சனி, 16 செப்டம்பர், 2017

நடிகை ரோஜா ரமணி பிறந்த தினம் செப்டம்பர் 16, 1959.



நடிகை ரோஜா ரமணி பிறந்த தினம் செப்டம்பர் 16, 1959.

ரோஜா ரமணி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.


ரோஜா ரமணி
தாய்மொழியில் பெயர்
రోజా రమణి
பிறப்பு 16 செப்டம்பர் 1959
(அகவை 58)
சென்னை ,
தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள் செம்பருத்தி, சோபனா
பணி நடிகை
வாழ்க்கைத் துணை
சக்ரபாணி
பிள்ளைகள் தருண் குமார் மற்றும் அமுல்யா


தமிழ் படங்கள்

இரு மலர்கள்
என் மகன்
எதிரொலி
எங்க மாமா
பருவ காலம்
பக்த பிரகலாதா
நீதிக்கு தலை வணங்கு
வயசுப் பொண்ணு.



தன் மகன் ‘அஞ்சலி’ திரைப்படப் புகழ் தருண் பற்றிய வதந்தி குறித்து மனம் திறந்தார் ரோஜாரமணி!

ஏவிஎம்- ன் ‘பக்த பிரகலாதா’ வைப் பார்த்தவர்கள் அந்தக் குழந்தை முகத்தை அத்தனை சீக்கிரம் மறந்து விட வாய்ப்பில்லை. குழந்தை பிரகலாதனாக நடித்தவர் ஆண் குழந்தை அல்ல, அவர் பேபி ரோஜாரமணி. ஆம் ரோஜாரமணி குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்தப் படம் அக்காலத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட் மட்டுமல்ல அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதன்பிறகு பல தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ரோஜா ரமணி நடித்தார். பல படங்கள் ஹிட் அடித்தன. ஆனாலும் குறுகிய காலத்தில் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆன ரோஜாரமணி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு பிரபல நடிகைகளுக்குப் பின்னணிக்குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். இவரது கணவர் ஒரிய மொழிப் படங்களில் பிரபல இயக்குனர். இவருக்கு தருண் என ஒரு மகனும், அமுல்யா என்றொரு மகளும் உண்டு.

தருணை உங்களுக்கு நினைவிருக்கலாம். மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ திரைப்படச் சிறுவன் மாஸ்டர் அர்ஜூனை மறந்திருக்க மாட்டீர்களே?! தாயைப் போல பிள்ளையும் ‘அஞ்சலி’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். அதோடு நில்லாமல் தெலுங்கில் சில ஹிட் படங்களில் நாயகனாகவும் வலம் வந்தார். இடையில் மறைந்த நடிகை ஆர்த்தி அகர்வாலுடன் இணைத்து கிசு கிசுக்களில் சிக்கினார். முன்னணி நடிகையாக இருந்த போதே ஆர்த்தி ஒரு முறை தற்கொலைக்கு முயல அதற்கு காரணம் தருண் தான் என தெலுங்குப் பட உலகில் வதந்தி பரவியது. இதற்கிடையில் படிப்படியாக தனது பட வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்டு தருண் டைரக்ஷன் கற்றுக் கொள்ளப் போனார். அதற்குள் ஆர்த்தி அகர்வாலும் உறவினர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதோடு மட்டுமல்ல சில வருடங்களுக்கு முன், திருமணத்திற்குப் பின் ஒரேயடியாக ஏறி விட்ட தனது உடல் எடையைக் குறைக்க லிப்போசக்ஷன் முறையில் டிரீட்மெண்டுக்கு முயன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆர்த்தி உயிரிழந்து விட்டார். அருண், ஆர்த்தி கதை இப்படியாகும் என அவர்கள் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் யாரும் நம்பியிருக்க முடியாது.

சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த நடிகை ரோஜாரமணி, பல வருடங்கள் கழித்து தனது மகன் தருணைப் பற்றியும், மறைந்த நடிகை ஆர்த்தி அகர்வாலைப் பற்றியும் இந்நாளிலும் கூட புகைந்து கொண்டிருந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார். பேட்டியாளர் வருண் மற்றும் ஆர்த்தி அகர்வால் குறித்து கேள்வியெழுப்பிய போது ரோஜாரமணி; வருணும் ஆர்த்தியும் நண்பர்கள் மட்டுமே, அவர்களுக்கிடையில் காதல் இருந்ததில்லை, அப்படி காதல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள என்ன தடை இருக்கும்? ஆர்த்தி ஏன் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர்கள் நண்பர்கள் மட்டுமே, அவர்களுக்குள் காதல் எல்லாம் இல்லை என்பது எல்லோருக்குமே புரியும். அதோடு கூட இப்போது ஆர்த்தி இல்லை. அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது புரியாத புதிர். அதோடு ஆர்த்தி எடை குறைக்கும் முயற்சியில் உயிர் இழந்ததால் நாம் ஒரு அருமையான நடிகையை இழந்து விட்டோம் என்பது மட்டுமே உண்மை. என்று பதில் அளித்து நெடுநாட்களாக தீரமலிருந்த ஒரு வதந்திக்கு முற்றும் போட்டிருக்கிறார். தற்போது தருண் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு; தருண் ‘இதி நா லவ் ஸ்டோரி (இது எனது காதல் கதை)’ எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருப்பதாகவும். கூடிய விரைவில் படம் திரை தொடும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக