வெள்ளி, 8 செப்டம்பர், 2017

நடிகை மஞ்சுளா விஜயகுமார் பிறந்த நாள் செப்டம்பர் 9, 1953.



நடிகை மஞ்சுளா விஜயகுமார் பிறந்த நாள் செப்டம்பர் 9, 1953.

மஞ்சுளா விஜயகுமார் (செப்டம்பர் 9, 1953 - சூலை 23, 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
நடிப்பு
மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருடன் இணைந்து
ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் , என். டி. ராமராவ், கமல்ஹாசன் ,
விஸ்ணுவர்தன், ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார். 2013 சூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக