வியாழன், 7 செப்டம்பர், 2017

பாடகி ஆஷா போஸ்லே பிறந்த நாள் செப்டம்பர் 08.



பாடகி ஆஷா போஸ்லே பிறந்த நாள் செப்டம்பர் 08.

ஆஷா போஸ்லே அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின் சகோதிரியாவார். இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆங்கிலம், ரஷ்யன், செக், மலாய் என பல அந்நிய மொழிகளிலும் பாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இரண்டு தேசிய விருதுகளும், ஒன்பதுக்கும் மேற்பட்ட ஃபிலிம்பேர் விருதுகளும், இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம விபூஷன்” விருதும், தாதா சாகேப் பால்கே விருதும், மேலும் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கிட்டதட்ட 12000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்த ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 08, 1933
இடம்: கோர் (சாங்க்லி மாவட்டம்) மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா
பணி: பாடகி
நாட்டுரிமை: இந்தியன்
பாலினம்: பெண்
பிறப்பு:
ஆஷா போஸ்லே அவர்கள், 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்க்லி மாவட்டத்திலுள்ள “கோர்” என்ற இடத்தில் தீனநாத் மங்கேஷ்கருக்கு மகளாக ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார்.


ஆரம்ப வாழ்க்கை:
ஆஷா போஸ்லேவிற்கு ஒன்பது வயது இருக்கும்பொழுது, அவரது தந்தை இறந்துவிடவே அவருடைய குடும்பம் புனேவிலிருந்து கோலாப்பூருக்கும், பிறகு மும்பைக்கும் குடிபெயர்ந்தது. பிறகு, அவரும் அவருடைய சகோதரியான லதா மங்கேஷ்கர் அவர்களும் திரைப்படங்களில் பாடத்தொடங்கினார்கள். “சலா சலா நவ பாலா” என்ற மராத்தி மொழிப் பாடலை “மாஜா பால்” என்ற திரைப்படத்திற்க்காக முதல் முதலாக பாடினார். பிறகு, 1948 ஆம் ஆண்டு “சுனரியா” என்ற திரைப்படத்தில் “ஸாவன் ஆயா” என்ற பாடலை பாடி இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார். அவருக்கு 16 வயது நிரம்பியபொழுது, 31 வயதான கண்பத்ராவ் போஸ்லே என்பவருடன் வீட்டைவிட்டு ஓடிய அவர், பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணமும் செய்துகொண்டார். ஆனால், அவருடைய இல்லற வாழ்க்கையில் பல பிரசசனைகளை சந்தித்தது மட்டுமல்லாமல் அவரது கணவர் அவர் மீது சந்தேகப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஆஷா போஸ்லே தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் தன் தாய் வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.
ஆஷா போஸ்லேவின் இசை பயணம்:
தன்னுடைய குழந்தைகளை வழிநடுத்துவதற்காக, தொடர்ந்து பாட தொடங்கிய ஆஷா போஸ்லேவிற்கு ஆரம்பத்தில் அவர் பாடிய பாடல்கள் மக்களிடம் செல்வாக்கைப் பெற்றுத் தரவில்லை. 1952 ஆம் ஆண்டு “சஜ்ஜத் ஹூசையின்” இசையமைத்த “சங்தில்” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார். அந்த பாடல், அவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்தது மட்டுமல்லாமல், நிறைய வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது. தொடர்ந்து பாடத்தொடங்கிய அவர், 1966 ஆம் ஆண்டு ஆர். டி. பர்மன் இசையமைத்த “தீஸ்ரி மஞ்சில்” என்ற திரைப்படத்திற்காக “காதல் உறழ்” என்ற பாடலைப் பாடினார். பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணமும் செய்துகொண்டனர்.


ஆஷா போஸ்லேவின் வெற்றி பயணம்:
1970 ஆம் ஆண்டுக்கு பிறகு, அவர் பாடிய பல பாடல்கள் அவரை வெற்றியின் உச்சிக்கே கொண்டுசென்றது எனலாம்.
இசையமைப்பாளர் ஒ.பி. நய்யார், கய்யாம், ரவி, புகழ்பெற்ற இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன், ராம் தேவ் பர்மன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஜெயதேவ், ஷங்கர் ஜெய்கிஷன், அனு மாலிக், மதன் மோகன், லஷ்மிகாந்த் ப்யாரேலால், நௌஷாத், ரவீந்திர ஜெயின், என் தத்தா, ஹேமந்த் குமார், ஜதின் லலித், பப்பி லஹிரி, கல்யாண்ஜி, உஷா கன்னா, சித்திரகுப்த், ரோஷன் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல வெற்றிப் பட பாடல்களை கொடுத்தார்.
‘பியா தூ அப் தொ ஆஜா’, ‘ஹஸீனா ஜூல்போன் வாலி’, ‘யே மேரா தில்’, ‘ஆப் கே பரஸ்’, ‘ராத் அகேலி ஹை’, ‘சாந்தமான தூர்’ (வசன, 1955), ‘ஆயியே மேஹர்பான்’ (ஹௌரா பிரிட்ஜ் 1958), ‘யேஹ் ஹை ரேஷ்மி’ (மேரே சனம் 1965), ‘பர்தே மெய்ன் ரஹ்னே தோ’ (ஷிகார் 1968), ‘உடே ஜப் ஜப்’ (நயா தௌர் 1957) , ‘ ஒ மரியா’ என்ற பாடல் (சாகர்), ‘தம் மாரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஸ்ணா 1971), ‘துனியா மெய்ன்’ (அப்னா தோஷ் 1972), ‘ சுரா லியா ஹை தும்னே’ (யாதோன் கி பாராத் 1973), ‘ கிதபைன் பஹீத் சி’ (பாஜிகர்), ‘பில்ஹால்’ (பில்ஹால்), ‘ ஜாயியே ஆப் கஹான்’ (மேரே சனம்), ‘ஆவோ ஹீஜூர் தும்கோ’ (கிஸ்மத்) போன்றவை ஆஷா போஸ்லேவின் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும். மேலும், ‘நயா தௌர்’ (1957), ‘வக்த்’, ‘கும்ராஹ்’, ‘சைனா டவுன்’, ‘ஆத்மி அவுர் இன்சான்’, ‘காஜல்’, ‘காலா பானி’, ‘காலா பாஜார்’, ‘லாஜ் வந்தி’, ‘தீன் தேவியான்’, ‘மேரா நாம் ஜோகர்’, ‘சாரங்கா’, ‘உம்ராவ் ஜான்’ (1981), ‘இஜாசத்’ (1987), ‘ரங்கீலா’ (1995), போன்ற பல திரைப்படங்களில் வெற்றிப் பாடல்களை தந்துள்ளார்.


தேசிய விருதுகள்:
1981 ஆம் ஆண்டு “உம்ராவ் ஜான்” என்ற திரைப்படத்தில் “தில் சீஜ் க்யா ஹை” என்ற பாடலுக்காகவும் மற்றும் 1986 ஆம் ஆண்டு “இஜாசத்” என்ற திரைப்படத்தில் “மேரா குச் சாமன்” என்ற பாடலுக்காவும் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.
பிறமொழி பாடல்கள்:
தமிழில் பாடிய ‘ஒ! பட்டர்ஃபளை பட்டர்ஃபளை’ பாடல் தமிழ் இசை ரசிகர்களால் மிகவும் கவர்ந்த பாடலாக அமைந்தது எனலாம். மேலும் ‘சந்திரமுகி’, ‘இருவர்’, ‘மூன்றாம் பிறை’, ‘எங்க ஊர் பாட்டுக்காரன்’, ‘ஹே ராம்’ போன்ற தமிழ் திரைப்படங்களிலும், ‘ருபேரி வாலுத்’ ‘தருண் ஆஹே ராத்ரா ஆஜூனி’, போன்ற மராத்திய மொழி பாடல்களும் மற்றும் தெலுங்கு, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி என பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி சாதனைப் படைத்துள்ளார்.


பிறப் படைப்புகள்:
போப் இசைப் பாடல்கள், கஜல் வழிப்பாடல், பஜனைப்பாடல், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசைப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள் என அனைத்திலும் தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்களை வசப்படுத்திய ஆஷா போஸ்லே அவர்கள், தனிப்பட்ட முறையில் சில தொகுப்புகளை வெளியிட்டார். 1990 ஆம் ஆண்டு ‘ராகுல் அண்ட் ஐ’ என்ற தொகுப்பையும், 1997ல், ‘ஜானம் சம்ஜா கரோ’ என்ற தொகுப்பையும், 2002ல், ‘ஆப் கி ஆஷா’ என்ற தொகுப்பையும், இந்திய பாரம்பரிய இசையில் உருவான ‘பர்சே பாதல்’ என்ற தொகுப்பையும், 2005ல், ‘ஆஷா’ என்ற தொகுப்பையும், 2006ல், ‘ஆஷா அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என மேலும் பல தொகுப்புகளையும் வெளியிட்டார். இந்த தொகுப்புகள், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், அவர் பாடிய பல இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்பனையாகியது. மேலும், கனடா, துபாய், அமெரிக்கா, பிரிட்டிஷ், போன்ற வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் இணைந்து பல இசை நிகழ்சிகளையும் நடத்தியுள்ளார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்:
1981 ஆம் ஆண்டு “உம்ராவ் ஜான்” என்ற திரைப்படத்தில் “தில் சீஜ் க்யா ஹை” என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு “இஜாசத்” என்ற திரைப்படத்தில் “மேரா குச் சாமன்” என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டு “கரிபோன் கி சுனோ” (தஸ் லாக் 1966), 1969 ஆம் ஆண்டு, ‘பர்தே மெய்ன் ரஹ்னே தோ’ (ஷிகார் 1968), 1972 ஆம் ஆண்டு, ‘பியா தூ அப் தொ ஆஜா’ (காரவான் 1971), 1973 ஆம் ஆண்டு, ‘தம் மாரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 1972), 1974 ஆம் ஆண்டு, ‘ஹோனே லகி ஹைன் ராத்’ (நைனா 1973), 1975 ஆம் ஆண்டு, ‘சயன் சே ஹம்கோ கபி’ (பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே 1974), 1979 ஆம் ஆண்டு, ‘யெஹ் மேரா தில்’ (டான் 1978) போன்ற திரைப்பட பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ‘நைடிங்கேல் ஆஃப் ஆசியா’ விருது வழங்கப்பட்டது.
1989 மற்றும் 1999 ஆம் ஆண்டுக்கான ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது’ வழங்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு ‘ஸ்க்ரீன் வீடியோகான் விருது’ வழங்கப்பட்டது.
1997 மற்றும் 2001 ஆம் ஆண்டுக்கான ‘எம் டி.வி விருது’ வழங்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு ‘சேனல் வி விருது’ வழங்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு ‘தயாவதி மோடி விருது’ வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு “மில்லேனியம் சிங்கர்” மற்றும் “ஜீ கோல்ட் பாலிவுட்” விருது வழங்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டு ‘பி.பி.சி வாழ்நாள் சாதனையாளர் விருது’, ‘ஜீ டி.வி விருது’, ‘ஸ்க்ரீன் வீடியோகான்’, ‘சான்சுய் திரைப்பட விருது’, ‘ஸ்வராலயா யேசுதாஸ் விருது’ போன்றவை வழங்கப்பட்டது.
“லிவிங் லெஜென்ட் விருது” பெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காம்பெர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி மூலமாக வழங்கப்பட்டது.
மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்த ஆஷா போஸ்லே அவர்கள், இசை ஆர்வம் கொண்ட நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று வாழ்ந்து வருகிறார்.


பிரபல பின்னணிப் பாடகி
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளுள் ஒருவரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பின்னணி பாடி வருபவருமான ஆஷா போஸ்லே (Asha Bhosle) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*மகாராஷ்டிரத்தில் சாங்க்லி மாவட்டத்தில் கோர் என்ற கிராமத்தில் பிறந்தார் (1933). தந்தை ஒரு நடிகர். இவரது 9 வயதில் தந்தை காலமானார். குடும்பம் பம்பாயில் குடியேறியதும், இவரும் இவரது அக்கா லதா மங்கேஷ்கரும் திரைப்படங்களில் பாடினர்.
*1943-ல் முதன்முதலாக ‘சலா சலா நவ பாலா’ என்ற மராத்தி மொழிப் பாடலை ஆஷா தனியாகப் பாடினார். 1949-ல் ‘ராத் கீ ராணி’ படப் பாடல் மூலம் புகழ்பெறத் தொடங்கினார்.
*1952-ல் ‘சங்தில்’, அடுத்த ஆண்டு ‘பரிநீதா’ ஆகிய படப் பாடல்களாலும் ராஜ் கபூர் படத்தில் பாடிய ‘நன்ஹே முன்னே பச்சே’ என்ற பாடல் மூலமும் புகழ்பெற்றார். தொடர்ந்து ‘சி.ஐ.டி.’, ‘நயா தௌர்’ ஆகிய படங்களில் பாடிய பாடல்கள் வெற்றி பெற்றதில் பாலிவுட்டில் நிரந்தர இடமும் கிடைத்தது.
1966-ல் ‘தீஸ்ரி மஞ்சில்’ படத்தில் இவர் பாடிய ‘ஆஜா ஆஜா’ என்ற மேற்கத்திய பாணியிலான பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ‘வசன்’ படத்தில் பாடிய ‘சந்தாமாமா தூர் கே’ என்ற தாலாட்டுப் பாடல் இந்திய அன்னையரின் மனம் கவர்ந்த பாடலாக மாறிவிட்டது.
*’ஹவுரா பிரிட்ஜ்’, ‘மேரே சனம்’, ‘காஷ்மீர் கீ கலி’, ‘வக்த்’, ‘கும்ராஹ்’, ‘சாகர்’, ‘ஆத்மி அவுர் இன்சான்’, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’, ‘உம்ராவ் ஜான்’, ‘இஜாசத்’, ‘யாரோங் கீ பாராத்’, ‘ரங்கீலா’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
*மராட்டியர்கள் இவரை ஆஷா ‘தாயி’ (சகோதரி) என்று அன்புடன் குறிப்பிடுவர். தமிழில் ‘நம்ம ஊரு பாட்டுக்காரன்’, ‘ஹே ராம்’, ‘இருவர்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். கஜல், பஜனைப் பாடல்கள், கவாலி எனப் பல்வேறு வகைப் பாடல்களைப் பாடும் திறன் கொண்டவர். இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஆங்கிலம், ரஷ்யா, நேபாளம், செக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.
*கனடா, துபாய், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இசைப் பயணங்கள் மேற்கொண்டார். 1990களில் பழம்பெரும் பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இவர் இசையமைத்து, பாடி வெளியிட்ட ‘ராகுல் அன்ட் ஐ’, ‘ஜானம் சம்ஜா கரோ’, ‘ஆப்கி ஆஷா’ உள்ளிட்ட பல இசைத் தட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன.
*1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
*நன்றாகச் சமைப்பார். தங்களுக்கு விருப்பமான உணவைச் சமைத்துத் தரும்படி கேட்கும் பல திரையுலகப் பிரபலங்களுக்கு அன்போடு சமைத்துத் தருவாராம். துபாய், குவைத் ஆகிய இடங்களில் உணவகங்களை நடத்திவருகிறார்.
*இரண்டு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று 83-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இவர் இப்போதும் திரைப்படங்கள், ஆல்பங்களில் பாடியும், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.


ஆஷா போஸ்லே  பல துறைகளில் திறமை கொண்டவராக இருந்தாலும், அவர் பாலிவுட் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ் பெற்றவராவார்..
அவரது கலைப்பயணம் 1943 ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து வருகிறார்..
அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியதோடு,அவர் பாடிய பல இசைத்தட்டுக்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன..
அவர் பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்..
 அவரது திறமை திரைப்படப்பாடல்கள், போப் இசை, கஜல் வழிப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப்பாடல்கள், கவ்வாலிப்பாடல்கள், ரபீந்திர சங்கீதம் மற்றும் நஜ்ருல் கீதி பாடல்கள் அனைத்திலுமே பளிச்சென்று வெளிப்படுவதை அனைவரும் அறிவார்கள்..
அவர் 14 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார், அவற்றில் ஆஸ்ஸாமீஸ், ஹிந்தி, உருது, தெலுங்கு,மராத்தி, பெங்காளி,குஜராத்தி, பஞ்சாபி, தமிழ்,ஆங்கிலம், ரஷ்ய மொழி, செக் மொழி, நேபாளி, மலாய் மொழி மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் அடங்கும்..
போஸ்லே அவர்கள் 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளதாக அறியப்படுகிறது..
ஆஷா போஸ்லேஅவர்களின் முதல் வெற்றிக்கு காரணமாக இருந்தது பி ஆர் சோப்ரா அவர்களின் நயா தௌர் ("புதிய யுகம்", 1957) என்ற படமாகும்..
நிறைந்த தென் இந்திய இசை அமைப்பாளரான இளையராஜா ஆஷா போஸ்லேயின் குரலை 1980 ஆண்டுகளின் முன்பகுதியில் பயன்படுத்தினார், முதல் முதலாக அவர்கள் சேர்ந்தது மூன்றாம் பிறை (1982) என்ற படம் மற்றும் படத்தின் ஹிந்தித் தழுவலான சாத்மா (1983) என்ற படத்திற்காகும்..
அவர்கள் இருவரும் 1980 மற்றும் 1990 ஆண்டுகள் வரை தொடர்ந்து இணைந்து பணி புரிந்தார்கள். இக்காலங்களில் அவர்களை நினைவு கூரவைக்கும் சில பாடல்களில் செண்பகமே என்ற எங்க ஊரு பாட்டுக்காரன் (1987) தமிழ் பாடலும் அடங்கும்..
ரங்கீலா (1994) என்ற வெற்றிப்படத்தின் மூலம் ஆஷா போஸ்லே அவர்கள் திரும்பவும் திரைப்படங்களில் பாடவந்ததற்கு ஏ.ஆர். ரஹ்மான் காரணமாவார். தன்ஹா தன்ஹா மற்றும் ரங்கீலா ரே போன்ற பாடல்கள் வெற்றிக்கொடி நாட்டின..
ஷா போஸ்லே அவர்களுக்கு மொத்தமாக கிடைத்த 18 பரிந்துரைகளில், அவர் ஏழு முறை பிலிம்ஃபேரின் மிகச்சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதுகளைவென்றுள்ளார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக