நடிகை மீனா பிறந்த நாள் செப்டம்பர் 16,1976.
மீனா (பிறப்பு: 16 செப்டம்பர், 1976 ; சென்னை) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம்
சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ் , தெலுங்கு ,
கன்னடம் , மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான
முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள்
என் ராசாவின் மனசிலே
எஜமான்
அவ்வை சண்முகி
வீரா
முத்து
சிட்டிசன்
ரிதம்
வில்லன்
பொற்காலம்
அன்புள்ள ரஜினிகாந்த்
சேதுபதி ஐபிஎஸ்
பாரதி கண்ணாம்மா
தாய் மாமன்
கூலி
செங்கோட்டை
ஆனந்த பூங்காற்றே...
மீனா
பிறப்பு மீனா துரைராஜ்
செப்டம்பர் 16, 1976
(அகவை 40)
சென்னை , தமிழ்நாடு, இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள்
1982 - தற்போது வரை
பெற்றோர் துரைராஜ்
ராஜ் மல்லிகா
வாழ்க்கைத் துணை
வித்யாசாகர்
(2009–present)
பிள்ளைகள் நைநிகா..
நடிகை மீனா
தமிழ் நாட்டைச் சேர்ந்த துரைராஜ், கேரளாவைச் சேர்ந்த ராஜமல்லிகா தம்பதியினருக்கு 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினாறாம் தேதி பிறந்தவர் மீனா. வித்யோதயா பள்ளியில் படித்த இவரை ஒரு திருமண விழாவில் பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் திரைப்படத்தில் நடிக்கின்ற வாய்ப்பை முதலில் இவருக்கு வழங்கினார் அவரது பரிந்துரையின் பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். 1982 ஆம் ஆண்டு வெளியான அப்படத்தை தொடர்ந்து எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினி மகளாக நடித்தார் இவர்.
அதன் பிறகு எண்ணற்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ரஜினிகாந்த் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியின் ரசிகையாக நடித்தார். அப்படம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்த இவர் எம்மார் தயாரிப்பில் உருவான ‘ஒரு புதிய கதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர்.
நாகேஸ்வரராவ் பேத்தியாக இவர் நடித்த
Seetharamaiah Gari Manavaralu என்கிற படம்தான் இவர் கதாநாயகியாக நடித்த முதல் தெலுங்குப் படம் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றார் இவர் .
தமிழில் ராஜ்கிரனுடன் நடித்த கஸ்தூரிராஜாவின் என் ராஜாவின் மனசில படம் இவருக்கு ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தித தந்த படம். அதைத் தொடர்ந்து இதய ஊஞ்சல், எம்.ஜி.ஆர்.நகரில் என்று பல தமிழ்ப் படங்களில் நடித்த இவர் மலையாளத்தில் சிபிமலையில் இயக்கத்தில் உருவான
Santhwanam படத்தில் சுரேஷ்கோபி மகளாக நடித்தார். அந்தப் படத்தின் வெற்றி மலையாள படவுலகிலும் ஒரு நிலையான இடத்தை இவருக்கு பெற்றுத் தந்தது .
சாதனையாளர் சிவாஜியுடன் 1982 களில் நடிக்க ஆரம்பித்த இவர் 1992களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற புகழைப் பெற்றார் .
ரஜினியுடன் எஜமான், படத்தில் முதலில் ஜோடி சேர்ந்த இவர் அதற்குப் பிறகு வீரா, முத்து, என்று ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களில் அவருக்கு ஜோடியானார் கமல்ஹாசனுடன் இவர் நடித்த அவ்வை சண்முகி இன்றுவரை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்ற ஒரு வெற்றிப்படம்
சரத்குமாருடன் நாட்டாமை, சத்யராஜூடன் மாமன்மகள், விஜய்காந்துடன் சேதுபதி ஐபிஎஸ், விஜய்யுடன் ஷாஜகான், அஜீத்துடன் வில்லன், முரளியுடன் பொற்காலம், பார்த்திபனுடன் பாரதிகண்ணம்மா, என பல முக்கியமான தமிப் படங்களில் நடித்திருக்கும் இவர், சிரஞ்சீவி, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ரவிதேஜா போன்ற தெலுங்குப பட உலகின் முதல் வரிசைக் கதாநாயகர்களுடனும், மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம் போன்ற மலையாள முன்னணி நடிகர்களுடனும், விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், சுதீப் போன்ற கன்னட நடிகர்களுடனும் தென்னிந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். Parda Hai Parda என்கிற இந்திப் படத்தில் நடித்திருக்கும் இவர், கேன்சர் என்கிற கேன்சர் விழிப்புணர்வு இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார்.
குடும்ப பாங்கான வேடங்களில் அதிகம் நடித்த இவர் கிளாமராக நடிக்க ஆர்வம் காட்டாத ஒரு நடிகையாவார் திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையிலும் மலையாளப் படங்களிலும் நடித்து வந்த இவர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் கன்னட ரீமேக்கிலும் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார் இவர் .
சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டதால், எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிப படிப்பைத் தொடர முடியாத இவர் . அதன் பிறகு தனிப்பட்ட முறையில் படித்து மாஸ்டர் டிகிரியைப் பெற்றார்
பரதநாட்டிய த்தை முறைப்படி கற்றுக் கொண்ட இவருக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகள் பேச தெரியும்..
விக்ரம் நடித்த காதல் சடுகுடு படத்தில் பாட ஆரம்பித்த இவர். அதன் பிறகு பதினாறு வயதினிலே மற்றும் காதலிசம் போன்ற இசை ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார்.
ரோஜா சங்கவி, மகேஸ்வரி, ஸ்ரீதேவி விஜயகுமார், என இவரது தோழிகள் பட்டியல் மிகவும் நீளமானது. பெங்களூர் சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகரை 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பனிரெண்டாம் தேதி திருமணம் செய்து கொண்டார் இவரூக்கு 2011 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார்.
தமிழக அரசின் கலைமானி விருது பெற்றிருக்கும் இவர், தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை எஜமான், சேதுபதி ஐபிஎஸ், பொற்காலம், இவன் ஆகிய நான்கு படங்களுக்கு பெற்றிருக்கிறார் இவர். ஆந்திர அரசின் நந்தி விருதினை இருமுறை பெற்றிருக்கும் இவர், சினிமா எஸ்பிரஸ், பிலிம்பேர் என மீடியாக்களின் விருதுகளை பல முறை பெற்றிருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே சினிமாவில் இருப்பதால், சினிமாதான் என் உலகம் என்று சொல்லும் நடிகை மீனா மிக நீண்ட காலம் கதாநாயகியாக வலம் வந்த ஒரு நடிகை.
தமிழ்த் திரையுலகில் நடிகர் நடிகைகள் தொழில் நுணுக்கக் கலைஞர்கள் என்று எல்லோருடனும் இனிமையாக பழகும் தன்மை கொண்டவராக இருப்பது இவரது தனிச் சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக