வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 15 .1967.


நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 15 .1967.

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ் ,
தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும்
ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு

ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல்
சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம்
குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.



திரைப் பயணம்
ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில்
ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.
30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெற்றிப் பெற்ற ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த ஐந்து படவுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பைப் பெற்றிருக்கின்றார்.
தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன் ,விஜயகாந்த் , சரத்குமார் , பிரபு , சத்யராஜ்,
கார்த்திக், அர்ஜூன் , மோகன் , சுரேஷ், தெலுங்கில் N.T. ராமாராவ் , சிரஞ்சீவி ,
நாகார்ஜூனா, வெங்கடேஷ் , மலையாளத்தில் மம்முட்டி , மோகன்லால்,
ஜெயராம், கன்னடத்தில் விஷ்ணூவர்தன் ,
ரவிச்சந்திரன் , உபேந்திரா , ஹிந்தியில்
அமிதாப் பச்சன் , வினோட் குமார் , ஷாருக் கான் , சஞ்சய் தத் , அனில் கபூர் , கோவிந்தா என முன்னணி கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து புகழ் பெற்றார்.
80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே சினிமாவுக்கு வந்த போதும், தமிழ்த் திரையுலகம் அவரின் திறமையைக் கண்டு கொள்ளவில்லை. மனம் தளராது போரடியவருக்குத் தெலுங்குப் படவுலகம் கைக்கொடுக்க, அங்கே முன்னணி கதாநாயகி அந்தஸ்தைப் பிடித்தார். 80-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ராதா ,
பானுப்பிரியா, ராதிகா, சுகாசினி ,
விஜயசாந்தி ஆகியோருடன் ரம்யா கிருஷ்ணனும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். நவீன நடனம் பரதநாட்டியம் என இரண்டிலுமே சிறந்து விளங்கியது அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததோடு, அவர் நடித்த படங்களும் வசூல் சாதனைப் படைத்தன.
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு , ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். .

ரஜினிகாந்துக்கே சவால் விடும் வகையில் 'நீலாம்பரியாக' அவர் வாழ்ந்து காட்டி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு கதாநாயகனுக்கு ஈடாக, ஒரு நடிகைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு.
ரம்யா கிருஷ்ணன் சின்னத் திரையிலும் கால் பதித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தங்க வேட்டை" நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தொடங்கிய ரம்யா கிருஷ்ணன் கலசம், 'வம்சம்' எனத் தொடர்களில் நடித்தார்.
நடித்துள்ள திரைப்படங்கள்
தமிழ்
Year Film Co-stars
1983 வெள்ளை மனசு ஒய்.ஜி.மகேந்திர
1985 படிக்காதவன் ரஜினிகாந்த் , அம்
1986 முதல் வசந்தம் பாண்டியன்
1986 சர்வம் சக்திமயம் ராஜேஷ் , சுதா ச
மனோரமா
1987 பேர் சொல்லும் பிள்ளை கமல்ஹாசன் , ராத
1988 குங்குமக் கோடு மோகன் , சுரேஷ்,
1988 காதல் ஓய்வதில்லை கார்த்திக்
1988 தம்பி தங்க கம்பி விஜயகாந்த்
1989 மீனாட்சி திருவிளையாடல் விஜயகாந்த் , ராத
1991 கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த்
1991 வா அருகில் வா ராஜா
1991 சிகரம்
ஆனந்த் பாபு ,
எஸ்.பி.பாலசுப்ர
ராதா
1992 தம்பி பொண்டாட்டி ரகுமான், சுகன்ய
1992 வானமே எல்லை ஆனந்த்பாபு, மது
1993 பொன் விலங்கு ரகுமான்,சிவரஞ்ச
1995 ராஜா எங்க ராஜா கவுண்டமணி, மன
1995 அம்மன் சுரேஷ், சௌந்தர்
1999 படையப்பா.

ரஜினிகாந்த் ,
சௌந்தர்யா ,சிவ கணேசன்
1999 பாட்டாளி சரத்குமார் , தேவ
2000 பட்ஜெட் பத்மநாபன் பிரபு
2000 ரிதம் அர்ஜூன் , மீனா
2000 திருநெல்வேலி பிரபு , ரோஜா
2001 ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ராம்கி,சங்கவி
2001 ராஜ காளி அம்மன் கரண் , கௌசல்யா
2001 நாகேஸ்வரி கரண் , விவேக்
2001 அசத்தல் சத்யராஜ்
2001 வாஞ்சிநாதன் விஜயகாந்த் ,சாக்
2001 நரசிம்மா விஜயகாந்த்
2002 பஞ்ச தந்திரம் கமல் ஹாசன்,சிம்ர
2002 பாபா ரஜினிகாந்த் , மன கொய்ராலா
2002 ஆயிரம் பொய் சொல்லி பிரபு
2002 ஜுலி கணபதி ஜெயராம், சரிதா
2002 ஜெயா ஸ்ரீமன் , மனோரமா
2003 அன்னை காளிகாம்பாள் லிவிங்ஸ்டன்
2003 பாறை சரத்குமார் , மீனா
2003 குறும்பு அல்லாரி நரேஷ்
2003 காக்கா காக்க சூர்யா , ஜோதிக
2004 குத்து சிம்பு
2007 குற்றப்பத்திரிகை ராம்கி
2008 ஆறுமுகம் பரத் , பிரியாமணி
2010 குட்டிப் பிசாசு சங்கீதா
2011 கனவு மெய்பட வேண்டும்
2013 சந்திரா சிறப்புத் தோற்ற
குடும்பம்
கிருஷ்ணா வம்சை என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக