சனி, 9 செப்டம்பர், 2017

பாடகி சின்மயி பிறந்த நாள் செப்டம்பர் 10, 1984.


பாடகி சின்மயி பிறந்த நாள் செப்டம்பர் 10, 1984.

சின்மயி ஸ்ரீபதா ( தெலுங்கு : చిన్మయి శ్రీపాద) (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ் , அறிந்தும் அறியாமலும் ,
சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 'ஆஹா காப்பி க்ளப்' எனும் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை நடைபெறும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இவர் இருக்கிறார். இவர் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு,
உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு , சத்தம் போடாதே படத்தில்
பத்மபிரியாவிற்கு , தாம் தூம் படத்தில்
கங்கனா ரனாத்திற்கு , ஜெயம்கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு ,
சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும்
வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டியிற்கு என பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் தந்துள்ளார்,
ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில்,
மணிரத்னம் இயக்கத்தில், சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்களைப் பாடினார்.
சர்ச்சை
சின்மயி டிவிட்டர், முகநூல் ,
வலைப்பதிவு போன்ற சமூக தளங்களில் இயங்குபவர். கஜேந்திரகுமார் என்பவர் தனக்கு 12 லட்சம் தர வேண்டும் எனவும் அதை பெற்றுத்தர உதவும்படியும் மற்றொரு புகாரில் டிவிட்டர் தளத்தில் தன்னுடைய ஆபாச புகைப்படங்களும், தன்னைப்பற்றி கீழ்தரமாகவும் எழுதியதற்கு காரணமான 6 நபர்களை கைது செய்யவேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு டிவிட்டர்களை கைது செய்துள்ளனர் . ஆறு பேரில்
லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் இராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும் அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறியுள்ளார். சின்மயி இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து சொன்னதால் தான் அவருக்கு எதிர் வினை கடுமையாக இருந்தது எனவும் பலரால் கூறப்படுகிறது . மீனவர்கள் மீன்களைக்கொல்வது பாவமாயில்லையா என்று அவர் டிவிட்டரில் சொன்னது மீனவர்களுக்கு எதிரானது என்று பலரால் கருதப்படுகிறது  . இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற இதழில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தது .அது பிடிக்காததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.


சின்மயி பாடிய பாடல்கள் சில...
ஆண்டு பாடல் திர
2002
ஒரு தெய்வம் தந்த பூவே கன்னத்தில்
ஒரு தடவை சொல்வாயா வசீகரா
கிறுக்கா கிறுக்கா விசில்
உயிர் பிரிந்தாலும் சேனா
இதயமே நம்ம ஊரு
பூந்தேனா ஈரநிலம்
2003
மைனாவே மைனாவே தித்திக்கு
பூ பூ பூங்குருவி தத்தி தாவ
என்ன இது நள தமயந்தி
பிளீஸ் சார் பாய்ஸ்
கண்ணா அன்பே உன்
பிரிவெல்லாம் பிரிவல்ல சூரி
பூவே முதல் பூவே காதல் கிற
சந்திப்போமா எனக்கு 20
ஒரு நண்பன் இருந்தால் எனக்கு 20
என் உயிர் தோழியே கண்களால்
2004
புது காதல் காலமிது
புதுகோட் சரவணன்
என்னை தீண்டிவிட்டாய் குத்து
நீ தானே என் மேல ஜனனம்
இஃப் யு வோன கம் அலோங்க் நியூ
ஒப்பனக்கார வீதியிலே கிரி
எங்கு பிறந்தது விஷ்வ துள
காதலிக்கும் ஆசையில்லை செல்லமே
2005 நூதனா கற்க கசடற
சில் சில் அறிந்தும்
2006 காதல் நெருப்பின் வெயில்
2007 சஹானா சிவாஜி
ஆருயிரே ,மைய்யா குரு 2007
2008
ஆவாரம் பூ பூ
சின்னம்மா ,ஐ மிஸ் யூ டா சக்கரகட்டி
2009
லேசா பறக்குது வெண்ணில
நிலா நீ வானம் பொக்கிஷம்
வாராயோ வாராயோ ஆதவன்
2010
பூவே பூவே சித்து +2
கிளிமஞ்சாரோ எந்திரன்
அன்பில் அவன் விண்ணை வருவாயா
2014 இதயம் கோச்சடைய
2015
என்னோடு நீ இருந்தால் ஐ
ரோஜா கடலே அனேகன்
இதயத்தை ஏதோ ஒன்று என்னை அற
நான் அவள் இல்லை மாஸ்
2016 சைரட் ஜலோ ஜி சைராட் மர
பின்னணி குரல் கொடுத்த படங்கள்
ஆண்டு திரைப்படம்
யாருக்க பின்னண குரல் கொடுத்த
2006 சில்லுனு ஒரு காதல்
பூமிகா சாவ்லா
2007
உன்னாலே உன்னாலே
தனிஷா முகெர்ஜி
சத்தம் போடாதே பத்மபிரிய
2008
ஜெயம்கொண்டான் லேகா வாஷிங்டன்
தாம் தூம் கங்கனா ரனாத்
சக்கரகட்டி வேதிகா குமார்
வாரணம் ஆயிரம் சமீரா ரெட்ட
2009
தநா-07 ஏஎள் 4777 மீனாட்சி
யாவரும் நலம் நீத்து சந்திரா
மோதி விளையாடு
காஜல் அகர்வால்
கண்டேன் காதலை தமன்னா
2010
அசல் சமீரா ரெட்ட
ராக்தா சரித்ரா ராதிகா அப்தே
தீராத விளையாட்டுப் பிள்ளை
நீத்து சந்திரா
விண்ணைத்தாண்டி வருவாயா
திரிஷா கிருஷ்ண
ஏ மாயா சேசவா சமந்தா ருத் பிரபு
சுறா தமன்னா
மன்மத பாணம் - (தெலுங்கு)
திரிஷா கிருஷ்ண
2011
கோ கார்த்திகா நாயர்
நடுநிசி நாய்கள் சமீரா ரெட்ட
வந்தான் வென்றான் டாப்ஸே பண்ணு
2012
வேட்டை சமீரா ரெட்ட
மாற்றான் காஜல் அகர்வால்
2014 லிங்கா சோனாக்சி சின்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக