சனி, 30 செப்டம்பர், 2017

இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் நினைவு தினம் அக்டோபர் 1, 1973



இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் நினைவு தினம்  அக்டோபர் 1, 1973

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

இவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமய்யா என அழைத்தனர். ராமய்யா பிற்காலத்தில் பாபநாசம் சிவன் என்ற பெயருடன் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் வாக்கேயக்காரராக விளங்கினார்.
இவர் அதிகாலையில் சிவன் கோயிலின் முன் நின்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இறங்கிவந்ததாகப் புகழ்ந்து தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் பாபநாசம் சிவன் என்று அழைத்தனர்.
தனது ஏழாம் வயதில் தந்தையை இழந்ததினால் வறுமை காரணமாக, தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த தன் மூத்த தமையனார் ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்தார். மற்றவர்கள் கொடுக்கும் அன்னதானத்தின் மூலம் உணவுண்டு தமது இள வயது வாழ்க்கையைக் கழித்தார். அங்கு தங்கியிருந்த வேளையில் இவர் மலையாளம் பயின்று மகராஜ சமசுகிருதக் கல்லூரியில் சேர்ந்து 1910 இல் வையகர்ண பட்டதாரி ஆனார்.
சிறந்த குரல்வளத்தையும், இசை உள்ளறிவையும் கொண்டிருந்ததால் இசையின் ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான வித்துவான் நூரணி மகாதேவ ஐயர்,சம்பபாகவதர் ஆகியோரிடமிருந்து பெற்றார். பஜனை செய்வதின் மூலம் இவரது இசைப்புலமை மெருகேறியது.
ஒருநாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரின் கச்சேரியைக் கேட்டபின், அவரை அணுகி தன்னை அவரின் மாணவனாக ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் சம்மதிக்கவே அவருடன் 7 வருடம் தங்கி இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். இதன் பின் தனது குருவின் பாணியிலே ஆலாபனை, நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரம் என்பவற்றைப் பாடத் தொடங்கினார்.
1917இல் சுப்பரமணிய ஐயரின் முயற்சியினால் இவரது திருமணம் நடந்தது. நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி என்ற இரு பெண் குழந்தைகள் இவருக்குப் பிறந்தனர்.
1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனையில் சிவன் தனது முதற் கச்சேரியை நிகழ்த்தினார். இதன் பின்னர் பாபநாசம் சிவன் தென்னிந்தியா முழுவதிலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் தனது கச்சேரிகளை நடத்தினார்.

இசைப் பணி

பாபநாசம் சிவன் தனது முத்திரையாக "ராமதாஸ" என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். கோயில்களின் முன்னின்று பல பாடல்களை இயற்றினார். இப்படியாக இவர் இயற்றிய பாடல்களை, புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள் பலரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். கருநாடக மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் முக்கியமானவர் பாபநாசம் சிவன்.
1921 இல் சிவன் சென்னைக்கு வந்து தங்கிவிட்டார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.
இயற்றிய நூல்கள்
1934 இல் 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான கீர்த்தன மாலை வெளியிடப்பட்டது. இதன் பின் 31 ஆண்டிகளுக்குப் பிறகு 100 பாடல்களைக் கொண்ட இரண்டாவது நூலை வெளியிட்டார். பிறகு 101 பாடல்களைக் கொண்ட மூன்றாவது தொகுதியை சிவனின் 2 ஆவது மகள் ருக்மணி ரமணி வெளியிட்டார்.
10 ஆண்டுகள் உழைத்து 1952 இல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை ஆக்கினார்.
இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலை ஆக்கினார்.
காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் இசை நாடக நூலை எழுதினார்.
திரைப்படத் துறை பங்களிப்புகள்
பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன். ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார்.

இசையமைத்த திரைப்படங்கள்

சீதா கல்யாணம்
பக்த குசேலா (1936)
அம்பிகாபதி (1937)
சிந்தாமணி (1937)
சேவாசதனம் (1938)
திருநீலகண்டர் (1939)
தியாக பூமி (1939)
சந்திரகுப்த சாணக்யா (1940)
அசோக் குமார் (1941)
சிவகவி (1943)
கன்னிகா (1947)
பாடல் எழுதப்பட்ட திரைப்படங்கள்
சீதா கல்யாணம் - 22 பாடல்கள்
பவளக்கொடி - 60 பாடல்கள்
அசோக் குமார் - 19 பாடல்கள்
சிவகவி - 29 பாடல்கள்
ஹரிதாஸ் -
மீரா
திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்களில் புகழ்பெற்றவை
மன்மதலீலையை வென்றார் உண்டோ...
ராதே உனக்கு கோபம்... ( சிந்தாமணி 1937 )
அம்பா மனங்கனிந்து... ( சிவகவி 1943 )
நடித்த திரைப்படங்கள்
பக்த குசேலா - இந்தப் படத்தில் பாடி நடித்திருந்தார்.
தியாகபூமி
சேவாசதனம்
குபேர குசேலா

மறைவு

1973 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 அன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார்.
பட்டங்களும் விருதுகளும்
சங்கீத சாகித்ய கலா சிகாமணி, 1950; வழங்கியது:இந்திய பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
சிவ புண்ய கான மணி, 1951, காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வழங்கியது
சங்கீத கலாசிகாமணி விருது , 1950 & 1969, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி [2]
சங்கீத கலாநிதி விருது , 1971; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
இசைப்பேரறிஞர் விருது [3] , 1965; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
பத்ம பூஷன் விருது; வழங்கியது:
இந்திய அரசு
இயற்றிய கீர்த்தனைகளின் பட்டியல்
கருணாகரனே...சிவசங்கரானே...!
குருவாயூரப்பா...குழந்தாய்... முகுந்தா...
ஏறெடுத்தும் பாராத காரணம் என்னவோ?...
கற்பகமே கண் பாராயும்...
கணபதே, மகாமதே...
காணக்கண் கோடி வேண்டும்... - காம்போதி
கா வாவா கந்தா வாவா... - வராளி
ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே... - நடபைரவி
தாமதமேன்... - தோடி
கடைக்கண்... - தோடி
கார்த்திகேயா காங்கேயா... - தோடி


பாபநாசம் சிவன்: தமிழ் தியாகய்யர்!

தனக்கு குரு என்று ஒருவரில்லை; எல்லோருமே தனக்கு குருதான் என்ற இசை மேதை அவர்!
“ஆண்டாள், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோரின் பக்திப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்குக் காரணம் பக்திச் சுவையின் உருக்கமே. உருக்கமான எந்தப் பாடலும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர் பாபநாசம் சிவன்” என்று வர்ணித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.
பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறு வயதில் சிரமங்கள் மிகுந்த வாழ்க்கை. இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆனால், சாரீர வளமை மிகுந்திருந்த சிவன், குரல் வளத்துடன் பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்துடன் கீர்த்தனைகளைத் தாமே இயற்றிப் பாடியிருக்கிறார். கடந்த நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் பாபநாசம் சிவன்.
சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்த தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், பூலோக கைலாசமான போலகம் என்னும் கிராமத்தில் 1890 செப்டம்பர் 26-ல், அதாவது புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று சதய நட்சத்திரத்தில் ராமாமிருதம்-யோகாம்பாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். குழந்தைக்குத் தொட்டிலிட்டு ராம சர்மா என்று பெயரிட்டார்கள். சுருக்கமாக ராமையா (மூத்த மகன் ராஜகோபாலன், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை துணைவி யான ஜானகியின் தந்தை).
அரங்கேற்றம்
1910-ம் ஆண்டு. திருவாரூர் தியாகேசன் சந்நிதியில் ‘குந்தலவராளி’ ராகத்தில் தம்முடைய முதல் பாடலை அரங்கேற்றினார் பாபநாசம் சிவன்.
‘உன்னைத் துதிக்கவருள் தா இன்னிசையுடன்
உன்னைத் துதிக்கவருள் தா'
அங்கு நின்றுகொண்டிருந்த மகாவித்வான் சிமிழி சுந்தரமய்யர் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டார். "தியாகராஜர், தமிழ்ல பாடல்கள் எழுதாம போய்விட்ட குறையைப் போக்கிக்கொள்ள, இப்ப சிவனா வந்து பிறந்திருப்பார்னு தோண்றது... இவர் தமிழ் தியாகய்யர்" என்று போற்றினார். இன்று வரை அந்தப் பட்டப் பெயர் சிவனுக்கு நிலைத்து நிற்கிறது,
திருமணம்
1917-ம் ஆண்டு. "வாழ்நாள் முழுவதும் ஈஸ்வர பஜனையை சிவன் விடாமல் நடத்திவர வேண்டுமானால் அவருக்கு தேக ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும். சீக்கிரமே முகூர்த்தம் வைக்கணும். மற்றதெல்லாம் என் பொறுப்பு'' என்று திருவாரூர் கோயில் பங்குனி உத்திர உற்சவத்துக்குப் பொறுப்பேற்ற பிரபல வக்கீல் பழையவலம் சுப்பய்யர் சொல்ல, அம்மணி என்கிற லட்சுமியைக் கரம்பிடித்தார் சிவன். நான்கு நாள் கல்யாணம். இரட்டைக் குதிரை பீட்டனில் ஊர்வலம். திருமணத்துக்கு வசூலானதில் செலவு போக ரூ.2,000 மிஞ்சியது. அதை ஏனங்குடி நாயக்கர் என்பவரிடம் கொடுத்து, “சிவனுக்கு ஏதாவது பெரிய கஷ்டம் வந்தால் கொடுங்கள்” என்று அதை வைப்பு நிதி மாதிரி ஒப்படைத்துவிட்டார் சுப்பய்யர். தனது ஏழாவது வயதில் தந்தையை இழந்தார் சிவன். இழப்பின் துயரம் அவரை வாட்டியது. குடும்பம் போலகத்தை விட்டுப் புலம் பெயர்ந்துவிடத் தீர்மானிக்க, தாயுடனும் சகோதரருடனும் திருவனந்தபுரத்தை அடைந்தார்.
சொந்த ஊர் போலகம் என்றாலும், ராமய்யாவுக்கு பாபநாசம் சிவன் என்ற பெயர் வந்தது எப்படி?
பாடும் சிவன்
திருவனந்தபுரத்திலிருந்து தஞ்சாவூருக்குத் திரும்பிய சமயத்தில் நாடோடிபோல் திரிந்தார் அவர். ஒவ்வொரு கோயில் உற்சவமாகச் சென்று பாடிக்கொண்டிருந்த சமயம் அது. ஒருமுறை கணபதி அக்ரஹாரத்தில் நான்கு முழ வேஷ்டியைக் கட்டிக்கொண்டு சிவன் வருவதைப் பார்த்தார்கள் பக்தர்கள். நெற்றியிலும், தோள்பட்டையிலும், மார்பிலும் பட்டை பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்ராட்ச மாலை. ‘அரும் பொன்னே, மணியே’ என்ற தாயுமானவர் பாடலை பக்தி மணம் கமழ அவர் பாடிக்கொண்டிருக்க, அதில் லயித்துப் போனார்கள் பக்தகோடிகள்.
‘‘கைலாசத்திலிருந்து அந்தப் பரமசிவனே நேரடியாக வந்து தரிசனம் தந்ததுபோல் இருக்கிறது’’ என்று உணர்ச்சிவசப்பட்டார் சாம்பசிவ ஐயர் என்கிற பக்தர்.
இப்படி சிவனாக மாறிய ராமையா, பாபநாசத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய தன் சகோதரருடன் சிறிது காலம் தங்கினார். அப்போதிலிருந்து பாபநாசம் சிவன் என்று அழைக்கப்பட்டார். பஜனைப் பாடல்கள் மீது பாபநாசம் சிவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது திருவனந்தபுரத்தில். நீலகண்டதாசர் என்ற பரம சிவபக்தர், நூற்றுக்கணக்கான சிஷ்ய கோடிகளுடன் தினமும் உஞ்சவிருத்தி, சமாராதனை, சிவாலயங்களில் பஜனையெல்லாம் செய்துகொண்டிருந்தார். இந்த பஜனைக் குழுவில் சிவனும் கலந்துகொள்வார். அனைவருக்கும் இவர் ஏழையென்ற இரக்கமும் அபிமானமும் ஏற்பட்டது. அப்போது முதல் நீலகண்டதாசரின் கீர்த்தனைகள் பல சிவனுக்குப் பாடமாயின. தேவாரமும் திருவாசகமும் அவருக்குத் தெரியவந்தன. தாயுமானவரின் பாடல்களைப் பாடம் செய்துகொண்டார். திருப்புகழ் மனப்பாடமானது. நந்தன் சரித்திரம் தெரிந்துகொண்டார். பல உருக்கமான நாமாவளிகளை அவரல் பாட முடிந்தது.
‘‘எனக்கு குரு என்று ஒருவரில்லை. எல்லோருமே என்னுடைய குருநாதர்கள்தான்’’ என்று பெருமையுடன் குறிப்பிடுவார் சிவன்.
அன்னை தெய்வம்
தன்னுடைய தாயாரைத் தெய்வமாகப் போற்றியவர் பாபநாசம் சிவன். அட்சரம்கூட எழுதவோ படிக்கவோ தெரியாத தன் அன்னை, எப்படி ஆயிரக்கணக்கான பாடல்களைக் கற்றுக்கொண்டார் என்ற வியப்பு சிவனிடம் கடைசிவரை இருந்திருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் முந்நூறுவரை பாடமாகியிருந்தது அம்மாவுக்கு. க்ஷேத்ரக்ஞர் பதங்களும், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பக்த கவிகள் பலரின் பாடல்களும் அவருக்குத் தெரிந்திருந்தன. இவை தவிர, அந்தக் காலத்துப் பெண்களுக்கே உரித்தான கல்யாணப் பரிகாசப் பாடல்களும், நலங்கு, ஊஞ்சல், ஓடம், கும்மி, கோலாட்டம் போன்ற குதித்துப் பாடும் பாடல்களும் அவருக்கு அத்துப்படி!
தனக்கு வாய்த்த இசையறிவுக்கும், ஒருவகைக் குரல் இனிமைக்கும் காரணம், இத்தகைய தாயிடம் கர்ப்பவாசம் செய்யக் கிடைத்த பாக்கியமும் அவருடைய ஆசியும்தான் என்று பூரிப்புடன் கூறிக்கொள்வார் பாபநாசம் சிவன்.
திருவையாறு ஸப்த ஸ்தான விழாவில் 1912 முதல் 1957 வரையில் 45ஆண்டுகள் விடாமல் பஜனை நடத்தியிருக்கிறார் சிவன். 19 ஆண்டுகள் நாகையில் ஆடிப்பூர பஜனை நிகழ்த்தியிருக்கிறார்.
சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிய பிறகு தனது இறுதிக் காலம் வரையில் மயிலையில் மார்கழி மாதத்திலும், பங்குனி உத்திரத் திருவிழாவிலும், மகாசிவராத்திரியின் போதும், அறுபத்து மூவர் உற்சவத்திலும் சிவன் நடத்திவந்த பஜனையில் கலந்துகொண்டு மகிழாத வித்வான்களும், ரசிகப் பெருமக்களும் இல்லை.
‘‘இது எல்லாமே இந்த அடிமைக்கு ஆண்டவன் அளித்த திருவருள் அன்றி வேறில்லை’’ என்பார்.
மியூசிக் அகாடமியில் ‘சங்கீத கலாநிதி’ விருதுபெற்ற வருடம் நிகழ்த்திய தலைமை உரையின்போது இவ்வாறு குறிப்பிட்டார் பாபநாசம் சிவன்:
‘‘தற்கால சங்கீதம் தொழிலாகப் போய்விட்டது. குடும்ப சம்பாத்தியத்துக்கு ஒரு சாதனமாகிவிட்டது. ஈசுவரார்ப்பணம் என்பது மறைந்துவிட்டது. அதனால் குருபக்தி குறைந்துவிட்டது. முன்காலத்தில் நடைமுறையிலிருந்த குருகுல வாசம் தற்போது அரிதாகிவிட்டது. தக்க குருவும் இல்லை, சீடரும் இல்லை. ஒருவருக்கும் பொறுமையில்லை!”

கர்னாடக இசை மேதை, திரைப்படப் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்ட பாபநாசம் சிவன் (Papanasam Sivan)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அன்றைய தஞ்சை மாவட்டம் போலகம் கிராமத்தில் (1890) பிறந்தார். இயற்பெயர் ராமசர்மா. 7 வயதில் தந்தையை இழந்தார். இதையடுத்து, பிள்ளைகளுடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார் தாய். மஹாராஜாவின் ஏற்பாட்டால் இலவச உணவுடன், கல்வியும் கிடைத்தது.

l மலையாளம், சமஸ்கிருதமும் பயின்றார். இளம் வயதிலேயே இசையில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார். மஹாராஜா சமஸ்கிருதக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.
l தாய் மறைவுக்குப் பிறகு, அண்ணனுடன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். நெற்றி நிறைய திருநீறு பூசியபடி சிவன் கோயில் முன்பு மனமுருகிப் பாடுவார். பரமசிவனே பாடுவதாக கருதிய மக்கள் ‘பாபநாசம் சிவன்’ என்றனர். அதுவே பெயராக நிலைத்தது.
l வித்வான் நூரணி மகாதேவ ஐயர், சாம்ப பாகவதரிடம் முறைப்படி இசை பயின்றார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரிடம் மாணவனாகச் சேர்ந்தார். 7 ஆண்டுகள் அவருடன் தங்கி, பல இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் 1918-ல் இவரது முதல் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து பல இடங்களில் கச்சேரிகள் நடத்தினார்.
l கிருதி, வர்ணம், பதம், ஜாவளி என பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். ‘என்ன தவம் செய்தனை’, ‘கற்பகமே கண் பாராய்’, ‘நான் ஒரு விளையாட்டு பொம்மையா’ போன்றவை இவரது புகழ்பெற்ற கீர்த்தனைகள். இசைக் கலைஞர்களால் ‘தமிழ் தியாகய்யர்’ என்று போற்றப்பட்டார்.
l வீணை எஸ்.பாலச்சந்தரின் தந்தை சுந்தரம் மூலம், 1934-ல் ‘சீதா கல்யாணம்’ என்ற திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து அசோக்குமார், சாவித்திரி, நந்தனார், சிவகவி, ஜகதலப்பிரதாபன், அம்பிகாபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.
l காலத்தால் அழியாத பாடல்களான ‘மன்மத லீலையை’, ‘ராதே உனக்கு’, ‘அம்பா மனங்கனிந்து’ ஆகியவை இவர் இயற்றியவை. பாடல் எழுதும்போதே மெட்டும் அமைத்துவிடும் திறன் பெற்றவர்.
l ‘பக்த குசேலா’, ‘அம்பிகாபதி’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களில் பாடி நடித்துள்ளார். 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்காக 800 பாடல்களை எழுதியுள்ளார். 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான ‘கீர்த்தன மாலை’ 1934-ல் வெளிவந்தது.
l 10 ஆண்டுகள் பாடுபட்டு 1952-ல் ‘சமஸ்கிருத பாஷா ஷப்த சமுத்ரா’ என்ற நூலை எழுதினார். ராமாயணத்தை சுருக்கி, 24 ராகங்களில் 24 பாடல்களாக ‘ராமசரித கீதம்’ என்னும் நூலை படைத்தார். 75 வயதிலும் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை நேரத்தில் வீதிகளில் பஜனை பாடிச் செல்வார். மிக எளிமையானவர். இவரது சகோதரர் ராஜகோபால் ஐயரின் மகள்தான் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி.
l பத்மபூஷண், சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், சங்கீத சாகித்ய கலா சிகாமணி, சிவபுண்ய கானமணி, சங்கீத கலாரசிகமணி என பல்வேறு விருதுகளைப் பெற்ற பாபநாசம் சிவன் 83-வது வயதில் (1973) மறைந்தார்.
நன்றி விக்கிப்பீடியா.தி இந்து தமிழ்.
பாபநாசம் சிவன் எழுதிய திரைப்படப் பாடல்களின் பட்டியல்....

Papanasam Sivan (music direction & lyrics)
aahaa adhisaya midhaame - Rathna Kumar (1949) - P U Chinappa, Music for the film: G Ramanathan, CR Subbaraman, Lyrics for the film: Papanasam Sivan, Surabhi
aanandha Natana - Sivakami (1959) - MK Thiagaraja Bhagavathar, K V Mahadevan, Papanasam Sivan
aanandam en solvene - Shakunthalai (1940) - MS Subbulakshmi, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
aaraaro nee aaraaro - Raja Mukthi (1948) - MLVasanthakumari, C R Subbaraman, Papanasam Sivan
amba manamkanindhunadhu kadaikan paar - Siva Kavi (1943) - M K Thyagaraja Bhagavathar, G Ramanathan, Papanasam Sivan
annaiyum thandhaiyum thaane paaril - Haridas (1944) - M K T, G Ramanathan, Papanasam Sivan
araavabaranan thiruvadi marandhu - Sivagami (1959) - M K T, K V Mahadevan, Papanasam Sivan
arpuda leelaigalai, yaararivaar agilaanda naayagane - Sivagami (1959)- M K T, K V Mahadevan, Papanasam Sivan
bhoomiyil maanida jenmamadaidhumor - Ashok Kumar (1941) - M K T, Papanasam Sivan
Chandra Suriyar - Ambigapathi (1937)- M K T, Papanasam Sivan (Music & Lyrics)
chedi maraivilae oru poongodi maraindhe maayam seivadhaen - Amarakavi (1952) - M K T, G Ramanathan, Papanasam Sivan
Chidambaranaadha thiruvarul thaarai - Thiruneelakandar (1939) - M K Thyagaraja Bhagavathar, Papanasam Sivan
Dhaamodhara - Sudharsan (1951) - PU Chinappa, G Ramanathan, Papanasam Sivan
dhyaaname enadhu - Ashok Kumar (1941) - M K T, Papanasam Sivan
endhan idadhu tholum kannum - Shakunthalai (1940) - MS Subbulakshmi, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
enge selluven iraivaa - Jagadala Pradhaban (1943) - P U Chinappa, G Ramanathan, Papanasam Sivan
engum nirai nadha bhrammame - Shakunthalai (1940) - MS Subbulakshmi, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
en udal thanniloru ee moitha podhu, ....Ammaiappa ungal anbai marandhen - Haridas (1944) - M K T, G Ramanathan, Papanasam Sivan
enna aanandham - Raja Mukthi (1948) - M K T, C R Subbaraman, Papanasam Sivan
enna seithaai appaa - Sudarsan (1951) - PU Chinappa, G Ramanathan, Papanasam Sivan
gnaana kan ondru - Chintaamani (1937) - M K T, Papanasam Sivan
gnana sabayil thillai gaanam thanil nindraadum - Sivagami (1959) - M K Thyagaraja Bhagavathar, K V Mahadevan, Papanasam Sivan
inbam adaindhome - Jagadala Pradhaban (1943) - P U Chinappa, G Ramanathan, Papanasam Sivan
ingum angum - Raja Mukthi (1948) - M K T, C R Subbaraman, Papanasam Sivan
innaikku kaalaila ezhundhiruchu - Shakunthalai (1940) - NS Krishnan, TS Durairaj, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
kaapadhun baaramaiyaa - Jagadala Pradhaban (1943) - P U Chinappa, G Ramanathan, Papanasam Sivan
kaayadha kaanagatthe - Sri Valli (1945) - T R Mahalingam, Music by T Rajagopala Sarma & R Sudarsanam, Lyrics by Papanasam Sivan & Rajaogapalaiyer
keli miga seivaai - Rathna Kumar (1949) - P U Chinappa, Music for the film: G Ramanathan, CR Subbaraman, Lyrics for the film: Papanasam Sivan, Surabhi
kidaiyaadhu vaazhvadhile - Ashok Kumar (1941) - M K T, Papanasam Sivan
Krishnaa, Mugundhaa, Muraare - Haridas (1944) - M K T, G Ramanathan, Papanasam Sivan
kulakodi thazhaikka - Raja Mukthi (1948) - MLVasanthakumari, C R Subbaraman, Papanasam Sivan
maanida jenmam meendum vandhidumo - Raja Mukthi (1948) - M K T, C R Subbaraman, Papanasam Sivan
maanila vaazhvu perum aanandham - Ashok Kumar (1941), M K Thyagaraja Bhagavathar, Papanasam Sivan
maharaajargale - Rathna Kumar (1949) - P U Chinappa, Music for the film: G Ramanathan, CR Subbaraman, Lyrics for the film: Papanasam Sivan, Surabhi
manam kanindhe jeeva dhaanam - Siva Kavi (1943) - M K Thyagaraja Bhagavathar, G Ramanathan, Papanasam Sivan
manam ninaindhu - Raja Mukthi (1948) - M K Thyagaraja Bhagavathar, C R Subbaraman, Papanasam Sivan
maname nee Eesan naamathai - Ashok Kumar (1941), M K Thyagaraja Bhagavathar, Papanasam Sivan
manamoganaanga anangae - Shakunthalai (1940) - MS Subbulakshmi, GN Balasubramaniam, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
Manmadha leelaiyai vendraar undo - Haridas (1944) - M K T, G Ramanathan, Papanasam Sivan
maraivaai pudaitha odu maraindha maayam edho - Thiruneelakandar (1939) - M K T, Papanasam Sivan
maya prapanchathil - Chintaamani (1937) - M K T, Papanasam Sivan
naatiya kalaiye..., kavalaiyai theerpadhu naatiya kalaiye - Siva Kavi (1943) - M K Thyagaraja Bhagavathar, G Ramanathan, Papanasam Sivan
namakkini bayamedhu - Jagadala Pradhaban (1943) - P U Chinappa, G Ramanathan, Papanasam Sivan
oru naal oru pozhudhaagilum - Thiruneelakandar (1939)- M K T, Papanasam Sivan
premayil yaavum marandhene - Shakunthalai (1940) - MS Subbulakshmi, GN Balasubramaniam, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
piravikkadal - Raja Mukthi (1948) - M K T, C R Subbaraman, Papanasam Sivan
Radhe unaku kobam aagaadhadi - Chintaamani (1937) - M K T, Papanasam Sivan (Music)
Rajan maharaajan thiruvotiryur mevum thiruvaalar thiagarajan - Shyaamala (1953) - M K T, G Ramanathan, Papanasam Sivan
saraasarangal varum suzhandre - Ashok Kumar (1941) - M K T, Papanasam Sivan
sathva guna bodhagan - Ashok Kumar (1941), M K Thyagaraja Bhagavathar, Papanasam Sivan
Shyaamalaa, jeevapriye Shyaamalaa - Shyaamala (1953) - M K T, G Ramanathan, Papanasam Sivan
sinam kaamam poikalavu - Ashok Kumar (1941), M K Thyagaraja Bhagavathar, Papanasam Sivan
Sivaperumaan kribai vendum - Naveena Sarangadhara (1936) - M K T, Papanasam Sivan
soppana vaazhvil magizhndhu, Subramania Swami, unai marandhaar - Siva Kavi (1943) - M K T, G Ramanathan, Papanasam Sivan
sugumaaraa en thavam - Shakunthalai (1940) - MS Subbulakshmi, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
thaayai paniven - Jagadala Pradhaban (1943) - P U Chinappa, G Ramanathan, Papanasam Sivan
tharunamidhamma - Jagadala Pradhaban (1943) - P U Chinappa, G Ramanathan, Papanasam Sivan
Thillaiyin nayagane Sivagamavalli manogarane - Sivagami (1959) - M K T, K V Mahadevan, Papanasam Sivan
Thiruchengotaan - Sudharsan (1951) - PU Chinappa, G Ramanathan, Papanasam Sivan
ullangkavarumen - Ashok Kumar (1941), M K Thyagaraja Bhagavathar, Papanasam Sivan
un azhagai kaana iru kangal podhaade - Thiruneelakandar (1939) - M K T, Papanasam Sivan
un karunaiyindri - Jagadala Pradhaban (1943) - P U Chinappa, G Ramanathan, Papanasam Sivan
unai kandu mayangaadha pergalundo - Ashok Kumar (1941) - MK Thiagaraja Bhagavadhar, Papanasam Sivan
unakken veen kavalai - Sudharsan (1951) - PU Chinappa,..., G Ramanathan, Papanasam Sivan
unnai allaal oru thrumbasaiyumo - Raja Mukthi (1948) - M K T, C R Subbaraman, Papanasam Sivan
unnaiye anbudan - Ashok Kumar (1941) - M K T, Papanasam Sivan
vaanuyarndha peru velli maa malaiyil - Rathna Kumar (1949) - P U Chinappa, Music for the film: G Ramanathan, CR Subbaraman, Lyrics for the film: Papanasam Sivan, Surabhi
vaazhvile oru naal - Haridas (1944) - M K T, G Ramanathan, Papanasam Sivan
vadhaname chandra bimbamo, malarndha sarojamo - Siva Kavi (1943) - M K T, G Ramanathan, Papanasam Sivan
vallalai paadum vaaiyaal aruthalai pillaiyai paaduveno - Siva Kavi (1943) - M K T, G Ramanathan, Papanasam Sivan
van pasi pinikku unavu nam - Ashok Kumar (1941) - M K T, Papanasam Sivan
vasantha rudhu mana mohaname - Siva Kavi (1943) - M K T, S Jayalakshmi, G Ramanathan, Papanasam Sivan
vegu dhooram kadal thaandi povome - Shakunthalai (1940) - NS Krishnan, TS Durairaj, Thuraiyur Rajagopala Sharma, Papanasam Sivan
yaanai thandham pole pirainilaa, vaanile jothiyaai veesudhe - Amarakavi (1952) - M K T, G Ramanathan, Papanasam Sivan
kaatrinile varum geetham, maraindha koondilirundha, maravene, Kannan leelaigal, hey Harey, Giridhara Gopala, enathu ullamae, Brindhavanatthil, engum niraindhaaye, udal uruga, aranga Yadunandana, nandabala, charaa charam, deivika Tamizh naattinile, ithanai naalaana pinnum, kandathundo Kannan pol, maanilathai vaazha vaika, thavamum palithathamma, vandaadum cholai
- Meera (1945) - MS Subbulakshmi, SV Venkataraman, (Lyrics for the movie: Papanasam Sivan, Kalki Krishnamurthy)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக