதோ!
மல்லிகை என் மன்னன் மயங்கும்....
கணவனுக்கு பிடித்த மல்லிகை பூவை சூடிக்கொள்ளவா ? என மனைவி கேட்டு பாடும் பாடல் இது.
"குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ"
என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பெண்களின் மனம் கவர்ந்த பாடல் இதோ!
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்...

ஒரு பெண் காதல் வயப்படும்போது உணரும் உணர்ச்சிகளை குரலிலேயே தந்து அசத்தியிருப்பர் வாணி ஜெயராம். ரோசப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் இப்பாடல் காட்சிக்கு பின்னே ஓடும். ஆனால் கதாநாயகியின் உணர்ச்சிகளை பாட்டு வெளிப்படுத்தும்.
"என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது
ஆனால் அதுவும் ஆனந்தம்"
என தொடங்கும் இப்பாடல் கவிஞர் புலமைப்பித்தன் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்ததாகும்.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
வாணி ஜெயராம் அவர்கள்,  இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் சாங் இது. இந்த பாடல் தவிர்த்து, கேள்வியின் நாயகனே பாடலும் வாணி ஜெயராம் பாடியதுதான். படத்தின் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் வாணி ஜெயராமிடம் இயக்குநர் ஒப்படைத்திருக்கிறார் என்றால் பாருங்கள், அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் அளவுகோலை!  இந்த பாடலை தத்துவப் பாடல் என்றே சொல்லலாம். கவிஞர் கண்ணதாசனின்,
"ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"
என்ற வரிகளில், எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அந்த பாடல் இதோ!
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!
காதலனை பார்த்து உருகி பாடும் பாடல் இது. காதலை கூறும்போது வெட்கத்துடன் நளினத்துடன் கூறுகிறாள் இந்த நங்கை. அது வேறு யாருமல்ல நம் பாடகி தான்.
"உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………"
என இளையராஜாவின் இசையில் நனைந்திட அப்பாடல் இதோ!
வேறு இடம் தேடி போவாளோ?
பாடல்களில் பல்வேறு உணர்ச்சிகளை கொடுப்பவர் வாணி ஜெயராம் என்று முன்பே கூறியதற்கு உதாரணம் இப்பாடல். இயலாமையில், வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் பெண்ணின் மனக்குரலை பதிவு  செய்திருக்கிறார். உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் மனதை கணமாக்கும்.
"சிறு வயதில் செய்த பிழை
சிலுவையென சுமக்கின்றாள்
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ
மலரெனவே முகிழ்ப்பாளோ"
என்ற ஜெயகாந்தனின் கனத்த வரிகளோடு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அந்த பாடல் இதோ!
தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!


வாணி Honey ஜெயராம்

70வதுகளில் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,எஸ்.ஜானகி என்று கேட்ட குரல்களையே கேட்டு புளித்துப் போய் இருந்த காலக் கட்டத்தில் வந்தவர் வாணி ஜெயராம்.இவர்களிடமிருந்து மாறுபட்ட வித்தியாசமான குரல்."என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டைக் கேளுங்கள் தெரியும்.
ஒரு மாதிரி ஜலதோஷம் பிடித்த ”தமிழ்ந்துஸ்தானி” கலவைக்குரல். மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோம்லி  குரல்.ஜானகியிடம் இருக்கும் வசீகரம் இவரிடம் இருந்ததா? ஆனால் இவரிடம் வேறு விதமாக இருந்தது.(தங்கத்தில் முகம் எடுத்து)
அப்போது குடும்பப் பாட்டு = சுசிலா, குடும்பம +செமிகுடும்பம் =ஜானகி,கிளப் டான்ஸ் பாட்டு =ஈஸ்வரி, என்ற பார்முலா இருந்தது. இவர் குடும்பப் பாட்டுக்கு முதலில் செட்டாகி பின்னால் பார்முலாவை மீறி சில பாடல்கள் பாடினார்.
எல்லா வித இசையும் கைப்பிடியில் வைத்திருந்ததால் எல்லா வித பாடல்களையும் சிரமமின்றிப் பாடினார்.ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகள் ப்ளஸ் வேறு மொழிகளிலும் பாடி நிறைய அவார்டுகள் வாங்கினார்.இவர் குரல் எல்லா மொழிக்கும் ஓரளவு பொருந்தி வந்ததுதான் காரணம்.
எல்லா மொழிப் பாடல்களைப் பாடினாலும் இவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்அய்யங்கார் பெண் என்பதால உச்சரிப்பில் எந்த வித வட இந்திய சாயல் இல்லை.தமிழ் உச்சரிப்பும் அருமை.
முதல் படம் என்னவென்று தெரியவில்லை.
தமிழுக்கு வருவதற்கு முன் 1971ல் Guddi என்ற இந்தி படத்தில் இவர் பாடிய “போல் ரே பப்பிஹரா” மெகா ஹிட் பாடல். ஒரு பக்கத்து வீட்டு ஹைஸ் ஸ்கூல் பெண் ஹோம்லிகுரலில்இந்தியாவையே கிறங்கடித்தவர் வாணி ஜெயராம்.அப்போது இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ்நாடும் பாட்டைக் கேட்டு சொக்கியது.ஆனால் தமிழிற்கு பின்னால்தான் வந்தார்.(1975ல் “ போல் ரே பப்பிஹரா” பாட்டு “என் உள்ளம் அழகான வெள்ளித்திரை” என்று தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் டவுன்லோட் ஆகி ”ஹிட்” ஆகியது.)
1973ல் வாணிஜெயராம் வந்தாலும் 1974ல்தான், “மல்லிகை என் மன்னன்” என்னும் தீர்க்க சுமங்கலி பட பாடல் குறிப்பாக தமிழ்நாட்டின் எல்லா ஹோம் மேக்கர்/ஹவுஸ் வைஃப்களுக்கு மிகவும் பிடித்துப்போய்  சூப்பர் ஹிட் ஆகியது.ஹோம் மேக்காதவர்களும் ரசிக்கத்தான் செய்தார்கள்.
இந்தப் பாட்டு(இசை- எம்எஸ்வி) வழக்கமான பி.சுசிலாவின் குடும்ப டைப்தான்.ஆனால் வாணி பாடியதும் வித்தியாசமாக இருந்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.அதற்கு பிறகு சுசிலா டைப் பாடல்கள் இவருக்குத் தாவின.வேறு டைப் பாடல்களும் பாடினார்.அடுத்து அப்போது வந்த நிறைய புது கதாநாயகிகளுக்கும் இவர் குரல் பொருந்தி வந்தது.
அப்போது தொடங்கி இவரின் கிராஃப் மேல் நோக்கிப் போக ஆரம்பித்தது.சுசிலாவும் ஜானகியும் சற்று பின் தங்கினார்கள்.
ஆனால் முதல் கட்டமாக என்னை இவரிடம் ஈர்த்தப் பாடல்கள்:
”மண்ணுலகில் இருந்து தேவன்”(புனித அந்தோனியார் - எம் எஸ் வி)
(கேட்ட இடம்,நேரம்,தேதி இன்னும் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது)
”அன்பு மேகமே” (எங்கம்மா சபதம்-விஜய பாஸ்கர்)
”ஏழு சுவரங்களில்”(அபூர்வ ராகங்கள்- எம் எஸ் வி)
(மெகா ஹிட் பாடல். புல்லரிக்கும் ஆரம்ப ஆலாபனை)
“ஆடி வெள்ளி” “வசந்த கால நதி”(மூன்று முடிச்சு -எம் எஸ் வி)
“கங்கை நதி ஓரம்”(வரப்பிரசாதம்- வி.குமார்)
“ வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்) haunting melody.கிளாசிகல் டச்சோடு வாணி அருமையாகப் பாடி இருக்கிறார். எம் எஸ் வி
தன் இசைக்கோர்வையில்(orchestration) இன்னும் கூட சோக உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம்.தன்னுடைய புளித்துப்போன ஸ்டீரியோடைப் இசையே இதிலும் வருகிறது.
இதே காலக்கட்டத்தில் இவர் பாடிய ஹிட ஆகாத நிறைய டப்பா பாடல்களும் இருக்கிறது.எல்லாம் வீண்.
அடுத்த மெகா ஹிட் ”மேகமே..மேகமே..”(பாலைவனச்சோலை).
அடுத்தக் கட்டமாக இளையராஜா இவரை மெருகேற்றி/மேம்படுத்தி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தார்.அதே சமயத்தில் பல இசை அமைப்பாளரின் இசைகளிலும் பாடிக்கொண்டிருந்தார்.
வீணை சிட்டிபாபு இசையமைத்த ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” படத்திலும் பாடியுள்ளார்.
ஹிட் ஆன பாடல்கள்:
1.யாரது சொல்லாமல் நெஞ்சு/இலக்கணம் மாறுதோ
2.ஒரே நாள் உனை /பாரதி கண்ணம்மா/அந்தமானைப் பாருங்கள்
3.என் உள்ளில் எங்கோ/தங்கத்தில் முகம் எடுத்து/பொங்கும் கடலோசை
4.மேடையில் ஆடிடும்/எத்தனை மலர்கள்/அமுத தமிழில் எழுதும்
5.கங்கை யமுனை/நானா பாடுவது நானா/அம்மாணை அழகு
"மண்ணுலகில் இருந்து” -புனித அந்தோனியார்- 1977
"அன்பு மேகமே” - எங்கம்மா சபதம் -1974
வித்தியாசமான மெட்டு. வாணி/பாலு இருவரும் அருமை.
”அம்மாணை அழகுமிகு கண்”-அவன் ஒரு சரித்திரம்-1977
(இந்தப் பாட்டின்(எம் எஸ் வி) தாக்கத்தில்தான் “பொன்மானே சங்கீதம் பாடவா”
பாட்டை ராஜா போட்டிருப்பார் என்பது என் யூகம்.)
என்னால் என்றும் மறக்க முடியாத மற்றொரு பாடல்:
"என் கல்யாண ” -அழகே உன்னை ஆராதிக்கிறேன்-1978
வாணியின் குரலைக் கேளுங்கள்.மிகவும் வித்தியாசமாக தெரியும் அருமை.ராஜாவின் இசைக்கோர்ப்பைக் கேளுங்கள்.மகழ்ச்சிக் கொப்பளிக்கும் இளம் பெண்ணின் காதல் மனத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான துள்ளிக்குதிக்கும் இசை. மத்யமாவதி ராகத்தில் போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக